சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

G7 unity shows cracks on Russia sanctions

ரஷ்யா மீதான தடைகள் விடயத்தில் G7 இன் ஐக்கியத்தில் விரிசல்களைக் காட்டுகிறது

By Bill Van Auken
6 June 2014

Use this version to printSend feedback

புரூசெல்ஸில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக ரஷ்யாவின் பங்கேற்பில்லாமல் நடைபெற்ற எட்டு நாடுகள் குழுவின் (இப்போது ஏழு நாடுகள் குழுவாகியிருக்கிறது) G7 விடுத்த ஒரு கூட்டு அறிக்கையில், கீயேவின் வலது-சாரி ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதிலும், கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்காகவும் கிழக்கு உக்ரேனில் “ஸ்திரம் குலைக்கும் நடவடிக்கைகளுக்காக”வும் ரஷ்யாவிற்குக் கண்டனம் செய்யதிலும் உடன்பாடு கண்டுள்ளன.

உலகப் பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் எரிபொருள் போன்றவை குறித்த விடயங்களில் அனல் பறக்கும் அறிக்கைகளை வழமைபோல் உச்சிமாநாடு வெளியிடுகின்ற அதேசமயத்தில், அங்கு கூடியிருந்த அமெரிக்க, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி மற்றும் கனடாவின் அரசுத் தலைவர்களின் முன்னால் இருந்த ஒரே முக்கியமான பிரச்சினையாக உக்ரேன் மட்டுமே இருந்தது.

ஆயினும் அளவில்குறைந்த இந்த உச்சிமாநாடு (இத்தகைய நிகழ்வுகளில் வழமையாக கலந்துகொள்ளும் விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களில் எவரும் இல்லாமல்) ஒபாமா நிர்வாகத்தினால் முன்தள்ளப்பட்ட தடைகளின் ஒரு புதிய சுற்றைத் திணிப்பதில் எந்தவொரு உறுதியான திட்டங்களையும் ஏற்பதில் தோல்வி கண்டது.  இத்தகைய தடைநடவடிக்கைகள் ஒப்பீட்டுரீதியில் பூஅமெரிக்காவுக்கு அதிக தீங்கான விளைவை ஏற்படுத்தாது என்பதுடன் பார்க்கையில் மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களின் மீது கடுமையான பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதால் உச்சிமாநாட்டின் பெயரளவிலான ஒற்றுமையில் இருந்த விரிசல்கள் மிக அப்பட்டமானதாக இருந்தன.

அமெரிக்கா பிப்ரவரியில் உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான விக்டர் யானுகோவிச்சை வெளியேற்றிய வன்முறையான பாசிசத் தலைமையிலான பிப்ரவரி ஆட்சிசதியை ஒழுங்கு செய்வதிலும் அதற்கு ஆதரவளிப்பதிலும் ஜேர்மனியுடனும் மற்ற ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து இயங்கியதில் தொடங்கியே  ரஷ்யாவுடனான பதட்டங்களை தீவிரப்படுத்துவதில் முனைந்து வந்திருக்கிறது. இது வெறுமனே பொருளாதாரத் தடைகளை முன் தள்ளியதோடு நிற்காத்துடன், போலந்தில் அமெரிக்க போர்க்கப்பல்களை நிறுத்தி, அமெரிக்க படையினரை போலந்துக்கும் மற்ற மூன்று முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளுக்கும் அனுப்பியது. அத்துடன் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியதன் மூலம் அமெரிக்க ராணுவப் படைகளை ரஷ்ய எல்லைகளுக்கு அருகே கொண்டுவந்தது.

