சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president creates religious police unit

இலங்கை ஜனாதிபதி மத போலீஸ் பிரிவை உருவாக்குகிறார்

By Wasantha Rupasinghe
30 April 2014

Use this version to printSend feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மத விவகாரங்கள் தொடர்பான புகார்களை சமாளிப்பதற்கு என்னும் பேரில் ஒரு சிறப்பு போலீஸ் பிரிவை உருவாக்கியுள்ளார். "மத பதட்டங்களை சமாளிப்பதற்கு" எனக் கூறப்படுவதற்கு மாறாக, இந்த  நடவடிக்கையானது, பொது பல சேனா (பிபிஎஸ்) போன்ற பௌத்த அதிதீவிரவாத குழுக்களை பலப்படுத்துவதோடு மத வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதுடன் போலீஸ்-அரச வழிமுறைகளை வலுப்படுத்தும்.

இராஜபக்ஷ, தேர்வு செய்யப்பட்ட அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் ஆசிரியர்களுடனான ஒரு கூட்டத்தில் ஏப்ரல் 24 அன்று இந்த முடிவை அறிவித்தார். "மத குழுக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. யாரும் சட்டத்தை மீற நாம் அனுமதிக்க முடியாது... இது மத அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடும்" என்று அவர் அறிவித்தார். இராஜபக்ஷ, "சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்" குழுவின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இந்த கருத்துக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். உண்மையில், பிபிஎஸ் மற்றும் அதே போல் சிஹல ராவய, இராவனா பலய போன்ற பாசிச பாணியிலான அமைப்புகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமிய மற்றும் கிரிஸ்தவ மத நிறுவனங்கள் மீதான நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த மாதம் கொழும்பில் பிபிஎஸ் செய்த இரு ஆத்திரமூட்டல்கள் சம்பந்தமாக பரந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை தொடர்ந்து புதிய போலீஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. ஏப்ரல் 9, பிபிஎஸ் செயலாளர் கலேகொட அத்தே ஞானசாரவும் பல பௌத்த துறவிகளும் சேர்ந்து, ஜாதிக பல சேனா என்ற இன்னொரு பெளத்த குழு கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டை குழப்பினர்.

வட மாகாண எல்லையில் அமைந்துள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகில் சட்டவிரோதமாக 73 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றினார் என அது குற்றம் சாட்டுகின்ற, தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பத்தீர்தீனுக்கு ஆதரவாகவே இந்த நிருபர்கள் மாநாடு நடத்தப்பட்டதாக பிபிஎஸ் கூறிக்கொண்டது. அந்த பகுதியில் இருந்து ஏழை குடும்பங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துமாறு பிபிஎஸ் கோரியது.

ஒரு பௌத்த பிக்குவான ஜாதிக பலசேனா தலைவர் வடரக்கித விஜிதவை நிர்வாணமாக்குவதாக பகிரங்கமாக அச்சுறுத்திய ஞானசார, குழுவை கலைக்குமாறு அவருக்கு உத்தரவிட்டதுடன் இலங்கையையும் பெளத்த பிக்குகளையும் "அவமானப்படுத்தியதற்காக" அவரை மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தினார். செய்தியாளர் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது. பின்னர் போலீசில் புகார் செய்த பாதிக்கப்பட்ட துறவி, தான் கொல்லப்படலாம் என்ற "அச்சத்தால்" மன்னிப்பு கோரியதாக கூறினார்.

இந்த குற்றச் செயலை பிரதேசத்தின் போலீஸ் பொறுப்பதிகாரியும் அவரது அலுவலர்களும் பார்த்துக் கொண்டிருந்த போதும், எவரும் கைது செய்யப்படவில்லை. மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் சம்பவத்தை வெளியிட்டதோடு, போலீஸ் பார்த்துக்கொண்டருக்கும் போதே ஞானசார அந்த துறவியை அச்சுறுத்துவதையும் காட்டின.

ஏப்ரல் 23, அமைச்சர் பதூர்தீனின் அலுவலகத்துக்கு விரைந்த ஞானசாரவும் அவரது  ஆதரவாளர்களும் அனுமதி இல்லாமல் வளாகத்தில் தேடுதல் ஒன்றைத் தொடங்கினர். பௌத்த துறவி வடரக்கித விஜித அங்கு மறைத்து இருக்கின்றார் என்று அவர்கள் கூறினார். ஊடகங்களில் பரவலாக காட்டப்பட்ட போதிலும், போலீஸ் இந்த குண்டர்களை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

அரசாங்கம் பிபிஎஸ்சின் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேட்ட போது, பதட்டத்தை தணிப்பதற்கு "மோதிக்கொள்ளும் பிரிவுகளுடன்" தனிப்பட்ட முறையில் தான் பேசுவதாக இராஜபக்ஷ பதிலளித்தார். அவர் தெளிவாகவே பிபிஎஸ் பக்கம் சார்பாக இருந்தார்.

