சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Two years of asylum in Ecuadorian embassy
Defend Julian Assange!

ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்து இரண்டு ஆண்டுகள்

ஜூலியன் அசான்ஜைப் பாதுகாப்போம்!

Bill Van Auken
19 June 2014

Use this version to printSend feedback

ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையே கூட வழங்கப்படக்கூடிய உளவுவேலை மற்றும் தேசதுரோக குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க, அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க செய்யும் ஒபாமா நிர்வாகத்தினது ஒரு இழிவார்ந்த பிரச்சாரத்தின் இலக்கில் வைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ், இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைய நிர்பந்திக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனதை இன்று குறிக்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட யுத்த குற்றங்களையும், உலகெங்கிலுமான நாடுகளில் அமெரிக்க அரசுத்துறையால் நடத்தப்பட்ட சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணங்களைப் பிரசுரம் செய்ததே அசான்ஜின் ஒரே "குற்றமாகும்".

அந்த பழிகேடான நினைவுதினத்திற்கு முந்தைய நாள் ஒரு தொலைபேசிவழி பத்திரிகை கூட்டத்தில் அசான்ஜ், விக்கிலீக்ஸிற்கு எதிராக நடந்து வரும் தேசிய பாதுகாப்புத்துறை புலன்விசாரணையைக் கைவிடுமாறு அல்லது இராஜினாமா செய்யுமாறு அமெரிக்க அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டருக்கு முறையிட்டார். அந்த "முன்னாள் அரசியலமைப்பு சட்ட பேராசிரியர்", “அமெரிக்க பிரஜைகள் உட்பட கூடுதல் அதிகாரத்தில் தனிநபர்களைக் கொலை செய்வதற்கான பட்டியல்களை தயாரிப்பதற்காகவும்", மற்றும் "1917இல் இருந்து அல்லது உண்மையில் உளவுபார்ப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்து ஒட்டுமொத்தமாக அவருக்கு முந்தைய அனைத்து ஜனாதிபதிகளையும் விட இதழாளர்கள் மற்றும் அவர்களின் ஆதாரங்களுக்கு எதிராக அதிகமாக உளவுபார்ப்பு சட்ட புலனாய்வுகளை நடத்தியுள்ள ஜனாதிபதியாகவும்" நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டு, அவர் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மரபியம் குறித்தும் பேசினார்.

பிரிட்டிஷ் அதிகாரிகளின் இறுக்கமான பிடியிலிருந்து தப்பிக்க ஜூன் 19, 2012இல் இருந்து அசான்ஜ் ஈக்வடோர் தூதரகத்தில் பதுங்கி இருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால் அவர் சித்திரவதை மற்றும் மரண அச்சுறுத்தலை முகங்கொடுப்பார் என்ற அடித்தளத்தில் அவருக்கு தஞ்சம் வழங்கிய ஈக்வடோருக்கு அவரை பாதுகாப்பாக அனுப்ப இங்கிலாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது.

அவரை அமெரிக்க அரசாங்கத்தின் கைகளில் ஒப்படைப்பதற்கான ஒரு வெளிப்படையான உபாயமாக, ஜோடிக்கப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அசான்ஜைக் கைது செய்து சுவீடனுக்கு நாடு கடத்த இலண்டன் முயன்று வருகிறது.

அசான்ஜ் அந்த தூதரக கட்டிடத்திற்குள் நுழைந்ததில் இருந்து அது 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் 24 மணி நேரமும் பிரிட்டிஷ் பொலிஸின் இலக்கில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தஞ்சம் அளிப்பது மீதான சர்வதேச இராஜாங்க கோட்பாட்டை அது நிராகரிப்பதாக அறிவித்ததோடு, அந்த தூதரகத்திற்குள் அத்துமீற இருப்பதாகவும் அச்சுறுத்தியது.

