சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Newly installed President Poroshenko pledges to militarise Ukraine and crush rebellion in the east

புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி போறொஷென்கோ உக்ரேனை இராணுவமயமாக்கவும் கிழக்கின் கிளர்ச்சிகளை நசுக்கவும்  சூளுரைக்கிறார்

By Mike Head
9 June 2014

Use this version to printSend feedback

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கையில், ஒரு பில்லினியரும், மிட்டாய் தயாரிப்பு நிறுவன தொழிலதிபருமான பெட்ரோ போறொஷென்கோ சனியன்று உக்ரேனிய ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக பதவி ஏற்றார். பின்னர் யுத்தம் நாடும் உரை ஒன்றை வழங்குகையில், அவர் ரஷ்யாவை எதிர்த்து நிற்க, கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாதிகளை ஒடுக்க மற்றும் நாட்டை முற்றிலுமாக இராணுவமயமாக்க உறுதி பூண்டார். அதே வேளையில், உக்ரேனிய தொழிலாளர் வர்க்கத்தின் மீது கண்மூடித்தனமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் அவரது திட்டங்களையும் மறைமுகமாக குறிப்பிட்டார்.

போறொஷென்கோ பெப்ரவரியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவோடு நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், கிழக்கு உக்ரேனிய கொடூர இராணுவ வன்முறை ஆட்சிமுறைக்கு இடையே, மே 25இல் நடத்தப்பட்ட ஒரு தேர்தல் மூலமாக அவரை நியமிப்பதில் முன்னணியில் நின்ற பாசிச சக்திகளைக் கௌரவப்படுத்தி அவரது உரையைத் தொடங்கினார். “உக்ரேனிய தேசப்பற்றாளர்கள்" மற்றும் "வீரர்களால்" நடத்தப்பட்ட அந்த "வெற்றிகரமான புரட்சிக்கு" அவர் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

மேற்கத்திய ஊடகங்கள் அவரது உரையை ஒரு பலம் வாய்ந்த வெளிப்பாடாக சித்தரித்த போதினும், போறொஷென்கோ ஜேர்மன் மற்றும் குறிப்பாக அமெரிக்க ஏகாதபத்தியத்திற்கான முன்னணி பிரமுகர் என்பதை மற்றும் முற்றிலும் அவற்றைச் சார்ந்திருப்பவர் என்பதை தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மையை மட்டுமே அந்த உரை அடிகோடிட்டது. ரஷ்யாவை நோக்கி ஒரு ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை எடுத்த அவர், மாஸ்கோவுடன் கிரிமியாவின் இணைப்பை தாம் ஒருபோதும் ஏற்க முடியாது என்று அறிவித்தார், மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளுக்குள் மேற்கத்திய இராணுவ படைகளை நிறுத்துவதைத் தடுக்கும் புடாபெஸ்ட் உடன்படிக்கையை (Budapest Agreement) ஏற்க மறுப்பதாகவும் அறைகூவல் விடுத்தார்.

ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்துள்ளது, கிரிமியா உக்ரேனிய மண்ணில் இருந்தது, இருக்கிறது, இருக்கும்,” என்று போறொஷென்கோ வலியுறுத்தினார். பிரான்சில் D-Day நினைவுவிழாவின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான ஒரு சிறிய சந்திப்பைக் குறிப்பிட்டு அவர் கூறினார்: “நேற்று, நோர்மண்டி கூட்டத்தினூடாக, கிரிமியா உக்ரேனின் பூமி, அதன் பாகம் என்பதையும், கிரிமியா மீதான பிரச்சினை, ஐரோப்பாவை தேர்வு செய்வது மற்றும் அரசு கட்டமைப்பு இவற்றில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதையும் நான் ஜனாதிபதி புட்டினுக்கு தெரிவித்தேன்,” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பிரான்சில் நடந்த பேச்சுவார்த்தைகளால் புத்துணர்ச்சி பெற்ற போறொஷென்கோ, கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவிலான பிரிவினை சக்திகளோடு எந்தவொரு பேரத்திற்கும் இடமில்லையென நிராகரித்தார். அதற்கு நேரெதிராக, கியேவில் மேற்கத்திய ஆதரவிலான பாசிச தலைமையிலான பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான எதிர்ப்பை வெகுவிரைவிலேயே முடிவுக்குக் கொண்டு வர சூளுரைத்தார்.

