சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

After the European elections
EU torn by conflict over European Commission president

ஐரோப்பிய தேர்தலுக்குப் பின்னர்
ஐரோப்பிய ஆணையத் தலைவர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மோதலில் சிக்கிக் கிழிகிறது

By Peter Schwarz
14 June 2014

Use this version to printSend feedback

கடந்த மாத ஐரோப்பிய தேர்தல்களை அடுத்து, ஐரோப்பிய ஆணையத்தின் வருங்காலத் தலைவர் யார் என்பது குறித்து ஒரு கடுமையான மோதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக எழுந்திருக்கிறது. சக்தி வாய்ந்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜோஸ் மானுவேல் பரோஸாவை அடுத்து லுக்ஸம்பேர்க்கின் முன்னாள் பிரதமரான ஜோன் குளோட் யுங்கர் ஆக்கப்பட வேண்டுமா என்பதே இந்த சர்ச்சையின் மையம். ஆயினும் இந்தப் பிரச்சினையின் பின்னாலிருக்கும் நலன்களிடையிலான மோதலும் தேசிய அளவிலான மோதல்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) முன்னணி வேட்பாளராக ஐரோப்பியத் தேர்தலில் யுங்கர் போட்டியிட்டார். இக்கட்சி 751 இடங்களில் 221 ஐ வென்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மிக வலிமையான கட்சியாக ஆகியது. இப்போதுதேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற விதத்தில் அவர் தான் ஐரோப்பிய ஆணையத் தலைவராக அறிவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையும், யுங்கரும் கூட, கோருகின்றனர்.

சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் ஐரோப்பிய இடது ஆகியவை யுங்கரை ஆதரிக்கின்றன. ஐரோப்பிய பசுமைக் கட்சியினரின் வெளிச்செல்லவிருக்கும் தலைவரான டானியல் கோன்-பெண்டிட், யுங்கர் தேர்ந்தெடுக்கப்பதற்கு ஆதரவாக தனது கட்சி சகாக்களை சந்தித்துப் பேசினார். ஐரோப்பியத் தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளரான மார்ட்டின் சுல்ட்ஸ்(இவர் ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர்)யுங்கரின் தேர்வு ஒருஅடிப்படைப் பிரச்சினை என்று அறிவித்தார். “முன்னணியிலிருக்கும் கட்சியின் வேட்பாளர் அதிகாரத்தைப் பெறுவதே ஜனநாயகப் பாரம்பரியம் என்று அவர் கூறினார்.    

சென்ற மாதத் தேர்தல்களில் ஐரோப்பிய இடதின் முன்னணி வேட்பாளரான சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் கூறினார்: “வேறு எந்த ஒரு வேட்பாளரை முன்நிறுத்தினாலும் அது சமீபத்திய தேர்தலை ஒட்டுமொத்தமாக மதிப்பிழக்க செய்து, தேர்தல் நடந்து முடிந்து விட்ட பின்னர், அதனை ஒரு ஏமாற்றுவேலை என்பதாய் மாற்றி விடும். இது ஒரு அடிப்படையான கோட்பாடு. ஐரோப்பிய தேர்தலில் முன்னணி இடத்தைப் பெற்றிருக்கும் வேட்பாளரை முன்நிறுத்துகின்ற தார்மீகக் கடமை ஐரோப்பிய கவுன்சிலுக்கு இருக்கிறது.

யுங்கரின் சொந்த முகாமிலும் கூட ஆதரவுச் சத்தம் வெளியில் கேட்காத நிலை தான் இருக்கிறது. யுங்கருக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் கொஞ்சம் தயங்கினார். பின் ஊடகங்களில் இருந்தான அழுத்தம் பெருகியதற்கு பின்னரே இறுதியில் அவர் யுங்கருக்கு ஆதரவு தெரிவித்தார். ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில், யுங்கரின் பிம்பத்தைப் பயன்படுத்துவதை மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்(CDU)தவிர்த்தது. அதற்குப் பதிலாக, தேர்தலில் போட்டியிடாத போதிலும் சான்சலர் முகம் தான் அத்தனை சுவரொட்டிகளிலும் இடம்பிடித்திருந்தது.

ஹங்கேரி மற்றும் ஸ்வீடன் அரசாங்கங்களின் தலைவர்கள்(இவர்களது கட்சிகளும் EPPஐச் சேர்ந்தவை தான்)யுங்கர் தேர்ந்தெடுக்கப்படுவதை திட்டவட்டமாக நிராகரித்து விட்டன. இதேதான் வலதுசாரி டச்சுப் பிரதமரான மார்க் ரூட்டின் விடயத்திலும். யுங்கருக்கான எதிர்ப்பின் தலைமையில் இருப்பவர் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன். யுங்கர் ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவாரென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டே விலகவிருப்பதாக அச்சுறுத்துகின்ற அளவுக்கு அவர் சென்றிருக்கிறார்.

