சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq crisis threatens to ignite regional war

ஈராக் நெருக்கடி பிராந்திய போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது

By Bill Van Auken
13 June 2014

Use this version to printSend feedback

சுமார் 2 மில்லியன் மக்களைக் கொண்ட ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மோசூலில் அத்துமீறிய பின்னர், அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த ஒரு சுன்னி போராளிகள் குழுவான ஈராக்-லேவன்ட் இஸ்லாமிய அரசு (Islamic State of Iraq and the Levant – ISIS), முன்னாள் ஈராக்கிய தலைவர் சதாம் ஹூசைனின் சொந்த ஊரான திக்ரிட் மற்றும் பாக்தாத் வழியில் உள்ள திக்ரிஸ் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஏனைய பல நகரங்களைக் கைப்பற்றி, அதன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ISIS முன்னேறி வருவதைத் தடுக்கும் நம்பிக்கையில் பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் அரசாங்கம், தலைநகரின் வடக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு வரிசைக்குள், ஷியா மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட சுய ஆர்வலர்களோடு சேர்த்து ஈராக்கிய சிறப்பு படைகளை அனுப்பி உள்ளார்.

அமெரிக்கா அந்நாட்டில் நிறுத்தியிருந்த சில ஆயிர இராணுவ மற்றும் உளவுத்துறை ஒப்பந்ததாரர்களை வெளியேற்ற தொடங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன, மற்றும் பாக்தாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய பிரமாண்ட அமெரிக்க தூதரகம் என்னவாகும் என்பதன் மீது அங்கே விவாதங்கள் நடந்து வருகின்றன. என்ன கட்டவிழ்ந்து வருகிறதென்றால் ஒரு தசாப்தத்திற்கும் மேலான நிகழ்வுபோக்கில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களால் இரண்டினாலும் பின்பற்றப்பட்ட ஒட்டுமொத்த கொள்கையின் ஒரு நிலைபேறான தோல்வியாகும்.

ஈராக்கின் அண்டை நாடான சிரியாவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் தூண்டிவிட்டப்பட்ட ஒரு பிரிவினைவாத உள்நாட்டு யுத்தம் அளவிற்கு ஒன்று, ஈராக்கையும் மூழ்கடிக்க மற்றும் அப்பிராந்தியம் முழுவதையும் இரத்தந்தோய்ந்த மோதலில் சுற்றி வளைக்க அந்த நெருக்கடி அச்சுறுத்தி வருகிறது.

சுமார் ஒரு தசாப்த கால ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தத்தை வெறுமனே இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முடித்திருந்த வாஷிங்டன், அதுவே சொந்தமாக செய்து வைத்திருக்கும் இந்த ஒரு பேரழிவுக்குள் சுமார் ஒரு மில்லியன் ஈராக்கிய மக்கள் தவிர்க்கவியலாமல் இழுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

ISIS தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவம் விடையிறுப்பு காட்டுவதற்கான ஒரு சாத்தியக்கூறு குறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு வியாழனன்று ஜனாதிபதி பராக் ஒபாமா பதிலளிக்கையில், “எதையும் ஒதுக்கிவிட முடியாது,” என்றார்.

ஈராக்கிய நெருக்கடியை ஒரு "அவசரகால நிலைமையாக" வர்ணித்து அமெரிக்க ஜனாதிபதி கூறுகையில், ஜனாதிபதி நௌரி மலிக்கியின் ஈராக்கிய ஆட்சிக்கு "இன்னும் அதிகமான உதவி தேவைப்படும்" என்பது தெளிவாக உள்ளது என்று தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவத்தால் 2011இன் இறுதி வரையில் சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒரு நாடான, ஈராக்கிற்குள் அமெரிக்க துருப்புகள் மீண்டும் திரும்புவதைக் குறித்து ஒபாமா குறிப்பிடவில்லை, மாறாக அமெரிக்க விமான குண்டுவீச்சுக்கள் மற்றும் ஆளில்லா டிரோன் ஏவுகணை தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறையே அவர் குறிப்பிட்டார் என்று அதற்கு பின்னர் ஒரு வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அவசர அவசரமாக தெளிவுபடுத்தினார்.

