சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The UAW vs. the auto workers

வாகனத்துறை தொழிலாளர்களுக்கு எதிராக UAW 

Jerry White
9 June 2014

Use this version to printSend feedback

ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) கடந்த வாரம் டெட்ராய்டில் அதன் 36வது கொள்கை நிறைவேற்றும் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டம் மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டிருந்தது: ஒன்று, ஓய்வு பெற இருப்பவர்களுக்கு மாற்றாக குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி தொழிற்சங்க செயலதிகாரிகளின் ஒரு புதிய அடுக்கை நியமிப்பது; இரண்டாவது, அங்கத்தவர்கள் மீது கூடுதல் சந்தா உயர்வை திணிப்பது; மூன்றாவது, ஊதியங்கள் மற்றும் சலுகைகளைக் குறைப்பது, வேலை செய்வதில் வேகப்படுத்தலை திணிப்பதில் மற்றும் பெருநிறுவன இலாபங்களை உயர்த்துவதில் UAW தொடர்ந்து உதவும் என்பதை வாகனத்துறை நிறுவனத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்திற்கும் மறு உத்தரவாதம் அளிப்பது, ஆகியவை ஆகும்.

ஒவ்வொரு அம்சத்திலும், அந்த நான்கு நாட்களது நிகழ்வு அந்த அமைப்பின் ஜனநாயக விரோத, அதிகாரத்துவ மற்றும் தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை எடுத்துக்காட்டியது. உறுப்பினர்களுக்கான சந்தா தொகையில் 25 சதவீத அளவிற்கு அதிகரிப்பதற்கு அதன் பிரதிநிதிகளால் வாக்களிக்கப்பட்டதை தவிர்த்து, சாமானிய வாகனத்துறை தொழிலாளர்கள் அந்த கூட்டத்தை அரிதாகவே கவனத்தில் எடுத்திருப்பார்கள்.

அவரது இறுதி உரையில், வெளியேறவிருக்கின்ற UAWஇன் தலைவர் போப் கிங் அச்சங்கத்தால் சேவை செய்யப்பட்ட வர்க்க நலன்களைத் தொகுத்தளித்தார், அந்த உற்சாகமான பிரதிநிதிகளின் கூட்டத்திடையே அவர் பேசுகையில், “நாம் அன்றாடம் செய்து வருவதை, அதாவது ஒரு தொழிற்சங்க தொழிலாளர் பிரிவை கொண்டிருப்பது போட்டித்தன்மைக்கு அனுகூலமானதே தவிர, அது போட்டித்தன்மைக்கு பாதகமானதல்ல என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டும்,” என்றார்.

UAW முதன்முதலில் கிறைஸ்லரின் இயக்குனர்களை பொதுக்குழுவிற்குள் கொண்டு வந்திருந்த மற்றும் உத்தியோகபூர்வமாக தொழிலாளர்கள்-நிர்வாகத்தின் பெருநிறுவன "கூட்டு" திட்டத்தை ஏற்றுக் கொண்ட, 1980களின் தொடக்கத்தில் இருந்தே அது தொழிலாளர்கள் மீதான பொலிஸாகவும் மற்றும் வாகனத்துறை முதலாளிகளுக்கு நம்பகமான மலிவு உழைப்பு வினியோகத்தை வழங்குவதற்காகவும் பகிரங்கமாக செயல்பட்டுள்ளது.

UAW இன் உதவியோடு, டெட்ராய்டை மையமாக கொண்ட வாகனத்துறை உற்பத்தியாளர்கள் நாடெங்கிலும் குறைந்தபட்சம் 200 ஆலைகளை மூடிவிட்டதோடு, 1979இல் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை வெட்டியுள்ளனர். இந்த நிகழ்வுபோக்கு 2000களின் மத்தியில், அதுவும் குறிப்பாக ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய நிதியியல் முறிவுக்குப் பின்னரில் இருந்து, தீவிரப்படுத்தப்பட்டது. 2007இல் இருந்து, UAWஆல் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் பிரிவால் (workforce) "போட்டித்தன்மைக்கு கிடைத்த அனுகூலமானது", அமெரிக்காவில் உள்ள ஆசிய மற்றும் ஐரோப்பிய கார் உற்பத்தியாளர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள்-இல்லாத ஆலைகளில் இருந்த மட்டத்திற்கு, 30 சதவீத தொழிலாளர் செலவுகளைக் குறைக்க டெட்ராய்ட் வாகனத்துறை உற்பத்தியாளர்களை அனுமதித்துள்ளது.