ரஷ்யாவை இராணுவரீதியாகச் சுற்றிவளைப்பதும் யூரோஆசியா (Eurasia) மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதில் இருந்து ரஷ்யாவை அகற்றுவதற்குத் தேவையான அடிப்படை வேலைகளைச் செய்வதுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயம் என்பது நாளுக்கு நாள் கூடுதல் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

G7 வரைவு செய்திருக்கும் வெளியுவுக் கொள்கை தொடர்பான அறிக்கை அதன் சிடுமூஞ்சித்தனத்திலும் இரட்டைவேடத்திலும் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. மே 25 உக்ரேனியத் தேர்தலில், கிழக்குப் பகுதியில் இராணுவ முற்றுகையின் கீழ் இருந்த மற்றும் இருந்து வருகிற மில்லியன்கணக்கான உக்ரேனியர்கள் வாக்களிக்கவில்லை என்கிற உண்மையை மறந்து விட்டு பில்லியனர் “சாக்கலேட் அரசர்” பெட்ரோ போறோஷென்கோ வெற்றி பெற்ற அத்தேர்தலை ”வெற்றிகரமாக நடத்தியிருப்பதை” அது பாராட்டுகிறது. உக்ரேன் விடயத்தைத் தாண்டிய உடனேயே அடுத்து வருகின்ற சிரியா தொடர்பான விடயத்தில், உக்ரேன் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு அதேமாதிரியான நிலைமைகளின் கீழ் நடத்தப்பட்ட ஒரு தேர்தலை, ஒரு “மோசடி” என இந்த அறிக்கை கண்டனம் செய்கிறது.

மேலும் இந்த அறிக்கையானது கிழக்கில் “சட்டம் ஒழுங்கை மீளமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்வதில் ஒரு  பொருத்தமான அணுகுமுறையைப் பராமரிக்க” கீயேவ் ஆட்சியை “ஊக்குவிப்பதோடு”...”அனைவரையும் உள்ளடக்கிய  விதத்திலான தேசியளவிலான பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு...அது கொண்டுள்ள விருப்பத்தை”யும்  பாராட்டுகிறது.

G7 அரசு தலைவர்கள் புரூசெல்ஸில் அமர்ந்து கொண்டு “பொருத்தமான அணுகுமுறை” மற்றும் “அனைவரையும்  உள்ளடக்கிய பேச்சுவார்த்தை” குறித்து பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில், களத்தில் கிழக்கு உக்ரேனில் பலவகை  போர்க் குற்றங்களால் குணாம்சம் காட்டப்படுகின்ற வகையில் அப்பாவி மக்கள் மீது ஒரு மிருகத்தனமான தாக்குதல்  நடத்தப்படுவதற்கான ஆதாரம் மலைபோல் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பிராந்தியத்தில் ஒரு மனிதாபிமானப் பேரழிவு உருவெடுத்துக் கொண்டிருப்பதாய் ரஷ்ய அரசாங்கம் எச்சரிக்கை  விடுத்திருக்கிறது. ஆட்சியின் படைகள் நடத்தும் தொடர்ச்சியான ஆட்டிலறி மற்றும் வான்வழிக் குண்டுவீச்சில் இருந்து  தப்புவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெரும்பாலாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8,300க்கும் அதிகமான உக்ரேன் அகதிகள் ரஷ்யாவுக்குள் தஞ்சம் புகுந்திருப்பதாக வியாழனன்று ரஷ்யா  தெரிவித்தது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் லுஹான்ஸ்க் பிராந்திய நிர்வாகக் கட்டிடத்தின் மீது கொத்து குண்டுகள் வீசப்பட்டதில்  எட்டு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது போன்று சர்வதேச நெறிமுறைகளின் படி  சட்டவிரோதமாக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் கீயேவ் ஆட்சியால் பரவலாய் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