ஈராக்கிய இராணுவத்திற்கு சிறிய ஆயுத தளவாடங்களுக்கான மில்லியன் கணக்கான குண்டுகள், ஆயிரக் கணக்கான பீரங்கி குண்டுகள், வெடிபொருட்கள், எந்திர துப்பாக்கிகள் மற்றும் சுடும் கைத்துப்பாக்கிகளோடு ஹெல்பயர் (Hellfire) ஏவுகணைகளையும் உடனடியாக அனுப்பி வைக்க வாஷிங்டன் உறுதி அளித்துள்ளது.

எவ்வாறிருந்த போதினும், இந்த ஆயுத தளவாடங்கள் அடுத்த ஒருசில வாரங்களில் ஈராக்கில் போய் சேரப் போவதில்லை என்பதோடு உதவித் தேவைப்படும் நிலைமையில் உள்ள ஈராக்கிய இராணுவமோ சிதையும் நிலையில் உள்ளது. மோசூலிலும் ஏனைய இடங்களிலும் ஈராக்கிய சிப்பாய்கள் பெருந்திரளாக பொறுப்பை விட்டோடி உள்ளனர், அவர்கள் தங்களின் ஆயுதங்களை வீசி விட்டு, சீருடைகளைக் களைந்து, சாமானிய மக்களின் உடையில், அந்த இஸ்லாமிய கெரில்லாக்களிடமிருந்து தப்பி ஓட முயன்று வருகிறார்கள்.

பயிற்சி அளிப்பதற்காக சுமார் ஒரு தசாப்தமாக 25 பில்லியன் டாலர் அமெரிக்க இராணுவத்தால் செலவிடப்பட்ட ஒரு படை, வெறுமனே 2,000இல் இருந்து 3,000 ISIS போராளிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளவர்கள் முன்னேறி வருவதைத் தடுக்க இயலாமல் இலாயக்கற்று இருப்பதை நிரூபித்துள்ளது. ஆயிரக் கணக்கானவர்கள் இல்லை என்றாலும் நூற்றுக் கணக்கானவர்களை கைதிகளாக வரிசை வரிசையாக ISIS போராளிகள் மேய்த்து வருவதை இணையத்தில் வெளியான வீடியோக்கள் காட்டுகின்றன.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நிறுவப்பட்ட மலிக்கி ஆட்சி, இறுதி நெருக்கடியில் உள்ளது. இராணுவத்தின் தலைமை தளபதி, பாதுகாப்பு மந்திரி மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகிக்கும் அந்த பிரதம மந்திரி, ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட்டதிலிருந்து ஒரு அரசாங்கம் உருவாக்க முடியாமல் உள்ளார். நாடு முழுவதும் ஒரு அவசரகால நிலைமையைக் கொண்டு வரும் சட்டத்தை நிறைவேற்ற அவர், வியாழனன்று, ஒரு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட முயன்றார். ஆனால் மலிக்கியால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் எதேச்சதிகார மற்றும் பிரிவினைவாத முறைமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னி, குர்திஷ் மற்றும் எதிர்ப்பு ஷியா கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்ததோடு, வந்திருந்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவைக்கும் குறைந்தளவில் இருந்ததால் வாக்கெடுப்பை நடத்த முடியாமல் போனது.

கைப்பற்றப்பட்ட இராணுவ ஹெலிகாப்டர்கள் மேலே பறக்க, அமெரிக்கா வினியோகித்த ஹம்வீஸ் (Humvees) மற்றும் ஏனைய ஆயுதமேந்திய வாகனங்களின் அணிவகுப்பை வியாழனன்று அந்த இஸ்லாமியவாதிகள் நடத்தியதோடு சேர்ந்து, ISIS வெற்றியின் அளவும், அமெரிக்கா மற்றும் அதனால் நிறுவப்பட்ட ஆட்சியின் தோல்வியும் மிக தெளிவாக உள்ளது.