அந்த தொழிற்சங்கம் அழிந்து போவதற்குரிய சாத்தியக்கூறுகள் மீது பல வாகனத்துறை நிர்வாகிகள் அவர்களின் கவலையை வெளியிடும் அளவிற்கு, 1979இல் 1.5 மில்லியனில் இருந்து இன்று 388,000ஆக குறைந்துள்ள அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை, UAW எந்திரத்தை ஒரு நிதியியல் நெருக்கடிக்கு இட்டு சென்றுள்ளது. அரசின் புதிய "வேலை செய்வதற்கான உரிமை" சட்டத்தின் கீழ், இது தொழிற்சங்கம் உள்ள வேலையிடங்களில் கட்டாயம் சந்தா செலுத்த வேண்டுமென்ற சட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதால், மிச்சிகனில் உள்ள ஆயிரக்கணக்கான GM, போர்ட் மற்றும் கிறைஸ்லர் தொழிலாளர்கள் சந்தா செலுத்துவதை கைவிடும் வாய்ப்பை பெறுகின்ற நிலையில், UAW நிர்வாகிகளின் அடுத்த ஆண்டு நிலைமைகள் இன்னும் மோசமடையக்கூடும்.

தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்காவில் உள்ள ஆசிய மற்றும் ஐரோப்பிய உடைமையான ஆலைகளோடு ஒரு விருப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மூலமாக, சந்தா-செலுத்தும் புதிய உறுப்பினர்களைப் பெற முடியுமென்ற கிங்கின் திட்டம், சட்டநூகா, டென்னெஸியின் வோல்ஸ்வாகன் தொழிலாளர்கள், நிறுவனத்தினதும்-UAW தொழிற்சங்கத்தின் ஒரு கூட்டு முயற்சியால் அவ்வாறொன்று செய்ய முயன்றதற்கு "வேண்டாம்" என்று வாக்களித்து விடையிறுப்பு காட்டியபோது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொறிந்து போனது.

தொழிலாளர்கள் வாக்களிக்க போகாமலும், தங்களின் பணப்பைய்யை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் UAWக்கு எதிராக வாக்களிக்கும் ஆபத்தை அத்தொழிற்சங்கம் முகங்கொடுத்துள்ள நிலையில், வெளிவேடத்திற்கான உறுப்பினர்களின் ஜனநாயகரீதியான வாக்கெடுப்பு கூட இல்லாமல் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த பதவிக்கு வரவுள்ள UAW தலைவர் டென்னிஸ் வில்லியம்ஸ் முற்றிலுமான அவரது வலதுசாரி உரையில்  வார்த்தைஜாலத்தில் ஒரு துணுக்கை சேர்த்திருந்தார். அவர் பேசுகையில், “இது நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய பெறுநிறுவனங்களுக்கு, 'இனி விட்டுகொடுப்புகள் வேண்டாம், நாங்கள் அதனால் சோர்ந்து விட்டோம், எல்லாமே போதும்' என்று கூற வேண்டிய நேரமாகும்,” என்றார்.

இது பெரு வணிகத்தின் மற்றும் ஜனநாயக கட்சியின் ஒரு கருவியாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வேலை செய்து வந்துள்ள ஒரு மனிதரால் கூறப்பட்டதாகும். 2004இல் கட்டர்பில்லரில் UAWஇன் நிஜமான இரட்டை-அடுக்கு ஊதிய உடன்படிக்கையில் பேரம் பேசியதே அவரது புகழுக்கு முக்கிய ஆதாரமாகும். தற்போது இவர் டிரக் உற்பத்தி நிறுவனமான நவிஸ்டாரின் (Navistar) இயக்குனர் குழுவில் ஒருவராக இருக்கிறார்.

UAWஇன் பெருநிறுவன-சார்பு, தேசியவாத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு முன்னோக்கை எடுத்துரைத்த வில்லியம்ஸ், அவரும், அவரது மனைவி மற்றும் மகனும் அனைவருமே அமெரிக்க கப்பற்படையில் இருந்தவர்கள் என்று பெருமையடித்தார். “நான் பலமான இராணுவத்தில் நம்பிக்கை கொண்டவன், அதன் மூலமாக நாம் அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற முடியும்,” என்று அவர் அறிவித்தார்.

இரண்டு பெருவணிக கட்சிகளின் ஆதரவோடு கொண்டு வரப்பட்ட சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு அவரது ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, வில்லியம்ஸ் தொடர்ந்து கூறுகையில், “நான் சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் நம்பிக்கை கொண்டவன்,” என்று தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியினருக்கு "வாக்குகள் கிடைக்க செய்வதை" UAW தொடருமென்பதையும் அவர் சேர்ந்து கொண்டார், இவர்கள் தான், ஜனாதிபதி ஒபாமாவின் கீழ், அமெரிக்க வரலாற்றிலேயே பிரமாண்டமான செல்வவளம் பெரிய பணக்காரர்களுக்கு கைமாற்றப்பட்டதை மேற்பார்வை செய்தவர்கள் ஆவர்.

