சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain’s major parties hammered in European elections

ஸ்பெயினின் முக்கியக் கட்சிகள் ஐரோப்பியத் தேர்தலில் பலத்த தோல்வியடைந்தன

By Alejandro López
30 May 2014

Use this version to printSend feedback

பெரும்பான்மையான வாக்காளர்கள் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை திட்டவட்டமாக நிராகரித்திருப்பதையே ஸ்பெயினில் நடந்த ஐரோப்பியத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆளும் வலது-சாரி மக்கள் கட்சி (PP) மற்றும் எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PSOE)இரண்டுமே 1977 இல் பிராங்கோவுக்கு பிந்தைய முதல் தேர்தலுக்குப் பின் மிக மோசமான முடிவுகளைப் பெற்றுள்ளன. இவை இரண்டும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 2009 ஐரோப்பியத் தேர்தலில் 80 சதவீதமாக இருந்ததில் இருந்து  50 சதவீதத்திற்கும் குறைவான அளவாக வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

மக்கள் கட்சி  2.6 மில்லியன் வாக்குகளையும் எட்டு இடங்களையும் இழந்திருக்கிறது. தேர்தலின் பின்னர் தனது ஆதரவாளர்கள் வரமாட்டார்கள் என்கிற அச்சத்தில் அதன் தேசியத் தலைமையகத்தில் கொண்டாட்டங்களை இரத்து செய்யும் நிலைக்கும் கூட அது தள்ளப்பட்டிருக்கிறது. 2011 இல் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் 40 பில்லியன் யூரோக்கள் நிதி வெட்டுகளையும் 26 சதவீதத்தை எட்டி விட்ட வேலைவாய்ப்பின்மையையும் கண்டிருக்கும் மக்கள் கட்சி யின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மீதான ஒரு தீர்ப்பாகவே இந்த முடிவுகள் அமைந்துள்ளன. 1990 இல் முதல் இயங்கி வரும் ஒரு இரகசிய நிதிக் கணக்கு பெரு வணிக ஆதரவாளர்களிடம் இருந்தான அறிவிக்கப்படாத ரொக்க நன்கொடைகளை நடப்பு பிரதமரான மரியானோ ரஜோய் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குள் கிடைத்தது என்ற குற்றச்சாட்டு சம்பந்தமான நீதிமன்ற வழக்குகளிலும் கட்சி சிக்கி உழன்று கொண்டிருக்கிறது.  

PSOE, அரசாங்கத்தில் அதன் சொந்த கைங்கரியத்தாலும் மக்கள் கட்சிக்கு எந்த எதிர்ப்பையும் அது முன்வைக்கத் தவறியதாலும் 24 சதவீத வாக்குகளாய் சரிந்து, 2.5 மில்லியன் வாக்குகளையும் ஒன்பது இருக்கைகளையும் இழந்திருக்கிறது.

ஜெனரல் பிராங்கோ இறந்ததற்குப் பிந்தைய மிகப்பெரும் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை ஜோஸே லூயிஸ் ரோட்ரிக்ஸ் சபதேரோவின் அரசாங்கம் 2010 மே மாதத்தில் திணித்த வகையில் இக்கட்சியே சிக்கன நடவடிக்கைக் கொள்கைக்குக் கதவு திறந்தது தான் என்கிறபோது மக்கள் கட்சிக்கான மாற்றாக இக்கட்சியால் தன்னைக் காட்டிக்கொள்ள இயலாது போய்விட்டது. அதன்பின்னும் அது தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது, இரண்டு தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அரச பணியாளர்கள் மீது ஓய்வூதிய வெட்டுகள் மற்றும் ஊதிய வெட்டுகள் ஆகியவற்றைத் திணித்தது.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் PSOE இன் பொதுச் செயலரான ஆல்பிரடோ பெரெஸ் ருபால்காபா தனது இராஜினாமாவை அறிவித்தார்: மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்களால் இயலவில்லை என்பது தெளிவாகி விட்டது [...] நாம் அரசியல் பொறுப்பு ஏற்க வேண்டியது அவசியம். அவருக்கு அடுத்த பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க ஜூலை மாதத்தில் ஒரு கூட்டம் நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

