சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Workers at Detroit retiree meetings voice anger over pension cuts

டெட்ராய்ட்டில் நடைபெற்ற ஓய்வு பெற்றவர்களுக்கான கூட்டத்தில் தொழிலாளர்கள், ஓய்வூதிய வெட்டுக்கள் மீதான கோபத்தினை வெளிப்படுத்தினர்.

By Shannon Jones 
6 June 2014

Use this version to printSend feedback

இவ்வாரம் டெட்ராய்ட்டில் நடைபெற்ற ஓய்வுபெற்றவர்களுக்கான கூட்டத்தில், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் டெட்ராய்ட் அவசரகால மேலாளரான கெவின் ஓர் (Kevyn Orr) முன்மொழிந்துள்ள சரிகட்டல்களுக்கான திட்டத்தில் காணப்படும் பெருமளவிலான வெட்டுக்களுக்கு வலுவான எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.


டெட்ராய்ட்
பொது ஓய்வு அமைப்பின் கூட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள்

காவல்துறை, தீயணைப்பு மற்றும் பொது ஓய்வூதிய அமைப்புக்களின் அறங்காவலர்களால் சமீபத்திய கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சங்க அதிகாரிகள் மற்றும் அவர்களது சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் குழுவான, ஓய்வுபெற்றவர்களின் அதிகாரபூர்வ குழுவால் அழைக்கப்பட்ட முந்தைய கூட்டங்களின் அமைப்பினையே அவர்கள் பின்பற்றினர், அதில், பெருமளவிலான ஓய்வூதிய குறைப்புக்களை அங்கீகரித்தோ அல்லது இன்னும் அதிக கொடுமையான வெட்டுக்களை எதிர்கொள்வதற்காகவோ ஓட்டு போடுங்கள் என்று கூறும் இறுதி அறிக்கை தொழிலாளர்களிடம் கொடுக்கப்பட்டது.

ஓர் முன்மொழிந்துள்ள சரிகட்டல் திட்டத்தின் படி, பொதுவான ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் செலவிற்கான -சலுகை நீக்கப்படுவதுடன் அவர்களது ஓய்வூதிய காசோலைகள் 4.5 சதவீதமாக குறைக்கப்படும். ஓய்வு பெற்றவர்களுக்கான சுகாதார நலன்கள் மற்றும் ஆண்டு சேமிப்பு நிதியில் தொழிலாளர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தினை மீட்கும் மேற்சொன்ன நடவடிக்கையில், இதுவரையிலான வெட்டுக்களிலேயே இது மிகவும் அதிகமாகும். வருடாந்தர கணக்கில் சேமித்து வைத்திருக்கின்ற மற்றும் தற்போது அதனை அவர் மறுபடியும் செலுத்த வேண்டும் என்றும் கேட்கும் பணமானது ஓய்வு பெற்றவர்களுக்கு மாநிலம் அளித்து வந்த கூடுதல் வட்டியாகும் என்றார் ஓர். சிலரது கணக்கில், அவனோ அல்லது அவளோ முதலீடு செய்துள்ள தொகையினை பொறுத்து, இது ஒரு ஓய்வுபெற்ற நபருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் எனும் அளவிற்கு போகிறது. எல்லா வெட்டுக்களும் சேர்ந்து ஓய்வுபெற்றவரின் வருமானத்தில் மொத்தமாக 40 சதவீத வெட்டாகிவிடுகிறது.

ஓய்வுபெற்றவர்கள் சரிகட்டல் திட்டம் குறித்து ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும் வேளையில், வாக்குச் சீட்டே போலியானதாக இருக்கிறது. ஒருவேளை வாக்கு திட்டத்திற்கு எதிரானதாக இருந்தால், நலன்களில் மேலும் குறைப்புகள் விதிக்கப்படும் என்று ஓர் ஒரு மறுகட்டமைப்பினைஅச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். கடன் கொடுத்தவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் இத்திட்டத்தினை அங்கீகரித்தாலும், மத்திய வங்கி திவால் துறை நீதிபதியான ஸ்டீவன் ரோட்ஸ் இதனைப் புறக்கணித்து இன்னும் கூர்மையான வெட்டுக்களை விதிக்க முடியும்.