டோனேட்ஸ்க் பிராந்தியத்தில் ஸ்லேவியான்ஸ்க்கின் தென்கிழக்கில் இருக்கும் கிராஸ்னி லிமான் நகரத்தின் மீது  பெருமளவு குண்டுகளை வீசி நாசம் செய்த பிறகு, Right Sector மற்றும்  ஸ்வோபோடா கட்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட நவ-பாசிசக் கூறுகளில் இருந்து அதிகளவான ஆட்களை அணிதிரட்டியுள்ள ஒரு படையான தேசியக் காவற்படை(National Guard) உறுப்பினர்கள் உள்ளூர் மருத்துவமனை ஒன்றை இடித்துத் தள்ளியதோடு அங்கே அவர்கள் கண்ட காயம்பட்ட 25 பேரையும் படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவும் அதன் மேற்கு ஐரோப்பியக் கூட்டாளிகளும் பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி எதுவும்  நிலவுவதை மறுத்திருப்பதன் மூலம், உள்நாட்டில் மக்களை ஒடுக்குவதற்கு அவசியமான எந்த வகை  அட்டூழியங்களுக்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றன.

இதனிடையே, இன்னும் வன்முறையான ஒடுக்குமுறைக்கு பாதை திறந்து விடுவதற்காக டோனேட்ஸ்க்

மற்றும்  லுஹான்ஸ்க் ஆகிய கிளர்ச்சிப் பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்கான தனது எண்ணத்தை கீயேவ்  ஆட்சி அறிவித்திருக்கிறது.

கிழக்கில் நடத்தப்படும் வன்மையான ஒடுக்குமுறை குறித்தோ இந்த இழிவான வேலையைச் செய்வதற்காக பாசிசப்  ஆயுதக்குழுக்களை கீயேவ் ஆட்சி நம்பியிருக்கும் நிலை குறித்தோ வாய் திறக்காத இந்த அறிக்கை, பிராந்தியத்தின் தற்காப்புப்  படைகளை “ஆயுதங்களை கீழேபோட” நிர்ப்பந்திக்கும் பொறுப்பை ரஷ்யா மீது தள்ளி விடுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனும் மற்றும் பிற முகமைகள் மற்றும் அரசாங்கங்களுடனும் ஏற்கனவே அடையப்பட்டிருக்கும்  கடனுதவி உடன்பாடுகளை G7 அறிக்கை வரவேற்றிருக்கிற அதேநேரத்தில், தொடர்ந்து சரிந்து சென்று  கொண்டிருக்கும் உக்ரேனியப் பொருளாதாரத்திற்கான புதிய நிதியாதாரம் வழங்குவதற்கு அது ஆலோசனையளிக்கவில்லை.  அதற்குப் பதிலாக, “பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவவும் அத்துடன் தனியார்துறை தலைமையிலான வளர்ச்சிக்குக்  கதவுதிறந்து விடவும் மற்றும் மிக முக்கியமானதாக இருக்கக் கூடிய சிக்கலான சீர்திருத்தங்களை கடைப்பிடிப்பதற்கான தனது  உறுதிப்பாட்டை” கீயேவ் ஆட்சி பூர்த்தி செய்ய வேண்டும் என்று அது கோரியது. இந்த “சீர்திருத்தங்கள்” எல்லாம் ஏற்கனவே  வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மேலும் மிகப்பெருமளவான சிக்கன நடவடிக்கைகளுக்குள்ளும் அதிகரித்த  வேலைவாய்ப்பின்மைக்குள்ளும் தள்ளும்.

எப்படியிருந்தபோதிலும், தனிப்பட்ட நபர்களின் மீதும் ரஷ்யாவில் உள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான நிறுவனங்களின் மீதும்  ஓரளவுக்கு வரம்புபட்ட தடைகளை மட்டுமே திணிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதை இந்த அறிக்கை  உறுதிப்படுத்தியது. ”சம்பவங்கள் அவசியமாக்குமானால் குறிவைத்து செலுத்தப்படும் தடைகளை தீவிரப்படுத்தவும்  ரஷ்யாவுக்கு கூடுதல் செலவைக் கொண்டுவரும் வகையில் கணிசமான கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை  அமுல்படுத்தவும்” ஏழு நாடுகளின் தலைவர்களும் தயாராய் இருப்பதை மட்டும் அது திட்டவட்டமாக தெரிவித்தது.  இத்தகைய புதிய நடவடிக்கைகளைத் தூண்டக் கூடிய அந்த “சம்பவங்கள்” என்னவாக இருக்கலாம் என்பது குறித்து அது  குறிப்பிடவில்லை.