PSOE இன் தலைவிதி தனித்துவமானது என்று சொல்வதற்கில்லை. கிரீஸ் மற்றும் அயர்லாந்தில் இருக்கும் அதன் சகாக்களுக்கும் இதே கதிதான் நேர்ந்திருக்கிறது. அங்கே சிக்கன நடவடிக்கைகள் மிக மிருகத்தனமானவையாய் இருந்தன, சமூக ஜனநாயகக் கட்சியினர் அழிவின் விளிம்பிற்குச் செல்லவைக்கப்பட்டு சோதிக்கப்பட்டிருக்கின்றனர். கிரேக்கத்தின் Pasok (Pan-Hellenic Socialist Movement)புதிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் பயனால் வெறும் 8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அதன் முன்னாள் கூட்டாளிகளான ஜனநாயக இடது (DIMAR)கட்சியினர் 1.2 சதவீத வாக்குகளுடன் அத்தனை பெரிய கட்சிகளிலும் கடைசியாக வந்தனர். ருபால்கபா போலவே அதன் தலைவரான ஃபோடிஸ் கூவேலிஸ் கூட இராஜினாமா செய்தார். இவர்களைப் போலவே அரசியல் அதிர்ச்சி கண்ட இன்னொருவர் என்றால் அயர்லாந்தில் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஈமன் கில்மோர் ஐச் சொல்லலாம். இவர் Fine Gael உடனான கூட்டணியில் துணைப் பிரதமராக இருந்து வருபவர். தொழிற்கட்சியின் வாக்குகள் 2011 பொதுத் தேர்தலில் 19 சதவீதமாக இருந்ததில் இருந்து இப்போது வெறும் 7 சதவீதமாகச் சரிந்துள்ளது.  

மக்கள் கட்சி மற்றும் PSOE க்கு உண்டாகியிருக்கும் வெறுப்பினால் முக்கியமாகப் பயனடைந்திருப்பது ஐக்கிய இடது( IU )ஆகும். இது கம்யூனிஸ்ட் கட்சியால் [PCE]மேலாதிக்கம் செய்யப்படுகின்ற பிராந்திய மற்றும் சுற்றுச்சூழல் கட்சிகள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கக் கட்சிகளது ஒரு கூட்டணியாகும்)மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட Podemos (நம்மால் முடியும்)கட்சியும் தான்.

ஐக்கிய இடது 10 சதவீதத்துக்கு சற்றுக் குறைந்த வாக்குகளையும் ஆறு இருக்கைகளையும் பெற்று ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக ஆகியிருக்கிறது. இது 2009 இல் தான் பெற்ற வாக்குகளை மும்மடங்காக்கியிருக்கிறது. கடந்த இரண்டாண்டு காலத்தில் சுகாதாரத் துறையில் 10.8 சதவீதம் மற்றும் கல்வித் துறையில் 8.6 சதவீதம் வெட்டுகள் உட்பட 2.6 பில்லியன் யூரோ நிதி வெட்டுகள் திணிக்கப்பட்டிருக்கும் அண்டாலுசியா பிராந்திய அரசாங்கத்தில் PSOE உடன் இது ஒத்துழைத்து வந்திருந்தபோதிலும் கூட இத்தகைய வெற்றி இதற்குக் கிட்டியுள்ளது.

இதுவரை தெரியாதிருந்த Podemos 1.2 மில்லியன் வாக்குகளைப் பெற்று நான்காவது பெரிய அரசியல் சக்தியாகி விட்டிருக்கிறது. இது மைக்கேல் பண்டா மற்றும்ர்னஸ்ட் மண்டேலின் தலைமையில் 1953 இல் நான்காம் அகிலத்தில் இருந்து சென்ற பிரிவில் தனது வேர்களைக் கொண்டிருக்கும் Izquierda Anticapitalista (முதலாளித்துவ-எதிர்ப்பு இடது) இன் உருவாக்கமாகும். நடப்பு வெகுஜன சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிசவாதக் கட்சிகளுக்கு வக்காலத்துவாதிகளாக செயல்படுகின்ற பொருட்டு சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புகிற போராட்டத்தைக் கைவிட்டு, உலகெங்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடுத்தடுத்த பிரிவுகளைக் கலைத்த இந்த போக்குக்கு எதிராக மார்க்சிசத்தைப் பாதுகாக்கவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 1953 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு கிளர்ச்சியையும் முன்கூட்டித் தடுப்பதையும் மக்களின் அதிருப்தியை தீவிரமயமானதாக காட்சியளிக்கின்ற ஆனால் முதலாளித்துவ-ஆதரவான வடிவங்களுக்குள் திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்ட போலி-இடது குழுக்கள் மற்றும் உயர்நிலை தனிநபர்களின் ஒரு சர்வதேச மறுகுழுவாக்கத்தின் பகுதியே முதலாளித்துவ-எதிர்ப்பு இடதுதிதும் Podemos இனதும் திட்டமாகும்.

