சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German media clamours for a new Iraq war

ஜேர்மன் ஊடகங்கள் ஒரு புதிய ஈராக் யுத்தத்திற்காக ஆர்ப்பரிக்கின்றன

By Johannes Stern
18 June 2014

Use this version to printSend feedback

ஜேர்மன் ஊடகங்கள் இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கான அவற்றின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருப்பதன் மூலமாக ஈராக்கிய நெருக்கடிக்கு தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளன. கடந்த வார இறுதியில் Frankfurter Allgemeine Zeitung (FAZ) மற்றும் Süddeutsche Zeitung உம் (SZ) மத்திய கிழக்கில் தலையீடு செய்ய ஒபாமா நிர்வாகத்திற்கு அழைப்புவிடுத்தன.

வெள்ளியன்று FAZக்கு கிளவ்ஸ்-டீட்டெர் பிரான்கென்பேர்கர் (Klaus-Dieter Frankenberger) எழுதிய ஒரு கட்டுரையில், ஒருவரால் ஒதுங்கி இருக்க முடியுமென்று நம்புவது ஒரு பிரமையாகும்; உடனடியாகவோ அல்லது சில காலம் கழித்தோ ஒருவர் அதற்கு விலை கொடுக்க வேண்டியதிருக்கும், என்று எழுதுகிறார். ஜிஹாதிஸ்ட் பயங்கரவாத போராளிகள் குழுவான ஈராக்-லேவன்ட் இஸ்லாமிய அரசிடமிருந்து (ISIS) வரும் அபாயத்தை முகங்கொடுக்கும் நிலையில், ஒபாமா "கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ புத்திசாலித்தனமான சொற்பொழிவுகளை வழங்குவதை விட முடிவாக செயலில் அதிகமாக காட்ட வேண்டும்," என்றவர் எழுதினார்.

சனியன்று, ஹூபேர்ட் வெட்ஸெல் (Hubert Wetzel) SZக்கு எழுதுகையில் அதையும் விட ஆக்ரோஷமாக இருந்தார். பாராமுகமாக இருப்பதால் எந்த பிரச்சினையையும் தீராது, என்ற தலைப்பில் அவர் எழுதுகையில்,  "ஒபாமா இறுதியாக தீவிரமாகவும், தனிப்பட்ட விதத்திலும் மற்றும் ஒரு மூலோபாய திட்டத்தோடும் மத்திய கிழக்கை கவனிக்க தொடங்க வேண்டும். கைவிட்டு ஓடுவதால், பாராமுகமாக இருப்பதால், ஒதுங்கி இருப்பதால் எந்த பிரச்சினையும் தீராது" என்று அவர் எழுதுகிறார்.

ஒரு தனிப்பட்ட கவனத்தை எடுப்பது" மற்றும் "பிரச்சினைக்குத் தீர்வு" என்று எழுதுவதன் மூலமாக வெட்ஸெல் என்ன குறிப்பிடுகிறார் என்பதில் எந்த சந்தேகத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை: அதாவது மத்திய கிழக்கில் ஒரு புதிய இரத்தந்தோய்ந்த இராணுவ தலையீடு என்பதைக் குறிப்பிடுகிறார். பயங்கரவாதிகள் மீது ஒரு சில வான்வழி தாக்குதல்கள் போதாது", என்று எழுதும் அவர், அப்பிராந்தியம் இரத்தத்திற்குள் மூழ்காமல் தடுக்க விரும்பினால், அமெரிக்கா மிகப் பெரியளவில் இராணுவ மற்றும் இராஜாங்க அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும், என்று எழுதுகிறார்.

அதுபோன்றவொரு தலையீட்டிற்கான "முன்மாதிரியே" 2003 ஈராக் யுத்தமாகும், அதை தான் வெட்ஸெல் மீண்டும் அரங்கேற்ற முறையிடுகிறார். துணை ஜனாதிபதி ஜோ பிடென், வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெல் என ஏறத்தாழ அவரது "ஒட்டுமொத்த வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு குழுவும்" அக்டோபர் 11, 2002இல் "யுத்த தீர்மானத்தை" ஆதரித்தது, அது "அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஈராக் மீது ஒரு தாக்குதலை நடத்த சுதந்திரம் அளித்தது" என்பதை ஒபாமா நினைவில் கொள்ள வேண்டுமென்று அவர் கூறுகிறார். ஆனால் ஒபாமாவோ "முற்றிலும் முட்டாள்தனத்தோடு எதையும் செய்ய வேண்டாம்! என்றவொரு பாதுகாப்புத்துறை கோட்பாட்டை பின்தொடர்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு புதிய ஈராக் படையெடுப்புக்கான வெட்ஸெலின் ஆர்ப்பரிப்பு, 2003இன் சட்டவிரோத யுத்தத்தை முன்கூட்டியே அவர் பாதுகாத்தமை எந்தளவிற்கு அருவருப்பாக இருந்ததோ அதேயளவிற்கு அருவருப்பாக உள்ளது.  "அவருக்கு முன்னர் பதவியிலிருந்த புஷ் அவரிடம் விட்டு சென்று விட்டதும், அதை அவர் தீர்க்க வேண்டியதுமான வெறுமனே ஒரு இரத்தகரமான மிச்சசொச்ச வேலையே ஈராக்கிய யுத்தம்" என்பது போல ஒபாமா காட்ட விரும்புவதாக எழுதும் வெட்ஸெல் அதை தவறென்று கூறுகிறார். 2003இல் ஈராக்கிற்குள் நுழைந்தது புஷ்ஷூம் மற்றும் அவருக்கு துணையாய் இருந்த ஒருசிலரும் அல்ல, மாறாக அமெரிக்கா ஆகும். இதனோடு சேர்ந்து, அமெரிக்கா "அந்நாட்டின் மீது பொறுப்பேற்றிருக்கிறது, அது வெறுமனே 2011 இறுதியில் ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெறுவதோடு முடிந்து போகாது, என்று எழுதுகிறார்.

