சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Facing a debacle in Iraq, the US turns for help to Iran

ஈராக்கில் தோல்வியை முகங்கொடுக்கையில், அமெரிக்கா உதவிக்காக ஈரானிடம் திரும்புகிறது

Alex Lantier
18 June 2014

Use this version to printSend feedback

ஈராக்கிய உள்நாட்டு யுத்த வெடிப்பை அடுத்து, அமெரிக்க வெளியுறவு கொள்கை நீண்டகால அரசியல் தாக்கங்களோடு ஒரு பாரிய பரிமாண உடைவைக் கண்டுள்ளது.

ஒரு இஸ்லாமிய படைகள் ஈராக்கின் மிக முக்கிய பகுதிகளில் அவற்றின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ள நிலையில், திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி உதவிக்காக ஈரான் பக்கம் திரும்பினார். வாஷிங்டன் தெஹ்ரானுடன் "பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளது" என்று அறிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், ஆக்கபூர்வமான எதையும் ஒதுக்கப் போவதில்லை" என்றார்.

உலகின் மிகப் பெரியதும் மற்றும் அதிக செலவில் 2003 படையெடுப்பைத் தொடர்ந்து கட்டப்பட்டதுமான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து பகுதியான வெளியேற்றத்தை ஒபாமா நிர்வாகம் அறிவித்ததும் ஜோன் கெர்ரியின் அந்த முறையீடு வந்தது.

ஈரானை நோக்கி திரும்பியமை ஈராக்கிய தோல்வியின் அளவை எடுத்துக்காட்டுகிறது. ஈராக்கில் நௌரி அல்-மலிக்கியின் ஈராக்கிய ஆட்சியை இப்போது அச்சுறுத்தி வரும் அதே இஸ்லாமிய அடிப்படைவாத படைகள் தலைமை தாங்கிய ஒரு கிளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வந்த நிலையில், வெறுமனே கடந்த பெப்ரவரியில் தான், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக ஈரானை கெர்ரி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். பதினொன்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா படையெடுத்த ஒரு நாட்டில் அழிவைத் தடுப்பதற்கு கெர்ரி இப்போது ஈரானின் உதவியைக் கோருகிறார்.

1979 ஈரானிய புரட்சி ஷாவை கவிழ்த்தியதில் இருந்து, 35 ஆண்டுகளாக, ஈரானை நோக்கிய விரோதமே அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையின் மையத் தூணாக இருந்து வந்துள்ளது. 1980களின் ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது, ரீகன் நிர்வாகம் அவரது பிராந்திய போட்டியாளர்களுக்கு எதிராக சதாம் ஹூசைனுக்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கினார்.

அவரது 2002 கூட்டரசு உரையில், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ் ஈரானை "துஷ்டர்களின் அச்சினது" (Axis of Evil) பாகமாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார், அதேவேளையில் 2003இல் நடந்த ஈராக்கிய படையெடுப்பு ஈரான் மீதான ஒரு அமெரிக்க படையெடுப்புக்கும், ஆக்கிரமிப்புக்கும் ஒரு வெள்ளோட்டம் மட்டுமே ஆகும் என்பதை வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் தெளிவுபடுத்தினார்கள். ஒவ்வொருவரும் பாக்தாத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். உண்மையான மனிதர்கள் தெஹ்ரானுக்கு செல்ல விரும்புகிறார்கள், என்ற புஷ் நிர்வாகத்தில் வியாபித்திருந்த கண்ணோட்டங்களை ஒரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரி 2003இல் வர்ணித்தார்.

ஈரானின் அணுஆயுத திட்டம் மீதான பிரச்சினையைப் பயன்படுத்தி, அமெரிக்கா தயவுதாட்சண்யமின்றி அந்நாட்டை இலக்கில் வைத்து அந்நாட்டின் மீது நாசகரமான தடைகளை விதித்ததோடு, அதன் விஞ்ஞானிகளைப் படுகொலை செய்யவும் மற்றும் அதன் தொழில்துறை உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தவும் இஸ்ரேலுடன் கூடி வேலை செய்தது.

வெறும் ஓராண்டிற்கு முன்னர், ஈரானை மேற்கொண்டு தனிமைப்படுத்துவதன் மற்றும் மத்திய கிழக்கில் அதன் ஒரு பிரதான கூட்டாளியை இழக்குமாறு செய்வதன் பெரும் பாகமாக ஒபாமா நிர்வாகம் சிரியாவின் மீது குண்டுவீசுவதில் விளிம்பிற்கு வந்திருந்தது. சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிடுவதில், அமெரிக்காவும் அதன் வளைகுடா முடியாட்சி பங்காளிகளும் சுன்னி தீவிரவாத ஈராக்-லேவன்ட் இஸ்லாமிய அரசு (ISIS) உட்பட பல்வேறு அல் கொய்தா கிளை அமைப்புகளை ஆதரித்தன. ஆனால் சிரியாவில் இருந்த வாஷிங்டனின் தீவிரவலது சுன்னி இஸ்லாமிய பினாமிகள் தோல்வியடைந்து கடந்த ஆண்டு பேரம்பேரம் மேசைக்கு வந்த போது, ஈரான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள கூடாது என்று வாஷிங்டன் வலியுறுத்தியது.

கடந்த ஆண்டு தேர்தல்களுக்குப் பின்னரில் இருந்து ஈரானுடன் ஒரு நல்லிணக்கத்தை நோக்கிய தற்காலிக நகர்வுகள் இருந்த போதினும், தற்போதைய திருப்பம் ஒரு அதிரடி திருப்பமாக இருக்கிறது.

