சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Kerry affirms US support for Egyptian junta

கெர்ரி எகிப்திய இராணுவ ஆட்சிக்கு அமெரிக்க ஆதரவை உறுதிப்படுத்துகிறார்

By Johannes Stern
23 June 2014

Use this version to printSend feedback

இரத்தத்தில் ஊறிய எகிப்திய ஆட்சிக்கு ஆதரவு காட்டும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ஞாயிறன்று கெய்ரோவிற்கு விஜயம் செய்தார். அவரது சமதரப்பான வெளியுறவுத்துறை மந்திரி சமெஹ் சௌக்ரி (Sameh Shoukry), மற்றும் எகிப்திய ஜனாதிபதியும் நடைமுறை சர்வாதிகாரியுமான அப்தெல் பதாஹ் அல்-சிசியையும் அவர் சந்தித்தார்.

கடந்த ஜூலையில் இஸ்லாமிய ஜனாதிபதி மொஹம்மது முர்சியைத் தூக்கியெறிந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்குப் பின்னரில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ உதவி நிதிகளில் அமெரிக்கா 575 மில்லியன் டாலரை விடுவித்திருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

ஓர் உடனடி நடவடிக்கையாக அமெரிக்கா எகிப்திய இராணுவத்திற்கு 10 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை வினியோகிக்கும். “அபாச்சிகள் வரும், அவை மிக மிக விரைவில் வரும்,” என்று சௌக்ரி உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கெர்ரி தெரிவித்தார்.

முஸ்லீம் சகோதரத்துவத்தின் தலையாய வழிகாட்டி மொஹமத் படிஇ (Mohamed Badie) உட்பட அதன் 183 ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனைகளை உறுதி செய்த வெறும் ஒரு நாளைக்குப் பின்னர், அந்த ஆட்சிக்கான வாஷிங்டனின் ஆதரவைக் காட்டும் காட்சி அரங்கேறியது. மின்யா குற்றவியல் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு சமீபத்திய வரலாறில் வழங்கப்பட்ட மிகப் பெரிய உறுதிசெய்யப்பட்ட பாரிய மரண தண்டனையாகும். அந்த தீர்ப்பு ஏப்ரலில் நடந்த பரந்த வழக்குகளில் 2,000 நபர்களுக்கு மரண தண்டனை விதித்த அதே நீதிபதி சைய்த் யூசெப்பால் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை நடந்த அந்த விசாரணை ஒரு கண்துடைப்பு வழக்கினது சகல தனித்தன்மைகளையும் கொண்டிருந்தது. ஆயுத பாதுகாப்பேந்திய வாகனத்தில் வந்த யூசெப், நீதிமன்ற அறை வரையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். அந்த விசாரணை 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்தது. பெரும்பாலான பிரதிவாதிகளுக்கு ஆஜராகவில்லை என்பதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எழுபத்தி ஐந்து பேர் அருகாமையில் இருந்த ஒரு சிறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த போதினும், அந்த அமர்வில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை.

எதிர்ப்பை குருதியில் மூழ்கடிக்க முயலும் ஒரு ஆட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகளோடு கெர்ரியின் நட்புரீதியிலான சந்திப்பானது, வாஷிங்டன் எகிப்தில் ஒரு "ஜனநாயக மாற்றத்தை" ஆதரிக்கிறது என்ற பொய்யை அம்பலப்படுத்துகிறது. பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்கள் பெப்ரவரி 2011இல் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து வெளியேற்றியதில் இருந்து, வாஷிங்டன் முன்னாள் முபாரக் சகாப்திய தளபதிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் உட்கொண்ட ஒரு புதிய அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரத்தை நிறுவ வேலை செய்து வந்துள்ளது. அல்-சிசி ஆட்சியில் அது இந்த நோக்கத்தை எட்டியுள்ளது.

முபாரக் காலத்திலிருந்தே கெர்ரியும் சௌக்ரியும் "நல்ல நண்பர்களாக" இருந்துள்ளனர் என்பதை அந்த உத்தியோகப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டம் வெளிப்படுத்தியது. அவரது எகிப்திய சமதரப்பை, முதல் பெயரிட்டு குறிப்பட்ட கெர்ரி கூறுகையில், “கெய்ரோவிற்கு மீண்டும் வந்திருப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எகிப்தின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்கும் சமெஹிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். உண்மையில், நாங்கள் இருவரும் முன்னர் ஒன்றாக வேலை செய்துள்ளோம்,” என்றார்.

