சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: TNA protest over disappeared seeking support of major powers

இலங்கை: பெரும் வல்லரசுகளின் ஆதரவை எதிர்பார்த்து காணாமல் போனவர்கள் தொடர்பாக தமிழ் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

By Subash Somachandran
18 June 2014

Use this version to printSend feedback

இலங்கையின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, யுத்தத்தின் போது, குறிப்பாக போரின் இறுதி நாட்களில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, போரில் நாசமாக்கப்பட்ட வடக்கு நகரான முல்லைத்தீவில் ஒரு மறியல் போராட்டத்தை கடந்த 5ம் திகதி  நடத்தியது. கடும் போக்கு தமிழ் தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் உள்ளூர் அரச அலுவலகங்கள் அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்தில் இணைந்துகொண்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரப்பட்டது. இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக தாமதமாகி வருகின்றன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் போரின் போது காணாமல் போனவர்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் உண்மையான அக்கறை இருந்த போதிலும், கூட்டமைப்பானது ஒரு பிற்போக்கு சர்வதேச கூட்டான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் இந்தியா உட்பட பெரும் வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கே இந்த ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டது.

"சர்வதேச விசாரணை வேண்டும்”, "இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவினர்கள் எங்கே?", "இராஜபக்ஷ அரசே... கடத்தப்பட்டவர்கள் எங்கே?" போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

எனினும், சாதாரண மக்கள் நூறுக்கும் குறைவாகவே பங்குபற்றியிருந்தனர். இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தலே அதற்கு காரணம் என்று கூட்டமைப்பு கூறிக்கொண்டது. இதில் ஒரு பகுதி உண்மை இருந்தாலும், குறைந்த வருகையானது இந்த கட்சி மீது தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியையே குறிக்கின்றது. இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்கு பஸ்களில் செல்லுமாறு மக்களை நெருக்கியதோடு அங்கு தமது ஆதரவுடன் கூட்டமைப்புக்கு எதிராக அதே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் வரிசையில் அவர்களை கொண்டுபோய் நிறுத்தியதாகவும் பல செய்திகள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள பஸ்களில் சென்ற ஏனையவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். போர் குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்களில் இராணுவத்தின் பங்களிப்பு பற்றிய எந்தவொரு விசாரணையையும் அது எதிர்ப்பதால் இராணுவத்தின் பக்கத்தில் அத்தகைய ஒரு ஆத்திரமூட்டல் திட்டமிடப்படுவது சாத்தியமே.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களில் அரசாங்க ஆதரவாளர்களும் அடங்குவர். அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களை கண்டுபிடிக்குமாறு கோரினர். அவர்கள் புலிகளால் கொண்டு செல்லப்பட்ட தமது பிள்ளைகள் எனக் கூறி சில புகைப்படங்களை காட்டினர். புலிகள் வடக்கில் ஆதிக்கம் செலுத்திய போது இத்தகைய ஜனநாயக-விரோத அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். போருக்கு எதிரான கோபம் மற்றும் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மீதான எதிர்ப்பை திசை திருப்ப அவற்றை இராணுவம் பயன்படுத்திக்கொள்கின்றது.

இந்த நாளில், வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் கனவர் உட்பட 12 விடுதலை புலி உறுப்பினர்களின் ஆட்கொணர்வு மனுக்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றுக்கு சமூகமளிக்காததால் வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டன. புலிகளின் தலைவர்களில் ஒருவரான கரிகாலன் மற்றும் அவரது மனைவி பத்மலோஜினி உட்பட ஐந்து பேர் மீதான மற்றொரு ஆட்கொணர்வு வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரும் வல்லரசுகள் தமது விடுதலைக்கு ஆதரவு தரும் என்று நம்பி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே இந்த நபர்கள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2005ல் ஆட்சிக்கு வந்து மீண்டும் யுத்தத்தை தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். இராணுவத் தொடர்புடைய கொலை படைகள் மற்றும் அரசாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபீடிபீ, கருணா என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளீதரன் தலைமையிலான டீஎம்விபீ போன்ற தமிழ் துணை இராணுவ குழுக்களின் பக்கமே ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு  தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் இராணுவப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தால் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 5, சதந்தேக நபர்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை கொண்டுவராதவர்கள் போன்ற போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் 25 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் பெற்றோர் அடையாள அட்டைகளை காண்பித்து அவர்களை விடுதலை செய்துகொண்டனர். ஆனால் 9 பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர்.

எனினும், தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் ஆர்ப்பாட்டத்துக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் தொடர்பு எதுவும் கிடையாது. அவர்கள் பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள இந்த பிரச்சினைகளை பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் பெரும் வல்லரசுகளின் ஆதரவை பெறுவதற்கான ஒரு கருவியாக இந்த ஆர்ப்பாட்டங்களை கருதுகின்றனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2013 ஆகஸ்ட்டில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, அவர்கள் இதே போன்ற கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் வந்தபோது, அவரது அரசாங்கத்தின் ஆதரவை நாடும் பொருட்டு மற்றொரு ஆர்ப்பாட்டத்தை அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

இலங்கையில் தலையீடு செய்யுமாறு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமருக்கு ஒரு செய்தியை அனுப்புவதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மற்றொரு நோக்கமாகும். இந்து மேலாதிக்கவாத நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், கூட்டமைப்பின் தலைவர் அவருக்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். “அனைத்து இலங்கை மக்களும் சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையில் தத்தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும், இலங்கையில் மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நேர்மையான உறவுகளை பலப்படுத்துவதற்கும் உங்களுடைய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் இதயசுத்மாக காத்திருக்கின்றோம், என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1500 பேர் கொல்லப்பட்ட குஜராத்தில் முஸ்லீம் விரோத படுகொலைகளின் பிரதான சந்தேக நபர் மோடியாவார். அத்தகைய ஒரு நபரால் அதிகார பகிர்வு ஏற்பாடுகளை வழங்க ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூட்டமைப்பு நம்புகின்றது.

எவ்வாறெனினும், இந்த பெரும் வல்லரசுகள் அனைத்தும், இராஜபக்ஷ நிர்வாகம் உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுத்த யுத்தத்தை ஆதரித்தன. அவை, ஒரு சிலவற்றை சுட்டிக்காட்டினால், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் தங்கள் சொந்த போர் குற்றங்களில் சாதனை படைத்தவை.

சீனா, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வதை கண்ட பின்னரே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சித்தன. அமெரிக்கா உட்பட இந்த சக்திகள் ஒரு மலிவு உழைப்பு களமாக சீனாவை ஒடுக்குவதற்கு அதை இராணுவ ரீதியில் சுற்றி வளைத்துள்ளன. அவர்கள் பெய்ஜிங்கில் இருந்து தூர விலக கொழும்பு அரசாங்கத்தை நெருக்குவதற்காக போர் குற்றங்கள் குறித்த பிரச்சினைகளை சுரண்டிக்கொள்கின்றன.

யுத்தம் முடிந்ததில் இருந்து ஐந்து ஆண்டுகளில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்கியுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், இராணுவ வழிமுறைகளை ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கியுள்ளது. அமெரிக்க சீனாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளதோடு உக்ரெயினை பயன்படுத்தி ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்கிமாக்கியுள்ள பதட்ட நிலைமைகள் ஒரு மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்க கூடும். இந்த நிலைமையில் சர்வதேச சக்திகளுடன் கூட்டணியை எதிர்பார்க்கும் தமிழ் கூட்டமைப்பு, ஏகாதிபத்தியத்தின் யுத்த வண்டிக்குள் தன்னையும் பிணைத்துக்கொள்கின்றது.