சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Charlie Chaplin’s The Gold Rush comes to Lexington, Kentucky

சார்லி சாப்ளினின் The Gold Rush கென்டக்கி, லெக்ஸிங்டனில் திரையிடப்படுகிறது.

By Hiram Lee 
24 March 2014

Use this version to printSend feedback

1925ம் வருடத்திய சார்ளி சாப்ளினின் ஒரு உன்னதமான திரைப்படமான The Gold Rush லெக்ஸிங்டன் பில்ஹார்மோனிக் இசைக் குழுவினரது பின்னணி இசையுடன் கென்டக்கி, லெக்ஸிங்டனில் திரையிடப்பட்டிருப்பது ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாகும். அந்த அளவிற்கு, இது அநேகமாக அந்த இசைக் குழுவின் 2013-2014 காலகட்டத்தில் ஒரு மிக முக்கிய நிகழ்வாகும்.  


The Gold Rush

பெருமளவிலான மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்கள் திரைப்படத்தையும் இசை நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர். லெக்ஸிங்டனின் சிங்கிளேடரி மையத்தில் கலைக்காக திரண்டிருந்த ரசிகர்கள் பில்ஹார்மோனிக் குழுவினரது இசைக்காக இறுதியில் எழுந்து நின்று நீண்டநேரம் கரகோஷம் எழுப்பினர்.   இத்தகைய மதிப்புள்ள கலாச்சார அனுபவங்களுக்கான உண்மையான பசியினை உணர முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் முட்டாள் அல்ல, இன்னொரு வெற்று ஹாலிவுட் படைப்பானது அவர்கள் மீது திணிக்கப்படும் வேளையில், அவர்களுக்கு தகுதியுள்ளவை அவர்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை.  The Gold Rush மாதிரியான ஒரு திரைப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சார்லி சாப்ளின் போன்று உலகிற்கு சொல்வதற்காக அதிக விஷயங்களுடன் கொண்ட ஒரு கலைஞனை மக்கள் ரசிக்கின்றனர்.

1925 -ல் சாப்ளின் (1889-1977) அடிப்படையில் நினைத்தது போன்ற ஒன்றை பார்க்க ரசிகர்களை அனுமதிப்பதுடன் திரைப்படத்தின் மறு உருவாக்கத்துடன் இசைக்குழுவானது இத்திரைப்படத்திற்கான சாப்ளினது சொந்த இசையினை வழங்கியது. 1942 -ல் வெளியான திரைப்படத்துடன் ஒன்றும்படி, இசைக்கலைஞரான மாக்ஸ் டேர்ருடன் இணைந்து அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசையை சாப்ளின் அமைத்திருந்தார். அந்த நேரத்தில் மௌனப் படங்களை திரையரங்கில் பேசும் படங்களாக வழிநடத்திச் செல்ல உதவும் ஒரு முயற்சியில் படைப்பிற்கான வர்ணனையையும் சாப்ளின் பதிவு செய்தார். ஆயினும், குறைந்த வர்ணனையில் மூல மௌனப்படமானது சிறப்பானதாக இருப்பதுடன் லெக்ஸிங்டனில் திரையிடப்பட்டதும் அப்படியே இருந்தது.  

இசையில் சாப்ளினின் ஆளுமை தவறாக கருத முடியாத படி உள்ளது. உணர்ச்சிவசப்படும் தன்மை மற்றும் விசாலமான நகைச்சுவையை இவையிரண்டும் கவர்ச்சிகரமாகவும் துடிப்பாகவும் அதே நேரம் அவரது படைப்பில் அதிகம் தடையில்லாதவாறும் உணர முடிகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, யதார்த்த வாழ்வின் சில விஷயங்களும் இந்த இசையிலிருந்து வெளிப்படுகின்றன. தாள பிரிவின் நகைச்சுவையான சிறப்பு சப்த வெளிப்பாடுகள் முதல் வயலின் மற்றும் செல்லோவிற்கு இடையிலான நெகிழவைக்கும் இசை வரையில்- அதன் அனைத்து கேளித்தனமான திருப்பம் மற்றும் அம்சங்களுடன் மொத்தத்தில் இசை மிக நிறைவாக உள்ளது. ஒன்று நெருடலாக உள்ளது ஆனால் பழைய நாட்களின் மிகவும் நேசிக்கப்பட்ட நண்பர் என்ற முறையில் முடிவில் அதனைப் பாராட்ட முடிகிறது.

