சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian Senate committee discusses threat of US-China war

ஆஸ்திரேலிய செனட் கமிட்டி அமெரிக்க-சீன யுத்த அச்சுறுத்தலை விவாதிக்கிறது

By Mike Head
11 June 2014

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே அல்லது ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு யுத்தத்தில் ஆஸ்திரேலியா எந்த தரப்பில் முன்னணியில் இருக்கக்கூடும் என்பது குறித்து, கடந்த வார ஆஸ்திரேலிய செனட் மதிப்பீட்டு கமிட்டி விவாதத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்து பரிமாற்றம் நடந்தது.

சீனா "ஸ்திரமின்மைப்படுத்துவதாக, தென் சீன கடலில் அதன் உரிமைகோரல்களை வலியுறுத்தி ஒருதலைபட்சமான நடவடிக்கைகள்" எடுப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெல் சிங்கப்பூரில் ஒரு அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் உரையை வழங்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜூன் 2இல், செய்திகளில் சிறியளவில் எடுத்துக்காட்டப்பட்ட அந்த விவாதம் நிகழ்ந்திருந்தது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய பாதுகாப்பு விவாதகூட்டமான ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் உரையாற்றுகையில், “சர்வதேச ஒழுங்குமுறையின் அடிப்படை கோட்பாடுகள் சவாலுக்கு உட்படும் போது" அமெரிக்கா "வேறு பாதையைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று அறிவித்து, ஹாகெல் யுத்த அச்சுறுத்தல் போன்றவொன்றை வெளியிட்டார்.

தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல்களில் சீனா சம்பந்தப்பட்ட கடல்வழி எல்லை பிரச்சினைகளில் வாஷிங்டன் நடுநிலைமை வகிக்கிறதென்ற பாசாங்குத்தனத்தை ஹாகெல் முடிவுக்கு கொண்டு வந்தார். பெய்ஜிங் தென்சீனக் கடலில் "மிரட்டல் மற்றும் பலவந்த நடவடிக்கைகளோடு" பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு எதிராக திரும்பி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

யதார்த்தத்தில், ஆசியாவை நோக்கிய அதன் இராணுவ மற்றும் மூலோபாய "முன்னெடுப்பின்" பாகமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள், அதுவும் குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம், அவற்றின் சீனாவிற்கு எதிரான உரிமைகோரல்களுக்கு ஆக்ரோஷமாக அழுத்தமளிக்க ஒபாமா நிர்வாகம் அவற்றை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, சிறியளவிலான பிராந்திய பிரச்சினைகள் அபாயகரமான சர்வதேச வெடிப்பு புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் Fairfax Mediaஆல் நேர்காணல் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி டேவிட் ஜோன்ஸ்டன், ஹாகெலின் கண்ணோட்டத்த அவர் பகிர்ந்து கொள்வதாக அறிவித்தார். அவர் கூறினார், “ஒருதலைபட்சமான நடவடிக்கை குறிப்பாக தென் சீன கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பிராந்தியங்களை ஸ்திரமின்மைபடுத்தி வருவது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் மிகவும் கவலை கொண்டுள்ளன,” என்றார்.

சீனாவின் "ஸ்திரமின்மைப்படுத்தல்" ஆஸ்திரேலியாவினது மற்றும் ஆசிய-பசிபிக்கில் உள்ள ஏனைய நாடுகளினது "எதிர்கால பொருளாதார வாய்ப்புகளை முற்றிலும் சேதப்படுத்தி" வருவதாக வலியுறுத்தி, ஜோன்ஸ்டன் மேலதிகமாக சென்றார்.

அவரது Fairfax Media கருத்துக்களின் மற்றும் ஹாகெலின் "பலமான வார்த்தைகளின்" வெளிச்சத்தில், மோதலின் அச்சறுத்தல் எந்தளவிற்கு தீவிரத்தோடும், முக்கியத்துவத்தோடும் உள்ளது என்று, சிங்கப்பூரிலிருந்து திரும்பிய உடனேயே, செனட் கமிட்டியில் ஜோன்ஸ்டன் வினவப்பட்டார். “சந்தைக்கு பாயும் நமது ஏற்றுமதி வருமானங்களின் ஒரு பெரும் பகுதியை நாம் எங்கிருந்து பெறுகிறோமோ அந்த பகுதியில் ஸ்திரமின்மை என்பது மிக தீவிரமான ஒன்றாகும். உண்மையிலேயே அது அதிதீவிரமானதாகும்,” என்று அவர் விடையிறுத்தார்.

அந்த மதிப்பீட்டோடு அவர் உடன்படுகிறாரா என்று தொழிற் கட்சி செனட் சாம் டாஸ்ட்யாரியால் (Sam Dastyari) கேட்கப்பட்டதும், பாதுகாப்புத்துறை தலைவர் டென்னிஸ் ரிச்சார்ட்சன், “ஆம், நிச்சயமாக" என்று பதிலளித்தார்.

