சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Central Bank cuts interest rate below zero

ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களைப் பூஜ்ஜியத்திற்கு கீழே குறைக்கிறது

By Stefan Steinberg
6 June 2014

Use this version to printSend feedback

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), நிலவி வரும் பொருளாதார மந்தநிலைமை மற்றும் பணச்சுருக்க (deflation) அச்சுறுத்தலுக்கான பிரதிபலிப்பாக, அதன் வட்டி விகிதங்களில் ஒன்றை பூஜ்ஜியத்திற்கு குறைவாக எதிர்மறையில் கொண்டு வந்ததோடு, ஐரோப்பிய வங்கிகளுக்கான 400 பில்லியன் யூரோ கடன் திட்டம் ஒன்றையும் வெளியிட்டது.

வியாழனன்று பிராங்ஃபேர்ட்டின் அதன் கூட்டத்தில் மத்திய வங்கி, வரலாற்றிலேயே தற்போது குறைந்தளவில் 0.25 சதவீதமாக இருந்த முக்கிய கடன்களுக்கான வட்டிவிகிதத்தை (lending rate) 0.15 சதவீதமாக குறைத்தது, மற்றும் அதன் வைப்புபத்திர வட்டிவிகிதத்தை (overnight deposit rate) பூஜ்ஜியத்தில் இருந்து -0.10 சதவீதமாக குறைத்தது, இதனால் அது பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்த விகிதங்களைக் கொண்ட மிகப் பெரிய மத்திய வங்கியானது.

லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவிலிருந்து சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் உலக பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் சிக்குண்டு இருக்கிறது என்ற உண்மைக்கு இந்த நகர்வு ஒரு வெளிப்பாடாகும். வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான பணத்தைப் பாய்ச்சுவதைத் தவிர இந்த நெருக்கடிக்கு உலகின் மத்திய வங்கிகளிடம் வேறெந்த தீர்வும் இல்லை. ட்ரில்லியன் கணக்கான பணம் வங்கிகளிடம் ஒப்படைக்கப்படுகின்ற அதேவேளையில் கண்டம் முழுவதிலுமான தொழிலாளர்களிடமோ ஓய்வூதியங்கள், சமூக திட்டங்கள், மற்றும் உடல்நல பாதுகாப்பு திட்டங்களுக்கு செலுத்த "பணமில்லை" என்று கூறப்படுகிறது.

அந்த கூட்டத்திற்குப் பிந்தைய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ECB தலைவர் மரியோ திராஹி பேசுகையில், பெடரல் ரிசர்வின் பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டத்தைப் (QE - quantitative easing program) போலவே கூடுதலாக சொத்துக்கள் வாங்குவது உட்பட கூடுதல் நடவடிக்கைகள் வெகு விரைவில் இந்த வட்டிவிகித வெட்டுக்களைப் பின்தொடரும் என்று தெளிவுபடுத்தினார்.

இதுவொரு கணிசமான திட்டம் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று கூறிய திராஹி, “இத்தோடு முடிந்துவிட்டதா? என்றால் இல்லை என்பது தான் அதற்கு பதில். தேவைப்பட்டால், எங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு, நாங்கள் இவ்வளவோடு நிறைவு செய்துவிட போவதில்லை,” என்று கூறி, மத்திய வங்கி வெளியிடவிருக்கும் திட்டங்களில் "நிச்சயம் பரந்தளவில் சொத்துக்களை-வாங்கும் திட்டமும் ஒன்றாக உள்ளது" என்று தெரிவித்தார்.

யூரோ மண்டலம் முழுவதிலும் மே மாதத்தின் பணவீக்கம் 0.5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்து, ஏப்ரலில் இருந்த 0.7 சதவீதத்தை விட குறைந்ததோடு, இரண்டு சதவீதம் என்ற இலக்கிற்கும் கீழே நிற்கிறது என்று ECB செவ்வாயன்று அறிவித்தது. சிட்டி பேங்கின் ஒரு முன்அனுமானத்தின்படி, இந்த ஆண்டின் இறுதியில் பணவீக்கம் இன்னும் பலவீனமடைந்து 0.3 சதவீதம் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ECB இந்த ஆண்டின் யூரோ மண்டல வளர்ச்சிக்கான மார்ச் மாத 1.2 சதவீத முன்மதிப்பீட்டை, 1 சதவீதமாக குறைத்தது.

ஒரு புதிய நிதியளித்தலுக்கான சாத்தியக்கூறுகளை உணர்ந்துகொண்ட ஐரோப்பிய பங்கு சந்தைகள், ECB முடிவுக்கு புதிய குதூகலத்துடன் பிரதிபலிப்பை காட்டின. ஐரோப்பிய பங்குகள் ஆறரை ஆண்டுகளில் இல்லாத உயரத்தை எட்டின, இதில் வங்கித்துறை பங்குகளின் உயர்வு முதலிடத்தில் இருந்தது, பின்னர் சிறிது வீழ்ச்சி அடைந்தன. பைனான்சியல் டைம்ஸ் "ECB தொகுப்பு மகிழ்ச்சியில், DAX 10,000 தொடுகிறது" என்ற தலைப்பில் வியாழனன்று ஜேர்மன் DAX குறியீடு வரலாறு காணாத உயர்வை எட்டியதாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவில், S&P 500 குறியீடு 12 புள்ளிகள் உயர்வோடு 1,940இல் முடிவுக்கு வந்தது, அதேவேளையில் டௌவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு 98 புள்ளிகள் உயர்வோடு 16,836.11இல் நிறைவுற்றது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதியியல் பத்திரிகைகளால் சில காலமாகவே ECBஇன் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் கோரப்பட்டு வந்தன. ஏப்ரலின் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட அதன் உலக பொருளாதார ஆய்வறிக்கையில், அது இப்போது பல பொருளியல்வாதிகள் குறிப்பிடும் முதலாளித்துவத்தின் "புதிய வாடிக்கை" என்பதன் மீது, அதாவது உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களின் மந்தநிலைமை அல்லது பணச்சுருக்கத்தின் மீது கவனத்தைக் கொண்டு வந்திருந்தது. 1980களில் இருந்து உண்மையான வட்டி விகிதங்கள் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், அவை "தற்போது சற்று எதிர்மறை திசையில் இருப்பதாகவும்" சர்வதேச நாணய நிதிய அறிக்கை குறிப்பிட்டது.

