சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Brazilian workers clash with police on eve of World Cup

உலக கோப்பைக்கு முன்னதாக, பிரேசில் தொழிலாளர்கள் பொலிஸுடன் மோதுகிறார்கள்

By Rafael Azul
10 June 2014

Use this version to printSend feedback

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 12 ல் பிரேசிலில் தொடங்கப்பட சில நாட்களே உள்ள நிலையில், அந்நாடு தொடர்ச்சியான பல வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களால் உலுக்கப்பட்டுள்ளது, சுமார் 12 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான சோன் பாவ்லோவை ஸ்தம்பிக்க வைத்த இரயில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஆறு நாள் வெளிநடப்பு போராட்டமும் அதில் உள்ளடங்கும்.

இரயில் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தக்காரர்களை அப்பட்டமான ஒடுக்குமுறை மற்றும் வன்முறையோடு அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர். தொழிலாளர்களின் மறியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இராணுவ பொலிஸ் அதிரடி துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதோடு, வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களில் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைகளும், ரப்பர் குண்டுகள் மற்றும் வெடிக்கும் கிரேனேட்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்பில்லாத வகையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அமர்வாக கூடியிருந்த சோன் பாவ்லோவின் தொழிலாளர்சார் நீதிமன்றம், அந்த வேலைநிறுத்தத்தை "முறைகேடானது" என்றும், சட்டவிரோதமானதென்றும் தீர்ப்பளித்தது. அதே நாளில் பாரியளவில் ஒன்றுகூடிய இரயில் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் ஒரு கூட்டம் நீதிமன்ற தீர்ப்பிற்கும், மற்றும் திங்கட்கிழமைக்குள் வேலைக்குத் திரும்பாத அனைத்து வேலைநிறுத்தக்காரர்களும் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற மாநில அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பை தொடர்வதென்று வாக்களித்தனர்.

சோன் பாவ்லோவின் தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் மாநில அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான ஒரு கூட்டம், எந்தவொரு உடன்பாடும் எட்டாமல் முறிந்தது. தொழிற்சங்கம் அது கோரிய 12.2 சதவீத உயர்வுக்கு குறைவான ஒரு ஊதிய தீர்வை ஏற்க அது தயாராக இருப்பதாகவும், ஆனால் மறியல் பேரணியின் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 60 பேரின் வேலைநீக்கத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துவதாகவும் பிரேசிலின் ஊடகங்கள் தெரிவித்தன.

பிரேசிலிய வலதுகளால் ஆதரிக்கப்பட்டு 2006இல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சோன் பாவ்லோவின் ஆளுநர் கிரால்டோ அல்க்மின் (Geraldo Alckmin), அங்கே "விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை" என்ற ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார், அதாவது இப்போது முன்வந்துள்ள 8.7 சதவீத ஊதிய உயர்வை விட கூடுதலாக எந்த ஊதிய உயர்வும் வழங்க முடியாது, மற்றும் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எவரையும் மீண்டும் வேலையில் சேர்க்க முடியாது என்பதாகும்.

திங்களன்று 29 சதவீத தொழிலாளர்கள் வேலையில் இருந்ததாகவும், 65 இல் 50 இரயில் நிலையங்கள் திறந்திருந்ததாகவும், ஆனால் சேவைகள் குறைக்கப்பட்டிருந்ததாகவும் இரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திங்களன்று மதியம் தெரிவித்தனர்.

திங்களன்று மாலை தொழிற்சங்கம் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தது, அதில் புதன்கிழமை வரையில் வேலைநிறுத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிலாளர்கள் வாக்களித்தனர், வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேலைநிறுத்தக்காரர்களை மீண்டும் வேலையில் சேர்ப்பதற்கான அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், மீண்டும் வெளிநடப்பைத் தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய, உலக கோப்பையின் முதல் நாளான புதன்கிழமை அவர்கள் மீண்டும் கூடுவார்கள்.

சோன் பாவ்லோ மற்றும் ரியோ டி ஜெனிரோ இரண்டிலும் உள்ள ஆசிரியர்கள், பேருந்து தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் இரயில் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தத்தை பின் தொடர்கின்றன. பாரிய வறுமை மற்றும் கல்வி, மருத்துவ பராமரிப்பு, வீட்டு வசதி மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளுக்கு போதிய அரசு செலவுகள் இல்லாத நிலைமைக்கு இடையே உலக கோப்பைக்கான பாரிய செலவுகளை நிராகரித்து அந்நாடு முழுவதிலும் நடக்கும் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் இந்த வேலைநிறுத்தங்களோடு சேர்ந்து கொண்டுள்ளன.