ஈராக்கிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை "பொறுப்பேற்றுக்கொள்வது" என்ற வார்த்தையில் ஒருவர் வர்ணிக்கிறார் என்றால் எந்தளவிற்கு அவர் சீரழிந்துபோயிருக்க வேண்டும்? வெட்ஸெல் இவ்வாறு எழுதுவது பெரிதும் ஆச்சரியப்படகூடிய ஒன்றல்ல: "பஷர் அல்-அசாத்தின் இராணுவ தலைமையகத்திற்குள் ஒரு சுற்று தானாகவே தேடியளிக்கும் ஏவுகணைகளை" ஏவ அவர் ஓராண்டிற்கு முன்னர் கோரிக்கைவிட்டிருந்தார்.

ஈராக்கிய யுத்தம் நவீனகால வரலாற்றின் மிகப் பெரிய குற்றங்களில் ஒன்றாகும். பொய்களின் அடிப்படையில் இருந்த அது கொடூரமான மனித அவலங்களைக் கொண்டு வந்தது. விஞ்ஞானபூர்வ மதிப்பீடுகளின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து மில்லியன் பேர் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். 4,500க்கும் மேற்பட்ட அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்ததோடு, 30,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக காயப்பட்டார்கள்.

ISIS பலம் அடைவதும், ஈராக் ஸ்திரமின்மைக்குள் செல்வதும் அமெரிக்க தலையீட்டின் ஒரு நேரடி விளைவாகும். அந்நாட்டின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா குண்டுவீச்சில் சின்னபின்னமாக்கியது. ஆக்கிரமிப்பின் போதிருந்த அதன் "பிரித்தாளும்" மூலோபாயம் பல்வேறு மத குழுக்களை ஒன்றுக்கு எதிராக ஒன்றை கொண்டு வந்தது, இவ்விதத்தில் அது தீவிர கொள்கையுடைய இஸ்லாமிய குழுக்களுக்கு அடித்தளத்தைத் தயார் செய்தது. அமெரிக்காவால் சதாம் ஹூசைனின் மதசார்பற்ற ஆட்சி தூக்கியெறியப்படுவதற்கு முன்னர் ஈராக்கில் அல் கொய்தா இருக்கவில்லை.

லிபியாவிற்கு எதிரான நேட்டோ யுத்தமும், சிரியாவில் ஏகாதிபத்திய தலையீடும் அப்பிராந்தியத்தில் இஸ்லாமிய சக்திகளை மேலும் கூடுதலாக பலப்படுத்தி உள்ளது. அந்த இரண்டு நாடுகளிலுமே, மேற்கத்திய அதிகாரங்களும் அவற்றின் அப்பிராந்திய கூட்டாளிகளும் அவற்றிற்கு உகந்ததல்லாததாக கண்ட ஆட்சிகளைக் கலைப்பதற்காக சுன்னி தீவிரவாதிகளை ஆதரித்து, ஆயுதமேந்த உதவியுள்ளன. ISIS இக்கொள்கையின் நேரடி விளைபொருளாகும்.

வியட்நாம் தோல்விக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மிகப்பெரிய தோல்விக்கு ஜேர்மன் ஊடகங்கள், அமெரிக்க தலைமையிலான தலையீடு இன்னும் பரவலாக்கப்பட வேண்டுமென்ற மூர்க்கமான முறையீடுகளோடு விடையிறுப்பு காட்டி வருகின்றன.

வெள்ளியன்று SZஇன் மத்திய கிழக்கு செய்தியாளர் தோமாஸ் அவினாரியஸ் "ஒரு ஒழுங்கமைப்பின் அபாயகரமான முடிவு" (Risky end to order) என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் அவர் குறிப்பிடுகையில், 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' தொடங்கி பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவும் அவரது கூட்டாளிகளும் ஒரு வெட்க கேடான சூழலை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வெகு முன்னராகவே ஈராக்கிலிருந்து திரும்பிவிட்டார்கள். ஐரோப்பியர்களோடு சேர்ந்து, ஆப்கானிஸ்தானையும் அதன் நெருக்கடியில் விட்டுவிட்டு அவசரமாக பின்னுக்கு வருகிறார்கள். யேமனிலும், லிபியாவிலும், நைஜிரியாவிலும் புதிய தீவிரவாத போராளிகள் குழு உருவாகி வருகின்றன, என்று எழுதுகிறார்.

