சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Obama escalates NATO confrontation with Russia

ரஷ்யா உடனான நேட்டோ மோதலை ஒபாமா தீவிரப்படுத்துகிறார்

By Bill Van Auken
4 June 2014

Use this version to printSend feedback

ரஷ்யா மீது நேட்டோவின் இராணுவ சுற்றிவளைப்பை அதிகரிக்கும் மற்றும் அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி ஆயுத மோதலுக்கு தயாரிப்பு செய்யும் நோக்கத்தோடு, ஒரு புதிய 1 பில்லியன் டாலர் திட்டத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா போலாந்தில் செவ்வாயன்று வெளியிட்டார்.

கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்த பிரதிநிதிகளோடும், அத்தோடு உக்ரேனிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட "சாக்லேட் அரசர்" என்றழைக்கப்படும் பெட்ரோ போறோஷென்கோ (Petro Poroshenko) உடனான சந்திப்புகளை உள்ளடக்கியதுமான அவரது நான்கு நாள் ஐரோப்பிய விஜயம், அந்நாட்டின் கிழக்கில் வாழும் மக்களுக்கு எதிராக உக்ரேனிய ஆட்சியினது "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்" ரத்தம் சிந்தும் கொடூரத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.

ரஷ்ய எல்லைக்கருகில் சுமார் அரை மில்லியன் மக்கள் வாழும் ஒரு நகரான லுஹன்ஸ்கின் (Luhansk) மையப்பகுதியில் திங்களன்று உக்ரேனிய யுத்தவிமானங்கள் வான்வழி தாக்குதல்களை நடத்தின. கிளஸ்டர் குண்டுகள் (cluster bombs) என்று நம்பப்படுபவை நேரடியாக பிராந்திய நிர்வாக கட்டிடங்கள் மீது வீசப்பட்டன, அதில் குறைந்தபட்சம் எட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதோடு, 28 பேர் காயமுற்றனர், அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற சுயாட்சிக்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட லுஹன்ஸ்க் மக்கள் குடியரசின் பொது சுகாதாரத்துறை மந்திரி நடால்யா அர்கிபோவாவும் (Natalya Arkhipova) இறந்தவர்களில் உள்ளடங்குவார். அந்த யுத்த விமானங்கள் குண்டு வீசத் தொடங்கிய போது, அவர் அந்த கட்டிடத்தின் நுழைவாயிலில் மற்றொரு பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தார், அந்த பெண்மணியும் கொல்லப்பட்டார்.

உக்ரேனிய ஆட்சி கிழக்கில் வாழும் மக்களுக்கு எதிராக யுத்தவிமானங்கள், கனரக ஆயுத தளவாடங்கள், மற்றும் சிறுபீரங்கிகளின் தாக்குதல்களை மற்றும் பாசிச Right Sector அடியாட்களின் தாக்குதல்களையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளதுகடந்த பெப்ரவரியில் அமெரிக்க ஆதரவிலான மற்றும் பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின்னர் நிறுவப்பட்ட ஆட்சியை எதிர்க்கும் அந்த ஒட்டுமொத்த பிராந்தியங்களையும் அச்சுறுத்தும் நோக்கில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுவீச்சில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மோசமாக சேதமடைந்தன. அந்த எதிர்ப்புகள் மே 25இல் பில்லியனரான செல்வந்தர் போறோஷென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னரில் இருந்து அதிகரித்திருந்தது.

ரஷ்ய எல்லையோரங்களில் அதிகளவிலான அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவங்களை நிலைநிறுத்தவும் மற்றும் உக்ரேனுக்கு புதிய இராணுவ உதவிகளை வழங்கவும் நோக்கம் கொண்ட 1 பில்லியன் டாலர் திட்டத்தை வெளியிட்டதோடு, கியேவ் ஆட்சி படைகளின் தாக்குதலையும் மற்றும் Right Sector பாசிசவாதிகளையும் எதிர்ப்பவர்களை "அடிபணியுமாறு" உத்தரவிடுமாறு காலக்கேடு விதித்த ஒபாமா, புதிய தடைகளின் ஒரு அச்சுறுத்தலோடு சேர்த்து ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு ஒரு ஆத்திரமூட்டும் இறுதி எச்சரிக்கை போலந்தில் விடுத்தார்.

அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் தரைப்படை, விமானப்படை மற்றும் இராணுவ படைகளை சுழற்சிமுறையில் இருத்துவதற்கு உதவுவதே அந்த நிதியுதவியின் நோக்கமாகும். இது ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது, 18 அமெரிக்க F-16 ரக போர் விமானங்களை அனுப்பியதோடு, இதை ஒபாமா செவ்வாயன்று பார்வையிட்டிருந்தார். சுமார் 600 அமெரிக்க துணை இராணுவ துருப்புகளும் நிலைநிறுத்தப்பட்டார்கள். இவர்கள் போலாந்திற்கு உள்ளேயும், முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளான எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க இராணுவ மற்றும் விமானப்படை பிரிவு சிப்பாய்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிப்போம் அவற்றை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அணி சேர்ந்த நாடுகள் மூலமாக தொடர்ந்து சுழற்சி முறையில் வைத்திருப்போம், இவ்வாறு ஒபாமா போலாந்து ஜனாதிபதி புரோனிஸ்லாவ் கொமொரொவ்ஸ்கி உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் உக்ரேன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நண்பர்கள் அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காக இராணுவத்தை வழங்குவதால் நாம் அவர்களோடும் நமது கூட்டுறவை அதிகரிப்போம், என்றார்.