உக்ரேனிய இராணுவத்தினதும் மற்றும் ஒருங்கிணைந்த வலதுசாரி போராளிகள் குழுவினதும் தாக்குதல் புதுப்பிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்ததோடு, கிழக்கில் உள்ள டஜன் கணக்கான சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர்களை "கொள்ளைக்காரர்கள்", “குற்றவாளிகள்", “பயங்கரவாதிகள்" மற்றும் "ரஷ்ய அடியாட்கள்" என்று சித்தரித்தார்.

போறொஷென்கோ பேசிக் கொண்டிருந்த போதே கூட, டோனெட்ஸ்கில் ரஷ்ய-ஆதரவு தலைவரான டென்னிஸ் புஷிலின் மீது ஒரு படுகொலை தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது, அதில் ஒரு உதவியாளரான மாக்ஸ்யம் பெட்ருஹின் சுட்டு கொல்லப்பட்டார். ஒரு தொழிலதிபரைப்போல் நேர்த்தியான உடையணிந்திருந்த பெட்ருஹின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு காரின் அருகில் தலைகுப்புற விழுந்து கிடந்ததும், அந்த காரின் பின் கதவுபகுதியில் குறைந்தபட்சம் ஏழு தோட்டங்களின் ஓட்டைகள் இருந்ததையும் உக்ரேனிய செய்தி தளங்களின் புகைப்படங்கள் எடுத்துக்காட்டின.

அமைதி நீடித்திருக்கவேண்டும் என்றால், நாம் நிரந்தரமான போராட்டத்திற்கு தயாராக வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று உக்ரேனின் "சாக்லெட் அரசர்" என்று அறியப்படும் அந்த தொழிலதிபர் அறிவித்தார். நாம் வெடிமருந்தை தயாராக வைத்திருக்க வேண்டி உள்ளது. இராணுவமும் மற்றும் அதன் மறு-வடிவாக்கமுமே தேசத்தின் இராணுவ-தொழில்துறை உறவுகளைக் கொண்டு செய்யப்பட வேண்டிய நமது முதன்மையான முன்னுரிமையாகும்... நமது இராணுவம் உக்ரேனிய சமூகத்தின் ஒரு உண்மையான மேற்தட்டாக மாற வேண்டும்,” என்றார்.

உக்ரேனிய மக்கள் "மாபெரும் தியாகங்களைச்" செய்ய வேண்டியதிருக்கும் என்று வலியுறுத்திய போறொஷென்கோ தொடர்ந்து கூறுகையில், “ஆயுத படைகளுக்கு நிதியளிப்பதை எதிர்ப்பவர்கள் வெளிநாட்டு இராணுவத்திற்கு சேவை செய்கின்றனர்... தரைப்படை, கப்பற்படை, தேசிய பாதுகாப்பு மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற படைகளும் நமது மிகவும் நம்பகமான கூட்டாளிகள் மற்றும் அமைதிக்கான சிறந்த உத்தரவாதம் அளிப்பவர்கள் ஆகிறார்கள்,” என்றார்.

போறொஷென்கோ உடனான ஒரு சந்திப்பில், அவரது ஆட்சிக்கு பிடென் அமெரிக்காவின் ஆதரவை பலமாக வலியுறுத்தினார். “அமெரிக்கா உங்களோடு இருக்கிறது,” என்று கூறிய பிடென், “அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல,” என்றார்.