உதாரணமாக ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையைக் குறிவைத்து ஒபாமா நிர்வாகம் முன்தள்ளி  வருகின்ற தடைகள் போல எவ்வகையான துறைவாரியான தடைகள் குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.

நீர் நிலம் இரண்டிலும் ஊடுருவத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு நவீனமான Mistral போர்க்கப்பல்களை  மொஸ்கோவிற்கு 1.2 பில்லியன் யூரோவுக்கு விற்கின்ற தனது முடிவை தொடர்ந்து மேற்கொள்வதற்கு பிரெஞ்சு அரசாங்கம்  எடுத்துள்ள முடிவு தொடர்பாக ஒபாமாவுக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுக்கும் இடையில் உண்டான  மோதலில், அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கும் இடையிலான விரிசல்கள், மிகவும் அப்பட்டமாக எழுந்து நின்றன. போர்க்கப்பல்களது நடவடிக்கையில் சுமார் 400 ரஷ்ய  மாலுமிகளுக்கு பிரான்ஸ் இந்த மாத இறுதியில் பயிற்சியைத் துவக்க இருக்கிறது.

Mistral விற்பனை விடயத்தில் “நிறுத்தி வைக்கும் அழுத்தியை அழுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று  நினைக்கிறேன்” என்று புரூசேல்ஸில் உச்சிமாநாடு சந்திப்பைத் தொடர்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒபாமா கூறினார்.  “ஜனாதிபதி ஹாலண்ட் இதுவரை வேறுபட்ட முடிவுகளை செய்திருக்கிறார்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

விற்பனையை ரத்து செய்யும் எந்த ஆலோசனையையும் ஹாலண்ட் நிராகரித்தார். “ஒப்பந்தம் இடையூறுக்கு உட்பட்டால்நஷ்டஈடு செலுத்துவது அவசியமாக இருக்கும்” என்றார் அவர். “அப்படியொரு பரிசீலனைக்குள் நுழைய  காரணமில்லை” என்றார். ஹாலண்டின் நிலையை ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெலும் ஆதரித்தார். ஐரோப்பிய  ஒன்றியம் பரந்த தடைகள் எதற்கும் ஒப்புதல் அளித்திராத நிலையில், பிரான்ஸ் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்குக் காரணங்களில்லை என்று அவர் வாதிட்டார்.

பிரான்சின் வங்கித்துறை பெருநிறுவனமான BNP Paribas சூடான், ஈரான் மற்றும் கியூபா மீதான அமெரிக்கத்  தடைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பாக ஒரு  குற்றவியல் விசாரணையை அமெரிக்க நீதித்துறை  கொண்டுவந்திருக்கும் பிரச்சினையை “கண்ணியமாக” தீர்த்துக் கொள்வதற்கு ஹாலண்ட் விடுத்த விண்ணப்பத்தை ஒபாமா  வெளிப்பட கடிந்து கொண்டதில் அமெரிக்க-பிரெஞ்சு உறவுகள் மேலும் விரிசலுற்றன. அந்த வங்கி 10 பில்லியன் டாலர்  வரை அபராதத்தை எதிர்பார்க்கலாம் என்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது “வரம்பு மீறிய அளவு” என்றும்  பிரான்ஸின் பொருளாதாரத்தில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஹாலண்ட் கூறினார்.

சற்று தாட்சண்யமான தீர்வு எதனையும் முன்னெடுப்பதற்கு தான் எதையும் செய்யப் போவதில்லை என்று ஒபாமா  கூறினார். “விசாரணைகளில் ஜனாதிபதி இடையூறு செய்வதில்லை என்பதே அமெரிக்காவின் பாரம்பரியமாக  இருக்கிறது” என்று புரூசேல்ஸில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விளாடிமிர் புட்டின் உடனான சந்திப்பு எதற்கும் ஒபாமா முனையவில்லை என்கிற அதேநேரத்தில், G7 ஐ சேர்ந்த மற்ற  அங்கத்துவநாடுகளில் அநேகமானவை ரஷ்ய ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு  செய்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் D-Day தரையிறங்கும் 70வது ஆண்டுதின அனுசரிப்பு நிகழ்ச்சிகளில்  பங்கேற்க ஹாலண்ட் அவரை அழைத்திருந்தார்.

