சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The fall of Mosul and the crimes of imperialism

மோசூலின் வீழ்ச்சியும், ஏகாதிபத்தியத்தின் குற்றங்களும்

Bill Van Auken
12 June 2014

Use this version to printSend feedback

அதன் அதீத வன்முறை மற்றும் பிரிவினைவாத வெறித்தனத்தின் காரணமாக அல்கொய்தாவே அதிலிருந்து உடைத்து கொண்டிருந்த ஒரு குழுவான ஈராக், லேவன்ட் இஸ்லாமிய அரசிடம் (ISIS - Islamic State of Iraq and the Levant) ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மோசூல் வீழ்ந்தமை, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்டிருந்த குற்றங்களின் ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையை வழங்குகிறது.

செவ்வாயன்று மோசூலில் நடந்த வரம்பு மீறிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து சதாம் ஹூசைனின் சொந்த ஊரான திக்ரித்தும், அத்துடன் பாக்தாத்திலிருந்து வெறும் 74 மைகளுக்கு அப்பால் உள்ள சமாரா மற்றும் கிர்குக்கின் வடக்கில் உள்ள பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. சுமார் 20 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஈராக்கிய இராணுவ துருப்புகள் நிலைகுலைந்து போயுள்ளன, அவற்றின் தளபதிகள் முதலில், அவர்களின் சீருடைகளைக் கலைந்து, அவர்களின் ஆயுதங்களைத் தூக்கியெறிந்து வருகிறார்கள்.

தலைநகரம் மீதான ஒரு தாக்குதலை முன் அனுமானித்து பாக்தாத்தின் 20 மைல்களுக்கு வடக்கில் ஈராக்கிய அரசாங்க சிறப்பு படை துருப்புகள் ஒரு தற்காப்பு அணிவகுப்பை உருவாக்கி வருவதாக கடந்த புதனன்று செய்தியில் கூறப்பட்டது.

மோசூல் சண்டையால் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் அந்நகரை விட்டு வெளியேறி விட்டனர், இதை சமீபத்திய ஞாபகங்களில், உலகில் மிகப் பெரிய மற்றும் விரைவான பாரிய மக்கள் நகர்வுகளில் ஒன்றாக" ஒரு உதவி வழங்கும் நிறுவனம் வர்ணித்தது.

ஈராக்கின் ஏனைய நகரங்களைப் போலவே, இந்த நகரமும் அமெரிக்க யுத்தத்தால் மற்றும் 2003இல் தொடங்கிய ஆக்கிரமிப்பால் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் உள்கட்டமைப்பு சிதைக்கப்பட்டதோடு, மறுகட்டமைப்பிற்கு என்னவெல்லாம் முயற்சிகள் செய்யப்பட்டனவோ அவை ஊழல் நிறைந்த நிர்வாக முறைகேடு நடைமுறைகளில் இருந்ததுடன், அவை மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு வெகு குறைவாகவே வேலை செய்திருந்தன. மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், இதழாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற அந்நகரின் தொழில் நிபுணர்கள் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள்.

இன சுத்திகரிப்பின்" இரத்தந்தோய்ந்த நடைமுறையால் சுன்னி, ஷியா, குர்திஷ், அஸ்ரியன் மற்றும் ஏனைய மக்கள் சிறுபான்மையினராக ஆகியிருந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேறி இருந்த நிலையில், அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரித்து-கைப்பற்றும் மூலோபாயத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு பிரிவினைவாத உள்நாட்டு யுத்தம், அந்நகரின் பல்-இன குணாம்சத்தை சிதைத்துள்ளது.

