சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China-Vietnam talks fail to end tensions over oil rig

சீனா-வியட்நாம் பேச்சுவார்த்தைகள் எண்ணெய் அகழும் கட்டமைப்புகள் மீதான பதட்டங்களை தீர்ப்பதில் தோல்வியடைகின்றன

By Ben McGrath
24 June 2014

Use this version to printSend feedback

பிராந்திய முரண்பாடுகளை விவாதிக்க கடந்த புதனன்று ஹனோயில் நடந்த சீன மற்றும் வியட்நாமிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே தென் சீன கடலில் பதட்டங்கள் தொடர்ந்து மோசமடைந்துள்ளன. அந்த கூட்டத்தின் முடிவில் பெரிய பலன் எதுவுமிருக்கவில்லை. பெய்ஜிங் மற்றும் ஹனாய் இரண்டுமே அப்பிராந்தியத்தில் பிரச்சினைகளைத் தூண்டிவிடுவதாக ஒன்றையொன்று குற்றஞ்சாட்டின.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதும், அது நிர்வகித்து வருவதுமான சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளுக்கு அருகாமையில் சீன அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் எண்ணெய் அகழ்வு கட்டமைப்பை உருவாக்கியதற்கு பின்னர் நடந்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையாகும் இது. அந்த கட்டமைப்பு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ - exclusive economic zone) வருவதாக வியட்நாம் கண்டிக்கின்றது.      

அரசு ஆளுனர் யாங் ஜீச்சி தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவோ அந்த நடவடிக்கையை "முற்றிலும் சட்டப்பூர்வமானதாக" கூறி, சர்ச்சைக்குரிய அந்த கடலில் எண்ணெய் அகழும் கட்டமைப்பை உருவாக்குவது என்ற பெய்ஜிங்கின் முடிவை நியாயப்படுத்தியது. பிரதம மந்திரி என்குயன் டான் டங் மற்றும் வெளியுறவு மந்திரி பஹாம் பின்ஹ் மின்ஹ் (Pham Binh Minh) உட்பட முக்கிய வியட்நாமிய அதிகாரிகளை யாங் சந்தித்தார்.  

எவ்வாறிருந்த போதினும், ஒன்றும் மாற்றமடையவில்லை என்பதற்கு ஒரு அறிகுறியாக, வியட்நாமிய ஜனாதிபதி ரௌங்க் டான் சாங் (Truong Tan Sang) கடந்த சனியன்று சீனாவை விமர்சித்து கூறுகையில், “எங்களின் வியட்நாமிய மக்களும், கட்சியும் மற்றும் அரசும் போதிய நெஞ்சுரமும், உறுதியும் கொண்டிருக்கின்றன. அத்தோடு எங்களின் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக போடுவதற்கு போதுமான வரலாற்று மற்றும் சட்டரீதியிலான அடித்தளமும் கொண்டிருக்கிறோம். பலமான நாடுகள் அறநெறியையும் மற்றும் நீதியை மீறுவதை ஏற்க முடியாது,” என்றார்.    

மே மாதத்தின் தொடக்கத்தில் சீனா அந்த அகழும் கட்டமைப்பை நிறுவிய போது தான் முதன்முதலாக பதட்டங்கள் மேலெழும்பின. இரண்டு தரப்பும் எதிர்தரப்பு கப்பல்கள் மோதுவதாக ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிய நிலையில், சீன மற்றும் வியட்நாமிய கப்பல்களுக்கு இடையே மோதல்கள் வெடித்திருந்தன. இது மே மாதம் ஒரு வியட்நாமிய கப்பல்  மூழ்குவதற்கு இட்டு சென்றது. வியட்நாமின் EEZக்கு அருகாமையில் ஒரு அகழும் கட்டமைப்பை அமைத்தது உட்பட அப்போதிலிருந்து தென் சீனக் கடலில் சீனா நான்கு புதிய எண்ணெய் அகழும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது

இந்த மோதல்களுக்கு இடையேயும், இரண்டு தரப்பும் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தன. வியட்நாமிய வெளியுறவுத்துறை மந்திரி பஹாம் முதலாவது எண்ணெய் அகழும் கட்டமைப்பைத் திரும்ப பெறுமாறு கோரியிருந்தார், அதேவேளையில் அவர் தொடர்ந்து கூறுகையில், “கிழக்கு கடலில் [இது தென் சீனக் கடலுக்கான வியட்நாமிய பெயர்] இப்போதிருக்கும் சிக்கலான நிலைமையைத் தீர்க்க நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்,” என்றார்

ஹனோயுடன் நேரடிப்பேச்சுவார்த்தைகளுக்கு பெய்ஜிங்கின் விருப்பத்தை வலியுறுத்தி யாங்கும் அதேமாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். “நிலைமையை ஸ்திரப்படுத்த இருதரப்பும் சாத்தியமான அளவிற்கு விரைவாக இருதரப்பு தகவல் பரிவர்த்தனைகளை நடத்த வேண்டுமென" அவர் கேட்டுக் கொண்டார். ஹனோய்அப்பிரச்சனையை மிகைப்படுத்துவதை நிறுத்துமாறும், புதிய பிரச்சினைகளை உருவாக்க உடன்பாடின்மையை தூண்டிவிடவேண்டாம் என்றும்" யாங் முறையிட்டார்.