பௌத்த மத மற்றும் சமய விவகார அமைச்சின் கீழ் செயற்படும் இந்த புதிய பொலிஸ் பிரிவு, ஒரு சிரேஷ்ட போலீஸ் அதிகாரியின் தலைமையில் இருப்பதோடு அவர் நேரடியாக பொலிஸ் மா அதிபருடன் தொடர்புகொள்வார். ஒரு மத குழுவின் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி எவரும் இந்த பிரிவிடம் புகார் கூற முடியும். போலீஸ் பிரிவு மத குழுக்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், அது மேலும் தீவிரமான ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு கருவியாக அமையும்.

கொழும்பு ஊடகங்கள் புதிய பொலிஸ் பிரிவின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்க முயன்றன. இந்த தீர்மானத்தை “வரவேற்ற ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரயர் தலையங்கம்: "மத மோதல்களை சமாளிக்க ஒரு சிறப்பு போலீஸ் பிரிவை ஸ்தாபித்தல் போன்ற அசாதாரண நடவடிக்கைகளை ஜனாதிபதி இராஜபக்ஷ எடுப்பது ஏன் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. போலீஸ் தமது கடமைகளை செயல்படுத்த தவறியுள்ளதோடு மறுபக்கம் சக்திவாய்ந்த பிரச்சினைகளை உருவாக்குபவராகவும் செயற்படுகின்றது எனக் குறிப்பிட்டது. இந்த “பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் இராஜபக்ஷ மற்றும் ஏனைய அரசாங்க தலைவர்களின் ஆதரவைப் பெற்றவர்கள் என்ற உண்மையை ஐலண்ட் மூடி மறைக்கின்றது.

பிபிஎஸ் தலைவர் ஞானசார உடனடியாக போலீஸ் பிரிவை பாராட்டியோடு, "இது ஒரு சிங்கள பௌத்த நாடு மற்றும் சிங்கள பௌத்தத்தின் படியே முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார். "ஆயிரக்கணக்கான புகார்கள் வரக்கூடும்" என அவர் மேலும் தெரிவித்தது, இந்த அதிதீவிரவாத குழுக்கள் செய்வதற்கு திட்டமிடுவது என்ன என்பதைப் பற்றிய அறிகுறியாகும்.

பௌத்த தீவிரவாத குழுக்கள் போலி புகார்களை குவிக்கின்ற நிலையில், இந்த பொலிஸ் பிரிவு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான குழுவாத தூண்டுதல்களின் ஒரு மையமாக மாறும். சிஹல ராவய குழு ஏற்கனவே ஒரு உத்தியோகபூர்வ முறைப்பாட்டைச் செய்துள்ளதாக தெரியவருகிறது. இது, மறுபக்கம், ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக பயன்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஏனைய பொலிஸ்-அரச வழிமுறைகளுக்கு மேலும் அழைப்பு விடுக்க வழிவகுக்கும்.

இராஜபக்ஷ அரசாங்கம், இலங்கை முழுவதும் தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ள சிங்கள பெளத்த பேரினவாத சக்திகளுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளது. மொரட்டுவ பொறியியல் பல்கலைக்கழகத்தில், முஸ்லீம் பெண்கள் பல்கலைக்கழக வளாகத்தில் எங்கும் பர்தா அணிய முடியாது. அதேபோல், ஜனாதிபதி வித்தியாலயத்தின் அதிபர், முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிவதை தடை செய்துள்ளார். அதிபரின் ஜனநாயக-விரோத நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக பிபிஎஸ் அறிவித்துள்ளது.

பிபிஎஸ் மற்றும் ஏனைய பேரினவாத பெளத்த அமைப்புகள் தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் செயல்படும் போது, இராஜபக்ஷ அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் "மறுமலர்ச்சி" என்று அழைக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மாத முற்பகுதியில் கொழும்பு 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையும் 424 தனிநபர்களையும் தடை செய்துள்ளதுடன், அதன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் டசின் கணக்கான தமிழர்களை தடுத்து வைத்துள்ளது.

ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய இராஜபக்ஷவும், பிபிஎஸ் மற்றும் அதைப் போன்ற குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதோடு அவற்றின் கோரிக்கைகளை இட்டு நிரப்புவதாகவும் உறுதிமொழி கொடுத்தனர். இராஜபக்ஷ இனவாத பதட்ட நிலைமைகளை தீவிரமாக்க இந்த பாசிச அமைப்புகளை பயன்படுத்த விரும்புவது மட்டுமன்றி, தமது உரிமைகளுக்காக போராட முன் வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராகவும் இந்த தட்டுக்களை அணிதிரட்டுவார்.

பிபிஎஸ் அமைச்சர் பதூர்தீனின் அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு முதல் நாள், நிரந்தர வேலை கோரிய இரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களை வன்முறையாக ஒடுக்க, அரசாங்கம் கலகத் தடுப்பு போலீசாரை குவித்தது. புதிய போலீஸ் பிரிவும் பௌத்த தீவிரவாத குழுக்களை அரசாங்கம் வீங்கச் செய்வதும், அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நசுக்கப் பயன்படுத்தவுள்ள அடக்குமுறை நடவடிக்கைகள் எத்தகையவை என்பது பற்றி தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும்.