இந்த விமானங்களை அவர்களால் பறக்கவிட முடிந்திருப்பது, அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியின்கீழ் கலைக்கப்பட்ட பழைய ஈராக்கிய இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளும், சிப்பாய்களும் கிளர்ச்சியில் அதிகளவில் சம்பந்தப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியது. சதாம் ஹூசைன் தூக்கிலிடப்பட்டதற்குப் பின்னர் தடைவிதிக்கப்பட்ட பாதிஸ்ட் கட்சியின் தலைவரான, முன்னாள் ஈராக்கிய தளபதியும் துணை ஜனாதிபதியுமான இஜ்ஜத் இப்ராஹிம் அல்-தௌரியும் அவர்களில் ஒருவராவார் என்று செய்திகள் குறிப்பிட்டன. அவர்கள் கைப்பற்றிய சில நகரங்களில், உள்ளூர் அரசாங்கங்களாக செயல்பட முன்னாள்-பாதிஸ்ட் அதிகாரிகளின் தலைமையில் இராணுவ குழுக்களை ISIS அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சுன்னி மக்கள் அதிகமிருந்த அந்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நீண்டகாலமாக, அவர்களுக்கு விரோதமான ஷியா ஆட்சியின் ஆக்கிரமிப்பு படையாக பார்க்கப்பட்டு வந்த ஈராக்கிய இராணுவம் வெளியேறுவதை, கூட்டம் கூட்டமாக கொண்டாடும் காட்சிகளும் அங்கே காணக் கிடைக்கின்றன.

இத்தகைய கசப்பான பிரிவினைவாத பிளவுகள், 2003 இல் தொடங்கப்பட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிளவுபடுத்தி-கைப்பற்றும் மூலோபாயத்தால் மாபெரும் அளவில் தூண்டிவிடப்பட்டிருந்தன. அவை மலிக்கி ஆட்சியால் ஆழப்படுத்தப்பட்டுள்ளன, அது அதிகாரத்திலிருந்து சுன்னி மக்களை விலக்கி வைக்க முறையாக வேலை செய்திருப்பதோடு, அங்கே சுன்னி மக்கள் வாழும் பகுதிகளில் எழுந்த அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை அனுப்பி, அங்கிருந்த அனைத்து அரசியல் எதிர்ப்பையும் "பயங்கரவாதமாக" கையாண்டது. தற்போதைய நெருக்கடியில் மலிக்கி, ISISக்கு எதிரான போராட்டத்தை ஒரு "புனித போராக" வர்ணித்து, ஷியைட் குறுங்குழுவாதத்திற்கு நேரடியாக அழைப்புவிட்டுள்ளார்.

ISIS தாக்குதலால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடி ஈராக்கை முற்றிலுமாக பிரிவினைவாத கோடுகளில் பிரிக்க இட்டுச் செல்லும் என்பதற்கும் மற்றும் தொடர்ச்சியான அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளால் உருவாக்கப்பட்ட குழப்பங்களுக்குள் இழுக்கப்பட்ட அப்பிராந்திய ஏனைய சக்திகள் மத்திய கிழக்கின் இப்போதைய அரசியல் வரைபடத்தைத் தகர்க்க அச்சுறுத்துகின்றன என்பதற்கும், அங்கே அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.

வடகிழக்கு ஈராக்கின் கிர்குக் நகரத்திலும் ஈராக்கிய இராணுவம் கலைந்து போனதற்குப் பின்னர் அந்நகரின் அனைத்து பகுதிகளையும் குர்திஷ் இராணுவ படையான பெஸ்மெர்கா (peshmerga) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ஈராக்கிய எண்ணெய் தொழில்துறையின் ஒரு முக்கிய மையமான அந்நகரம் அரேபியர்கள், குர்திஷ்கள் மற்றும் துருக்மெனிஸ்தானியர்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது, ஆனால் குர்திஷ் இயக்கம் அதனை அதன் தலைநகரமாக எப்போதும் வாதிட்டு வருகிறது. 2003 ஆக்கிரமிப்பின் போது அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் அதை கைப்பற்றிய போது கிர்குக் மீதான கட்டுப்பாட்டை கைவிட அவர்கள் பெஸ்மெர்காவை நிர்பந்தித்தனர், பின்னர் அந்நகரை அருகிலுள்ள சுயாட்சி குர்திஷ் பகுதியோடு இணைப்பதையும் எதிர்த்தனர்.