இந்த திரைப்படமே முக்கியத்துவம் வாய்ந்தது. தங்கத் தேடலின் நடுவில் அதைத் தட்டிப் பறிக்கலாம் என்ற நம்பிக்கையில், யுகோனுக்கு பயணிக்கிற ஒரு தனியான தேடல்வாதியின் (சாப்ளினின் Little Tramp) கதையினை இத்திரைப்படம் சொல்கிறது. பயங்கரமான பனிப்புயலின்போது, வேறு இரு தேடல்வாதிகளுடன் ஒரு தனியான கேபினுக்குள் தான் மாட்டிக் கொண்டதை அவன் விரைவில் கண்டுகொள்கிறான். மூவரும் பட்டினியில் வாடுகின்றனர்.


The Gold Rush

பின்னர், சாப்ளினின் டிராம்ப் தங்கச் சுரங்க ஆசையை சுற்றி சூழ்ந்திருக்கும் ஒரு சிறு நகரத்தை நோக்கி பயணிக்கிறான். அங்கு, அவன் ஜோர்ஜியா (ஜோர்ஜியா ஹேல் நடித்துள்ளார்) என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், முதலில் அவளுக்கு அவன் உயிருடன் இருக்கிறான் என்பதே தெரியாது, பின் ஒருமுறை அவள் அவனை கொடூரமாக நடத்துகிறாள். அவள் தன்னை காதலிப்பதால்தான் இப்படி செய்வதாக அவன் நம்புகிறான்.

திரைப்படத்தின் போக்கில், சாப்ளினின் டிராம்ப் அவனது மதிப்பினை நிரூபிப்பதுடன் ஜோர்ஜியா அவளது வர்க்க பாரபட்சங்களை மறந்து அவன் உண்மையில் எப்படி இருக்கிறானோ அவனாகவே காண்கிறாள்.

பசியுடன் கேபினுக்குள் நிகழும் ஆரம்ப காட்சிகள் மிகப் பிரபலமானவை மேலும் சாப்ளினும் சக தேடல்வாதியான பிக் ஜிம்மும் (மாக் ஸ்வைன்) உயிர் வாழ்வதற்காக சாப்ளினின் சப்பாத்தில் ஒன்றை சாப்பிடும் காட்சி அநேகமாக திரைப்பட வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான காட்சி.

ஒரு காட்சியில் மற்ற இரு தேடல்வாதிகளும் ஒரு சிறு துப்பாக்கியைப் பிடித்திருக்கின்றனர், சாப்ளின் எவ்வளவு கஷ்டப்பட்டு ஓடினாலும், அதனை தவிர்ப்பதற்காக ஒளிந்து கொண்டாலும் அது எப்பொழுதும் அவனைக் குறிவைத்திருப்பது போலவே தெரிவது அதீத நகைச்சுவை.

ஆயினும், முடிவில் கார்டூன் மாதிரி ஆகிவிடுகின்ற இந்த  ஆரம்பகட்ட நகைச்சுவைக் காட்சிகளைத் தாண்டி, நகரத்தில் நடைபெறும் பிந்தைய காட்சிகள் அதிக வலுவானதாகவும் மனதில் நீண்ட காலம் தங்கிவிடும்படியும் உள்ளன. இதுதான் ஒரு திரைப்படத்தின் உண்மையான தன்மை. இது ஒரு சிறந்த நகைச்சுவை என்றாலும் அதிக அளவில் இது ஒரு நெகிழவைக்கும் திரைப்படமும் ஆகும்.