அப்பிரச்சினையை ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கான வியட்நாமிய திட்டங்களை பெய்ஜிங் விமர்சித்துள்ளது. ஹனாய் அதன் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்ற போதினும், துணை பாதுகாப்புத்துறை தலைவர் என்குயன் சி வின்ஹ் (Nguyen Chi Vinh) கருத்துப்படி, மத்தியஸ்தம் செய்ய மூன்றாவது கட்சிகாரர்களை வியட்நாம் இதில் இழுக்க வேண்டாமென சீன தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளது

அது பிலிப்பைன்ஸைப் பின்தொடருமென வியட்நாம் கருத்து தெரிவித்துள்ளது, பிலிப்பைன்ஸோ மார்ச்சில் ஐநா நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தில் (UN Permanent Court of Arbitration) ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. சீனா மற்றும் பிலிப்பைன்ஸ், ஸ்ப்ராட்லி தீவுகள் மற்றும் ஸ்கார்பொரோ ஷியோல் மீதான ஒரு எல்லை தகராறில் சம்பந்தப்பட்டுள்ளன. சீனா எண்ணெய் அகழும் கட்டமைப்பை நீக்கவில்லை என்றால் உரிமைகோரும் ஒரு வழக்கு தொடுக்க தேவையான ஆவணங்களை ஹனாய் சேகரிக்க தொடங்குமென்று வியட்நாமின் தேசிய சட்டமன்ற தலைவர் நிகுயன் ஹன்ஹ் ப்ஹூக் (Nguyen Hanh Phuc) மே 21இல் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.    

ஜூன் மாத தொடக்கத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லெ குறிப்பிடுகையில், “பிலிப்பைன்ஸ் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்கை சீனா ஏற்கவும் செய்யாது அல்லது அதில் பங்கு பெறவும் செய்யாது என்ற சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை,” என்றார். எந்தவொரு வியட்நாமிய வழக்கு சம்பந்தமாகவும் பெய்ஜிங் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். வியட்நாம் மற்றும் சீனா இரண்டுமே பாராசெல் தீவுகள் மீதான அதனதன் உரிமைகோரல்களை விவரித்து ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூன்னுக்கு அவற்றின் தரப்பு ஆவணங்களை அனுப்பி உள்ளன

தென் சீனக் கடலில் எரிந்து கொண்டிருக்கும் எல்லை தகராறுகளுக்கான முதன்மை பொறுப்பு ஒபாமா நிர்வாகத்தின் மீது தங்கியுள்ளது, அது, “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஒப்பீட்டளவில் முன்னர் சிறிய பிராந்திய பிரச்சினைகளாக இருந்தவற்றில் நேரடியாக தலையிட்டுள்ளது. எல்லை தகராறுகள் மீது நடுநிலைமை வகிப்பதாக பிரகடனப்படுத்தி கொண்டே, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸை அவற்றின் உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக சர்வதேச நீதிமன்றங்கள் மூலமாகவும் கூட, முன்னெடுக்குமாறு அமெரிக்கா ஊக்கப்படுத்தி வந்துள்ளது.  

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சீன நடவடிக்கைகளை "ஆத்திரமூட்டுவதும் உதவாதவையும் என்று" முத்திரை குத்தி தென் சீனக் கடலில் சீன நடவடிக்களுக்கு வாஷிங்டன் அதன் கண்டனங்களை அதிகப்படுத்தி உள்ளது. அந்த சர்ச்சைக்குரிய கடலில் சீன உரிமைகோரல்கள் மீது பகிரங்கமாக கேள்விகளை எழுப்பி அமெரிக்கா அதன் நடுநிலைமை தோரணையையும் கைவிட தொடங்கி உள்ளது. பிலிப்பைன்ஸின் சட்ட வழக்கிற்கான அதன் ஆதரவு சீனாவை ஒரு சட்டபாதுகாப்பின்மையற்றதாக  முத்திரை குத்தவும், அதன் மூலமாக பெய்ஜிங்கிற்கு எதிராக மேலதிக அமெரிக்க ஆத்திரமூட்டல்களையும் மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலுமான ஒரு இராணுவ கட்டமைப்பையும் நியாயப்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளது.  