உண்மையிலேயே ஒரு மோதல் வெடிப்பதற்கான அச்சறுத்தல் அங்கே இருக்கிறதா என்று கேட்கப்பட்ட போது, ரிச்சார்ட்சன் கூறினார்: “யாரும் மோதலை விரும்புவதில்லை... ஆனால், அங்கே தற்செயலாகவோ அல்லது தவறான புரிதலினோலோ ஏற்படக்கூடிய அபாயம் எப்போதும் இருக்கிறது. எதிர்பாராவிதமாக ஏதோவொன்றுக்கு இட்டுச் செல்லக்கூடிய தவறான புரிதல் மீதான கவலை அங்கே நிலவுகிறது.”

அந்த மாதிரியான ஒரு "தவறான புரிதலால்", ஆஸ்திரேலியாவை ஈடுபடுத்தக்கூடிய சாத்தியக்கூறு கொண்ட ஒரு பேரழிவுகரமான யுத்தத்தில் அதன் பாத்திரம் எவ்வாறு மாற்றப்படும் என்பது குறித்த மேலதிக கேள்விகளுக்கு, ஜோன்ஸ்டன் மற்றும் ரிச்சார்ட்சன் இருவருமே பின்னர் பதிலளிக்க தொடர்ந்து மறுத்துவிட்டனர். “நாம் அந்தளவிற்கு போக வேண்டியதில்லை,” என்று ரிச்சார்ட்சன் வலியுறுத்தினார்.

குறிப்பாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான ANZUS உடன்படிக்கையோ அல்லது ஆஸ்திரேலியாவின் ஜப்பானுடனான பாதுகாப்பு கூட்டுறவு பிரகடனமோ சீனாவிற்கு எதிரான ஒரு யுத்தத்தில் ஆஸ்திரேலியாவை அவசியமாக ஈடுபடுத்துமா என்பது குறித்து ரிச்சார்ட்சனும், ஜோன்ஸ்டனும் ஒன்றும் கூறவில்லை.

ரிச்சார்ட்சன் டாஸ்ட்யாரியிடம் கூறினார்: “ANZUS உடன்படிக்கையை வாசிக்குமாறு உங்களுக்கு நான் பரிந்துரைப்பேன்,” என்றார். “ஒரு ஊகமான சூழலில் என்ன நடக்கக்கூடும் என்பதை தந்தி அடிக்க, இந்த விவாதம் நமது தேசிய நலன் சார்ந்த ஒரு விவாதமல்ல,” என்று ஜோன்சன் உறுதியாக தெரிவித்தார்.

என்ன கூறப்படுகிறதோ அதை நீங்கள் கேட்க வேண்டுமென நான் நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் உணர்வுபூர்வமான பகுதிக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள்,” என்று டாஸ்ட்யாரியிடம் கூறி, கமிட்டி சேர்மேன் செனட்டர் ஆலன் எக்லெஸ்டன் துல்லியமாக அந்த விவாதத்தை முடித்து வைத்தார். தாம் "பல்வேறு முக்கிய விடயங்கள்" குறித்த தகவல்களை மட்டுமே கோரியதாக கூறி, டாஸ்ட்யாரி உடனடியாக கீழ்படிந்தார்.

தொழிற் கட்சி எந்திரத்தின் பதவிகளில் உயர்ந்த பின்னர் சமீபத்தில் செனட்டில் நியமிக்கப்பட்ட டாஸ்ட்யாரி, ஜூலியா கில்லார்டின் தொழிற் கட்சி அரசாங்கத்தினது ஒரு விசுவாசமான கையாளாவார், அந்த அரசாங்கம் பிரதம மந்திரியாக இருந்த கெவின் ரூட்டை திரைமறைவாக வேலை செய்து அகற்றியதை தொடர்ந்து, 2010இன் மத்தியில் ஒபாமாவின் ஆக்ரோஷமான "முன்னெடுப்பிற்கு" எவ்வித தயக்கமுமின்றி கையெழுத்திட்டது.

தொழிற் கட்சி செனட்டர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய தொனி, அணுஆயுதங்களின் பயன்பாட்டை நிச்சயமாக தூண்டக்கூடிய ஒரு இராணுவ மோதலுக்கு பொதுமக்களின் அபிப்ராயம் போதியளவிற்கு தயார் செய்யப்படவில்லை என்பது குறித்த கவலைகளைக் குறிப்பிட்டுக் காட்டியது. சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான எல்லை தகராறுகளில் எந்த தரப்பையும் சார்ந்திருக்கப் போவதில்லை என்ற ஜோன்ஸ்டனின் Fairfax Media நேர்காணலில் மீண்டும் கூறப்பட்டதுமான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வாதத்திற்கும் ஹாகெலை ஆதரிக்கும் அவரது அறிக்கைக்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டைக் குறித்து டாஸ்ட்யாரி ஜோன்ஸ்டனை வினவத் தொடங்கி இருந்தார்.

