சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Modi takes the reins of India’s government

மோடி இந்தியாவின் அரசு அதிகாரத்தை ஏற்கிறார்

By Keith Jones
28 May 2014

Use this version to printSend feedback

திங்கட்கிழமை நடந்த ஒரு பகட்டான விழாவில் நரேந்திர மோடி இந்தியாவின் பதினைந்தாவது பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டமை முடிசூட்டு விழாவை ஒத்திருந்ததாக பெரும்பாலான பெருவணிக ஊடகங்கள் விவரித்தன.

இந்து வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சியினால் (BJP) தலைமை தாங்கப்படும் புதிய அரசாங்கத்தை பாராட்ட, இந்தியாவின் வணிக உயரடுக்கின் ஒரு பாரிய பிரிவு கைதட்ட தயாராக இருந்தது.

எரிசக்தி மற்றும் உர விலைக்கான மானிய உதவிகளை குறைப்பது, சமூகநல செலவுகளை பரந்தளவில் குறைப்பது, அரச உள்கட்டுமானத்தையும், காப்பீடு மற்றும் வங்கி தனியார்மயமாக்கல் உள்ளிட்டவை வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கும் நிலையில் சந்தை ஆதரவு 'சீர்திருத்தங்கள்' மூலமாக மோடி தலைமையிலான அரசாங்கம் தடைகளை உடைத்தெறியும் என எதிர்பார்பில் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேசிய தேர்தலில் பெருவணிகம் பாரதீய ஜனதா கட்சியை பலமாக ஆதரித்தது.

தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்த, மோடி ஒரு ஈடு இணையற்ற வெகுஜன அரசியல்வாதியாக சித்தரிப்பதை ஊடகங்கள் துரிதப்படுத்தி, அவருக்கு நவதாராளவாத சீர்திருத்தத்திற்கு ஒரு மிகப் பெரிய ஆதரவு இருப்பதாகவும் காட்டுகின்றன. உண்மையில் பாஜக முன்பு எப்பொழுதையும் விட அதிகுறைந்த மொத்த வாக்குகளான வெறும் 31 சதவிகிதத்துடன் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றது. மேலும், அதிகரிக்கும் உணவு விலைகள், வேலை வாய்ப்பின்மை, தொற்றுப்போல் பரவும் ஏழ்மை மற்றும் கண்மூடித்தனமான ஊழல் ஆகியவற்றை நிலைநிறுத்திய பத்து வருட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் மீதான வெகுஜன எதிர்ப்பிலிருந்து நியாயமற்றமுறையில் பலனடைந்து கொண்டது.

உலக முதலாளித்துவத்திற்கு மலிவு கூலி மையமாக உருமாற்றும் இந்திய முதலாளி வர்க்கத்தின் உந்துதலை வழிநடத்திய காங்கிரஸ் கட்சி, மக்களவையில் அதிகாரபூர்வ எதிர்கட்சியாக அங்கீகாரம் பெற தேவையான பத்தில் ஒரு பங்கு வாக்குச்சீட்டுகளை கூட பெற தவறிவிட்டது. நாடாளுமன்றத்தில் ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தேர்தல் தோல்வியால் மோசமாக பாதிக்கப்பட்டன. அவை காங்கிரஸின் கதியை பகிர்ந்து கொள்ளவேண்டியிருப்பது தற்செயலானது அல்ல. ஸ்ராலினிச கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தின் முதல் நான்கு ஆண்டுகள் ஆதரவளித்தன. மேலும் அவை ஆட்சி அதிகாரத்திலிருந்த மாநிலங்களில் 'முதலீட்டாளர் சார்பு' கொள்கைகள் என தாம் கூறுவதை  நடைமுறைப்படுத்தினார்கள்.