இந்த பிரிவினைவாத கொள்கை, ஒரு ஷியா மத அடிப்படையிலான அரசியல் கட்சி தலைவரான பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் ஈராக்கிய ஆட்சியின் கீழ் தொடர்ந்ததோடு, இவர் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நிறுவப்பட்டவர் ஆவார். முக்கிய சுன்னி அரசியல்வாதிகளை ஜெயிலில் அடைப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது மற்றும் படுகொலை செய்வது மற்றும் சுன்னி மக்கள் மத்தியில் அவர் ஆட்சிக்கு எழும் எவ்வித எதிர்ப்பையும் "பயங்கரவாதமாக" கையாள்வது என மலிக்கி சுன்னி மக்கள் அதிகமாக வாழ்ந்த அன்பார் மாகாண மக்களின் விரக்தியை அதிகரித்ததோடு, ISIS போன்ற உட்கூறுகளுக்கான ஆதரவுக்கு அடித்தளத்தை உருவாக்கி இருந்தார்.

ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் செலவிட்டதுடன் சேர்ந்து, அமெரிக்காவினால் அளிக்கப்பட்ட அனைத்து "தியாகங்களுக்குப்" பின்னரும் — 4,500 துருப்புகள் கொல்லப்பட்டனர் மற்றும் பத்து ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றிருந்த நிலையில் இது எவ்வாறு நடந்தது என்ற கேள்விகளோடு சேர்ந்து மலைப்பூட்டும் அவநம்பிக்கையே அமெரிக்க ஊடகங்களின் ஈராக்கிய தோல்விக்கான விடையிறுப்பில் நிரம்பி இருந்தன.

என்னவொரு பாசாங்குத்தனம்! ஈராக்கில் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவானது, மத்திய கிழக்கு மற்றும் அதன் பாரிய எரிசக்தி வளங்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அதன் முயற்சியில் — கடந்த காலத்திலும் மற்றும் நிகழ்காலத்திலும் — நடத்தப்பட்ட குற்றங்களின் நேரடி விளைபொருளாகும்.

சதாம் ஹூசைன் ஆட்சி "பேரழிவுகர ஆயுதங்களை" தயாரிக்கிறது என்றும் மற்றும் அல் கொய்தாவுடன் உறவுகளைப் பலப்படுத்துகிறது என்றும் (இது 9/11 அணுஆயுத தாக்குதலுக்கான உடனடி அச்சுறுத்தலை உயர்த்தி இருந்ததாக கூறப்பட்டது) போலிக்காரணங்களின் மீது மார்ச் 2003இல் அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பு செய்தது.

இப்போது ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிய வந்துள்ளதைப் போல, இந்த போலிக்காரணம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரு பொய்யாகும். அங்கே எந்தவொரு பேரழிவுகர ஆயுதங்களும் இல்லை, மற்றும் அதன் குற்றங்கள் என்னவாக இருந்தாலும் சதாமின் ஆட்சி மதசார்பற்றதாகவும் மற்றும் அல் கொய்தாவிற்கு எதிரானதாகவும் இருந்தது, அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்து அந்நாட்டை சூறையாடும் வரையில் அல் கொய்தாவின் இருப்பு ஈராக்கில் இருக்கவில்லை.

ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் கொல்லப்படுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பேரழிவுக்கும் இட்டுச் சென்ற புஷ்ஷின் கீழ் நடத்தப்பட்ட குற்றங்கள், அவற்றைப் பின்தொடர்ந்து லிபியா மற்றும் சிரியாவிலும் ஒபாமா நிர்வாகத்தால் நடத்தப்பட்டன, அங்கே அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தங்களை நடத்த சுன்னி இஸ்லாமியவாத அடிப்படையிலான பினாமி படைகளை மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட உட்கூறுகளை பேணி வளர்த்து, ஆயுதபாணியாக்கியது. இதன் ஒரு விளைவாக, அப்பிராந்தியம் முழுவதிலும் அத்தகைய சக்திகள் அளப்பரிய பலம் பெற்றுள்ளன.