பெருநிறுவனங்களின் மற்றும் அரசின் ஒரு அங்கமாக UAW மாறியிருப்பது, ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் தொழிற்சங்கங்களின் பரிணாமத்தை எடுத்துக்காட்டுகிறது. அது கிரீஸில் ஆகட்டும், பிரான்ஸ், பிரேசில், தென்கொரியா அல்லது தென்னாபிரிக்கா ஆகட்டும் தொழிற்சங்கங்களானது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்க மற்றும் அதற்கு குழிபறிக்க மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்களின் வருவாய் மற்றும் தனிச்சலுகைகளுக்காக சார்ந்திருக்கும் இலாப அமைப்புமுறையை காப்பாற்ற செயல்படுகின்றன.

தொழிற்சங்கங்களின் பொறிவானது வெறுமனே தனிநபர்களின் ஊழல்களினது விளைவல்ல, மாறாக அதிக ஆழமான, புறநிலை காரணங்களின் விளைவாகும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

UAW ஆனது பெருமந்தநிலை சகாப்தத்தின் தொழில்துறை கொந்தளிப்புகள் மற்றும் அரசியல் தீவிரமயப்பட்ட தன்மையிலிருந்து வெடித்தெழுந்தது. தொழிற்சங்கங்களை உருவாக்கிய உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் இதர வர்க்க போராட்டங்களில் தாக்குமுகப்பாக இருந்தவர்கள் பெரும்பாலும் இடதுசாரி போராளிகளாக மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட தொழிலாளர்களாக இருந்தார்கள், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை அமைப்பை, சோசலிசத்திற்காக போராடும் தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய ஒரு படியாக கண்டார்கள்.

வால்டர் ரூதரின் (Walter Reuther) கீழ் இருந்த UAW தலைமை இந்த போக்கை எதிர்த்ததோடு, தொழிலாள வர்க்கத்தை ஜனநாயக கட்சிக்கு அடிபணிய செய்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர், ரூதர் தொழிற்சங்கங்களில் கம்யூனிச விரோத களையெடுப்பிற்கு இட்டுச்சென்றதுடன், இலாப அமைப்புமுறையின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஆதரவு என்ற அடித்தளத்தில் அவற்றை உறுதிப்படுத்திக்கொண்டார். தொழிற்சங்கங்களின் வலதுசாரி களையெடுப்பு இறுதியாக அவர்களின் தலைவிதியையும் தீர்மானித்தது.

1980களின் வாக்கில், நாடுகடந்த உற்பத்தியின் வளர்ச்சி முற்றிலுமாக UAWஇன் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்திற்கு குழிபறித்தது. அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று வீழ்ச்சிக்கு முன்னால், UAW தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பாதுகாப்பையும் கைவிட்டதோடு, தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்களை அழிப்பதில் பகிரங்கமாக இணைந்து வேலை செய்தது.

சிக்கன நடவடிக்கைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அவர்களை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மட்டும் நிலைநிறுத்தவில்லை, மாறாக தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் நிலைநிறுத்துகின்றன. வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் பாதுகாப்புக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதென்பது, தொழிலாளர்கள் தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்புவதால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.

தொழிலாளர்கள் "அவர்களின்" பெருநிறுவனங்களை இன்னும் போட்டித்தன்மைக்கு உகந்ததாக செய்ய மற்றும் இலாபகரமாக செய்ய, தங்களை அர்பணிக்க வேண்டுமென்று உலகெங்கிலும் தொழிற்சங்கங்களால் முறையிடப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். பூகோளமயப்பட்ட உற்பத்தி நிலைமைகளின் கீழ், வாகனத்துறை தொழிலாளர்கள் ஒரு பாதுகாப்பான வேலை மற்றும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்திற்கான சமூக உரிமையைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு உண்மையான சர்வதேச வேலைத்திட்டத்தை ஏற்க வேண்டியது அவசியமாகும்.

UAWக்கு முற்றிலும் எதிரான ஒரு புதிய அரசியல் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியப்படுகிறது. சமூகத்தின் ஒரு துருவத்தில் வறுமை வளர்ச்சி அடைவதும், மறுபுறத்தில் பெரும் பணக்காரர்கள் இருப்பதும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியை எடுத்துக்காட்டுவதோடு, ஒரு சோசலிச மாற்றுக்கு தொழிலாளர்கள் போராட்ட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.