சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Economy slumps, Wall Street booms

பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது, வோல் ஸ்ட்ரீட் எழுச்சியடைகின்றது

Barry Grey
20 June 2014

Use this version to printSend feedback

2014க்கான அமெரிக்க பொருளாதார வளர்ச்சியின் முன்கணிப்பை பெடரல் ரிசர்வ் புதனன்று குறைத்ததோடு, அதன் நீண்டகால வருடாந்த வளர்ச்சி மதிப்பீட்டை சுமார் 2 சதவீதத்திற்குக் கொண்டு வந்தது. இது இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய சராசரியான 3.3 சதவீதத்தை விடவும் மிக குறைவாகும். ஆறு ஆண்டுகால வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்துவரும் ஊதியங்கள், மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய சமூக திட்டங்களின் வெட்டுக்களில் இருந்து பாரிய பெரும்பான்மை மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதையே இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

பொருளாதார வீழ்ச்சியும், பெருந்திரளான மக்களின் வாழ்க்கை தரங்களில் வீழ்ச்சியும் தொடர்ந்து நீடிக்கப் போகிறது என்பதை பெடரலின் மதிப்பீடு ஒப்புக் கொள்வதாக உள்ளது.

இந்த துயரகரமான மதிப்பீடு சமீபத்திய நாட்களில் வெளியான ஏனைய இரண்டு பொருளாதார அறிக்கைகளோடு ஒத்துள்ளது. கடந்த வாரம் உலக வங்கி இந்த ஆண்டின் உலகளாவிய வளர்ச்சிக்கான அதன் முன்கணிப்பை அதன் முந்தைய 3.2 சதவீத முன்கணிப்பிலிருந்து 2.8 சதவீதத்திற்கு குறைத்தது, மேலும் அமெரிக்காவினது அதன் கணிப்பை 2.8 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாக கீழிறக்கியது. திங்களன்று சர்வதேச நாணய நிதியம் அமெரிக்க வளர்ச்சிக்கான அதன் கணிப்பை 2.8 சதவீதத்திலிருந்து 2.0 சதவீதமாக மறுமதிப்பீடு செய்து குறைத்தது.  

அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை, குறைந்தபட்சம் 2017 இறுதி வரையில் வழக்கமான மட்டத்திற்கு திரும்பாது என்று சர்வதேச நாணய நிதியம்  குறிப்பிட்டது.

இந்நிலையில் ஸ்டாண்டர்டு & புவர்ஸ் 500 பங்கு குறியீட்டை ஒரு புதிய சாதனை உயரத்திற்கு உயர்த்தியும், டோவ் குறியீட்டை 98 புள்ளிகள் அளவிற்கு அதிகரித்தும், வோல் ஸ்ட்ரீட் குதூகலத்தோடு புதனன்று பெடரலின் மதிப்பீடு மற்றும் கொள்கை அறிக்கைக்கு விடையிறுப்பு காட்டியது.