உக்ரேனைப் போலவே, மாஸ்கோவ்விற்கும் மால்டோவா மற்றும் ஜோர்ஜியாவிற்கும் இடையே கூர்மையான பதட்டங்கள் நிலவுகின்றன. அங்கே ரஷ்ய இனத்தவர்கள் பிரிவினை அரசுகளை (breakaway states) ஸ்தாபித்துள்ளன .இது மால்டோவா விடயத்தில் டிரான்ஸ்னிஸ்ட்ரியா (Transnistria), மற்றும் ஜோர்ஜியா விடயத்தில் அபிகாசியா மற்றும் தெற்கு ஓசேஷியா ஆகியவை ஆகும்.

இத்தகைய பிராந்தியங்களில் அமெரிக்கா இராணுவ உதவிகளைப் பாய்ச்சுவது ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்டிவிட மட்டுமே சேவை செய்யும். அதுவே வாஷிங்டனின் நோக்கமாக உள்ளது என்பது மேலும் அதிகளவில் வெளிப்படையாகி வருகிறது.

வெள்ளை மாளிகையின் ஒரு அறிக்கையின்படி, ஐரோப்பிய மறுஆதரவு திட்டம் (European Reassurance Initiative) என்று கூறப்படும், முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த உதவியோடு, அந்த கண்டத்தின் புதிய பாதுகாப்பு சவால்களின் வெளிச்சத்தில் ஐரோப்பாவில் அமெரிக்க படைகளின் இருப்பைக்" குறித்த ஒரு மீளாய்வும் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் ஓர் இராணுவ ஆயுதமயமாக்கல் "ஆசிய பசிபிக் மறுசமப்படுத்தல் நடவடிக்கைக்கு நாங்கள் ஏற்றுள்ள கடமைப்பாடு போன்ற ஏனைய பாதுகாப்பு முன்னுரிமைகளை விலையாக கொடுத்து" செய்யப்படாது என்று அந்த அறிக்கை மேற்கொண்டு உறுதியளித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒபாமா நிர்வாகம் ரஷ்யா மற்றும் சீனா இரண்டையும் ஒரே நேரத்தில் இராணுவரீதியில் அச்சுறுத்தும் மற்றும் சுற்றி வளைக்கும் ஒரு பொறுப்பற்ற உந்துதலில் ஈடுபட்டு வருகிறது.

செவ்வாயன்று வார்ஷாவில் பெல்வேடர் மாளிகையில் உரையாற்றுகையில், இராணுவ மோதலுக்கான தயாரிப்பில் "ஐரோப்பாவில் கூடுதல் ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு" இந்த 1 பில்லியன் டாலர் திட்டம் அமெரிக்காவால் பயன்படுத்தப்படும் என்று ஒபாமா தெரிவித்தார்.

ஒபாமாவின் ஐரோப்பிய சுற்றுபயணத்திற்கு சமாந்தரமாக, நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளும் ரஷ்யாவுக்கு எதிராக நோக்கங்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை விவாதிக்க செவ்வாயன்று புரூஸ்செல்சில் ஒரு இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கினார்கள். அமெரிக்கா பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் ஐரோப்பிய நேட்டோ அங்கத்தவர்கள் அவர்களின் சொந்த இராணுவ படைகளின் ஒரு பெரும் ஆயுதமயமாக்கலைத் தொடங்க அழுத்தம் கொடுப்பதற்கு அந்த கூட்டத்தைப் பயன்படுத்தினார். பெரும்பாலான நேட்டோ அங்கத்துவ நாடுகள் அவை ஒப்புக்கொண்டபடி, அவற்றின் உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை அவற்றின் இராணுவ படைகளுக்கு செலவிட தவறி இருந்தன, மேலும் 2008-2009இல் இருந்து ஐரோப்பாவைப் பீடித்த பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுப்பாக அவற்றில் பல நாடுகள் செலவுகளைக் குறைத்திருந்தன.

போதுமானளவிற்கு இராணுவ செலவுகள் செய்யப்படாமல் இருப்பது, ஒரு சாத்தியமான எதிரியிடமிருந்தும் எமதுகூட்டிற்கு அச்சறுத்தலை" முன்னிறுத்துகிறது என்று ஹாகெல் ஐரோப்பிய மந்திரிகளை எச்சரித்தார்.