இந்த யுத்தங்கள், புஷ் நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற சொல்லாடலை அடிப்படையாகக் கொண்டிருந்தன மற்றும் இன்னமும் அவை ஒபாமாவின் வெள்ளை மாளிகையால் பூகோள அளவில் இராணுவவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவிற்குள் நுழைய மற்றும் விமானங்களைக் கடத்தி செல்ல அனுமதிக்கப்பட்ட 19 பேரால் (இதில் 15 நபர்கள் சவூதியைச் சேர்ந்தவர்கள்) நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு காட்டிய விடையிறுப்போடு தொடங்கப்பட்ட இந்த யுத்தங்கள், இப்போது ஈராக்-சவூதி எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் மற்றும் மேற்கில் மத்தியதரைக்கடல் அருகில் அலெப்போவிலிருந்து கிழக்கில் ஈரானுடன் சேர்ந்த எல்லையை நோக்கி நீண்டிருக்கும் பகுதி முழுவதிலும் அல் கொய்தாவின் நடைமுறை அரசு உருவாக இட்டுச் சென்றிருக்கின்றன.

டமாஸ்கஸில் உள்ள அசாத் ஆட்சியைத் தூக்கியெறிவதை ஒபாமா நிர்வாகம் அமெரிக்க கொள்கையின் மைய நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சிரியாவில் அமெரிக்க விமான தாக்குதலைத் தொடங்க இருந்த நிலையில், உள்நாட்டின் பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டதால், கொள்கை வகுப்பாளர்களிடையே நிலவிய உட்பிளவுகளால், மற்றும் அதன் முக்கிய ஏகாதிபத்திய கூட்டாளி பிரிட்டனிடமிருந்து ஆதரவு கிடைக்காததால், அத்திட்டங்களில் இருந்து பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டபோது, அது ஒரு அவமானகரமான பின்னடைவைச் சந்தித்தது. அதற்கு மாறாக, அது சிரியாவின் இரசாயன ஆயுதங்களைக் குறைக்கும் ரஷ்யா-தரகு வேலையிலான திட்டத்தை ஏற்கவும், மற்றும் அசாத் ஆட்சிக்கும் "கிளர்ச்சியாளர்கள்" என்றழைக்கப்படுபவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நிர்பந்திக்கப்பட்டது.

இதன் விளைவாக சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களுக்கு" தொடர்ச்சியான மூலோபாய பின்னடைவுகள் ஏற்பட்டன, அவர்கள் ISIS உட்பட இஸ்லாமியவாத சுன்னி போராளிகள் குழுக்களால் மேலாதிக்கம் பெற்றவர்கள் ஆவர். வாஷிங்டனோ அந்த மண்ணில் நிலைமையை மாற்றுவதற்கான பெரும் பிரயத்தனத்தில் உள்ளது.

கிளர்ச்சியாளர்களை" ஆயுதபாணியாக்குவதன் மீது, அங்கே ஆளும் வர்க்கத்திற்குள் சிரியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரோபர்ட் போர்டுடன் அதிகளவிலான ஆழ்ந்த விவாதங்கள் நடந்து வருகின்றன, சிறுபீரங்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை இஸ்லாமியவாத தலைமையிலான போராளிகள் குழுவிற்கு மத்தியில் உள்ள "மிதவாத அமைப்புகளுக்கு" கிடைக்கச் செய்வது, அத்தோடு அவர்களை நேரடியாக அமெரிக்க ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது ஆகியவற்றை வலியுறுத்தி புதனன்று நியூ யோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. இவற்றின் பெயர்கள் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை என்கிற நிலையில் இந்த "மிதவாத" அமைப்புகளுக்கு அளிக்கப்படும் இதுபோன்ற உதவிகள் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட உட்கூறுகளைத் தனிமைப்படுத்தவும் சேவை செய்யுமென்று ஏனைய அமெரிக்க அதிகாரிகளைப் போலவே நிச்சயமாக போர்டும் வாதிடுகிறார். எவ்வாறிருந்த போதினும், இத்தகைய உட்கூறுகளே தீர்க்கமாக பங்கு வகிக்கும் அமெரிக்க நடவடிக்கைகளினது நிஜமான குற்றத்தன்மையை வெறுமனே மூடி மறைப்பதில் மட்டுமே இந்த முன்அனுமானங்கள் தீர்க்கமான பாத்திரம் வகிக்கும்.