உலகம் முழுவதிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களின் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, பெடரல் குறைந்தபட்சம் இன்னுமொரு ஆண்டிற்கு நிதியியல் அமைப்பு முறைக்குள் நடைமுறைரீதியில் கட்டுப்பாடற்ற மற்றும் அளவில்லா நிதியை தொடர்ந்து பாய்ச்ச விரும்புவதாக தெளிவுபடுத்தி இருந்தது. பெடரலின் தற்போதைய பூஜ்ஜியத்திலிருந்து 0.25 சதவீத அளவிலான பெடரல் நிதியின் வட்டி விகித வரம்பை வரவிருக்கின்ற மாதங்களுக்கு நீடிக்க இருப்பதாகவும் மற்றும் அந்த அசாதாரண குறைந்த வட்டி விகிதங்கள் காலவரையின்றி நீடிக்குமென்றும் வங்கியாளர்களுக்கும் ஊக வணிகர்களுக்கும் மறுஉத்தரவாதம் அளிக்க பெடரல் தலைவர் ஜேனெட் யெல்லென் மத்திய வங்கியின் இரண்டு நாள் கூட்டத்தை முடித்த பின்னர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நிதியியல் பிரபுத்துவத்திற்கு ஒரு பாரியளவு பொதுபணத்தை மானியமாக வழங்கும், துல்லியமாக, இந்த கொள்கை தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக, வங்கியாளர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகளின் சொத்துக்களை சாதனை அளவிலான மட்டத்திற்கு உயர்த்தி, செப்டம்பர் 2008இல் நெருக்கடி வெடித்த போது குறைந்த புள்ளிகளில் இருந்த பங்கு சந்தைகளின் மதிப்பை மூன்று மடங்கிற்கு அண்மித்தளவில் உயர்த்த உதவி உள்ளது, அதேவேளையில் நிஜமான பொருளாதாரமோ தொடர்ந்து மந்தநிலைமையில் சிக்கியிருந்ததோடு, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சி அடைந்திருந்தன. ஒரு சாதாரண அமெரிக்க குடும்பத்தின் வருவாய் 2007 மற்றும் 2012க்கு இடையே 8.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

எதிர்பார்த்தவாறே பெடரல் அதன் மாதந்தோறும் பங்குபத்திரம் வாங்கும் நடைமுறையில் (அதன் பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டம் என்றழைக்கப்படும் quantitative easingஇல்) கூடுதலாக 10 பில்லியன் டாலர் அளவிற்கு குறைத்துக் கொண்டது. பத்திரிகைகளுக்கு அவர் அளித்த செய்திகளில்  பணத்தைப் புழக்கத்தில் விடும்  திட்டம் முடிந்த பின்னரும் கூட, வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவில் தொடரும் என்று யெல்லென் உறுதிப்பட தெரிவித்தார்.

அவர் பங்குச் சந்தையின் விண்ணைமுட்டும் உயர்வு உண்மையான பொருளாதாரத்தின் படுமோசமான நிலையுடன் முற்றுமுழுதாக தொடர்பற்றிருப்பதாகவும் மற்றும் "மிகைமதிப்பீடு செய்யப்படவில்லை" என்று குறிப்பிடும் அளவிற்கு சென்றார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் வோல் ஸ்ட்ரீட்டை பொறுத்தவரையில் அது தொடர்ச்சியான  பணப்பாய்ச்சலை பெறுமானால் அது திருப்தியடையும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிய வட்டிவிகித உயர்வுகள் தொடங்கப்படுமென்று நிதியியல் சந்தைகள் நம்பியபோது, 2015இன் மத்திய பகுதிக்குப் பின்னரும் வட்டிவிகிதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் வைத்திருக்க சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் பெடரலை வலியுறுத்தி இருந்தார். நிதியியல் அமைப்புமுறையின் பலவீனத்தை எச்சரித்து அவர் வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களுக்கு உண்மையான மலிந்த பணஉள்பாய்ச்சலை மத்திய வங்கிகள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென மறைமுகமாக குறிப்பிட்டார்.

அடிமட்டத்திலிருந்து மிகவும் மேல்மட்டத்திற்கு செல்வ வளத்தை மறுபங்கீடு செய்யும் ஒரு திட்டமிட்ட கொள்கை எதற்காக அத்தியாவசியமாக இருக்கிறதென்றால் வேலைகளை உருவாக்குவதற்கும், வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்குமே ஆகும் என்று யெல்லென், லகார்ட் மற்றும் அவர்களைப் போன்றவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது. இதுவொரு பொய்யாகும்.