1995இல் இருந்து 1999 வரையில் முபாரக்கின் தகவல் பரிவர்த்தனை செயலாளராக இருந்த சௌக்ரி, 2008இல் இருந்து 2012 வரையில் அமெரிக்காவிற்கான எகிப்திய தூதராக சேவை செய்து வந்தார்.

மிகவும் வெளிப்படையான மற்றும் ஒரு விரிவான விவாதம்" நடத்தியமைக்காக ஆட்சி கவிழ்ப்பு தலைவர் அல்-சிசிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்த கெர்ரி, “நாம் முகங்கொடுக்கும் சவால்களைக் கையாள நட்புறவோடு ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டுமென" வலியுறுத்தினார்.

முபாரக் இராணுவ உளவுத்துறை சேவையின் தலைவராக இருந்த மற்றும் அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட தளபதியான அல்-சிசி, முபாரக் வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர் வந்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் அங்கம் வகித்தார். அவரது வெள்ளை மாளிகை எஜமானர்களோடு "கூடி வேலை செய்வதை" மற்றும் "சவால்களை எதிர்கொள்வதை" அவர் பெரிதும் விரும்புகிறார் என்பதை ஏற்கனவே அவர் நிரூபித்துள்ளார்.

முன்னதாக வாஷிங்டன் ஆதரித்து வந்த இஸ்லாமிய ஜனாதிபதி முர்சிக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலையில் அவருக்கு எதிரான அமெரிக்க ஆதரவிலான ஆட்சி கவிழ்ப்பிற்கு அல்-சிசி தலைமை தாங்கினார். அந்த ஆட்சி கவிழ்ப்பு சதிக்குப் பின்னரில் இருந்து, அல்-சிசி படுகொலைகளையும் மற்றும் பெருமளவிலான ஒடுக்குமுறைகளையும் மேற்பார்வை செய்துள்ளார்.

அவரது தலைமையின் கீழ், அந்த இராணுவ ஆட்சிக்குழு உள்ளிருப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை வன்முறையோடு கலைத்துள்ளதோடு, குறைந்தபட்சம் 1,400 பேரைக் கொன்றுள்ளது மற்றும் 16,000க்கும் மேலான மக்களை சிறையில் அடைத்துள்ளது. அது முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு (MB) தடைவிதித்துள்ளதோடு போராட்டங்களுக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், மோசடி தேர்தல்களை தொடர்ந்து, இதை கெர்ரி "வரலாற்று தன்மைவாய்ந்த தேர்தல்களாக" வர்ணித்திருந்தார், அல்-சிசி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

முற்றிலும் வெறுப்பூட்டும் விதமாக, அல்-சிசிக்கும் மற்றும் அவரது இராணுவ ஆட்சிக்குமான வாஷிங்டனின் ஆதரவை கெர்ரி "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகள்" குறித்த பாசாங்கு வார்த்தைஜாலங்களோடு இணைக்க முனைந்தார். அவர் அறிவித்தார்: “கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடுதல் மற்றும் ஒருங்கிணைவதற்கான சுதந்திரம் உட்பட அனைத்து எகிப்தியர்களின் முழுமையான உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை உயர்த்துவதற்கான எங்களின் பலமான ஆதரவையும் நான் வலியுறுத்தினேன். ஒரு துடிப்பார்ந்த மக்கள் சமூகம், பத்திரிகை சுதந்திரம், மற்றும் சட்டத்தின் ஆட்சி, மற்றும் ஒரு ஜனநாயகத்தில் இருக்க வேண்டிய வழிமுறைகளின் அத்தியாவசிய பாத்திரம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்,” என்றார்.