இது, அந்த புள்ளியில் தலையிட்ட ரிச்சார்ட்சனிடமிருந்து ஒரு வெளிப்படையான வலியுறுத்தலை கொண்டு வந்தது, “எந்த தரப்பையும் சாராது" என்ற போதினும், ஆஸ்திரேலியாவிற்கு இந்த பிரச்சினைகளில் ஒரு "தேசிய நலன்" இருக்கிறது ஏனென்றால் "நமது வணிக ஏற்றுமதி கப்பல் போக்குவரத்தில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் தென்சீனக் கடல் வழியாக செல்கிறது,” என்று வலியுறுத்தினார்.

கப்பல்களின் அணிவகுப்போடு [வியட்நாமுடனான] பிரச்சினைக்குரிய பகுதிகளுக்குள் எண்ணெய் எடுக்கும் தளத்தை" சீனா கையிலெடுத்துள்ளது என்று குற்றஞ்சாட்டியும், கிழக்கு சீனக் கடலில் சீனாவுடனான ஒரு மோதல் சம்பவத்தில் அமெரிக்கா ஜப்பானுடனான அதன் "கூட்டுறவு கடமைப்பாடுகளைச்" செயல்படுத்துமென்று அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளதை மீண்டும் நினைவுபடுத்தியும், ரிச்சார்ட்சன் பின்னர் நடுநிலைமை தோரணையைக் கைவிட்டார்.

ஆசிய-பசிபிக் மற்றும் அதன் மூலோபாய கடல்வழிகளில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான யுத்தத்தில் ஆஸ்திரேலியாவை ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அதிகார பாதையில், பொதுமக்களின் முதுக்குப் பின்னால், இவ்விதத்திலான விவாதங்கள் நடந்து வருகின்றன. கமிட்டி தலைவரின் தலையீடு குறிப்பிட்டதைப் போல, இதுவொரு "உணர்வுபூர்வமான" விவாதமாகும், பாரிய எதிர்ப்பு மீதான அச்சத்தால், அதை முடிந்த வரைக்கும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியே வைக்க வேண்டி இருக்கிறது.

நேற்று ஆஸ்திரேலிய நிதியியல் ஆய்வுரையில் எழுதுகையில், அரசியல்துறை எழுத்தாளர் லோரா டிங்கிள், செனட் கமிட்டியின் கருத்துப் பரிமாற்றங்களைப் பகுதியாக குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டார்: “பல ஆஸ்திரேலியர்கள் தற்போதைய பிராந்திய பதட்டங்களுக்கும், முதலாம் உலக யுத்தத்தை நிறுத்துவதற்கு மாறாக அதற்கு இட்டுச் சென்ற படிப்படியாக அதிகரித்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த உடன்படிக்கை ஏற்பாடுகளுக்கும் இடையே, ஒப்பீடுகளைக் கண்டிருப்பார்கள்,” என்று எழுதினார்.

ஒபாமா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த வாரம் பிரதம மந்திரி டோனி அபோட் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யவிருப்பதற்கு இந்த முந்தைய நாட்களில், இராணுவ மற்றும் உளவுத்துறை பிரச்சினைகள் மீது இந்த பேச்சுவார்த்தை குவிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க யுத்த திட்டங்களுக்கு இன்னும் மேலதிகமான ஆஸ்திரேலிய கடமைப்பாடுகள் கோரப்படலாம் என்று டிங்கிள் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்பு செலவினங்களை அதிகமாக உயர்த்த அதன் கூட்டாளிகளுக்கு பெரியளவில் அழுத்தம் அளித்து வரும் வாஷிங்டனுக்கு ஒரு எலும்புத்துண்டை போடுவது போல" அபோட் அரசாங்கத்தின் மே மாத வரவு-செலவு கணக்கு திட்டம் நிஜமான வரையறைகளில் இராணுவ செலவுகளில் 6 சதவீதத்தை உயர்த்த உறுதியளித்துள்ளதை டிங்கிள் எடுத்துக்காட்டினார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “வாஷிங்டன் ஆஸ்திரேலியாவிடம் இருந்து இன்னும் மேலதிகமாக, நமது இராணுவத் துருப்புகளை அதிகளவில் ஒன்றுகலப்பதை கோருமா அல்லது ஒருவேளை அப்பிராந்தியத்தில் இன்னும் முன்னோக்கிய நிலைநிறுத்தல்களைக் கோருமா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது,” என்று எழுதுகிறார்.

இந்த தயாரிப்புகள், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளன. வணிகத்துறை வாசகர்களுக்காக எழுதப்பட்ட டிங்கிளின் கட்டுரைக்கு அப்பாற்பட்டு, செனட் விவாதம் குறித்தோ அல்லது அபோட்டின் விஜயம் மீதான நிஜமான நிகழ்ச்சி நிரல் குறித்தோ அங்கே ஊடகங்களில் எந்தவொரு வார்த்தையும் இல்லை.

கட்டுரையாசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

அமெரிக்க பாதுகாப்பு செயலர் சிங்கப்பூர் விவாத கூட்டத்தில் சீனாவை அச்சுறுத்துகிறார்