நிதியியல் அமைப்புமுறைக்குள் பணத்தைப் பாய்ச்சுவது உற்பத்தி முதலீடு மற்றும் கண்ணியமான சம்பள வேலைகளை விரிவாக்க இட்டுச் செல்லாது என்பதை அவர்கள் மிகவும் நன்கு அறிவார்கள். பொதுமக்களின் நிதிகளை இவ்வாறு திருப்பிவிடுவதிலிருந்து ஆதாயமடையும் வங்கியாளர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இந்த அதிருஷ்டமழையைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளையோ அல்லது பாடசாலைகளையோ கட்ட வேண்டிய அவசியமே அங்கே இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக அரசாங்க பிணையெடுப்புகள் மற்றும் மத்திய வங்கிகளின் மானியங்கள் பெரும் பணக்காரர்களின் வங்கி கணக்குகளை மற்றும் பங்கு மதிப்புகளைக் கொழுக்க வைக்கவும் மற்றும் முன்பில்லாத அளவிற்கு அதிகமாக நிதியியல் சூழ்ச்சிகளின் பொறுப்பற்ற மற்றும் குற்றகரமான வடிவங்களுக்கு நிதியளிக்கவும் சென்றுள்ளது.

இதன் விளைவாக அரசுகளின் மீது ஏற்றப்பட்ட கடன்களைத் தீர்க்க, தொழிலாள வர்க்கத்தின் சமூக சேவைகள், வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வாழ்க்கை தரங்களை அழித்து, கண்மூடித்தனமான சிக்கன திட்டங்கள் திணிக்கப்பட்டுள்ளன. 2007 மற்றும் 2012க்கு இடையே அமெரிக்க அரசாங்க செலவினங்களும் அரசுத்துறை முதலீடும் ஏறத்தாழ 8சதவீத அளவிற்கு குறைக்கப்பட்டது, இது அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட காலத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாகும். பெருநிறுவன முதலீடோ மிக குறைந்தளவிற்கு குறைந்து போயுள்ளளது.

நிதியியல் மேற்தட்டிற்கு சமூக செல்வ வளத்தை பாரியளவில் திருப்பிவிடுவதோடு சேர்ந்து, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பெடரல் ஆகியவை வேலை உருவாக்குகிறோம் மற்றும் போட்டித்தன்மை என்ற பெயரில், தொழிலாளர்களின் கடந்தகால சமூக சீர்திருத்தங்ங்களையும் பாதுகாப்புகளையும் வெட்ட தொடர்ந்து கோரி வருகின்றன. உணவு மற்றும் எரிபொருள் செலவுகளுக்கான அரசு மானியங்களை வெட்டுவதற்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கவும் அழைப்பு விடுத்து, உலக வங்கி அதன் ஜூன் 10இன் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டது: வெளிப்புற நிதியியல் நிலைமைகள் இறுக்கமாகவும், தொடர்ந்து சவாலாகவும் இருக்குமென்று உத்தேசிக்கப்படும் ஒரு உலகில், எதிர்கால வளர்ச்சியானது உற்பத்திதிறன் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் உள்நாட்டு முயற்சிகளாலேயே பெரிதும் உந்தப்பட வேண்டும், என்று குறிப்பிட்டது.

ஆளும் மேற்தட்டின் நிதியியல் நடவடிக்கையை குணாம்சப்படுத்தும் அதே திரைமறை குற்றங்களும் சமூகரீதியில் பேரழிவுகரமான நடைமுறைகளும் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் யுத்தவெறிப்பிடித்த வெளியுறவு கொள்கைகளிலும் வெளிப்பாட்டைக் காணுகின்றன. ஈராக்கிய பொறிவுஇது அந்நாட்டிலும், லிபியா, சிரியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க யுத்தத்தின் மற்றும் அழிவுகளின் விளைபொருளாகும்எண்ணெய் விலைகளை உயர்த்தி அமெரிக்க  பொருளாதாரத்தைத் தடம் புரள செய்யுமென லகார்ட் இந்த வாரம் எச்சரித்தார்.

