சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China seeks to woo India’s new right-wing government

சீனா இந்தியாவின் புதிய வலதுசாரி அரசாங்கத்தை ஈர்க்க முயல்கிறது

By Deepal Jayasekera
14 June 2014

Use this version to printSend feedback

இந்தியாவின் வலதுசாரி அரசாங்கத்தை ஈர்ப்பதற்கான பெய்ஜிங்கின் ஓர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் பாகமாக இந்த வாரம் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி (Wang Yi) இரண்டு நாள் விஜயமாக இந்தியா வந்தார்.

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் (பிஜேபி), அதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் சீனாவிடம் "மென்மையாக" நடந்து கொள்வதாக தொடர்ந்து தாக்கி வந்திருந்த நிலையில், இப்போதைய இந்த நடவடிக்கை அனைத்திலும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக, கடந்த மாதம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே, மோடியும் அவரது பிஜேபி கட்சியும், இந்தியா தெற்காசியாவில் மற்றும் பரந்தளவில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை ஆக்ரோஷமாக பின்னுக்கு தள்ள விரும்புகிறது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்தில் பல தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்தன.

வாங் விஜயத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிடும் வகையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவரை அவரது "சிறப்பு தூதராக" அறிவித்திருந்தார்.

பிஜேபி அதிகாரத்திற்கு வந்ததற்கு பின்னர் புது டெல்லிக்கு விஜயம் செய்திருந்த முதல் வெளியுறவுத்துறை மந்திரியான வாங் அவரது இந்திய எதிர்தரப்பில் சுஷ்மா சுவராஜ், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் குமார் டோவலைச் சந்தித்தார்.

அந்த விஜயத்தின் இறுதியாக, இந்தியாவும் சீனாவும் "இயல்பிலேயே கூட்டாளிகள்" என்று வாங் அறிவித்தார். சீனா இந்தியாவுடனான அதன் எல்லை பிரச்சினைக்கு ஒரு "இறுதி தீர்வை" எட்ட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார், இந்த பிரச்சினை தான் அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு சிறிய எல்லை யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. பிரத்யேகமாக சீனாவின் மீதிருக்கும் சில தடைகள் உட்பட வெளிநாட்டு சொத்துடைமை மீதான தடைகளை புது டெல்லி நீக்கினால் இந்தியாவில் முதலீட்டைப் பெரிதும் அதிகரிக்க சீனா தயாராக இருப்பதாகவும் வாங் அறிவித்தார்.

சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கூறுகையில், “பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகள் மூலமாக, நாங்கள் எல்லை உடன்படிக்கையின் அடிப்படைகளின் மீது ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறோம்." "மேலும் நாங்கள் ஒரு இறுதி தீர்வை எட்ட தயாராக உள்ளோம்,” என்றார்.

2002 முஸ்லிம்-விரோத குஜராத் படுகொலைகளைத் தூண்டிவிடுவதில் பாத்திரம் வகித்து இழிபெயர் பெற்ற மோடியை வாங் புகழ்ந்துரைத்தார். அவரை அவர் சீனாவின் "பழைய நண்பராக" அழைத்ததோடு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை "பண்டைய நாகரீத்திற்கு புதிய உயிரோட்டத்தைச்" செலுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.

சீன பத்திரிகைகளும் அதே போல மோடி மீதான பாராட்டுக்களைக் குவித்திருந்தன, அவர் குஜராத் முதல் மந்திரியாக இருந்த போது முதலீட்டைத் திரட்ட சீனாவிற்குப் பயணம் செய்திருந்தார். ஸ்ராலினிஸ்ட் ஆட்சியோடு மிக நெருக்கமான தொடர்புபட்ட பல விமர்சகர்கள், சீன-அமெரிக்க உறவுகளில் ரிச்சர்டு நிக்சன் பங்கு வகித்ததைப் போல சீன-இந்திய உறவுகளில் மோடியால் ஒரு பாத்திரம் வகிக்க முடியுமென பரிந்துரைத்துள்ளனர். ஒரு கம்யூனிச-விரோத கடும்போக்காளரான நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது 1970களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு சீன-அமெரிக்க மூலோபாய கூட்டணியை ஜோடித்திருந்தார்.

