சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama responds to Iraq debacle with military escalation

ஈராக் தோல்விக்கு இராணுவ தீவிரப்படுத்தலோடு ஒபாமா விடையிறுப்பு காட்டுகிறார்

Patrick Martin
16 June 2014

Use this version to printSend feedback

ஈராக்கில் கட்டவிழ்ந்து வரும் அமெரிக்க தோல்வியை முகங்கொடுத்துள்ள நிலையில், ஒபாமா நிர்வாகம் மற்றொரு வன்முறையைத் தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. ஈராக்கிலும் மத்திய கிழக்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் போன்றே, இதுவும் வேறெதற்கும் அல்ல மாறாக மேலதிகமான மரணம் மற்றும் பேரழிவுகளுக்குமே இட்டு செல்லும்.

சுன்னி அடிப்படையிலான ஈராக்-சிரியாவினது இஸ்லாமிய அரசின் (ISIS) ஒரு தாக்குதலுக்கு முன்னால், அமெரிக்க ஆதரவிலான ஈராக்கிய இராணுவ படைகளின் அவமானகரமான பொறிவு, சித்திரவதைக்கு உள்ளான அந்நாட்டை மீண்டுமொருமுறை வாஷிங்டனின் துப்பாக்கிமுனைக்குக் கொண்டு வந்துள்ளது.

போர் விமானந்தாங்கிய ஜோர்ஜ் எச். டபிள்யு. புஷ் கப்பல் மற்றும் அதனோடு சேர்ந்து இரண்டு ஏனைய யுத்தக்கப்பல்களையும் பாரசீக வளைகுடாவிற்கு அனுப்ப பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் உத்திரவிட்டிருப்பதாக சனியன்று பெண்டகன் அறிவித்தது. “அங்கே உடனடியாக குறுகியகால இராணுவரீதியிலான சில விடயங்கள் அவசியப்படுவதாக" வெள்ளியன்று கூறி, ஏதோவொரு வடிவ இராணுவ நடவடிக்கை உடனடியாக இருக்குமென்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஈராக்கிய படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை அவசரமாக அனுப்பி வைப்பதிலிருந்து, ஆளில்லாத டிரோன் ஏவுகணை தாக்குதல்கள் வரையில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கப்பற்படைகளின் விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் வரையிலான நடவடிக்கைகளுக்கு அங்கே சாத்தியக்கூறு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைப்படைகளை அனுப்புவதை வெள்ளை மாளிகை பகிரங்கமாக நிராகரித்திருந்த போதினும், மத்திய கிழக்கில் 35,000 அமெரிக்க சிப்பாய்கள், கப்பற்படை சிப்பாய்கள் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் இருப்பதாகவும், அவர்கள் தலைமை தளபதிக்கு பின்புல "வாய்ப்புகளை" வழங்குவதாகவும் பெண்டகனின் ஒரு செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். ஈராக்கிய படைகளோடு அமெரிக்காவின் சிறப்பு படைகளையோ அல்லது யுத்தகால "ஆலோசகர்களையோ" நியமிக்குமாறு வலியுறுத்தி பல விமர்சனங்கள் அமெரிக்க பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன.

மற்றுமொரு இராணுவ தலையீடு ஒரு பேரழிவைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறொன்றையும் செய்யப் போவதில்லை, அதற்கு அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் தான் முற்றிலும் பொறுப்பாகிறார்கள்.

ஒரு மில்லியன் மக்களைக் கொன்ற இரண்டு யுத்தங்கள், மேலும் அரை மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு பொருளாதார தடைவிதிப்பு, நௌரி அல்-மலிக்கியின் ஊழல்மிக்க, குறுங்குழுவாத பொலிஸ் அரசின் நியமனம் என ஒரு கால் நூற்றாண்டு கால ஏகாதிபத்திய வன்முறை மற்றும் ஒடுக்குமுறையால் ஈராக் சீரழிக்கப்பட்டுள்ளது.

பண்டைய மெசோபோடாமியா காலத்திலிருந்து மனிதகுல நாகரீகத்தின் தொட்டில்களில் ஒன்று சமூக செயல்பாடுகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நிலவும் சீரழிந்த நிலைமையானது, ஈராக்கிய மக்கள் பரிதாபகரமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டதன் விளைபொருளாகும்.

ஒருவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொடூரத்தைக் குறைமதிப்பீடு செய்து விடவோ அல்லது அதன் புத்திஜீவிதத்தை மிகைமதிப்பீடு செய்துவிடவோ கூடாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பெரும் முரண்பாடுகளில் உள்ளது, சாத்தியமில்லை என்றாகாது என்றாலும், அதற்குள் எந்தவொரு பகுத்தறிவான திட்டத்தை உய்த்துணர்வதும் மிகக் கடினமாகும்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான "புரட்சி" என்று கூறப்படுவதன் பாகமாக, சிரியாவில், பகுதியாக, பெறப்பட்ட ஆயுதங்களோடு அமெரிக்காவின் ஊக்குவிப்போடு ஆயுதபாணியாகியுள்ள அதே இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக ஈராக்கில் இராணுவ தாக்குதல்களை நடத்த இருப்பதாக ஒபாமா நிர்வாகம் தற்போது அச்சுறுத்தி வருகிறது. ஈராக்கில் இந்த படைகளை எதிர்ப்பதில், யுத்தத்தால் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டு வந்துள்ள ஒரு நாடான ஈரானுடன், குறைந்தபட்சம் தற்போதைக்கு, அமெரிக்கா அணி சேர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா என அமெரிக்கா தொடங்கிய ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளும் பேரழிவில் முடிந்துள்ளன.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு தொடர்ச்சியான உட்கூறு இருக்கிறதென்றால் அது கணக்குவழக்கின்றி அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக இரக்கமின்றி சூறையாடுவதே ஆகும். ஒரு யுத்தத்தை அடுத்து ஒரு யுத்தமென யுத்தங்களுக்குள் திரும்பி இருந்த வெள்ளை மாளிகையிலோ, அன்னிய நாடுகளில் யுத்தங்களை நடத்தியுள்ள இராணுவ உயரதிகாரிகளிலோ; அவற்றிற்கு அனுமதி அளித்த காங்கிரஸிலோ; அல்லது அவற்றை ஊக்குவித்த ஊடகங்களில் இருந்தோ யாரொருவரும் பொறுப்பாக்கப்படவில்லை.

அந்நாட்டில் மூன்றாவதாக இப்போது சுன்னி மக்களிடையே மலிக்கி மீதிருக்கும் வெகுஜன வெறுப்பு வன்முறை கிளர்ச்சியாக வெடித்துள்ள நிலையில், ஒபாமா நிர்வாகமும் அதன் அனுதாபிகளும் அந்த தோல்விக்கு அமெரிக்க கைப்பாவையைக் குற்றஞ்சாட்ட முனைந்துள்ளனர்.

ஈராக் யுத்த பொய்களை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்த நியு யோர்க் டைம்ஸ், ஞாயிறன்று இரண்டு கட்டுரைகளைப் பிரசுரித்து இந்த பிரச்சாரத்தில் முன்னிலை எடுத்துள்ளது, ஈராக்கில் மோசமடைந்து வரும் பேரழிவுக்கான பொறுப்பிலிருந்து அமெரிக்காவை விடுவிக்கும் வகையில் அந்த கட்டுரைகளில் ஒன்று நிகோலஸ் கிறிஸ்டோப்பால், மற்றது தோமஸ் பிரெட்மேனால் எழுதப்பட்டதாகும்.

கிறிஸ்டோப் எழுதுகிறார்: “ஈராக்கிய தோல்வி ஜனாதிபதி ஒபாமாவின் பிழையல்ல. அது குடியரசு கட்சியினரின் தவறல்ல. இருதரப்பும் சிலவற்றிற்கு பொறுப்பேற்கின்றன, ஆனால், பெரிதும், இது ஈராக்கிய பிரதம மந்திரி நௌரி கமால் அல்-மலிக்கியின் தவறாகும்,” என்கிறார்.

பிரெட்மேன் இவ்வாறு உச்சரிக்கிறார்: “மலிக்கிக்கு ஒரு வாய்ப்பு இருந்ததுஒன்று குறுங்குழுவாத வழியில் ஆள்வது அல்லது அனைவரையும் உள்ளடக்கிய வழியில் ஆள்வதுஅவர் குறுங்குழுவாதத்தைத் தேர்ந்தெடுத்தார். அவருக்காக நாம் கடமைப்பட்டிருக்கவில்லை.”