அவினாரியஸ் தொடர்ந்து எழுதுகையில், பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்தை உடனடியாக முடிக்க அழைப்பு விடுத்தவர்களது அனைவரது சிந்தனையையும் மற்றும் அதனுடன் இணைந்த உளவுபார்ப்பு வடிவத்திற்குள் இருக்கும் உள்நாட்டு கொள்கை தொடர்பான அவர்களது சிந்ததனையையும் இது உடனடியாக முடிவிற்கு கொண்டுவர உதவவேண்டும். ஆமாம், இதற்கான விலை மிக அதிகமாகும். ஆனால் ஒரு தோல்வியின் அபாயமும் அதேயளவிற்கு உள்ளது, என்று எழுதுகிறார்.

மிக வெளிப்படையாக பொய்களின் அடிப்படையில் அமைந்துள்ளதும், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் படுகுழிக்குள் தள்ளியுள்ளதுமான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்குப்" பின்னால் ஜேர்மன் ஊடகங்கள் இந்தளவிற்கு உக்கிரத்தோடு அணிதிரள உந்துவது எது?

இந்த விடயத்தை அவினாரியஸின் கட்டுரையே அம்பலப்படுத்துகிறது. அவர் எச்சரிக்கிறார், தீவிரவாதிகள் ஒரு "புனித போரை" மட்டும் நடத்தவில்லை, மாறாக "மத்திய கிழக்கில் ஏறத்தாழ நூற்றாண்டு கால பழமையான அரச அமைப்புமுறையையே" அழிக்க முனைந்துள்ளனர். முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் ஏகாதிபத்திய சக்திகள் எதைக் கொண்டு அப்பிராந்தியத்தைப் பிரித்துக்கொண்ட, அப்பிராந்தியத்தின் இப்போதைய வடிவம் மற்றும் எல்லைகளை வழங்கி உள்ளதுமான அந்த ஸ்கெஸ்-பைகாட் இரகசிய உடன்படிக்கையை" (Sykes-Picot Agreement) அவர்கள் "முறித்து வருகிறார்." இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அச்சுறுத்துவதாக அவர் கூறுகிறார். இன்னும் அதிகமான யுத்தங்கள், இன்னும் அதிகமான பயங்கரங்கள், இன்னும் அதிகமான அகதிகள்" மற்றும் "இவற்றோடு, எண்ணெய் வழித்தடங்களுக்கு ஒரு அச்சுறுத்தல்" என்பதையே இது குறிக்கிறது, என்று எழுதுகிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஈராக்கில் அமெரிக்கா எதிர்கொண்டு வரும் தோல்வியானது, வளமான மூலப் பொருட்களின் புதையல்களோடு மூலோபாயரீதியில் முக்கியமான மத்திய கிழக்கின் மீது ஒரு கேள்விக்குறியை நிறுத்தும் என்று ஜேர்மனியின் ஆளும் வட்டாரங்களும் ஊடகங்களில் உள்ள அவர்களின் ஊதுகுழல்களும் அஞ்சுகின்றன. ஜேர்மனின் ஆளும் மேற்தட்டுக்கள் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" மூர்க்கமாக அரவணைப்பதானது, அவர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் முறைகளை தெளிவுபடுத்துகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" குற்றகரமான பரிமாணங்கள் நன்கு தெரிந்தவையே. அது சட்டவிரோத ஆக்கிரமிப்பு யுத்தங்கள், பாரிய படுகொலைகள் மற்றும் ஒரு உலகளாவிய பொலிஸ் அரசின் கட்டுமானத்திற்கு சமாந்தரமானதாகும். அந்த பெயரில், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை மட்டும் தாக்கவில்லை, மாறாக உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை உளவுவேலைகளின் கீழ் கொண்டு வந்ததோடு, நிர்பந்தமாக வெளியேற்றுவது மற்றும் சித்திரவதைகளையும் நடத்தியது.

பிரான்கென்பேகர், வெட்ஸெல் மற்றும் அவினாரியஸ் போன்ற "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" பிரச்சாரகர்கள் அவர்களின் முன்னோடிகளான ஜோர்ஜ் டபிள்யு. புஷ், டிக் செனே, டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் அவர்களின் இடத்திற்கு ஒபாமா நிர்வாகத்தின்கீழ் வந்தவர்களை விட வரலாற்று முக்கியத்துவத்தில் குறைந்திருக்கலாம்.  ஆனால், அரசியல்ரீதியாக குறிப்பிட்டால் அவர்களைவிட குறைவான குற்றகரமானவர்கள் அல்ல.