இந்த வார பேச்சுவார்த்தைகளின் ஒரு விளைவாக, மோடியும் சீன ஜனாதிபதி ஜியும் இந்த ஆண்டில் ஒருவர் மற்றொருவரின் நாடுகளுக்கு விஜயம் செய்வார்கள் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது, ஆனால் தேதிகள் முடிவு செய்யப்படவில்லை.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இருந்து, இந்திய தொழில்துறை பூங்காக்களில் சீன முதலீட்டை அதிகரிப்பது வரையில் அனைத்து இருதரப்பு பிரச்சினைகளையும் விவாதிக்க வாங்கின் விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கி இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரியின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

வாங்கின் விஜயத்திற்கு புது டெல்லி திருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது "பெரும் முக்கியத்துவம்" பெற்றிருந்ததாக கூறி, ஒரு சீன அரசு செய்தி தொடர்பாளர் இன்னும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டார்.

அமெரிக்காவும் ஜப்பானும் சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் மற்றும் தனிமைப்படுத்தும் அவற்றின் கூட்டு நடவடிக்கைகளுக்குள் இந்தியாவை இன்னும் இறுக்கமாக இழுக்க முயலும் முயற்சிகளுக்கு எதிர்நடவடிக்கையை மேற்கொள்ள தெளிவாக பெய்ஜிங் ஆர்வங்காட்டுகிறது.

அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக வாஷிங்டன், பெய்ஜிங்கிற்கு எதிராக ஜப்பான், பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் உட்பட சீனாவின் அண்டை நாடுகளை அவற்றின் பிராந்திய உரிமைகோரல்களுக்கு அழுத்தம் அளிக்க தூண்டிவிட்டுள்ள நிலையில், இது கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடலில் தொடர்ச்சியாக ஒரு வெடிப்பார்ந்த மோதல்களுக்கு இட்டு செல்கிறது.

இன்னும் கூடுதலாக, ஜப்பான் அதன் இராணுவ பலத்தை வெளிநாடுகளில் பிரயோகிப்பதன் மீதிருக்கும் அரசியலமைப்பு வரம்புகளை நீக்குமென்றும், சீனாவுடன் மோதல் கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய கூட்டாளிகளுக்கு ஏனைய ஆதரவுகளை வழங்குமென்றும் அது அறிவித்துள்ளது.

சீனாவுடன் இந்தியாவின் உறவுகளை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவாக்க விரும்புவதாக கூறுகின்ற போதினும், இந்தியாவின் மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் டோக்கியோ மற்றும் வாஷிங்டன் உடனான அதன் இராணுவ-மூலோபாய உறவுகளைப் பலப்படுத்துவதற்கான அதன் ஆர்வத்தை சமிக்ஞையிட்டு காட்டியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, சீனாவிற்கு எதிரான அதிக ஆக்ரோஷ கொள்கையைக் குறிப்பிட்டு காட்டும் வகையில் அது ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவற்றில் மிகவும் ஆத்திரமூட்டுவதாக இருந்ததென்னவென்றால், மே 26இன் மோடி பதவியேற்பு விழாவிற்கு "வெளிநாட்டில் உள்ள திபெத்திய அரசாங்கம்" (Tibetan government-in-exile) அமைப்பின் தலைவர் லோப்சாங் சான்கேயை அழைத்ததாகும். சான்கே, அவரது "அரசாங்கம்," மற்றும் தலாய் லாமா இந்திய மலைவாழ் நகரமான தர்மஷாலாவை மையமாக கொண்டிருக்கின்ற போதினும், இந்தியா இதற்கு முன்னர் ஒருபோதும் சான்கேயிற்கு எந்தவொரு உத்தியோகப்பூர்வ அங்கீகாரமும் வழங்கி இருக்கவில்லை. ஆனால் இப்போது இவ்வாறு செய்ததன் மூலமாக, திபெத் மீதான சீனாவின் இறையாண்மைக்கான அதன் ஆதரவைப் புறக்கணிக்க ஒருவேளை புது டெல்லி தயாராகலாம் அல்லது குறைந்தபட்சம் அந்த பிரச்சினையைப் பேரம்பேசுவதற்கான ஒரு துருப்புசீட்டாக பயன்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளது.