இந்த முடிவை ஹாலண்ட் பாதுகாத்துப் பேசினார். அவர் அறிவித்தார், “ரஷ்ய மக்களுக்கு, அந்த சமயத்தின் சோவியத்  மக்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். நாஜிப் படைககிள் கீழ்  ரஷ்ய மக்கள்  துன்புறுவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதில் அவர்கள் தீரமுடன் செயல்பட்டனர்.”  வியாழனன்று பாரிஸ்  உணவகம் ஒன்றில் முதலில் ஒபாமாவுடன் இரவு விருந்து, இரண்டாவதாக எலிஸி அரண்மனையில் புட்டின் உடன் ஒரு  இரவு விருந்து என இரண்டு தனித்தனியான விருந்துகளுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.

ஜேர்மனியின் மேர்க்கெலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் “இது அச்சுறுத்தல்கள் குறித்த விடயம் அல்ல...நாங்கள்  பேச்சுவார்த்தையை விரும்புகிறோம்” என்றார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் கூட புட்டின் உடன் தனித்தனியான  சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜப்பான் பிரதமரான சின்ஸோ அபே புரூசேல்ஸில் ஒரு செய்தியாளர் சந்திப்பில்  பேசியபோது, “ஜனாதிபதி புட்டின் உடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றே நான் நம்புகிறேன்” என்று கூறினார். புட்டின்  உச்சிமாநாட்டில் இடம்பெறாததில் அவர் வருத்தத்தை வெளிப்படுத்தியது போல் தெரிந்தது.

வெள்ளை மாளிகையின்  தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகரான பென் ரோட்ஸ், இந்த இருதரப்பு சந்திப்புகளுக்கான  அமெரிக்காவின் குரோதத்தை வெளிப்படுத்தினார். “உக்ரேனின் வருங்காலம் தொடர்பாக கீயேவின் அரசாங்கத்  தலைமைக்கு அப்பால் வெவ்வேறு நாடுகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதையே  நாங்கள் எப்போதும் கூறியிருக்கிறோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேற்கில் கணிசமான செல்வத்தை முதலீடு செய்திருக்கின்ற ஆளும் பில்லியனர் நிதிப்பிரபுக்களின் அடுக்கு ஒன்றின்  நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற புட்டினும் தன் பங்காக, உக்ரேன் விடயத்தில் ஒரு சமரசத்தை எட்ட தான்  தயாராக இருப்பதை சமிக்கை செய்திருக்கிறார். உக்ரேன் எல்லையில் இருந்து திரும்புவதற்கு ரஷ்யப் படைகளுக்கு  அவர் உத்தரவிட்டுள்ளதோடு மே 25 தேர்தலையும் அவர் அங்கீகரித்துள்ளார். சனிக்கிழமை நடைபெறவிருக்கும்  போரோஷெங்கோவின் பதவியேற்பு விழாவில் ரஷ்யத் தூதர் கலந்துகொள்வார் என்று வியாழக்கிழமை  அறிவிக்கப்பட்டது.

புதனன்று பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு நேர்காணலில் அமெரிக்காவுக்கும் மேற்கு  ஐரோப்பாவுக்கும் இடையிலான பிளவுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அவர் முனைந்தது தெளிவாக வெளிப்பட்டது.  “பேச்சுவார்த்தைக்குத் தயார்” என்று அவர் அறிவித்துக் கொண்டதோடு ”அமெரிக்காவினுடையது தான் மிக மூர்க்கமான  மற்றும் கடுமையான கொள்கை என்பது ரகசியம் அல்லவே” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.