ஒரு இந்திய பிரதம மந்திரி முதன்முறையாக, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பில் (SAARC) உள்ளடக்கிருக்கும் பாகிஸ்தான், வங்காளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய ஏனைய ஏழு நாடுகளின் அரசு தலைவர்களையும் தன்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள மோடி அழைத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடிக்கு முன் பதவியிலிருந்த மன்மோகன் சிங்கை தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருந்தார் ஆனால், பிஜேபியின் கடுமையான எதிர்ப்பு அச்சத்தினால் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

ஒரு மிக வெளிப்படையான அதிகாரப் போராட்டத்தில் தற்சமயம் மாட்டிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணுவத்துடனான அவசர ஆலோசனைகளுக்குப் பின் மோடியின் அழைப்பை ஷெரீப் ஏற்றுக்கொண்டார்.

பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா தவிர்த்து மற்ற அனைத்து சார்க் தலைவர்களும் அதையே செய்தார்கள். முன்பே திட்டமிடப்பட்ட ஜப்பான் பயணத்தில் ஹசீனா இருந்ததால் அவருக்கு பதிலாக பங்களாதேஷ் நாடாளுமன்ற சபாநாயகரை அனுப்பினார்.

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த பங்களாதேஷ் முஸ்லீம்களின் மீது அதிக ஆத்திரமூட்டும் வகுப்புவாதம் கலந்த கண்டனங்களைக் கூறியதன் மூலம் பங்களாதேஷ் அரசை பகைத்துக்கொண்டார்.(பார்க்க: முஸ்லீம்களை வெளியேற்றும் சூளுரையை மோடி மீண்டும் வலியுறுத்துகிறார்)

வரலாற்று எதிரியான சீனா மற்றும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக மோடி அரசு ஒரு தீவிரமான வெளியுறவு கொள்கையை மேற்கொள்ளும் என்ற  அச்சங்களை தணிக்க அவர் விரும்புவதாக காட்டிக்கொள்ளவே சார்க் தலைவர்களுக்கு குறிப்பாக ஷெரீப்பை மோடி அழைத்ததை ஒரு நட்புக்கான அறிகுறியாக செய்தி என பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

இது அர்த்தமற்ற பேச்சாகும். தெற்கு ஆசியா மீது இந்திய தலைமையை ஸ்திரப்படுத்தும் ஒரு முயற்சியில் அழைப்பு ஒரு ஆரம்ப காய்நகர்த்தலாகவே இருந்தது. இந்த மண்டலத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் ஆளும் உயரடுக்கு மனக்கலக்கம் அடைந்திருப்பதுடன், அதை பின்தள்ள தீர்மானகரமாக உள்ளது. நாட்டின் இராணுவ-தேசிய பாதுகாப்பு பிரிவானரால் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தெற்கு ஆசியாவில் இந்திய பொருளாதாரத்தை மற்றும் மூலோபாய ஆதிக்கத்தை தக்க வைப்பது மற்றும் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஒரு பலமான பிரசன்னத்தை ஸ்தாபிப்பது ஆகியவை இந்திய முதலாளித்துவத்தின் பெரும் சக்தியாகும் குறிக்கோளை அடைவதற்கு மிகமுக்கியமானது  என தேசிய பாதுகாப்பு ஸ்தாபனம் கருதுகின்றது.

இந்த நோக்கம் சம்பந்தமாக, மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட ஏனைய வெளிநாட்டு அரசு தலைவர்களான மொரிஷியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மற்றும் நாடு கடந்த திபெத் அரசின் பிரதமர் லோப்சாங் சங்கேயை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

தென்கொரியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூடவே மொரிஷியஸும் சார்க் அமைப்பினால் 'பார்வையாளர்' அந்தஸ்த்து அளிக்கப்பட்ட ஒன்பது நாடுகளில் ஒன்றாகும். ஒருவேளை இந்தியாவின் புதிதாக வரவிருக்கும் அரசாங்கம் மொரிஷியஸ் மீது சிறப்பு கவனத்தை செலுத்துகிறது ஏன் என்றால் அந்த தீவு இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீட்டுக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக இருக்கிறது மற்றும் அதுமட்டுமல்ல புதுடில்லி அதனுடன் இராணுவ தொடர்புகளை விரிவாக்க ஆர்வம் கொண்டுள்ளது. தென்மேற்கு இந்தியப்பெருங்கடலில் மடகாஸ்கருக்கு அப்பால் அமைந்திருக்கும் மொரிஷியஸ் இந்திய கடற்படை நடவடிக்கைகளுக்கு சாத்தியமான ஒரு தளமாக  இந்தியா பெருவிருப்பு கொண்டுள்ளது.