பொறுப்பை பிறர்மீது தள்ளிவிடும் என்னவொரு கோமாளித்தனமான நடைமுறை! மலிக்கியை நிறுவியது யார்? ஈராக்கை ஜனநாயகமாக" மாற்றுவதற்காக என்று கூறப்பட்டதன் விளைவு தான் அவரது ஆட்சி. முதலில் அந்த யுத்தத்தைத் தொடங்கிய ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷினாலும், பின்னர் அவரால் அமைக்கப்பட்டிருந்த திட்ட அட்டவணைப்படி அதை முடித்திருந்த அவருக்குப் பின்னர் வந்த ஒபாமாவினாலும், மலிக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதுவொரு பெரும் வெற்றியாக புகழப்பட்டது.

அமெரிக்க இராணுவமும் ஊடகங்களும் மலிக்கியின் ஒடுக்குமுறை நடைமுறைகள் குறித்த செய்திகளை மறைத்தன. அந்த நிகழ்போக்கு முழுவதிலும், அமெரிக்கா திட்டமிட்டு குறுங்குழுவாத பிளவுகளை ஊக்குவித்திருந்தது.

ஈராக்கில் வன்முறை மோதலின் மீள்எழுச்சியானது, மத்திய கிழக்கில் வாஷிங்டனால் பின்பற்றப்படும் சிறந்த கொள்கைக்கு தங்களின் பரிந்துரைகளை வழங்கிய இழிவார்ந்த யுத்த குற்றவாளிகளைப் பார்வைக்கு முன் கொண்டு வந்திருக்கிறது. இவ்விதத்தில், ஒரு அரசியல் குஷ்டரோகியாக பதவியிலிருந்து இறங்கிய முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் ஈராக்கில் இராணுவ தலையீடு செய்ய அழைப்புவிடுத்து வாரயிறுதியில் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் தோன்றினார். 2003இல் அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலுக்கும் மற்றும் ஆக்கிரமிப்பிற்கும் தலைமை வகித்தவர்கள் மற்றும் அதை ஒழுங்கமைத்தவர்கள் இப்போது அந்நாட்டிலும், அப்பிராந்தியத்திலும் கட்டவிழ்ந்து வரும் பேரழிவிற்கு ஏதோவொரு பொறுப்பைக் கொண்டிருக்கிறார் என்று கூறுபவர்களின் எவ்வித கருத்தையும் அவர் "விசித்திரமானதென்று" இடித்துரைத்தார்.

புஷ், செனெ, ரூம்ஸ்பெல்டு, பவெல், ரைஸ் மற்றும் அவர்களுக்குப் பின்னர் ஒபாமா நிர்வாகத்தில் அப்பதவிக்கு வந்தவர்களோடு சேர்ந்து, பிளேயர் இன்னும் யுத்த குற்றங்களுக்கான ஒரு தீர்பாயத்தின் முன் போகாமல் இருப்பதைத் தான் "விசித்திரமானதென்று" கூற முடியும்.

உண்மையில் இது அவர்களின் தவறுகள் என்று யாரேனும் வெளிப்படையாக குறிப்பிடுவதற்கான சாத்தியக்கூறுகளே பிளேயர் மற்றும் அமெரிக்காவில் உள்ள அவரது அரசியல் எதிர்தரப்பினரையும், அவர்களின் ஊடக தலையாட்டிகளையும் சேர்த்து பயமுறுத்துகிறது. அமெரிக்கா மற்றும் அதனோடு இணைந்த படைகளில் பத்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதும், ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதுமான ஒரு யுத்தத்திற்கு அவர்கள் தான் குற்றகரமாக பொறுப்பாகிறார்கள்.

இத்தகைய குற்றங்களின் குற்றவாளிகள் தங்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்படாமல் போயிருப்பதாக நம்பினால், அல்லது அவர்களின்அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவினதுகொள்கைகளால் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் சீற்றத்தின் அடித்தள இலக்கிலிருந்து தங்களைத் தாங்களே, தங்களின் திறமையால், மறைத்துவிட முடியுமென்று நம்பினால், அவர்கள் நம்பிக்கையற்ற விதத்தில் ஏமாற்றி கொள்கிறார்கள்.