சனியன்று உரையில், சீனாவின் உயர்மட்ட வெளியுறவு விவகாரத்துறை அதிகாரி யாங் ஜீச்சி, “எல்லை இறையாண்மை, கடல்பாதை உரிமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகள் உடன் பிராந்திய பிரச்சினைகளில் சீனா ஒரு சமாதான தீர்வு காண்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள,” என்று கூறி அமெரிக்காவை மறைமுகமாக குறி வைத்தார்.
பெய்ஜிங்கில் உள்ள ஏனையவர்கள் இன்னும் நேரடியாக இதுபற்றி கூறுகின்றனர். சீன அரசு ஊடகம் கடந்த புதனன்று ஒரு இராணுவ சிந்தனைக்கூடத்தை மேற்கோளிட்டு காட்டியது: “சம்பந்தப்பட்ட நாடுகளை அமெரிக்காவினது பலத்தின் மீது தங்கியிருக்க செய்தும் மற்றும் பிரச்சினையை இன்னும் மோசமாக்கி விரோதங்களை அதிகரிக்கும் வகையில் கடலில் வன்முறை திட்டத்தைப் பயன்படுத்த தூண்டிவிட்டும் ஆசிய பசிபிக் மூலோபாயத்தில் அமெரிக்கா அதன் ஆசியாவிற்கான முன்னெடுப்பிற்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.”   

அமெரிக்கா வியட்நாமுடன் இராணுவ உறவுகளை ஆழப்படுத்த முனைந்து வருகிறது. வியட்நாமுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்படவுள்ள டெட் ஓஷியஸ் (Ted Osius) அவரது செனட் உறுதிப்படுத்தும் விசாரணையின் போது ஜூன் 17இல் குறிப்பிடுகையில், “சீனாவை எதிர்கொள்ள வியட்நாமிய மக்கள் அமெரிக்காவுடன் பலமாக நெருங்கியிருக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். தென் சீன கடலில் இன்னும் அதிகமான ஆக்ரோஷ நகர்வுகளை செய்வதற்கு எதிராக சீனாவிற்கு அதுவொரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும்,” என்றார்

இந்த அறிக்கை வியட்நாமுக்கு இராணுவ தளவாடங்களை அமெரிக்கா விற்பதற்கான ஒரு தடையை நீக்குமாறு ஓஷியஸ் அறிவுறுத்திய போது வந்தது. மரணம் விளைவிக்காத பாதுகாப்பு சாதனங்களை  மட்டும் வியட்நாமுக்கு விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கிய 2007இல் இருந்து, வியட்நாமிய தலைமை அந்த தடையை நீக்க அழுத்தம் கொடுத்துவருகிறது

இது முன்னாள் யுத்தகால எதிரிகளுக்கு இடையே அதிகரித்துவரும் இராணுவ உறவுகளின் வெறும் ஒரேயொரு அம்சமாகும். ஏப்ரலில் அவ்விரு நாடுகளின் கடற்படைகளும் சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளுக்கு அருகாமையில் இராணுவ ஒத்திகைகளில் ஈடுபட்டன. ஏவுகணை அழிப்பு அமைப்பு மற்றும் 400 கடற்படையினர் உட்பட அமெரிக்கா இரண்டு கப்பல்களை அனுப்பி இருந்தது. ஐந்தாவது ஆண்டாக அதுபோன்ற ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.

எவ்வாறிருந்த போதினும், ஆயுத விற்பனைகள் மீதான ஒரு தடையை நீக்குவதென்பது ஹனாய் "மனித உரிமை" பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற வாதங்களால் நின்று போயிருக்கிறது. பர்மா மற்றும் ஏனைய நாடுகளின் விடயத்தைப் போலவே, வியட்நாமிய துறைமுகங்களில் கூடுதல் அமெரிக்க யுத்தக்கப்பல்களை நிறுத்துவதற்கான அனுமதி உட்பட விட்டுகொடுப்புகளுக்கு அழுத்தம் அளிக்க அமெரிக்கா வெறுப்பூட்டும் விதத்தில் "மனித உரிமைகள்" பிரச்சினையைப் பயன்படுத்துகிறது.

அனைத்திற்கும் மேலாக வியட்நாம் இன்னும் நெருக்கமாக அமெரிக்காவின் தரப்பில் சேர வேண்டுமென்று அழுத்தம் கொடுப்பது சீனாவுடனான பதட்டங்களை இன்னும் மேலதிகமாக தூண்டிவிடுகின்றது.