திபெத்திய 'நாடு கடந்த அரசு' உள்பட தலாய் லாமா மற்றும் அவர் ஆதரவாளர்கள் நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருக்க இந்தியா அனுமதித்திருக்கிறது. எவ்வாறாயினும், ஒரு இந்திய அரசு சீனா அரசிற்கு எதிரான திபெத்தியர்களுக்கு எல்லா வடிவிலும் அதிகாரபூர்வ அரசியல் அங்கீகாரத்தை விரிவுபடுத்துவது முன்னொருபோதுமில்லாத ஒன்றாகும். சங்கே சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைவர்களுக்கு மரியாதை வழங்குவதற்கு பொருத்தமில்லாதவராக இருந்தாலும், அவருக்கான அழைப்பு சீனாவை எதிர்க்க புதிய அரசு மூர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கும் என பெய்ஜிங்கிற்கு ஒரு சைகை அனுப்பவதற்கே என்பது தெளிவானது  

வாஷிங்டன் உடன் மூலோபாய கூட்டணியை இந்தியா வலுப்படுத்துவதை இந்திய பத்திரிக்கைத் துறை மிகவும் விரும்புகிறது. சர்வதேச விடயங்களில் புதிய அரசாங்கத்தின் முதல் முனைவிற்கு இது பெரிதும் ஆதரவாக இருந்திருக்கிறது. இந்திய வெளியுறவு கொள்கைக குறித்த முழு கட்டுப்பாட்டை மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது என்று சரியான நேரத்தில் அறிவித்து குறிப்பாக பல்வேறு பிராந்திய கட்சிகளிடமிருந்து வந்த ஆட்சேபணைகளுக்கு இணங்காததற்கு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்தன.

தமிழ்நாடு மாநில அரசு மற்றும் அனைத்து அரசியல் அமைப்புகளும், பிஜேபி-யின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக தேர்தல்களில் போட்டியிட்ட கட்சிகள் உட்பட திங்கட்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வருகையை தீவிரமாக ஆட்சேபித்தன. இலங்கை தமிழர்களின் அவல நிலைக்காக தமிழ்நாட்டில் பெரிய பரிவுணர்வு உள்ளது. இலங்கை அரசால்  நடத்தப்பட்ட 30 வருடகால உள்நாட்டு போரில் இலங்கைத் தமிழர்கள் இலக்காக இருந்தார்கள். மேலும் அவர்கள் இனப்பாரபட்சம் மற்றும் அரசு அடக்குமுறைக்கு தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டார்கள். தமிழ்நாடு பிராந்திய முதலாளித்துவமும் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் அம்மக்களின் பாதுகாவலர்களாக தொடர்ச்சியாக காட்டிக்கொண்டார்கள்.

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான மஹாராஷ்டிராவை தளமாக கொண்ட சிவசேனா, காங்கிரஸ் கட்சியினால் தூண்டிவிடப்பட்ட பிறகே ஷெரீப்பிற்கு மோடியின் அழைப்பிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது போன்று செய்ததுடன் அது சாதரணமாக அணுஆயுத போர் குறித்து கூறி அச்சுறுத்தியது. "பாகிஸ்தான் தன் பாதையை திருத்திக்கொள்ளாவிட்டால் மோடி அணுஆயுத பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்" என்று சிவசேனாவின்  தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் உள்ளேயும் அதைச் சுற்றியும் இருக்கும் போர் ஆர்வம்மிக்க மதவாத பிரிவுகளை பற்றி இந்த அச்சுறுத்தும் அறிக்கை ஒருதொகை பேசுகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான 2002 குஜராத் படுகொலைகளை தூண்டியதில் அவரின் பங்குக்காக மோடி தானே இழிபெயர் பெற்றவராக இருக்கிறார்.