அமெரிக்க தொழிலாளர்கள் ஏற்கனவே பங்கு விலைகள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களின் பணவீக்கத்தாலும் மற்றும் உக்ரேன் மற்றும் ஈராக் போன்ற இடங்களில் அமெரிக்க கொள்கையால் தலைகீழாகி போன நெருக்கடிகளாலும் எரியூட்டப்பட்டதால், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளால் தாக்கப்பட்டிருக்கின்றனர். எரிவாயுவின் தேசிய சராசரி விலை 2008க்குப் பின்னர் இந்த ஆண்டு அதன் அதிகபட்ச விலையில் உள்ளது. அமெரிக்க மாநிலஅரசுகளில் பாதிக்கும் மேற்பட்டவை எரிவாயு விலைகளின் உயர்வை அறிவித்துள்ளன. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை மற்றும் பால் போன்றவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஆண்டிலிருந்து கூர்மையாக உயர்ந்துள்ளன.

கடந்த வாரம் பல பிரதான நாடுகளில் கட்டிட விலைகளின் பணவீக்கம் மற்றொரு நிதியியல் பொறிவின் அபாயத்தை உயர்த்தி இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது. ஆனால் வங்கி அமைப்புமுறைக்குள் பணத்தைக் கொட்டுவதில் இருந்து தொடங்கி, சர்வதேச நாணய நிதியம் ஊக்குவிக்கும் அதே கொள்கைகள் தான் தவிர்க்கவியலாமல் உடைந்து போகக்கூடிய சொத்து குமிழிகளை உருவாக்குகின்றன.

இந்த முரண்பாடானது, ஆளும் வர்க்கத்தின் இந்த அனைத்து அமைப்புகளும் பாதுகாக்கும் இந்த அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் இறுதி முடிவைப் பிரதிபலிக்கிறது. இந்த ஒரு அமைப்புமுறை தான், மனித உற்பத்தி சக்தியை மந்தமாக்கியும் சீரழித்தும், உயர்ந்து வரும் பங்கு சந்தைகள், சாதனையளவிலான பெருநிறுவன இலாபங்கள் மற்றும் எண்ணிக்கையளவில் சிறிய நிதியியல் பிரபுத்துவத்தின் தனிநபர் செல்வங்களுக்கு நிதியளிக்க சமூக ஆதார வளங்களைச் சூறையாடுவதை அதிகரித்து, கடலளவிலான பாரிய மனித அவலங்களையும், ஒடுக்குமுறையையும் உருவாக்கி உள்ளது.

அடிக்கடி மேற்கோளிடப்படும் ஆனால் இருந்தபோதினும் அசாதாரணமாக வெளிப்படுத்திக் காட்டக்கூடியதும், மலைப்பூட்டுவதாகவும் உள்ள ஒரு புள்ளிவிபரம், முதலாளித்துவ அமைப்புமுறை அறிநெறிரீதியாகவும், வரலாற்றுரீதியிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாது திவாலாகி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது: அதாவது வெறும் 85 பில்லியனர்கள் இன்று உலக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள பாதி பேரின், அதாவது 3.5 பில்லியன் மக்களின் செல்வ வளத்திற்கு இணையான செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமை பொருளாதாரரீதியிலோ அல்லது அரசியல்ரீதியிலோ நிலைத்திருக்க கூடியது அல்ல. அமெரிக்காவிலும் சரி சர்வதேசரீதியிலும் சரி மேலும் மேலும் தொழிலாளர்கள், இப்போதைய இந்த அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் எந்தவொரு வழியும் இல்லைஇது பலரை விலையாக கொடுத்து ஒரு சிலரை இன்னும் அதிகமாக செழிப்பாக்கும் ஒரேதிசையில் ஒன்று குவிந்துள்ளதை வெளிப்படையாக மூடிமறைக்கிறது என்பதை உணர்ந்து வருகிறார்கள்.

எதிர்வரவிருக்கின்ற பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியாக்க அவசியப்படும் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே இதற்கான பதிலாக உள்ளது.