சர்வதேச கால்பந்து அமைப்பால் (FIFA) ஏற்பாடு செய்யப்பட்ட, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அந்த போட்டிகள், பல நாடுகளின் தேசிய குழுக்களைக் கொண்டு வருகிறது. இந்த கால்பந்தாட்ட போட்டிகள் 4 பில்லியன் டாலரைத் திரட்டுமென்றும், மற்றும் FIFA அமைப்பிற்கும், அக்கோப்பையின் பெருநிறுவன விளம்பரதாரர்களுக்கும் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான இலாபங்களை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெரும் தொகை 2010இல் தென்னாபிரிக்க விளையாட்டுகளில் திரட்டப்பட்ட வருவாயை விட சுமார் இரண்டு மடங்காகும்.

ஓராண்டிற்கு முன்னர், மிகப் பெரிய உலக கோப்பை போட்டிக்கு ஒரு ஒத்திகையாக சேவை செய்யும் வகையில் கான்பிடரேஷன் கோப்பை என்றழைக்கப்படும் போட்டிகளின் விளையாட்டு அரங்கங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படைகளுடன் உறுதியாக போராடினார்கள், பிரேசிலை அதிர வைத்த அந்த போராட்டங்களில் இருந்து "பாடங்களைப் பெற்றிருப்பதாக" அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதன்மையாக சமூக போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் இருந்து விளையாட்டுக்களைப் பாதுகாக்க இருந்த போதினும் தவிர்க்கவியலாத பயங்கரவாதம் என்ற போலிக்காரணம் உருவாக்கப்பட்டுள்ளதுஇராணுவத்தின் 57,000 துருப்புகள் மற்றும் 100,000 பொலிஸ் மற்றும் பாதுகாப்பு முகவர்கள் உட்பட, அரசாங்கம் ஒரு பெரும் ஒடுக்குமுறை படையை ஏற்பாடு செய்வதில் 1 பில்லியன் டாலர் அளவிற்கு செலவிட்டு வருகிறது.

இந்த போட்டிகளுக்கான ஆயத்த வேலைகளே, இந்த பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கான மிகப் பெரிய காரணியாக உள்ளது, அது மில்லியன் கணக்கானவர்களை ஓராண்டிற்கு முன்னர் ரியோ டி ஜெனிரோ, சோன் பாவ்லோ மற்றும் ஏனைய நகரங்களின் வீதிகளுக்கு இழுத்து வந்தது. அந்த போராட்டங்கள் இரயில் போக்குவரத்து கட்டண உயர்வு அச்சுறுத்தலால் தூண்டிவிடப்பட்டிருந்த போதினும், கல்வி, மருத்துவ பராமரிப்பு மற்றும் மக்களின் இதர தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விமான நிலையங்களைக் கட்டுவதற்காக மற்றும் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 18 பில்லியன் ரியோஸ் (8 பில்லியன் அமெரிக்க டாலரை) அரசு நிதியிலிருந்து செலவு செய்கிறது என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

கடந்த ஆண்டின் பாரிய போராட்டங்களை அடுத்து, தொழிலாளர் கட்சி அரசாங்கம் (Workers Party – PT) கல்வி, மருத்துவ வசதிகள் மற்றும் வீட்டுவசதிகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்கிணங்கி நடவடிக்கை எடுக்குமென வாக்குறுதி அளித்தது. இருந்த போதினும், அப்போதிருந்து, ஜனாதிபதி தில்மா ரௌசெஃப் (Dilma Rousseff) அந்த வாக்குறுதிகளைச் சரிவர பூர்த்தி செய்ய தவறியதோடு, அதற்கு மாறாக தொடர்ந்து அவர் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஒடுக்க மத்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ படைகளைப் பயன்படுத்தி வந்தார்.

ரியோ டி ஜெனிரோ சர்வதேச விமான நிலையத்திற்கும் செல்வ செழிப்பான சுற்றுலா மாவட்டங்களுக்கும் இடையிலான பாதையில் அமைந்துள்ள ரியோவின் 15 சேரிகள் உள்ளடங்கிய மரே பகுதி (Maré) உட்பட சேரிகளுக்குள் (favelas) இராணுவ பொலிஸ் ஆக்கிரமிப்பு படையை நிலைநிறுத்தி இருந்தது.