ஒரு குற்றத்திற்காக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தாலோ மற்றும் வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்தாலோ ஒழிய தனிநபர்களை வெளிநாட்டிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் வகையில், குற்றவாளிகளை வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் அந்நாட்டின் சட்டங்களில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்த ஆண்டு மார்ச்சில் திருத்தம் கொண்டு வந்தது. அசான்ஜ் மீது அது மாதிரியான எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இல்லை, மேலும் அவருக்கு எதிராக இரண்டு ஸ்வீடன் பெண்மணிகளின் குற்றச்சாட்டுக்கள் (இவர்களில் ஒருவர் சிஐஏ உடன் தொடர்புடைய காஸ்ட்ரோவிற்கு எதிரான கியூபன் குழுவோடு செயலாற்றி வருகிறார்) ஒரு வழக்கு தொடுக்க போதுமானவை அல்ல என்பதாக 2010இல் ஸ்வீடன் அதிகாரிகள் கண்டனர்.

இருந்த போதினும், வாஷிங்டனின் கட்டளையை பூர்த்தி செய்ய உள்நோக்கம் கொண்டிருப்பதால் பிரிட்டிஷ் அரசாங்கம் பழைய சட்டத்தின் அடித்தளத்திலேயேஅதாவது தஞ்சமடைவதற்கான அசான்ஜின் உரிமையை மீறும் விதத்திலேயேநடவடிக்கை எடுத்து வருகிறது.

அசான்ஜிற்கு எதிராக இரகசிய குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வர 2010இல் ஒபாமா நிர்வாகம் ஒரு ஜூரிகள் குழுவை அமர்த்தியது. கடந்த மாதம், கருத்து சுதந்திர சட்ட வழக்கிற்கான (Freedom of Information Act) ஒரு விடையிறுப்பில், FBIஉம் நீதித்துறையும் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் இரண்டிற்கும் எதிராக அவை செயல்பாட்டில் இருக்கும் ஒரு "குற்ற/தேசிய பாதுகாப்பு" புலனாய்வை தொடர இருப்பதை உறுதிப்படுத்தியதோடு, “கடந்த ஆண்டின் புலனாய்வில் அபிவிருத்திகள்" இருப்பதாகவும் அவை தெரிவித்தன.

இது ஏன் வெளியில் கூறப்பட்டதென்றால், அமெரிக்க அரசாங்கம் விக்கிலீக்ஸூடன் தொடர்புடைய யாரையெல்லாம் உளவு பார்த்திருந்தததோ அவர்கள் அனைவரின் பெயர்களையும் அது வழங்க வேண்டும் மற்றும் விக்கிலீக்ஸிற்கு கிடைக்கும் நிதியுதவிகள் மற்றும் இணைய பயன்பாடுகளை வெட்டுவதற்காக அழுத்தமளிக்கப்பட்ட இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதியியல் நிறுவனங்களோடு பரிமாறப்பட்ட தகவல்களையும் வழங்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையைத் தடுப்பதற்காகவே ஆகும்.

அமெரிக்க அதிகாரிகளின் கைகளில் அவரை சிக்க வைக்க ஒரு பிரத்யேக முயற்சியாக, அமெரிக்க அரசாங்கத்திற்கு அசான்ஜ் மீது எந்தவொரு ஆர்வமும் இல்லை என்றும் ஈக்வடோர் தூதரகத்தில் அவர் தஞ்சம் கோரியது "அச்ச உணர்வோ" அல்லது "சுய-விளம்பரம்" சார்ந்த ஒரு விடயமோ ஆகுமென்ற செய்தியைப் பரப்பிவிட கடந்த நவம்பரில் பத்திரிகைகளில் FBI பொய் அறிக்கைகளை வழங்கியது.

அசான்ஜிற்கு எதிரான வேட்டையானது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் குற்றங்களுக்கு சவால்விடுக்கும் மற்றும் அம்பலப்படுத்தும் எவரொருவரையும் மவுனமாக்க அமெரிக்க அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும். விக்கிலீக்ஸிற்கு நூறு ஆயிரக் கணக்கான இரகசிய இராஜாங்க ஆவணங்ளை கசியவிட்டமைக்காக முதல் தர இராணுவ சிப்பாய் செல்சியா (பிரட்லி) மேனிங் இப்போது கான்சாஸின் போர்ட் லிவென்வோர்த் இராணுவ சிறையில் 35 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், சேதிகள் மற்றும் ஏனைய தொலைதொடர்புகளை NSA எதனைக் கொண்டு சேகரிக்கிறதோ, சேமிக்கிறதோ, ஆராய்கிறதோ அந்த ஒரு பரந்த இரகசிய மற்றும் சட்டவிரோத உளவுத்துறை எந்திரத்திரத்தை அம்பலப்படுத்தும் ஆவணங்களை வெளியிட்ட முன்னாள் NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் ஒரு நாடு இல்லாத அந்தஸ்திற்கு குறைக்கப்பட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார். மாஸ்கோவிற்கு முதன்முதலில் ஸ்னோவ்டென் வந்த போது, அவரைப் பிடிக்கும் நோக்கத்தோடு வாஷிங்டன் அதன் "அசாதாரண சாகச" விமானங்களில் ஒன்றை ஐரோப்பாவிற்கு அனுப்பி இருந்ததாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் செய்தி வெளியானது.