ஸ்பெயினில் இந்த உயர் நிலை தனிநபர் அரசியல் அறிவியல் பேராசிரியர் பப்லோ இக்லெசியாஸ். இவர் la casta (அரசியல் குடி)மீது தொடர்ந்து தாக்கி வந்தார்.

இக்லெஸியாஸ் பயன்படுத்தும் வாய்வீச்சு சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பை பாதுகாப்பான பாதைகளுக்குள் திருப்புவதில் ஒரு அதிமுக்கியமான பாத்திரம் வகிக்கிறது என்பதை இந்த (அரசியல் குடி) மனமுவந்து அங்கீகரிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு சிறப்பிடம் அளிக்கப்பட்டது, சாதகமான ஊடக கவனம் அவருக்குக் கிட்டியது என்பதோடு அத்தனை முக்கிய ஊடக வலைப்பின்னல்களிலும் அவர் பங்குபற்றினார்

PP மற்றும் PSOE இன்"இறுகிப்போன உயர்தட்டினருக்கு" எதிரான" சீர்திருத்தத்திற்கான ஒரு வினையூக்கி" என Podemos "பூகம்பம்" ஃபைனான்சியல் டைம்ஸ் இதழால் பாராட்டப் பெற்றது.

தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீனமான முன்னோக்கு எதனையும் Podemos வழங்கவில்லை என்பதை தேர்தலுக்குப் பிறகு இக்லெஸியாஸ் தெளிவாக்கினார். அவர் அறிவித்தார்: "இது எங்களுக்கு ஒரு அடையாள சின்னம்போன்ற முடிவு அல்ல. மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒன்றுகுவிகின்ற ஒரு காலகட்டத்தை நாங்கள் துவங்கவிருக்கிறோம். பெரும் கட்சிகள் மிகப் பெரும் அடி பெற்றிருக்கின்றன. இரண்டு பெரும் கட்சிகளும் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் நாம் அவர்களைத் தோற்கடிக்கும் வரை நமது இலக்கு பூர்த்தியாகாது."

இது முதலாளித்துவ-எதிர்ப்பு இடது  உடன் கரம் கோர்ப்பதற்கான குறிப்பாகும். 2015 இல் ஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்ற தமது நோக்கம் குறித்து இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய புள்ளிகள் ஏற்கனவே அறிவித்து விட்டனர். இது உள்ளூர் மற்றும் பிராந்திய அரசாங்கங்களில் Podemos அதிகாரத் தரகராக ஆவதற்கு வழிசெய்யும். முதலாளித்துவ-எதிர்ப்பு இடதை பொருத்தவரை Podemos உடன் "ஒட்டிச் செல்வதற்கான அவசியம் குறித்து ஆழ்ந்து சிந்திக்கின்ற நிகழ்முறையின் ஒரு துவக்கம்" என்பதே இத்தேர்தல் முடிவுகளின் பொருள் என முன்னணி பப்லோவாதியான ஜேய்மி பேஸ்டர் எழுதினார்.

முதலாளித்துவ-எதிர்ப்பு இடதின்  தலைவரும் நாடாளுமன்றப் பிரதிநிதியுமான ஆல்பர்டோ கர்சான் கூறுகையில், "எங்களது மூலோபாயம், பிரசங்கம், மற்றும் தகவல்தொடர்பு எல்லாமே வேறு என்றபோதிலும் ஒரு உடன்பாட்டுக்கான சாத்தியம் இருப்பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை" என்றார்.