எரபெலில் உள்ள குர்திஷ் அரசியல்வாதிகள், மூலோபாய எண்ணெய் மூலதனத்தை ஈராக்கிய குர்திஷ்தானுக்குள் இணைக்க ஒரு "பொன்னான வாய்ப்பு" கிடைத்திருப்பதாக ஈராக்கிய இராணுவத்தின் பொறிவைக் கொண்டாடுகின்றனர். ஏனைய இன மக்களும் மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள இதர பெரும்பாலான மாநிலங்களைப் போலவே ஈராக்கிய மத்திய அரசாங்கமும் அந்நகரை குர்திஷ் எடுத்துக் கொள்ள எதிர்க்கும்.

ISIS முன்னேறுவதற்கும், அதே போன்று குர்திஷ் பெஸ்மெர்கா முன்னேறுவதற்கும் இடையே, பாக்தாத்தில் உள்ள ஆட்சி ஆள்வதற்கு, அங்கே தலைநகர் மற்றும் தெற்கில் உள்ள ஷியா இதயத்தான பகுதிக்கும் சற்று கூடுதலானவை மட்டுமே விட்டு வைக்கப்படும்.

இதற்கிடையே, ஈராக்கில் தலையீடு செய்ய துருக்கியும், ஈரானும் அச்சுறுத்தி உள்ளன. துருக்கிய தூதரகத்தில் இருந்த 49 மக்களை ISIS பிடித்து கொண்டதற்கும், மோசூலில் 31 துருக்கிய டிரக் ஓட்டுனர்களை பணைய கைதிகளாக பிடித்ததற்கும் பழிக்குப் பழி நடவடிக்கை எடுக்கப்படுமென்று துருக்கிய அதிகாரிகள் எச்சரித்தனர்.

நெருக்கடியைக் கையாள அங்காராவிற்கு திரும்புவதற்காக ஐக்கிய நாடுகள் உடனான கூட்டத்தை இரத்து செய்த பின்னர், வியாழனன்று நியூ யோர்க் நகரில் இருந்த துருக்கிய வெளியுறவுத்துறை மந்திரி அஹ்மெட் தாவ்டோக்லு, “எங்கள் குடிமக்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படுத்தினால் அவர்கள் கடுமையாக பழிவாங்கப்படுவார்கள்,” என்று எச்சரித்தார்.

தெஹ்ரானில் ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி வியாழனன்று அறிவித்தார்: “ஈரான் இனியும் சும்மா இருக்காது, அந்த பயங்கரவாதிகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள போவதில்லை. இந்த பிராந்தியத்திலும், உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை எதிர்க்க சரியான நேரத்தில் நாங்கள் தலையீடு செய்யவிருக்கிறோம். நான் ஏற்கனவே ஐநாவின் முன்னால் கூறியதைப் போல, எங்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை மற்றும் இனவாத குழப்பங்களைத் தூண்டிவிட எங்கள் எதிரிகள் என்னவெல்லாம் சாத்தியமோ அத்தனையும் செய்வார்கள் என்பதை முஸ்லீம்களாகிய எங்களுக்கு இந்த பயங்கரவாத அலை தெளிவான சேதியை வழங்குகிறது,” என்றார்.