நகரின் விடுதிக்குள் சாப்ளின் முதன் முதலில் நுழையும் ஒரு காட்சியில், அங்கு மக்கள் நடனமாடிக் கொண்டும் குடித்துக் கொண்டும் அவனால் கற்பனை செய்ய முடிந்ததை விட அதிக பணத்தை செலவழித்துக் கொண்டும் இருப்பது அசாதாரணமானது. அவன் ஒரு வெளி ஆள், ஏழை மற்றும் தனியாக இருக்கிறான், மொத்தத்தில் பிரபலமான கோர்ஜியாவின் கண்களிலேயே படாதவன். கடைசியாக அவள் அவனை கவனித்து, அவனுடன் நடனமாட அழைக்கும்போது, அது அதிக பிரபலமான மனுதாரரை அவமானப்படுத்துவதற்காக மட்டுமே. வர்க்க வேறுபாடுகள் தெளிவாக உணர முடிகிற இத்தகைய காட்சிகள் சிறப்பாக வழிநடத்தப்பட்ட ஒரு பயணம் போல் உள்ளது.

 


The Gold Rush

இறுதியில், அதிக நம்பிக்கையோடும் இந்த கவர்ச்சிகரமான புதிய உலகிற்குள் நுழைய தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடனும் சாப்ளின் கதாப்பாத்திரம் அரங்கை விட்டு வெளியேறுகிறது. ஆனால் அவர் நின்று கொண்டிருக்கும் இடம் எவ்வளவு அழுத்தமானது? மேலும், எந்த மாதிரியான உலகம் இது? திரைப்படம் தொடரும்போது, அறிந்து கொள்ளலாம்.

தங்களது தலைக்கு மேலே திரையில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்துடனான ஒத்திசைவினை தக்க வைக்கும் முயற்சியில் லெக்ஸிங்டன் பில்ஹார்மோனிக் உண்மையான சவால்களைச் சந்தித்தது. இசைக்குழு நகைச்சுவையான சப்தங்களை கொடுக்க வேண்டிய பணியில், இது மிகவும் சிரமமானது. நேரத்தில், ஒரு டிரம் சப்தம் மிகத் தாமதமாக கேட்டது, திரையின் துப்பாக்கிச் சத்தத்துடன் ஒன்றினைய வில்லை.

திரைப்படம் தொடர்கையில், இசைக்குழுவானது உறுதியானதாகவும் இசையானது காட்சிகளுடன் பிழையின்றி ஒன்றியும் காணப்பட்டது. சாப்ளின் சாப்பாட்டு மேஜையில் இரண்டு ரொட்டி சுருள்களுடன் நடனமாடும் பிரபல நடனத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் – காட்சிகள் ஒரு வேகத்துடன் ஒன்றிணைந்தது அந்த நடனம் முடிந்தவுடன் அது உடனடியாகக ரசிகர்கள் மத்தியிலிருந்து அதி பயங்கரமான கைதட்டல்களை பெற்றது.

இறுதியில் நடிப்பு திருப்தியானதாக அமைந்த வேளையில், திரைப்படத்திற்கு அரங்கிலிருந்து எந்த வகையிலான அறிமுகமும் தரப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது, அது ரசிகர்களுக்கு சாப்ளின் குறித்த விவரங்களைத் தந்திருக்கக்கூடும். திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் அரங்கில் நுழையும் போது, நான் இதற்கு முன் ஒரு சாப்ளினின் திரைப்படத்தை பார்த்ததில்லை என்பன போன்ற வாசகங்களைக் கேட்க முடிந்தது. இப்படைப்பின் ஒரு தீவிர மதிப்பீடும் அதன் முக்கியத்துவமும் பயனுள்ளதாக இருக்கும்.

சாப்ளினின் திரைப்பட வரலாற்றை இன்னும் பார்ப்பதற்காக, நிச்சயமாக ரசிகர்களை ஊக்கப்படுத்த முடியும். இவர் ஒரு முக்கிய பிரபலம் என்பதுடன் இவரது குறிப்பிட்ட கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றும் நமக்கு சிறப்பான வகையில் தொடர்பினைக் கொண்டுள்ளன.