முக்கியமாக இந்த ஆத்திரமூட்டலுக்கு பெய்ஜிங் எந்த விடையிறுப்பும் காட்டவில்லை. அதற்கு மாறாக, பல நாட்கள் மவுனமாக இருந்த பின்னர், “100 சதவீதம் ஒரு பிரிவினைவாதியான" சான்கே "திபெத் பிரச்சினையில் ஒருபோதும் எதுவொரு நன்மையும் செய்ததில்லை" என்று தாக்கி ஒரு பொதுவான அறிக்கையை வெளியிட்டது.

சீனாவிற்கு எதிராக சிறிது பட்டவர்த்தனமாக திரும்பியதாக இருந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தெற்காசிய பிராந்திய கூட்டுறவு அமைப்பின் (சார்க்) அனைத்து அங்கத்துவ அரசுகளின் அரசாங்க தலைவர்களுக்கும் அழைப்புவிடுப்பதென்ற மோடியின் முடிவு, தெளிவாக பெய்ஜிங்கிற்கு ஒரு சேதியை வழங்குவதாக இருந்தது. பல ஆண்டுகளாக, இந்திய தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள், இந்தியாவின் மூலோபாய மேலாதிக்கத்திற்கு உரிமையுடையதாக அவை கருதும் பகுதிகளில் பெய்ஜிங்கின் அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கு குறித்து குறைகூறி வந்துள்ளன.

மற்றொரு குறிப்பிடத்தக்க நகர்வில், மோடி வடகிழக்கு மற்றும் வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான தனி பொறுப்பு மந்திரியாக முன்னாள் இந்திய இராணுவ தலைவர் வி.கே. சிங்கை நியமித்துள்ளார். “நீங்கள் என்ன தவறவிட்டிருக்கலாம்: சீனாவிற்கான நரேந்திர மோடியின் சேதி,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் லைவ் மிண்ட் கட்டுரையாளர் சாண்டிபன் டெப் எழுதுகையில், சீனாவுடன் இந்தியாவின் எல்லை பிரச்சினைக்கு மையமாக உள்ள “[வடகிழக்கு] பிராந்தியத்தின் பொறுப்பிற்கு ஒரு முன்னாள் இராணுவ தலைவரை" நியமிப்பதென்ற மோடியின் முடிவு வீண்ஜம்பமாக உள்ளது. டெப் குறிப்பிடுகையில், அது "முற்றிலுமாக துல்லியமான தந்திரமாகும்" மற்றும் அது "சீனர்களோடு சிறிது இடைவெளியை அளிக்கும்,” என்று எழுதுகிறார். “மேலும் வெளியுறவுத்துறை விவகார அமைச்சகத்தில் [சிங்கினது] கூடுதல் பொறுப்பு, அறிவார்ந்த சிந்தனையாகும்,” என்று எழுதும் டெப் தொடர்ந்து எழுதுகையில், "நடைமுறையில், ஒரு பொறுப்பான நமது இந்திய சிப்பாயை சீனாவிற்கான ஒரு மனிதராக ஆக்கி உள்ளார்,” என்கிறார்.

இந்தியாவின் புதிய அரசாங்கம் அது வியக்க வைக்குமளவிற்கு இராணுவ செலவுகளை அதிகரிக்க விரும்புவதாகவும், மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டின் மீது மிஞ்சியிருக்கும் பல தடைகளை நீக்குமென்பதையும் அது அறியப்படுத்தி உள்ளது. இந்த இரண்டாவது விடயம் நீண்டகாலமாக வாஷிங்டனின் ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்து வந்துள்ளது, அது ஆசியாவில் மற்றும் இந்திய பெருங்கடலில் அமெரிக்க மூலோபாய நோக்கங்களுக்கு புது டெல்லியை அணிதிரட்டுவதில் இந்தியாவிற்கான ஆயுத விற்பனைகள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப பரிவர்த்தனை வழங்குவதை ஒரு முக்கிய உபாயமாக பார்க்கிறது.

இதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே அதிகரித்து வரும் "மூலோபாய இடைவெளியை" எதிர்கொள்வதில் போதுமானளவிற்கு செயல்படவில்லை என்று விமர்சிக்கும் இந்திய பெருநிறுவன மேற்தட்டு மற்றும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பிரிவுகளோடு மோடியும், அவரது ஆலோசகர்களும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக அவை இந்தியா அதன் இராணுவ செலவுகளை வியக்கத்தக்க அளவிற்கு உயர்த்தவும், மற்றும் முத்தரப்பு இராணுவ ஒத்திகைகளில் அமெரிக்கா மற்றும் ஜப்பானிய இராணுவங்களோடு இணைவது உட்பட அமெரிக்கா மற்றும் ஜப்பானை நோக்கி இன்னும் அதிகமாக சாய்வதற்கும் அழுத்தம் அளித்துள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு சமீபத்திய கட்டுரையில், மூலோபாய கொள்கை வல்லுனரான சி. ராஜா மோகன் குறிப்பிடுகையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் சீனாவைப் பொறுத்த வரையில் ஒரு இரு-தட கொள்கையைப் (dual-track policy) பின்பற்ற வேண்டுமென வாதிட்டார். இந்தியாவின் பொருளாதார உறவுகளை சீனாவுடன் வேகமாக விரிவாக்கும் அதேவேளையில் சீனாவின் உயர்வை எதிர்க்கவும் மற்றும் தடை செய்யவும் தீர்க்கமாக உள்ள பிரதான சக்திகளின் மூலோபாயத்தை நெருக்கமாக அரவணைக்க செல்வதை இந்த கொள்கை உள்ளடக்கி இருக்கும்.

இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், “பாதுகாப்பு பரிந்துரைகளைக் காரணங்காட்டி சீனா உடனான பொருளாதார கூட்டுறவிற்கு இருந்த கட்டாய செயல்வகைகளை எதிர்த்ததோடு, பல பிரச்சினைகளில் பெய்ஜிங் உடன் அங்கே அரசியல் பிரச்சினைகளும் இணைந்திருந்ததாக பாசாங்கு செய்ததன் மூலமாக பாதுகாப்பு சவால்களையும் பூதாகரமாக ஆக்கியிருந்தது,” என்று மோகன் முறையிட்டார்.

அவர் தொடர்ந்து எழுதுகிறார், “மோடி" “தற்போது" முக்கியமாக "பெய்ஜிங் உடன் இருதரப்பு மற்றும் பிராந்திய மட்டங்களில் பொருளாதார கூட்டுறவுகளை" விரிவாக்க வேண்டும் இந்தியாவின் துவண்டு போயிருக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இவ்விதம் செய்ய வேண்டும் அதேவேளையில் "உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களைச் சமன் செய்வதன் மூலமாக சீனாவுடன் அதிகரித்து வரும் மூலோபாய இடைவெளியை”, அதாவது இராணுவ செலவினங்களை ஊக்குவிப்பதன் மூலமாகவும் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு நெருக்கமாக திரும்புவதன் மூலமாகவும் "சமன் செய்யலாம்," என்கிறார்.

இது முப்பரிமாண சதுரங்கத்தைப் போன்றதென்று கூறி, இதுபோன்ற ஒரு இருவழிக் கொள்கை (two-track policy) சிக்கல்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்தது என்பதை மோகன் ஒப்புக் கொண்டார்.

இந்தியாவின் புதிய அரசாங்கம் ஒரு மிக அபாயகரமான விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தமாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்கா மற்றும் ஜப்பான் அவற்றின் தொடர்ச்சியான ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட பெய்ஜிங்கிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களின் ஒரு ஆத்திரமூட்டும் மற்றும் இரக்கமற்ற பிரச்சாரத்திற்கு அது அவற்றிற்கு ஊக்குவிப்பை வழங்கி கொண்டிருக்கிறது.