ஐரோப்பிய நாடாளுமன்றம் யுங்கரை முன்நிறுத்துவதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார மையத்தை தேசிய அரசுகளில் இருந்து ஒரு மத்திய ஐரோப்பிய ஸ்தபானத்திற்காய் மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக ஆகிவிடும் என்று கேமரூன் கருதுகிறார். பல ஐரோப்பிய செய்தித்தாள்களில் சென்ற வெள்ளியன்று வெளியானதொரு விருந்தினர் பத்தியில் அவர் எழுதினார்: “இத்தகையதொரு கோரிக்கையை ஏற்பதானது அதிகாரத்தை தேசிய அரசாங்கங்களிடம் இருந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு வாக்காளர்களின் ஒப்புதல் இன்றி மாற்றுவதாகி விடும்.

ஆணையத் தலைவரை சிபாரிசு செய்ய ஐரோப்பிய கவுன்சிலுக்கு - இது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் அரசத் தலைவர்களைக் கொண்டது - இருக்கும் உரிமை மீதே பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதற்குப் பின்னர் தான் அந்த சிபாரிசு மீது பாராளுமன்ற பிரதிநிதிகள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரது பார்வை. “வேட்பாளரைத் தேர்வு செய்வது தேர்ந்தெடுப்பது இரண்டிற்குமே முயற்சி செய்வதான ஒரு புதிய நிகழ்வுமுறையை கண்டுபிடிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். “இது கொல்லைப்புற வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி என்பது அவரது குற்றச்சாட்டு.

யுங்கருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கேமரூன், பகுதியாக, உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு பதிலிறுப்பாகவும் அதைச் செய்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி(UKIP)ஐரோப்பிய தேர்தல்களில் மிக வலிமையான பிரிட்டிஷ் கட்சியாக எழுந்திருக்கிறது, அத்துடன் கேமரூனின் சொந்த டோரி கட்சியிலும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

யுங்கர் ஆணையத் தலைவராக ஆகும்பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் செல்வாக்கு குறித்தும் ஐக்கிய இராச்சியத்தின் நிதித் துறையின் நலன்கள் என்னவாகும் என்பதும் கேமரூனின் அச்சமாக இருக்கிறது.

ஐரோப்பியத் தேர்தலில் ஐரோப்பிய அளவில் முன்னணியான வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிப்பவரை ஆணையத் தலைவராக ஆக்கலாம் என்ற யோசனையின் கர்த்தா யாரென்றால் மார்ட்டின் சுல்ட்ஸ். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) மட்டுமல்லாது, லிபரல்கள், பசுமைக் கட்சி, ஐரோப்பிய இடது மற்றும் Pirates இவையும் கூட தமது முன்னணி வேட்பாளர்களைக் களமிறக்கின. இந்த முன்னணி வேட்பாளர்களில் ஒருவரையே ஆணையத் தலைவராக்குவதற்கு பாராளுமன்றத்தின் மிகப்பெரும் கன்னைகள் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் உறுதிப்பாடு கொண்டிருந்தன.

குறிப்பாக ஜேர்மனியில், இது ஐரோப்பிய ஒன்றியத்தை ஜனநாயகமயமாக்குவதை நோக்கிய ஒரு மிகப்பெரும் முன்நகர்வாக சித்தரிக்கப்பட்டது என்பதோடு தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மையப் பிரச்சினையாகவும் ஆக்கப்பட்டது. வாக்காளர்கள் ஒருமுகத்தைத் தேர்ந்தெடுத்து புரூசேல்ஸில் சக்திவாய்ந்த ஆணையத்தின் தலைமையை தீர்மானிக்கலாம் என்பதாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இறுதியில் பிரகடனம் செய்தனர்.

Frankfurter Allgemeine Zeitung க்கு அளித்த நேர்காணல் ஒன்றில், 84 வயது தத்துவாசிரியரான Jürgen Habermas, முன்னணி வேட்பாளர்களை பரிந்துரைப்பதானது ஐரோப்பாவில்ஜனநாயகமயமாக்கத்தின் ஒரு அலையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாகக் கூறுமளவுக்குச் சென்று விட்டார். யுங்கரைத் தவிர இன்னொருவரை ஆணையத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதானதுஐரோப்பியத் திட்டத்தின் இருதயத்தில் விழுந்த அடியாக ஆகும் என்று அவர் அறிவித்தார்.