உறுதி செய்யப்படாத செய்திகளின்படி, ISISக்கு எதிரான போராட்டத்தில் உதவ ஈரான் ஏற்கனவே ஈராக்கிற்குள் புரட்சிகர கோத்ஸ் பாதுகாப்பு படைகளின் (Revolutionary Guards Quds Force) ஒரு பிரிவை அனுப்பி உள்ளதோடு, ஈராக்கிய எல்லையோரங்களில் இராணுவப் படைகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஈராக்கில் வாஷிங்டன் நேரடியாக தலையீடு செய்யுமா என்பது இன்னும் தெளிவாக இல்லை. கடந்த நவம்பரில் ஈராக்கிய பிரதம மந்திரி வாஷிங்டனுக்கு விஜயம் செய்ததில் இருந்து, இஸ்லாமிய போராளிகள் மற்றும் சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல்களை நடத்த மலிக்கி ஆட்சி புதிய அழைப்புகளை விடுத்து வருவதாக செய்திகளில் கூறப்படுகிறது.

அண்மித்தளவில் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சைகோன் வீழ்ந்தளவிற்கான (Saigon’s fall) ஒரு தோல்விக்கு உத்தியோகபூர்வ வாஷிங்டனின் விடையிறுப்பு திட்டமிட்ட மௌனமாக உள்ளது. ஒபாமாவின் கருத்துக்கள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட்டுடன் சேர்ந்து சிறிது நேரம் பார்வைக்கு வந்தபோது கூறியதாகும். மேலும், ஈராக்கிய நெருக்கடியில் ஒபாமா "ஒருவித குட்டித் தூக்கம் போடுவதாக" குடியரசு கட்சியின் அவை தலைவர் ஜோன் போஹ்னெர் போக்கை திசை மாற்றும் ஒரு அறிவிப்பை வியாழனன்று வெளியிட்டார், அவர் ISIS தாக்குதலுக்கு எந்தவொரு குறிப்பிட்ட விடையிறுப்புக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

பரந்தளவில் பார்த்தால், இந்த பிற்போக்குத்தனத்தை மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றத்தனமான மற்றும் பொறுப்பற்ற தலையீடுகளால் பரப்பிவிடப்பட்ட பலத்த பொய்களால் மற்றும் முரண்பாடுகளால் தான் தெளிவுபடுத்த முடியும். ஈராக்கில் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக மலிக்கிக்கு ஆதரவளிப்பதாக வாதிட்டு வந்த அதேவேளையில், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு இரத்தந்தோய்ந்த பிரிவினைவாத யுத்தத்தில் வாஷிங்டன் ஒரு பினாமி இராணுவமாக இதே சக்திகளுக்கு ஆதரவளித்துள்ளது. ஒபாமா நிர்வாகம் உத்தியோகபூர்வமாக ISISஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரைக் குத்தி உள்ளது, ஆனால் யதார்த்தத்தில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைக் கவிழ்ப்பதற்கான யுத்தத்தில் முக்கிய போராளிகள் படைகளில் ஒன்றாக இது உள்ளடங்கி உள்ளது.

மோசூல் கைப்பற்றல், புறநிலைரீதியாக, சிரிய அரசாங்கத்துடன் சண்டையிடும் சக்திகளைப் பலப்படுத்துவதற்கான அமெரிக்க கொள்கையின் ஒரு வெளிப்படையான இலக்கிற்கு உதவுகிறது. நூற்றுக் கணக்கான ஆயுதமேந்திய வாகனங்கள், பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், மற்றும் நூறு ஆயிரக்கணக்கான டாலர் ரொக்க பணங்கள் உட்பட மோசூலில் கைப்பற்றப்பட்ட யுத்த சூறையாடலின் பெரும் பங்கானது நடப்பில் அழிக்கப்பட்டுள்ள எல்லையைத் தாண்டி சிரியாவிற்குள் அனுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தோடு" போரிடுகிறோம் என்ற போலி பொய்காரணத்தின் மீது ஈராக் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியமை மற்றும் சிரியாவில் ஒரு பினாமி யுத்தத்தில் அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற போராளிகளை ஆதரித்தமை போன்ற வாஷிங்டனின் கொள்கைகளின் மொத்த விளைவு, எல்லைக்கு இரண்டு தரப்பிலும் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதும் அல்லது இடம் பெயர்ந்ததும், மற்றும் கொல்லப்பட்டதுமாகும்.