நிறமக்களின் முன்னேற்றத்துக்கான தேசிய கூட்டமைப்பின் (NAACP) தலைவரான வணக்கத்திற்குரிய வெண்டெல் அந்தோனி டெட்ராய்ட் நகர பொது ஓய்வு அமைப்பு அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தினை தொடக்கி வைத்தார். பொதுவான ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய வாரிய அறங்காவலராக அமர்ந்திருக்கும் அந்தோனி, சரிகட்டல் திட்டத்தினை ஆதரித்து அழைப்பு விடுக்கும் வாரியத்தின் பணியினை பாராட்டினார். வெட்டுக்களுக்கான பெரும் எதிர்ப்புகளை பயத்தோடு குறிப்பிட்டு, ”தூதனை கொலை செய்யாதேஎன்றும், ”யாரும் இங்கிருந்து வெளியேற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லைஎன்றும் ஓய்வுபெற்றவர்களை வலியுறுத்தினார்.

இது வளாகத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதை தடுப்பதிலிருந்து அந்தோனியை தடுக்கவில்லை, அவரது தேவாலயம் நிகழ்ச்சியை நடத்தியது. சரிகட்டல் திட்டத்தினை எதிர்க்கும் செய்தியறிக்கையின் பிரதிகளை விநியோகிக்க முயற்சித்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களை கட்டிடத்தை விட்டு வெளியேறும்படியும் அந்த தெருவினை விட்டு நகரும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டனர். பின்னர், கூட்டத்தின்போது, தளத்திலிருந்து பேச முயற்சித்த ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவரை பாதுகாப்பு பணியாளர் முரட்டுத்தனமாக இழுத்துத் தள்ளினார்.

மேலும் சரிகட்டல் திட்டத்திற்கு அந்தோனி அளிக்கும் ஆதரவு, ஒபாமா நிர்வாகம் முதல் உத்தியோகபூர்வ சிவில் உரிமைகள் இயக்க சங்கங்கள் வரை அரசியல் நிர்வாகத்தின் அனைத்து பிரிவுகளும் டெட்ராய்ட்டின் பணியாளர்களுக்கு எதிரான சதித்திட்டத்தில் ஒன்றுபட்டுள்ளன என்பதை விவரிக்கிறது. இந்த தாக்குதல்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா முழுவதிலும் எதிர்காலத்தில் பணியாளர்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

கூட்டத்தின்பொழுது, பணியாளர்களை அச்சுறுத்துவதற்காக முரட்டுத்தனமான முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. பொது ஓய்வூதிய அமைப்பிற்கான வழக்குரைஞரான பிரதான தொகுப்பாளர் கிளாடி மாண்ட்கோமரி, ”நீங்கள், ஓட்டளிக்க மறுப்பதன் மூலம், உங்களது ஓய்வூதிய நலன்களிலான குறைப்பினை புறக்கணிக்க முடியாதுஎன்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டு மேல்புறம் திரையில் காண்பிக்கப்பட்ட காட்சிகளுக்கு (Slides) எதிர்ப்பும் தெரிவித்தார்.

ஓரின் சரிகட்டல் திட்டத்தினை செயல்படுத்த வசதி ஏற்படுத்தித்தரும் பல நூறு மில்லியன் டாலர்கள் பங்களிக்கும் மிச்சிகன் மாகாண மற்றும் தனியார் அமைப்புக்களின் கீழானபெரும் பேரத்தினைமாண்ட்கோமரி விற்கவும் முயன்றார். மாநில சட்டமன்றமும் சமீபத்தில் டெட்ராய்ட் நகர் திவால் நிலைமையிலிருந்து வெளிவந்த பிறகு அதனை 13 வருடங்கள் வரை ஒரு நிதி சர்வாதிகாரத்தின் கீழ் வைப்பதற்கான ஒரு திட்டத்தினையும் அங்கிக்கரித்தது. இந்த பேரத்தின் ஒரு பகுதியாக செழிப்பான நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அறக்கட்டளையின் கீழ் டெட்ராய்ட் கலை நிறுவனம் வைக்கப்படும்.

இந்த விளக்கத்தினை அடுத்து கேள்விகளுக்கான நேரம் ஒதுக்காமல் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்தனர், அதன் பின்னர் ஒப்புக்கொள்பவர்கள் பெயர் முன்கூட்டியே எழுதப்பட்டு திரையில் காண்பிக்கப்பட்டது.

பின்னர், ஓய்வு பெற்றவர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிரூபர்கள் உரையாடினர். ”அவர்கள் செய்து கொண்டிருப்பது பயத்தினை போக்க தந்திரோபாயங்களை பயன்படுத்துவது போல் தெரிகிறது. ஆனால் இரு வழியிலும், அவர்கள் எங்களது ஓய்வூதியங்களை வெட்டப் போகிறார்கள் என்ற திட்டத்தினை நாம் ஒப்புக் கொள்கிறோம் அல்லது மறுக்கிறோம்என்று கார்ல் டிங்கிள் கூறினார்.