உலக கோப்பையை எதிர்நோக்கி அவர்கள் தீவிரமயப்படுதலுக்கான தயாரிப்பில் ரியோ டி ஜெனிரோ மலையோர சேரிகளைச் சுற்றி, 2009இன் தொடக்கத்தில், அரசாங்கம் சுற்றுச்சுவரை எழுப்பத் தொடங்கி இருந்தது. சமூக பிரச்சினைகளை தீர்க்க தவறி இருந்த நிலையில், அரசாங்கம் பொலிஸைப் பயன்படுத்தியது. 2007இல் இருந்து அரசு பாதுகாப்பு படைகள் 5,600க்கும் மேலான பிரேசிலியர்களைக் கொன்றுள்ளது, அவர்களில் பலர் இந்த ஆக்கிரமிப்பு சேரிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

FIFA கோப்பை பிரேசிலில் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். 1950இல் முதன்முதலில் நடத்தப்பட்டது, அது இரண்டாம் உலக யுத்தத்தின் போது அந்த விளையாட்டுக்கள் நிறுத்தப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவை மீண்டும் தொடங்கப்பட்டதை குறித்தது.

அப்போது பிரேசில் வேகமான தொழில்மயமாகும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்த ஒரு தேசமாக இருந்தது. யுத்தத்தால் ஏற்பட்ட பற்றாக்குறைகள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்ததோடு, அரசாங்கத்தின் இறக்குமதி-மாற்றீடு கொள்கைகளால் தூண்டிவிடப்பட்டிருந்தன. மில்லியன் கணக்கானவர்கள் கிராமங்களை விட்டு கடற்கரை நகரங்களிலும், தெற்கின் தொழில்துறை நகரங்களிலும் குடியேறினார்கள். பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்களில் இருந்து அரசை தனிமைப்படுத்தி வைக்கும் பெரிய நடவடிக்கையாக, நாட்டின் மையத்தில் உள்ள பிரேசிலியாவை ஒரு புதிய தலைநகராக உருவாக்குவதற்கான திட்டங்கள் விரைவிலேயே தீட்டப்படக்கூடும். அந்நாட்டில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாழ்கின்ற போதினும் கூட, வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஆயுள்காலம் அதிகரித்து வந்திருந்தது, குழந்தை இறப்புகள் குறைந்திருந்தன, மற்றும் பெரும்பாலான பிரேசிலியர்களால் மருத்துவ சேவைகளைப் பெற முடிந்திருந்தது.

இந்த ஊக்குவிக்கப்பட்டிருந்த வளர்ச்சிக்கு இடையேயும் கூட, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் நீண்டகால சமூக மற்றும் பிராந்திய மோதல்களை தீர்க்க முடியவில்லை மற்றும் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரும்புப்பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை. 1985 வரையில் நீடித்திருந்த ஒரு கொடூர இராணுவ-பாசிச சர்வாதிகாரத்தை திணிப்பதில் 1964இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தது.

1950 உலக கோப்பையிலிருந்து அறுபத்தி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த முதல் நிகழ்வுக்கு நேரெதிரான சூழலில், இந்த முறை அந்நாடு பொருளாதார வீழ்ச்சியின் மையத்தில் உள்ளது. பல பிரேசிலியர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் நாடு பின்னோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த வாரம் வெளியான ஒரு கருத்துக்கணிப்பு, விடயங்கள் எந்த விதத்தில் நடந்து வருகின்றதோ அதில் மக்களில் 72 சதவீதத்தினர் அதிருப்தியோடு இருப்பதாக எடுத்துக்காட்டியது, இது ஒப்பீட்டளவில் ஓராண்டுக்கு முன்னர் 55 சதவீதமாக இருந்தது.

2003இல், பிரேசில் அந்த போட்டியை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட போது, பதவிக்கு வந்திருந்த முன்னாள் தொழிற்சங்க தலைவர் லுயி இனாசியோ லுலா ட சில்வாவின் கீழ் இருந்த (Luis Inacio Lula da Silva) PT அரசாங்கம், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உட்பட பிரிக்ஸ் (BRICS) என்றறியப்படும் எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் என்றழைக்கப்படுபவைகளின் குழுவோடு சேர்ந்து பிரேசிலும் அதிகளவில் பொருளாதார வளர்ச்சியை மற்றும் பெருமளவில் சமூக சமத்துவத்திற்கான பாதையைக் காணும் என்ற எதிர்பார்ப்புகளை உயர்த்தியது.