எகிப்திய மக்களுக்கு இராணுவ ஆட்சி வழங்கி வரும் "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயக உரிமைகள்" குறித்து கெர்ரிக்கு துல்லியமாக தெரியும். அங்கே "சுதந்திரம்" படுகொலை செய்யப்படுகின்றன; “உரிமை" சிறையில் அடைக்கப்படுகிறது; ஆட்சிக்கு எதிரான அரசியல் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதற்கு சித்திரவதை அளிக்கப்படுகிறது.

சனியன்று பிரிட்டனின் கார்டியன் இதழ் இஸ்மாலியாவில் உள்ள இரகசிய அசூலி இராணுவ சிறையைக் குறித்து பிரசுரித்த ஒரு கட்டுரை, இராணுவத்தினது கொடூர ஆட்சியின் ஒரு அதிர்ச்சிகரமான சித்திரத்தை வழங்குகிறது. கார்டியன் குறிப்பிடுகிறது: “அசூலியின் கைதிகள் வழக்கமான முறையில் மின்சாரமேற்றி கொல்லப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள், அவர்கள் குறிப்பிட்ட தகவலைத் தரும் வரையில், குற்றங்களை ஒப்புக் கொள்ளும் வரையில், அல்லது அவர்களின் விசாரணையாளர்களுக்கு இனியும் பயன்படமாட்டார்கள் என்று ஆகும் வரையில்இது முன்னர் சிறையிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் சிறிய குழு விடயத்தில்மணிக்கணக்காக கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தொங்க விடப்படுகிறார்கள்.”

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலுக்கான ஒரு எகிப்திய ஆய்வாளர் மொஹமத் எல்மெஸ்சரியின் கருத்துப்படி, “அசூலியில் இருந்த பலர் மாறி மாறியோ அல்லது மிக சிறிய ஆதாரங்களோடோ கைது செய்யப்பட்டு, பின்னர் உண்மையிலேயே அவர்கள் வன்முறையில் சம்பந்தப்பட்டிருந்தார்களா என்பதை கண்டறிய உளவுத்துறை அமைப்புகள் சித்திரவதைகளைப் பயன்படுத்துகிறது.”

ஒரு இளம் செயல்பாட்டாளரான ஹாலெட் கூறுகையில், அவர் அசூலிக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே பல மணி நேரமாக சிப்பாய்கள் மற்றும் இராணுவ பொலிஸால் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தார். “அவர்கள் இரண்டு மின்சாரம் செலுத்தும் எந்திரங்களைப் பயன்படுத்தினார்கள்,” என்று அவர் தெரிவித்தார். “அவர்கள் ஒரு துண்டை எடுத்து வந்து அதை நீரில் நனைத்து, மூச்சை நிறுத்துவதற்காக என்னுடைய முகத்தில் அதை போட்டார்கள். இராணுவ பொலிஸார் என்னை தொடர்ந்து அடித்தார்கள். நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் என்னுடைய ஆடைகள் கிழிந்து போய், என்னுடைய முகம் வீங்கி புடைத்து போயிருந்தது. என்னுடைய கண்கள் மூடியிருந்தன. ஒரு சிப்பாய் அவரது விரலை உள்ளே விடும் அளவிற்கு என்னுடைய தாடை ஆழமாக காயமடைந்திருந்தது,” என்றார்.

அமெரிக்க உபயத்திலான எகிப்திய இராணுவத்தின் கொடூரமான நடைமுறைகள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றன, அது அப்பிராந்தியத்தில் அதன் நலன்களைப் பாதுகாக்க அவசியமான எந்தவொரு முறைகளையும் உபயோகிக்க தீர்மானமாக இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்புரட்சிகர முயற்சிகளின் ஆதாரக்கல்லாக எகிப்து தொடர்ந்து இருக்குமென்பதற்கு கெர்ரி எந்தவொரு சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் எகிப்திற்கு இடையிலான முக்கிய கூட்டுறவின், வரலாற்று ரீதியிலான கூட்டுறவின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், மற்றும் இப்பிராந்தியத்தில் வெளிப்படையாக, குறிப்பாக ஈராக், சிரியா மற்றும் லிபியாவில்நாம் முகங்கொடுக்கின்ற சிக்கலான சூழலைக் குறித்து ஆலோசிக்கவும் இன்று இங்கே நான் வந்திருக்கிறேன்,” என்று கெர்ரி தெரிவித்தார்.