பிடெனின் விஜயத்திற்கு அனுசரணையாக, வெள்ளை மாளிகை உக்ரேனுக்கான புதிய உதவியாக 48 மில்லியன் டாலரை அறிவித்தது, அதனோடு சேர்ந்து மால்டோவாவிற்கு 8 மில்லியனும், ஜோர்ஜியாவிற்கு 5 மில்லியன் டாலரும் அறிவிக்கப்பட்டன, இவ்விரு நாடுகளும் இம்மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கைகளில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, அந்த உதவி "முக்கிய சீர்திருத்தங்களைச் செய்யவும், சட்ட ஒழுங்கு தகைமையைக் கட்டியமைக்கவும், மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தவும்" உக்ரேனிய அரசாங்கத்திற்கு உதவும் என்று கூறப்பட்டது. மிகவும் குறிப்பாக உக்ரேனின் "இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை" மற்றும் "சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் உலக வங்கி திட்டங்களை நடைமுறைப்படுத்த அவசியமான சீர்திருத்தங்கள்" உட்பட "பொருளாதார அபிவிருத்தியை" ஆதரிப்பதில் அமெரிக்கா கடப்பாடு கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வெகுவிரைவிலேயே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பொருளாதார உடன்படிக்கைக்குள் நகர போறொஷென்கோ உறுதியளித்தார், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கான உத்தரவுகளால் தூண்டிவிடப்படும் சமூக மேலெழுச்சிகளுக்கு அஞ்சி, இந்த உடன்பாட்டில் இருந்து தான் உக்ரேனின் முந்தைய அரசாங்கம் கடந்த நவம்பரில் பின்வாங்கியது. “எனது பேனா என்னுடைய கைகள் உள்ளது,” என்று கூறிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டுறவு உடன்படிக்கை "ஐரோப்பிய ஒன்றியத்தில் முற்றிலுமாக உக்ரேன் அங்கத்துவ நாடாக மாறுவதை நோக்கிய" முதல் படியாகும் என்று குறிப்பிட்டு காட்டினார்.

பெப்ரவரியில் நியமிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கம் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்பட்ட சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளது, உள்நாட்டு எரிபொருள் மானியங்களைக் குறைப்பது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக அதன் செலாவணியான ஹ்ரிவின்யாவின் (hryvnia) மதிப்பை 30 சதவீதம் குறைக்க அனுமதித்தது ஆகியவை அதில் உள்ளடங்கும். உக்ரேனிய குடும்பங்களுக்கான சராசரி எரிவாயு விலைகள் மே மாதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர தொடங்கி இருந்தன, மேலும் ஜூலையில் இருந்து தொடங்கி வெப்பமூட்டும் கட்டணங்கள் 40 சதவீதத்திற்கு உயரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுத்துறை ஊதியங்களை உறையச் செய்தல், அரசு தொழிலாளர்களின் ஆட்குறைப்பு, திட்டமிடப்பட்ட ஓய்வூதிய உயர்வுகளை இரத்து செய்தல், மற்றும் பல சமூக செலவினங்களில் வெட்டுக்கள் உட்பட மேலும் பல கடுமையான முறைமைகள் இன்னும் வரவிருக்கின்றன.

இவற்றை செய்வதற்குரிய போறொஷென்கோவின் தகமை குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கவலை வெளியிட்டிருந்தது. கியேவை மையமாக கொண்ட முதலீட்டு நிறுவனமான SP Advisorsஇன் ஆராய்ச்சித்துறை தலைவர் விடாலி வாவ்ரிஸ்ஷ்சக் கூறுகையில், “வாழ்க்கை நிலைமைகளில் இந்த வீழ்ச்சியை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராகி இருப்பதைப் போல தெரிகிறது,” ஆனால் உக்ரேனியர்கள் பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார். “பொறுமைக்கும் அளவுண்டு,” என்று அவர் எச்சரித்தார்.

போறொஷென்கோவை ஒரு மக்கள் விரும்பும் மற்றும் ஜனநாயக பிரமுகராக காட்ட மேற்கத்திய அதிகாரங்கள் மற்றும் அதற்கு கீழ்படிந்த ஊடங்களின் அனைத்து முயற்சிகளும் இருந்தாலும் கூட, குறிப்பாக அவர், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களைக் கொள்ளையடித்து தங்களைத் தாங்களே செல்வ செழிப்பாக்கிக் கொண்ட உக்ரேனிய ஊழல் மேற்தட்டுக்களின் ஒரு நேர்மையற்ற பிரதிநிதியாவார். அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவிலான 2004 “ஆரெஞ்ச் புரட்சியைத்" தொடர்ந்து ஜனாதிபதி விக்டோர் யாஷ்சென்கோவின் மேற்கத்திய-ஆதரவிலான அரசாங்கத்திலும் மற்றும், யாஷ்சென்கோ மதிப்பிழந்த பின்னர், மாஸ்கோ தரப்பில் சாய்ந்திருந்த தலைமையான சமீபத்தில் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி விக்டோர் யானுகோவிச் அரசாங்கத்திலும் இரண்டிலும் மூத்த மந்திரிசபை பதவிகளை வகித்திருந்தார்.