முதல் நாள் மோடியுடன் இணைந்து பதவியேற்றுக்கொண்டவர்களுக்கு திட்டவட்டமான இலாகா பொறுப்புகள் குறித்த அறிவிப்புடன் மந்திரிசபை உருவாக்கும் நடைமுறைகள் செவ்வாய் அன்று முடிவடைந்தன.

சிவசேனா மற்றும் ஏனைய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் என ஒதுக்கிவிட்டு பிஜேபி முக்கியமான அனைத்து அமைச்சரவை இலாகாக்களையும் தானே வைத்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போல, உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருவணிக நிறுவனங்கள் இரண்டுடனும் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் பெருநிறுவனங்களுக்கான ஒரு முன்னால் வழக்கறிஞர் அருண் ஜெட்லி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, 'வளர்ச்சியை அதிகரிக்க "வரவுசெலவுத்திட்டத்தை உறுதிப்படுத்தல்" அதாவது சமூக செலவினங்களை குறைப்பது மற்றும் ஏனைய நடவடிக்கைகளே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும்' என்றார்.

ஒரு ஆச்சரியமான நிகழ்வாக, ஜெட்லிக்கு பாதுகாப்பு இலாகாவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்திற்கான செலவழிக்கும் தொகையை வேகமாக அதிகரிக்க மற்றும்  பரந்த எண்ணிக்கையில் புதிய ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளவாடங்களை ஈடுபடுத்தும் பிஜேபி அரசாங்கத்தின் தீர்மானத்துடன் இந்த முடிவை ஹிந்து பத்திரிக்கை இணைத்துள்ளது.

பிஜேபியின் தேசிய தலைமையை கைப்பற்றும் மோடியின் முயற்சிக்கு பலமாக ஆதரவளித்த கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், நாடாளுமன்றவாதி சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உமா பாரதி, ஓய்வு பெற்ற இந்திய இராணுவ தளபதி வி.கே. சிங் மற்றும் சஞ்சீவ் பலியான் ஆகியோரும்  அமைச்சர் நியமனத்தில் கவனிக்கதக்கவர்கள் ஆவர்.

நீர்வளத்துறை மற்றும் ஆற்று மேம்பாட்டுக்கான புதிய அமைச்சர் உமா பாரதி ஒரு இந்து மதவாத தீவிர பற்றாளர். 1992-ல் பாபர் மசூதியை இடித்த கும்பலை தூண்டிவிட உதவினார்.

கடந்த வருடம், வி.கே சிங் இரகசிய இராணுவ புலனாய்வு பிரிவு ஒன்றை  ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் உரையாடலை ஒட்டுக் கேட்பது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் அரசை நீக்க விரும்பியது உள்பட அவர் வழிகாட்டுதலின் பேரில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதை இந்திய இராணுவ விசாரணை ஒன்று கண்டுபிடித்தது. அவர் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான இணை அமைச்சராக "தனிப்பொறுப்பில்நியமிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு பிராந்தியம் ஒரு அதிக பதட்டமான பகுதியாகும். ஏனென்றால் அது சீனாவுடனான எல்லை பிரச்சனைகளில் முக்கியமான இருக்கிறது. தொடர்ந்த இன பிரிவினைவாத கிளர்ச்சிகளுக்கும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் விரிவான வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்துவதற்கான புதுடில்லியின் திட்டங்களின் முக்கியமான தளமாகவும் இப்பகுதி இருக்கிறது.

கடந்த வருடம் உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் டஜன் கணக்கில் முஸ்லீம் கிராமவாசிகள் இறப்புக்கு காரணமான வகுப்புவாத வன்முறையை தூண்டியதில் அவரின் பங்குக்காக வேளாண்மைத்துறை புதிய  அமைச்சர் சஞ்ஜீவ் பாலியான் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.