முதலாளித்துவ-எதிர்ப்பு இடது மற்றும் Podemos சுற்றி இயங்கும் போலி-இடது கட்சிகளும் கூட இரண்டு அமைப்புகளுக்கும் இடையிலான ஒரு முன்னணிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. பிரிட்டனில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் சகோதரக் கட்சியும் Podemos திட்டத்தில் பங்குபெற்றதுமான En Lucha வெகுஜன அமைப்புகளுடன் [அதாவது முதலாளித்துவ-எதிர்ப்பு இடது  மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம்] சேர்ந்து வேலை செய்யும் சாத்தியத்தைக் கொண்டுவருகிற நெகிழ்ச்சியான சூழல் குறித்துப் பேசினார். முதலாளித்துவ-எதிர்ப்பு இடது மற்றும் Podemos ஆகியவற்றின் வாக்குகள் இணைந்தால் 18 சதவீதம் வரை வருகிறது. மாட்ரிட்டிலும் மற்றும் பிற மாநகரங்கள் மற்றும் பிராந்தியங்களிலும், இந்த சக்திகளின் சதவீதமானது PSOE இன் வாக்கு சதவீதத்தை விட அதிகமானதாய் இருக்கிறது. [] இந்தத் தேர்தல்கள் இடதுகளுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமேயில்லை. என்பதை சர்வதேச மார்க்சிஸ்ட் போக்கு (International Marxist Tendency)அமைப்பின் முன்னாள் ஸ்பெயின் பிரிவான El Militante பேசியது.    

கடலோனியாவிலும் பாஸ்க் கண்ட்ரியிலும் சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பினால் முக்கியமாக ஆதாயமடைந்திருப்பது பிரிவினைவாதக் கட்சிகள் ஆகும். கடலோனியாவில், செப்டம்பரில் சுதந்திரம் குறித்த கருத்துக்கணிப்புக்கு முன்பாக வாக்காளர் வாக்களிப்பு விகிதம் 10 புள்ளிகள் வரை அதிகரித்திருக்கும் நிலையில், கடலான் குடியரசு இடது (ERC)இரண்டாம் குடியரசு (1931-1939) காலகட்டத்திற்குப் பின் முதன்முறையாக, ஆளும் CiU கட்சியை விஞ்சி பிராந்தியத்தில் மேலாதிக்கமுடைய அரசியல் சக்தியாக ஆனது. பாஸ்க் கண்ட்ரி, நவாரே மற்றும் கலிசியா பகுதிகளைச் சேர்ந்த பிரிவினைவாதக் கட்சிகளால் ஆன "மக்கள் தீர்மானிக்கட்டும்" கூட்டணி ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மில்லியன் வாக்குகளைப் பெற்றது. இது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு ஒரு இருக்கையை வழங்கும்.

ஒரு மில்லியன் வாக்குகளுடன் UpyD கட்சி மற்றும் அரை மில்லியன் வாக்குகள் பெற்ற Cuitadans (Citzens)ஆகியவை இத்தேர்தலால் பயனடைந்திருக்கும் பிற கட்சிகள் ஆகும். இந்த இரண்டு கட்சிகளுமே கடலோனியா பிரிவினை திட்டத்தைத் தாக்கியதோடு ஸ்பெயின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தின் மீது கவனம் குவித்தன. இதன் விளைவாக பிரிவினைவாதத்திற்கு எதிராக ஸ்பெயினைப் பாதுகாப்பது என்பதையே தனது பிரச்சாரத்தின் மைய அச்சாகக் கொண்டிருந்த PP இன் முன்னாள் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட புதிய அதி வலது-சாரிக் கட்சியான VOX வெறும் 244,000 வாக்குகளை மட்டுமே பெற்று ஒரேயொரு பிரதிநிதியைக் கூட வெல்லவியலாமல் போனது.

தேர்தல் முடிந்து 48 மணி நேரங்களுக்குள்ளாக, சர்வதேச நாணய நிதியம் ஸ்பெயினுக்கான தனது சமீபத்திய திட்ட ஆலோசனைகளை வழங்கியது. தொழிலாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கவிருப்பது இந்த அமைப்பும், அதனுடன் சேர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஆணையமுமே தவிர, சென்ற ஞாயிறன்று நடந்த தேர்தல்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதாக இது அமைந்திருந்தது.