யாஷ்சென்கோவின் வெளியுறவுத்துறை மந்திரியாக மற்றும் யானுகோவிச்சின் வர்த்தகத்துறை மந்திரியாக சேவையாற்றிய போறொஷென்கோ, மேற்கத்திய அதிகார தட்டுக்களின் நலன்களை ஊக்குவிப்பதில் ஒரு பொறுப்பான கருவியாக அவற்றிற்கு மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபின் எழுந்த செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், போறொஷென்கோவைப் போலவே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் கியேவ் ஆட்சியோடும் மற்றும் வாஷிங்டனுடம் ஓர் உடன்பாட்டை எட்ட தீவிரமாக முயன்று வருகிறார். பிரான்சில் போறொஷென்கோ உடனான 15 நிமிட நேர சந்திப்பிற்குப் பின்னர், ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், புட்டின் கூறுகையில், “எனக்கு அவரது அணுகுமுறை பிடித்திருந்தது,” என்று அறிவித்ததோடு தொடர்ந்து, “கிழக்கு உக்ரேனின் இரத்தக்கறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர அவசியப்படுவதால், போறொஷென்கோவின் நிலைப்பாட்டை நான் வரவேற்காமல் இருக்க முடியாது,” என்றார்.

கிழக்கு உக்ரேனின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு போறொஷென்கோ சுதந்திரமாக இயங்கவிட புட்டின் தயாராகி வருகிறார் என்பதற்கு அங்கே அனைத்து அறிகுறிகளும் உள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளில் இருந்து கிரெம்ளினை விலக்கி வைக்கும் முயற்சியில் திரு. புட்டின் மேற்கிற்கு பின்புலத்தில் சேதிகளை அனுப்பி வருவதோடு, கிழக்கு உக்ரேனில் வன்முறை தீவிரமடைவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அது தயாராகி வருகிறது என்பதை இவ்விதத்தில் எடுத்துக்காட்டுகிறார்,” என்று செய்தி வெளியிட்டது.

பதவியேற்பு விழாக்களில் கலந்து கொள்ள மாஸ்கோ தனது தூதுவரான மிக்ஹைல் ஜூராபொவ்வை கியேவிற்குத் திரும்பி அனுப்பியது.  கியேவ் ஆட்சிக்கு எதிராக போராட மக்கள் எல்லை தாண்டி வருவதைத் தடுக்க எல்லையில் புட்டின் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன.

ஒரு உடன்பாட்டை எட்ட உதவியாக புட்டின் மற்றும் போறொஷென்கோவிற்கு இடையேயான சந்திப்பை ஜேர்மன் சான்சிலர் ஆங்கெலா மேர்கெலும் பிரெஞ்ச் ஜனாதிபதி பிரான்கோஸ் ஹோலாண்டும் ஏற்பாடு செய்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. கியேவ் ஆட்சி கவிழ்ப்பை முழுமையாக ஆதரித்த ஜேர்மன் மற்றும் பிரெஞ்ச் ஏகாதிபத்தியம், பொருளாதார மற்றும் எரிசக்திதுறையில் ரஷ்யாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளதோடு, உக்ரேன் மற்றும் ரஷ்யா மீது மேலாதிக்கம் செலுத்த அவற்றின் சொந்த வரலாற்றுரீதியிலான அபிலாஷைகளையும் கொண்டுள்ளன. இருந்த போதினும், ரஷ்யாவை மண்டியிடச் செய்ய மற்றும் அதை அமெரிக்காவின் ஒரு அரை-காலனித்துவ நாடாக மாற்ற உக்ரேனிய நெருக்கடியைச் சுரண்டுவதற்கு அடித்தளம் கொண்டிருக்கும் வாஷிங்டன் அதன் நிகழ்ச்சிநிரலை முழுமையாக பின்தொடர விரும்புகிறது என்பதை அது தெளிவுபடுத்தி உள்ளது.