நேட்டோவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ இவ்வாறு எச்சரித்தார்: மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கணிசமான நேட்டோ எதிர்ப்பு படைகளைக் கூடுதலாக நிறுத்துவது நிகழ்ச்சிநிரலில் இருக்குமானால் அந்த நடவடிக்கையை நோக்கிய அழைப்புகளை எங்களால் கேட்க முடிகிறது என்பதால் நாங்கள் அவ்வாறு நிலைநிறுத்தப்படுவதை, அவை சுழற்சி முறையில் இருந்தாலும் கூட, அடிப்படை ரஷ்ய-நேட்டோ ஆவணங்களின் கடமைப்பாடுகளில் இருந்து அது நேரடியாக விலகி செல்கிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று காண்போம்.

ஒரு கூட்டு அறிக்கையில், க்ருஷ்கோவும் ரஷ்ய பாதுகாப்பு மந்திரியான செர்ஜி ஷோய்கூவும், ரஷ்யாவின் எல்லையோரங்களில் நடந்து வரும் நேட்டோவின் ஆயுதமயமாக்கலை "முன்னொருபோதுமில்லாதது என்றும், மிதமிஞ்சிய நடவடிக்கை என்றும்" குறிப்பிட்டனர். நேட்டோ அந்த பாதையில் பயணிக்கிறது என்றால், படைகளை நிறுத்துவதில் ரஷ்யா "கட்டுப்பாட்டோடு" எதிர்வினையாற்றும் என்று அது எதிர்பார்க்க முடியாது என்பதை நேட்டோ உணர வேண்டும்" என்று அவர்கள் எச்சரித்தனர்.

கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் இரண்டிலும் வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்டு தீவிரமடைந்து வரும் பதட்டமான சூழலில், செவ்வாயன்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம், ஒரு புதிய பெரும் யுத்தத்தை எவ்வாறு நிறுத்துவது அல்லது எதிராக போராடுவது என்பதை மேற்கு யோசிக்கிறது" என்ற தலைப்பில் ஒரு அச்சுறுத்தலான கட்டுரை பிரசுரித்தது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராடிய பின்னர், இராணுவ திட்டமிடும் மேற்கின் அதிகாரிகள் மீண்டுமொருமுறை பிரதான சக்திகளுக்கு இடையே யுத்த சாத்தியக்கூறைச் சிந்தித்து வருகின்றனர், என்று அந்த கட்டுரை தொடங்கியது.

அது கடந்த வாரம் West Pointஇல் ஒபாமாவின் வெளியுறவு கொள்கை உரையில் அவர் வெளியிட்ட எச்சரிக்கையை, அதாவது "தெற்கு உக்ரேன் ஆகட்டும் அல்லது தென்சீன கடல் ஆகட்டும் அல்லது உலகின் வேறெங்கே என்றாலும், கட்டுப்பாடில்லாமல் போகும் பிராந்திய ஆக்கிரமிப்பு இறுதியாக நமது கூட்டாளிகளைப் பாதிக்கும் மற்றும் நமது இராணுவத்தை உள்ளிழுக்கும், என்பதை மேற்கோளிட்டு காட்டியது.

அந்த கட்டுரை தொடர்ந்து குறிப்பிடுகிறது, முதலாம் உலக யுத்தம் தொடங்கி ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த காலக்கட்டத்திய புத்தகங்கள் வாஷிங்டனிலும், வொயிட்ஹால் மற்றும் புரூஸ்செல்சில் உள்ள நேட்டோ தலைமையகத்திலும் அதிகளவில் மிகவும் பிரபலமாக இருப்பதாக தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர், அதுவும் முற்றிலும் அவர்களின் வரலாற்று நலன்களுக்காக இல்லை என்கின்றனர்."

அக்கட்டுரை இவ்வாறு தொடர்கிறது: 1914ஐ போலவே, ஒரு நவீனகால பெரும் போர் எவ்வாறு இருக்குமென்பது உண்மையில் யாருக்கும் தெரியாது. மோதல் அணுஆயுதமின்றி இருக்குமென்று பெரும்பாலான இராணுவ சிந்தனையாளர்கள் கருதுகின்ற போதினும், அணுஆயுதமேந்திய சக்திகள் அவற்றின் அணுஆயுத யுத்த திட்டங்களைப் புதுப்பித்து வைத்துள்ளதோடு, உறுதியான விதத்தில் பரஸ்பர பேரழிவுக்கான இலக்கு பட்டியல்களைத் தயாரித்து வைத்திருப்பதாக தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு மேற்கத்திய அதிகாரியின் கூற்றை அது மேற்கோளிடுகிறது: நாம் முன்பின் அறிமுகமில்லாத துறையில் உள்ளோம். அதற்கு..... உயர்மட்ட போர் திறமைகளைத் திருத்தியமைப்பதும், அத்தோடு மரபார்ந்த மற்றும் அணுஆயுத அச்சத்தை கொடுப்பதற்கான நன்கு வடிவமைக்கப்பட்ட கோட்பாடு தேவையாக உள்ளது.