இது அபத்தம். 43 சதவீத வாக்களிப்பில் 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) க்கு சென்றிருக்கும் நிலையில், யுங்கருக்கு ஜனநாயகரீதியான அங்கீகரிப்பு எதுவும் கிடையாது. பல நாடுகளின் வாக்காளர்களுக்கு இந்த மனிதரைப் பற்றி ஒன்றுமேயும் தெரியாது. ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு கூடுதல் முக்கியத்துவமான பாத்திரத்தை வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காய் விரும்பி இதைச் செய்யவில்லை, மாறாக ஐரோப்பிய மக்களின் பரந்த அடுக்குகளால் வெறுக்கப்படுகின்ற ஐரோப்பிய ஸ்தாபனங்களுக்கு வலுவூட்ட விரும்பியே இதைக் கேட்கின்றனர்.

இந்த ஏமாற்று வேலைக்கு சிப்ராஸ் அளிக்கும் ஆதரவானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நிதி மூலதனத்தின் நலன்களை ஊக்குவிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்கள் நடத்துகின்ற அதன் கொள்கைக்கும் ஐரோப்பிய இடது நிபந்தனையற்று பின்னால் நிற்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பிய கவுன்சிலை பலியாக்கி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தை வலுப்படுத்துவதென்பது ஜேர்மனியின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற பெரிய அரசுகளின் சார்பு வலுவை அதிகரிக்கும். ஐரோப்பியக் கவுன்சில் என்றால் அநேக பிரச்சினைகளில் 28 உறுப்பு நாடுகளிடையே கணிசமான பெரும்பான்மையோ அல்லது கருத்தொற்றுமையோ அவசியமாகின்ற நிலையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 751 உறுப்பினர்களில் 98 பேரைக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு ஜேர்மனி கூடுதலான செல்வாக்கு செலுத்துவதற்கு இயலும்.

பிரிட்டனைப் பொறுத்தவரை, 2009 இல் ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) இல் இருந்து விலகி ஐரோப்பிய கன்சர்வேடிவ்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் (European Conservatives and Reformists -ECR) என்ற ஒரு தனிக் குழுவை அமைத்ததன் மூலம் கேமரூன் தன்னை தனிப்படுத்திக் கொண்டு விட்டார். பிரிட்டிஷ் டோரிக்கள், வடக்கு அயர்லாந்தின் அல்ஸ்டர் ஒன்றியத்தினர் தவிர, ECR இல் Jaroslaw Kaczynski இன் Polish PiS, மற்றும் வலதுசாரி வெகுஜனக் கட்சியான டேனிஷ் மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன

பெரும்பான்மை கொண்டிருக்கும் ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் பொதுவாக நெருக்கமாக இணைந்து வேலை செய்பவர்கள் என்பதால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முடிவுகளில் ECRக்கு அதிகம் செல்வாக்கு இல்லை. இந்த வாரத்தில் ECR தனது பொறுப்புகளில் யூரோவை நிராகரிக்கும் AfD ஐ ஏற்றுக் கொண்டதானது கேமரூனுக்கும் மேர்க்கெலுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகரித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைய விவகாரத்திலான கடுமையான மோதல்கள் இறுதிஆய்வில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான சமரசப்படுத்த இயலாத முரண்பாடுகளின் வெளிப்பாடே ஆகும். 2008 நிதி நெருக்கடி தொடங்கியே, தனித்தனி உறுப்பு நாடுகள் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளி என்பது மேலும் மேலும் விரிந்து சென்றிருக்கிறது.

ஜேர்மனி இலேசான வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது, பொருளாதாரரீதியாக ஐரோப்பாவை மேலாதிக்கம் செய்கிறது என்ற அதேநேரத்தில் பிரான்சும் மற்றும் பல தெற்கு ஐரோப்பிய நாடுகளும் பல ஆண்டுகால மந்தநிலையை அனுபவித்திருக்கின்றன.

இத்தாலிய பிரதமரான மாத்தேயோ ரென்ஸி (ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக ஜனநாயகக் கட்சிகளது குழுவில் இவரது ஜனநாயகக் கட்சிக்குத் தான் மிக அதிக எண்ணிக்கையில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்), சமீபத்திய ஆண்டுகளின் சிக்கன நடவடிக்கைகளானவை முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றின் ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டு திருத்தப்படுமா என்பது நிச்சயமில்லாமல் இருக்கும் ஒரு நிலையில், யுங்கருக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். ரென்ஸி சமூகரீதியாய் ஒரு கூடுதல் முற்போக்கு கொள்கைக்காக வேண்டிக் கொண்டிருக்கவில்லை. சிக்கன நடவடிக்கைகளைத் தளர்த்துவதன் மூலமாக, ஜேர்மனியின் திட்டநிரல் 2012 இன் வரிசையில் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கூடுதல் தீவிரமான தாக்குதல்களுக்கு சூது செய்வதற்கு இடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்.    