அதே நேரத்தில், பாரிய மலிவு பணம் கிடைக்கச் செய்ய மத்திய வங்கிகள் தயாராக இருந்தாலும் கூட அது உற்பத்தி தொழில்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கவில்லை. அதற்கு மாறாக கடந்த கால உலக நிதியியல் நெருக்கடியின் "வடுக்கள்" முன்னேறிய பொருளாதாரங்களுக்குள் செய்யப்பட்ட முதலீட்டில் கூர்மையான மற்றும் உறுதியான வீழ்ச்சியைக் கொண்டு வந்தன" என்று அந்த அறிக்கை தொடர்ந்து எழுதியது.

முதலீட்டு விகிதங்கள்பல முன்னேறிய பொருளாதாரங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெருக்கடிக்கு முந்தைய அளவுகளுக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிகிறது,” என்பதாக அந்த அறிக்கை முடித்திருந்தது.

அந்த ஒளிமங்கிய சர்வதேச நாணய நிதிய முன்மதிப்பீடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டினது சமீபத்திய புள்ளிவிபரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. PMI குறியீட்டைக் கொண்டு (Purchasing Managers’ Index) அளவிடப்பட்டதைப் போல, யூரோ மண்டலம் முழுவதிலுமான பொருளாதார நடவடிக்கை மே மாதத்தில் ஆறு மாதங்களில் இல்லாதளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இதற்கிடையே ஐரோப்பாவின் வேலையின்மை விகிதம் எப்போதையும் விட அதிகமாகி உள்ளது, அத்தோடு வேலைவாய்ப்பின்மை இத்தாலி போன்ற சில பெரிய பொருளாதாரங்களில் அடுத்த மாதங்களில் உயருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பணத்தைப் புழக்கத்ததில் விடும் கொள்கையின் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பின்னர், இந்த காலப்பகுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைச் சந்தைக்குள் பாய்ச்சியது, அவ்வாறிருந்தும் அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலைமையில் சிக்கி நிற்பதோடு, 2014இன் முதல் காலாண்டில் அதன் வருடாந்த  விகிதத்தில்  கணிப்பிட்டால்(annualized rate) ஒரு சதவீதத்தால் சுருக்கமடைந்தது. அந்நாட்டின் சில்லறை விற்பனையாளர்கள் முதல் காலாண்டில் தவறவிட்ட சம்பாத்தியம், பதிமூன்று ஆண்டுகளில் இல்லாதளவிற்கு மிகப்பெரிய தொகையாக மதிப்பிடப்படுகிறது.

மத்திய வங்கிகள் முரண்பாடான நோக்கங்களைப் பின்தொடர்ந்து வருகின்ற நிலையில், ECBஇன் நடவடிக்கை செலாவணி பதட்டங்களை தீவிரப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பெடரல் ரிசர்வ் அதன் பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையைக் குறைக்க முயன்று வருகிறது, அதேவேளையில் பிரிட்டிஷ் பொருளாதாரம் கட்டுப்பாட்டை மீறி சூடாகி வருவது குறித்தும், வீடுகளின் விலைகள் அதிகரித்து வருவது குறித்தும் Bank of England இன் ஆளுநர் மார்க் கார்னே கடந்த மாதம் எச்சரித்திருந்தார். பிரிட்டனில் வீட்டு விலைகள் கடந்த ஆண்டு 11 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்தது, இது ஜூன் 2007க்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். புதிய வீட்டுத்துறை குமிழியைக் கட்டுக்குள் வைக்க அடமான கடன் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கைகளை கார்னே விரைவில் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியில் இருந்து உலக மத்திய வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து முறைமைகளிலும் ஏற்பட்டதைப் போலவே, ECBஇன் சமீபத்திய வட்டி விகித வெட்டுக்களும் உண்மையான பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு ஒன்றும் செய்யப் போவதில்லை. அதற்கு மாறாக வியாழனன்று பங்கு சந்தை குதூகலங்கள் காட்டியதைப் போல, அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள மிகப்பெரிய வங்கிகள் மற்றும் மில்லினியர்கள் மற்றும் பில்லியனர்களை இன்னும் மேலதிகமாக செல்வ செழிப்பூட்டி, புதிய ஊக குமிழியை ஊதிப் பெருக்க வைக்க மட்டுமே ECBஇன் வட்டி விகித வெட்டுகள் உதவிசெய்ய உள்ளன.