அவர்கள் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. தொழிலாளர்களின் சுமையில் அவர்கள் தங்களது கணக்குகளை சரிகட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பல வருடங்களாக இத்திட்டத்தினை செயல்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்என்று இன்னொரு ஓய்வு பெற்ற நபரான சயீரீ மேன்பரி கூறினார்.


பில்

ஒரு சிறு ஓய்வூதிய வரைவோலை மற்றும் சிறிது சமுதாய பாதுகாப்பினை சார்ந்திருக்கும்போது, நீங்கள் தீவிர சிக்கலைகளை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் உங்களிடம் உண்மையைத்தான் சொல்கிறார்கள் என்பதை நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்? உண்மையான தகவல்களைப் பெற நீங்கள் எங்கே போவீர்கள்? உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும், அது ஒரு சூதாட்டம். நீங்கள் உங்களது எதிர்காலத்துடன் சூதாடிக் கொண்டிருக்கிறீர்கள்என்று டெட்ராய்ட் போக்குவரத்து தொழிலாளியான பில் கூறுகிறார்.

இந்த வெட்டுக்களால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மட்டுமே இது ஒரு பிரச்சனை. ஓய்வூதிய வாரிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்

இது குறித்து எனக்கு வருத்தம்தான். மாநில அரசியலமைப்பிற்கு ஏதாவது அர்த்தம் இருக்கவேண்டும். அவர்கள் நேர்மையாக இருந்தால், நாங்கள் ஓட்டளிப்பதற்கு முன்னால், வழக்குகள் குறித்த (வங்கி திவால் நிலைமையின் சட்டபூர்வ தன்மையின் சவால்கள்) ஒரு தீர்மாத்திற்கு எங்களால் வர முடியும். நாங்கள் ஏன் எங்கள் உரிமைகளை விட்டுத்தர வேண்டும்? 20 முதல் 40 சதவீத ஓய்வூதிய குறைப்புக்களை மக்கள் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?” என்று பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் ஓய்வுபெற்ற பணியாளரான மார்ஷல் கூறுகிறார்.

மாநிலம் திவாலுக்கு தகுதியானது என்று அறிவிக்கும் அமெரிக்க வங்கி திவால் துறை நீதிபதியான ஸ்டீவன் ரோட்ஸின் டிசம்பர் 3 ம் தேதிய நீதிமன்ற தீர்ப்பினை அவர்கள் எதிர்க்கும் வேளையில்,  ”பெரும் பேரத்தினைஒப்புக்கொள்வதற்கான தேவை இப்போது இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள் என்று காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களது கூட்டத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான ஓய்வூதிய அமைப்பின் சட்டக்குழு கூறியது. அப்போது, வக்கீல்களின் விளக்கவுரையின் போது, முணுமுணுப்பு கிளம்பியது மற்றும் சிறிய அளவிலான இடையூறுகள் என கவனிக்கத்தக்க வகையில் இதற்கான  எதிர் குரல்களும் கேட்டன.

கூட்டத்திற்கு பின்னர், 2007ல் ஓய்வு பெற்ற தீயணைப்புப்படை வீரரான ரேமண்ட் மார்ஷல் உசோவத. விடம் பேசுகையில், “சரி என்று நாங்கள் வாக்களித்தால், நாங்கள் எங்களது அனைத்து உரிமைகளையும் எழுதிக் கொடுக்கிறோம். தவறு என்று வாக்களித்தால், எப்படியும் அவர்கள் எங்களை பிழிந்தெடுக்கப் போகிறார்கள்என்றார்.

நான் ஏற்கெனவே எனது சுகாதார பாதுகாப்பை இழந்திருக்கிறேன், இப்போது அவர்கள் கோலாவை எடுத்துக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எனது வாழ்க்கைத் திட்டங்களில் ஒரு முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உயிர் வாழ்வதற்கான ஒவ்வொரு பென்னிக்காகவும் இனிமேல் ஓய்வுகளோ, பாதுகாப்பு மற்றும் சேமிப்போ கிடையாது.”  

மற்றவர்களை விட சற்று சிறப்பான அணுகலுடன் ஓய்வுபெற்றவர்களை அவர்கள் ஒரு வித்தியாசமான அடுக்கில் வைத்திருக்கிறார்கள். அதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் எங்களைப் பிரித்து வைக்க விரும்புகிறார்கள்.”

உண்மை என்னவென்றால் இது அனைவரையும், அதாவது நகரின் பணக்கார மக்களை தவிர மற்ற அனைவரையும் பாதிக்கும். இதனை அவர்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிக சிறப்பாக செய்வார்கள் எனத் தெரிகிறது.”