அசான்ஜை மவுனமாக்கும் மற்றும் தண்டிக்கும் வாஷிங்டனின் உறுதிப்பாடு, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்வதில் இருந்து ஸ்னோவ்டென் தப்பித்து மாஸ்கோ செல்வதற்கு விக்கிலீக்ஸ் உதவியதற்குப் பின்னர் மட்டும் தான் தீவிரமடைந்தது.

சிஐஏ அமைப்பு பயன்படுத்தும் சித்திரவதைகளைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதற்காக வழக்கில் இழுக்கப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரி ஜோன் கிரியாகோவ் (John Kiriakou) உட்பட ஏனையவர்களும் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான கொள்கைகள் ஈராக்கிய தோல்வியில் வாஷிங்டனின் முன்னால் வெடித்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், ஆக்ரோஷ யுத்தம், சித்திரவதை மற்றும் பொலிஸ்-அரசு உளவுபார்ப்பு என இத்தகைய கொள்கைகளை அம்பலப்படுத்த முயன்றவர்களில் பலர் இப்போது சிறையிலோ, நிர்பந்திக்கப்பட்டு வேறு நாட்டில் அடைக்கலம் அடைந்தோ, அல்லது பொலிஸால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு தூதரகத்தில் அடைந்து கிடைக்கும் நிலையிலோ இருக்கிறார்கள் என்பது மலைப்பூட்டுவதாக உள்ளது.

இதற்கிடையே, ஈராக் யுத்த குற்றங்களுக்கும் மற்றும் அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் முழு சட்டவிலக்கை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் எவரொருவரும் கணக்கில் சேர்க்கப்படவும் இல்லை தண்டிக்கப்படவும் இல்லை. ஈராக் யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான பிரச்சார கருவிகளாக தங்களைத் தாங்களே திருப்பிக் கொண்ட பல்வேறு பெருநிறுவன ஊடக நிறுவனங்களைப் பொறுத்த வரையில், இப்போது அந்த குற்றங்களுக்கு அவை உடந்தையாய் இருந்ததை மூடிமறைக்க வேலை செய்து வருகின்றன மற்றும் ஈராக்கிலும் ஏனைய இடங்களிலும் இன்னும் கொடூரமான நடவடிக்கைகளுக்கு பாதையமைக்க உதவி வருகின்றன.

புதனன்று அசான்ஜினால் பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒபாமா நிர்வாகத்தினது அணுகுமுறைகள், அமெரிக்க அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அந்த நிதியியல் செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாக்க அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் ஒரு உலகளாவிய உடைவு மற்றும் அதற்கும் பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு விரிந்துவரும் நிலைமைகளின் கீழ், இந்த செல்வந்த தட்டால் அரச குற்றங்கள் மற்றும் இரகசியங்கள் அம்பலப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது மிக கடினமாக சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்கிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே நிஜமான அரசியலமைப்பை தொழிலாள வர்க்கத்தில் மட்டுமே காண முடியும். அசான்ஜ், மேனிங், ஸ்னோவ்டென் மற்றும் இவர்களோடு அரச சூழ்ச்சி மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களையும் பாதுகாக்க என்ன அவசியப்படுகிறதென்றால் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சுயாதீனமான ஐக்கியமாகும். இந்த நடவடிக்கையானது, அதன் நெருக்கடியின் முழு சுமையை உழைக்கும் மக்கள் முதுகில் சுமத்த முனைகின்ற அதேவேளையில் யுத்தம் மற்றும் பொலிஸ் அரசு சர்வாதிகாரம் இரண்டிற்கும் உயர்வைக் கொடுத்து வரும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.