இலண்டன் வங்கிகளது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கேமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தை மூலதனத்திற்கு சுதந்திரமான இராச்சியத்தை அளிக்கின்ற ஒரு தடையில்லா வணிக மண்டலமாகக் குறைப்பதையும், ஐரோப்பாவை - அவர் தனது செய்தித்தாள் கட்டுரையில் எழுதியது போல - “மிக வெளிப்படையான, வெளிநோக்கிப் பார்க்கின்ற, நெகிழ்வான மற்றும் போட்டித்திறன் மிகுந்த ஒன்றாக ஆக்குவதையும் விரும்புகிறார்

பிரிட்டிஷ் தரப்பைப் பொறுத்தவரை, பிரான்ஸ், இத்தாலி மற்றும் மற்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளது பாரம்பரியத்தில் அரச தலையீட்டுவாதத்தை ஆதரிக்கின்ற ஒரு மத்தியப்படுத்தப்பட்ட ஐரோப்பாவின் பிரதிநிதியாக யுங்கர் சித்தரிக்கப்படுகிறார். ஐரோப்பாவின் மிக இலாபகரமானதொரு நிதி மையம் ஒன்றில் யுங்கர் 18 வருடங்கள் அரசாங்கத் தலைமையில் இருந்திருக்கிறார், யூரோ குழுவின் தலைவராக நூறு பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு உதவியை கையளித்திருக்கிறார், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளில் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறார் என்பதையெல்லாம் கொண்டு பார்த்தால் இந்த சித்தரிப்பு ஒரு முற்றுமுதலான திரிப்பு என்பது புரியும்.

ஜேர்மன் அரசாங்கம் இப்போது இருதலைக்கொள்ளி நிலையில் இருக்கிறது. மேர்கெல் யுங்கரைக் கைவிட்டால், தேர்தல் ஏமாற்று மற்றும் ஜனநாயகவிரோத சூழ்ச்சிகள் என்பதான குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் அவர் தன்னை முகம்கொடுக்கச் செய்ய வேண்டியதிருக்கும். யுங்கருக்குப் பின்னால் நின்றால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக வங்கி ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளையும் மூர்க்கமான இராணுவக் கொள்கைகளையும் முன்செலுத்த வேண்டுமென்றால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு மேர்க்கெலுக்கு அவசியமாக இருக்கின்ற நிலையில், அதனுடனான மோதல் தீவிரப்படும்

இந்நிலையில் தான், மேர்கெல், யுங்கரின் எதிர்ப்பாளர்களுடன் ஒரு சிறு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருவதற்கு சென்ற ஞாயிறன்று ஸ்வீடனுக்கு பயணம் செய்தார். “ஒரே படகிலேயே அனைவரும் உட்கார்ந்திருக்கிறோம்என்பதை ஊடகங்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காய் மேர்கெல், கேமரூன், ஹாலண்டின் ரூட் அனைவரும் ஸ்வீடனின் அரசாங்கத் தலைவரான ஃபிரெடரிக் ரீன்ஃபீல்ட் உடன் ஒன்றாக அமர்ந்து ஏரியில் படகுச் சவாரி செய்து கொண்டிருந்தனர். ஆயினும் ஆணையத்தின் தலைவர் விவகாரத்தில் உடன்பாடு எதுவும் அங்கு நிலவவில்லை

முதலாளித்துவத்தின் கட்டமைப்பின் கீழ் ஒரு ஜனநாயக மற்றும் முற்போக்கான அடிப்படையில் ஐரோப்பாவை ஒன்றுபடுத்துவது என்பது சாத்தியமற்றது என்பதையே ஆணையத் தலைமை தொடர்பான மோதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தப் பிரச்சினையும், இதனுடன் சேர்ந்து இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டமுமே, ஜேர்மனியில் PSG மற்றும் பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றின் ஐரோப்பியத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருதயத்தானத்தில் அமர்ந்திருந்தன.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் அரசாங்கங்களை உருவாக்குவதும் ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் ஒன்றுபடுத்துவதும் மட்டுமே ஐரோப்பா தேசியவாதம் மற்றும் போருக்குள் சரிவதைத் தடுத்து நிறுத்தி அதன் பரந்துவிரிந்த ஆதாரவளங்களும் உற்பத்தி சக்திகளும் ஒட்டுமொத்தமாய் சமூகத்தின் நலன்களுக்காய் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் அபிவிருத்தி செய்யப்படுகின்ற நிலைமைகளை உருவாக்க முடியும் என்று PSG/SEP கூட்டுத் தேர்தல் அறிக்கை அறிவித்திருந்தது.