அப்பிராந்தியம் முழுவதிலும் தசாப்தங்களுக்கும் மேலான இரத்தகர யுத்தங்களைக் கொண்டு கட்டி அமைக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவு கொள்கை முரண்பாடுகளின் சுமையால் பொறிந்து போய் கொண்டிருக்கிறது. அசாத்தைக் கவிழ்க்கும் ஒரு முயற்சியில் அல் கொய்தாவின் பல்வேறு துணை அமைப்புகளின் பக்கம் பொறுப்பற்று திரும்பி இருந்த நிலையில், ISIS ஈராக் முழுவதிலும் மூர்க்கத்தனமான வன்முறையோடு அங்கே உள்ள வாஷிங்டனின் ஷியைட் கைப்பாவை ஆட்சியைத் தாக்கத் தொடங்கி இலக்குகளை மாற்றியதும் வாஷிங்டன் வெளிப்படையாகவே கூனிக்குறுகி போனது.

ஈராக்கில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினாலும் பின்பற்றப்பட்ட 2003-2011 அமெரிக்க யுத்தம், பரந்தளவிலும் குற்றமான முறையிலும் அமெரிக்கர்களின் மற்றும் ஈராக்கியர்களின் உயிர்களை அனாவசியமாக சூறையாடியது. ISIS போன்ற சக்திகள் ஆயுதமேந்துவதை மேற்பார்வையிடுவதற்கு அமெரிக்கா எடுத்த முடிவோடு சேர்ந்து, இதுவே கூட அல் கொய்தாவிற்கு எதிராக "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" சண்டையிடுகிறோம் என்ற வாஷிங்டனின் வாதங்களை ஏளனப்படுத்துகின்ற நிலையில், ஈராக்கை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறோம் என்பது மத்திய கிழக்கில் இன்னும் அதிகமாக ஒரு புதிய பேரழிவுகரமான இரத்த ஆறுக்கு களம் அமைத்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தினது போன்ற ஒரு வெளியுறவு கொள்கையின் உடைவைக் கண்ட ஆட்சிகள் அவற்றின் சொந்த நாட்டிற்குள் பெரிதும் பாரிய மக்கள் எதிர்ப்பின் வெடிப்பிற்கு ஆளாகின்றன என்பது நன்கறியப்பட்ட ஒரு வரலாற்று விதியாகும்.

அமெரிக்கா அனுபவிக்கும் இந்த வகையிலான ஒரு இராஜாங்க தோல்வி ஒரு ஆழ்ந்த செயற்பிறழ்ந்த அரசியல் அமைப்புமுறையின் விளைபொருளாகும், அதில் நிதியியல் ஊக வணிகத்தின் மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் போலி பண ஓட்டத்தால் குழம்பி போன ஆளும் வர்க்கம், விளைவுகளை ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்தி பேரழிவுகரமான குறுகிய-கால கொள்கைகளைப் பின்பற்றுகிறது. அமெரிக்க அரசியலுக்குள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான எந்த கட்டமைப்பும் இல்லை. ஏகாதிபத்திய குற்ற நடவடிக்கைகளை ஆதரிப்பதில் மொத்தமாக இரண்டு கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தொற்றுமை நிலவுகிறது. ஊடகங்களோ நிகழ்ச்சிநிரலில் என்ன யுத்தம் இடம் பெற்றிருந்தாலும் குதூகலத்தோடு ஒரு பிரச்சார நிறுவனங்களைப் போன்று செயல்படுகின்றன.

2003இல் ஈராக் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, அமெரிக்க ஆளும் வர்க்கம் ஈராக்கை வெற்றி கொள்வதற்கு அதற்கு மொத்தத்தில் போதிய ஆயுத்தளவாடங்களே அவசியப்படுகிறது என்ற நம்பிக்கையின் மீது அதனை நிலைநிறுத்தி இருந்தது, அதனோடு அதன் நோக்கங்களைப் பின்தொடர்வதில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை நடத்தும் விருப்பமும் சேர்ந்திருந்தது. உலக சோசலிச வலைத் தளம் முன்கணித்ததைப் போல, இப்போது அது "ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திய பேரழிவுகளோடு" அதற்கு தகுந்த வெகுமதியை பெற்று வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஈராக்கிய மக்களின் பரிதாபகரமான சந்திப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. ஆளும் வர்க்கத்திடம் நேரத்திற்கேற்ப பயன்படுத்துவதற்கு அருவருக்கத்தக்க இரத்தம் கோரும் மூலோபாய உபாயங்கள் பஞ்சமில்லாமல் இருக்கின்றன, மேலும் அமெரிக்க துருப்புகளும், டிரோன்களும் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளும் ஏற்கனவே அவர்களால் என்ன முடியுமோ அதை பேணுவதற்காக அனுப்பப்பட்டு விட்டன. ஒபாமா நிர்வாகம் அதன் வாய்ப்புகளை பரிசீலித்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் மீதான ஒரு புதிய படையெடுப்பும் எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.

இருப்பினும் ஈராக்கிய தோல்வி உலகம் முழுவதிலும்அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அரசியல் மற்றும் சமூக பதட்டங்களை அதிகரிக்கும் என்பதோடு, தொழிலாளர் வர்க்கத்தின் பார்வையில் ஆளும் வர்க்கத்தையும், அதன் அனைத்து அமைப்புகளையும் இன்னும் அதிகமாக இழிவுபடுத்தி, மதிப்பிழக்கச் செய்கிறது.