மோசூல் வீழ்ந்ததற்கு வாஷிங்டன் வெளிக்காட்சிக்கு அதன் கரங்களை முறுக்குகின்ற போதினும், சிரியாவில் அமெரிக்க பினாமி யுத்தத்தின் மீது விழும் இந்த அபிவிருத்தியின் தாக்கம் குறித்து அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் அனைத்து பிரிவுகளும் வரவேற்காமல் இருக்காது.

ISISஇன் கரங்களில் ஈராக்கிய இராணுவ ஆயுதகிடங்குகள் வீழ்ந்தமை, அமெரிக்க பின்புலத்திலான உள்நாட்டு யுத்தம் தொடங்கியதில் இருந்து, சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்க கோரும் படைகளுக்கு வெடிமருந்துகளின் பெரும் வியத்தகு அதிகரிப்புகளில் ஒன்றை வழங்கி உள்ளது. ஒரு ஆதாரத்தின்படி, நூற்றுக் கணக்கான ஆயுத வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன — ஒரு முழு ஆயுதமேந்திய பிரிவின் குழுவுக்கு இது போதுமானதாகும். இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏனைய விமானங்களை அணுகும் வசதியைக் கைப்பற்றி, மோசூல் விமானநிலையத்தில் ISIS வரம்பு மீறி உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன, மற்றும் நடைமுறையில் இவை அனைத்தும் சிரியாவிற்குள் எல்லை தாண்டி அனுப்பப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கைதிகள் அங்கே சென்று சண்டையிட ஈராக்கிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு" அமெரிக்க ஆயுதங்களை வழங்குவதற்கான கோரிக்கையானது மோசூலின் அபிவிருத்திகளால் நடைமுறையில் பெரிதும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவு சிரியாவில் மேலதிகமான இரத்த ஆறு ஊற்றெடுப்பதாக இருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நலன்களை முன்னெடுக்கவும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சியைச் சரிகட்டவும் இராணுவவாதத்தைப் பயன்படுத்துவதற்கான வாஷிங்டனினது முயற்சிகளின் ஒவ்வொரு விடயத்திலும், அமெரிக்க யுத்தத்தின் சுமார் ஒன்பது ஆண்டுகளில் மற்றும் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, இடம்பெயர்த்தப்பட்டதில் இருந்து, சிரிய மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் வரையில், மற்றும் இப்போது மோசூலில் அரை மில்லியன் ஏழை மக்களை வீடற்ற அகதிகளாக மாற்றியது வரையில், பாரியளவில் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

விவாதத்திற்கு இடமின்றி யுத்த குற்றங்களை உள்ளடக்கி உள்ள இந்த நடவடிக்கைகளுக்கு யாரொவரும் பொறுப்பாக்கப்படவில்லை. இதற்கு பொறுப்பானவர்களில் உள்ளடங்குபவர்களில் முந்தைய நிர்வாகத்தின் ஜோர்ஜ் டபிள்யு. புஷ், டிக் செனெ, டோனால்ட் ரும்ஸ்பெல்ட் மற்றும் ஏனையவர்கள் மட்டுமல்ல. கடந்த ஒன்றரை தசாப்தமாக அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையைப் பரப்புவதில் கூறப்பட்ட பொய்களுக்கு பிரதான இரண்டு அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு அமெரிக்க அமைப்பும் பொறுப்பாகின்றன. வலிந்து தாக்கும் யுத்தம், சித்திரவதை என புஷ்ஷின் கீழ் இருந்த அனைத்து குற்ற கொள்கைகளும் ஒபாமா நிர்வாகத்தால் தொடரப்பட்டுள்ளன மற்றும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பு" மற்றும் உக்ரேனில் அதன் ஆட்சி கவிழ்ப்பு சதியோடு, அது ரஷ்யா மற்றும் சீனாவுடன் இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருவதோடு, ஒரு அணுஆயுத மூன்றாம் உலக யுத்தத்திற்கு அடித்தளம் அமைத்து வருகிறது.