லுலாலிசம்" (Lulalism) அல்லது "பிரேசிலிய உடன்பாடு" என்ற அந்த PT கட்சியின் முன்மாதிரியில், சுதந்திர சந்தை கொள்கைகள், தனியார்மயமாக்கல்கள் மற்றும் நெறிமுறைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றோடு வெகுஜன வீராவேசம் மற்றும் மக்கள்தொகையில் மிகவும் வறிய அடுக்குகளுக்கான குறைந்தபட்ச உதவித் திட்டங்கள் ஆகியவை உள்ளடங்கி இருந்தன. அது வெனிசூலாவின் ஹூகோ சாவேசின் "பொலிவாரிய புரட்சி" மற்றும் சமூக திட்டங்களின் கடுமையான வெட்டுகளைக் கொண்ட "வாஷிங்டன் உடன்பாடு" இரண்டுக்கும் மாற்றாக ஒரு சுதந்திர சந்தை மாற்றீடாக ஊக்குவிக்கப்பட்டது. அரசாங்கம் வணிகங்களுக்கு நெறிமுறைகளை தளர்த்த மற்றும் அரசு தொழில்துறைகளை தனியார்மயமாக்க மற்றும் அரசிடமிருந்து சுதந்திரமான, ஆனால் உலகளாவிய நிதியியல் அமைப்புகளின் கட்டுப்பாட்டிலான ஒரு மத்திய வங்கியை உருவாக்க இருந்தது, அதேவேளையில் அது அப்போதும் சமூக திட்டங்களுக்காக சில ஆதாரவளங்களை ஒதுக்கி வந்தது.

இறுதியில், பிரேசிலோ, பிரிக்ஸோ, அல்லது ஏனைய எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் எதுவுமே, உலக முதலாளித்துவ நெருக்கடியை விட மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் சீரழிவு மற்றும் பண்டங்களின் சர்வதேச விலை பொறிவை விட, பலமானவையாக நிரூபிக்கவில்லை என்பதோடு, பிரேசிலின் விடயத்தில் சீனாவின் கொள்வனவுகளும் குறைய உள்ளன.

சான்றாக, பிரேசிலின் முக்கிய ஏற்றுமதி பொருளான இரும்பு தாதின் சர்வதேச விலை, இந்த ஆண்டில் மட்டும் 20 சதவீதத்திற்கும் அதிகமாக சமீபத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் பிரேசிலிய இரும்பு உற்பத்தி நிறுவனமான Vale நிறுவனத்தின் அதிகாரிகளை நேர்காணல் செய்தது, அவர் இரும்பு தாது விலைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு முயற்சியாக குறைந்த தரத்திலான மற்றும் தீர்ந்து போகும் நிலையில் உள்ள சுரங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். 2010இல் இருந்து, பிரேசில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் மூலதன வெளியேற்றங்கள் அதிகரித்து வருவதை முகங்கொடுத்துள்ளது.

இராணுவ சர்வாதிகாரத்தின் முடிவில் பாரிய தொழிலாளர்களின் வெடிப்பார்ந்த போராட்டங்களின் எழுச்சியை, சீர்திருத்த மற்றும் நாடாளுமன்ற வடிகால்களுக்குள் பாதுகாப்பாக திருப்பிவிட PT ஒரு அரசியல் கருவியாக உருவாக்கப்பட்டது. அதை உருவாக்குவதில் பல்வேறு போலி-இடது போக்குகள் பங்களிப்பளித்தன, அத்தோடு தொழிலாளர்களை சர்வதேச அளவில் ஒழுங்கமைப்பதற்கான ஒரு முன்மாதிரியாகவும் அதை புகழ்ந்தன.

ஆனால் அப்போதிருந்தே அது ஒரு ஊழல்மிகுந்த முதலாளித்துவ கட்சியாக மற்றும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதிகாரத்தில் இருந்த பின்னர், பிரேசிலிய நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் ஆட்சிக்கு ஆதரவான கருவியாக அம்பலப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தத்திற்காக இந்த கட்சி ஏதாவது செய்யும் என்ற போலித்தனம் ஒவ்வொரு நாளும் பெரிதும் இற்றுபோய் வருகிறது. 2014 உலக கோப்பையை அது நடத்துகின்ற நிலையில், ரௌஸ்செஃப் நிர்வாகம் பிரேசிலிய தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீதான அச்சத்தில் வாழும் ஒரு அரசாங்கமாக மற்றும் பெரு வணிக நலன்களுக்கு உத்தரவாதம் அளிக்க பொலிஸ் அரசு ஒடுக்குமுறையில் தங்கியிருக்க தயாராகி வரும் ஒரு அரசாங்கமாக தன்னைத்தானே வெளிப்படுத்தி காட்டுகிறது.