சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The fiasco of Kerry’s Middle East tour

கெர்ரியின் மத்திய கிழக்கு பயணத்தின் படுதோல்வி

Bill Van Auken
26 June 2014

Use this version to printSend feedback

மத்திய கிழக்கில் மூன்று நாள் சூறாவளி சுற்றுபயணத்திற்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி செவ்வாயன்று புரூசெல்ஸ் வந்தடைந்தார். ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசின் (ISIS) தாக்குதலையும் மற்றும் அதிகரித்துவரும் சுன்னி பிரிவினரின் கிளர்ச்சியையும் முகங்கொடுத்து, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட ஈராக்கிய பாதுகாப்பு படைகள் நிலைகுலைந்து போனதால் எடுத்துக்காட்டப்பட்ட வாஷிங்டனின் வரலாற்றுத்தோல்விக்கு விடையிறுப்பாக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறிருந்த போதினும் நேட்டோ வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்திற்காக கெர்ரி ஐரோப்பா வருவதற்கு முந்தைய அவரது அந்த பயணம் என்ன தெளிவுபடுத்தியதென்றால், தற்போதைய தோல்விக்கு இட்டுச் சென்றுள்ள பாசாங்குத்தனமான மற்றும் குற்றகரமான கொள்கைகளை எடுத்துகாட்டியதோடு, மத்திய கிழக்கில் வாஷிங்டன் அதன் சூறையாடும் நோக்கங்களைப் பின்தொடர்வதில் ஒன்றின் மேல் ஒன்றாக அது அடுக்கி வைத்த முரண்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்கு அப்பாற்பட்டு, வேறொன்றையும் அதில் உள்ளடங்கி இருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியது.

அவரது முதல் நிறுத்தமாக கெய்ரோவில், கெர்ரி எகிப்தின் ஜனாதிபதியும் நடைமுறை இராணுவ சர்வாதிகாரியுமான அப்தெல் பதாஹ் அல்-சிசியின் முன்னால் பணிவுடன் காட்சியளித்தார். அமெரிக்க இராணுவ நிதியுதவியின் குழாய் மூடி மீண்டுமொருமுறை முழு வீச்சில் திறக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையால் அவரது விஜயம் கொண்டாடப்பட்டது. சிசி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்துள்ளார், குறைந்தபட்சம் 20,000 பேரை அரசியல் கைதிகளாக சிறையில் அடைத்துள்ளார், 2,000த்திற்கும் மேற்பட்ட அரசியல் எதிர்ப்பாளர்களுக்குப் பொய் குற்றச்சாட்டுக்களின் பேரில் மரண தண்டனை விதித்துள்ளார், மற்றும் பரந்த சித்திரவதைகளை நிகழ்த்தி உள்ளார் என்ற உண்மைக்கு இடையே இது நிகழ்கிறது

வாஷிங்டன் 10 நாட்களுக்கு முன்னர் எகிப்திய இராணுவத்திற்கு சத்தமில்லாமல் 572 மில்லியன் டாலர் நிதியை வழங்கியிருந்தமை வெளியாகி இருந்தது. சினாயில் உள்ள இஸ்லாமிய போராளிகளைத் தாக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்று கூறப்படுவதும், ஆனால் ஒரு பாரிய கலகத்தை ஒடுக்குவதில் துல்லியமாக உயிர்பறிக்க கூடியதாக நிரூபிக்கப்பட்டதுமான 10 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை எகிப்திய ஆட்சிக்கு வழங்க அமெரிக்க முன்வருவதாக கெர்ரி உறுதிப்பட தெரிவித்தார்.

அதே மூச்சில், “அனைத்து எகிப்தியர்களின் சகல உரிமைகளையும் பாதுகாப்பதற்கான" அவரது கடமைப்பாடுகளையும் அவர் குறிப்பிட்டார், மேலும் மனித உரிமைகளுக்கான சிசியின் பொறுப்புணர்வை "மிக பலமாக உணர்வதாகவும்" அவர் நினைவுகூர்ந்தார்.  

மனித உரிமைகளுக்கான அந்த எகிப்திய பாதுகாவலர் சிசி, அதற்கடுத்த வெறும் 24 மணி நேரத்திற்குள், “பொய் செய்திகளைப் பரப்பினார்கள்" என்ற ஒரு நகைப்பிற்கிடமான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று அல் ஜஜீரா இதழாளர்களுக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்த ஒரு எகிப்திய நீதிமன்றத்தின் தீர்ப்பைத் எடுத்துக்காட்டி கெர்ரியின் பாராட்டு துதிபாடல்களுக்கு வெகுமதி அளித்தார். வாஷிங்டன் அந்த தீர்ப்பிற்கு சம்பிரதாயமான கண்டனங்களை வெளியிட்டது, ஆனால் அபாச்சிகள் அங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதை அது தெளிவுபடுத்தியது.    

ஆட்சி மாற்றத்திற்கான இலக்கில் வைக்கப்பட்டுள்ள ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் "ஜனநாயகத்தின்" அறப்போராளியாக காட்டிக்கொள்கின்ற அதேவேளையில், மேலும் "அரேபிய எழுச்சி" என்றழைக்கப்படுவதற்கு ஆதரவு காட்டுவது போல் பாசாங்குத்தனம் செய்வதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் அதன் மூலோபாயத்தை, எகிப்தில் சிசியில் இருந்து சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளின் பிற்போக்குத்தனமான முடியாட்சிகள் வரையில், பல சர்வாதிகார ஆட்சிகளின் மீது அடித்தளமாக கொண்டுள்ளது.

ஒரு அறிவிக்கபடாத நிறுத்தமாக, ஈராக்கில், இராணுவ விமானத்திலிருந்து குண்டு துளைக்காத கவசம் அணிந்து இறங்கிய கெர்ரி, ஈராக்கிய பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியைச் சந்தித்து 90 நிமிடம் உரையாடினார், அதில் அவர் ஒரு தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மற்றும் "குறுங்குழுவாத பிளவுகளைக் கடந்து" அனைத்து தரப்பையும் உயர்த்தும் உட்பொருளில் வாதிட்டிருந்தார்.

கெர்ரி ஈராக்கை விட்டு புறப்பட்ட உடனேயே, மலிக்கி ஒரு தேசிய ஒருமைப்பாட்டு அரசு குறித்த கருத்துருவை "அரசியலமைப்பிற்கு எதிரான சதியாக" பகிரங்கமாக குற்றஞ்சாட்டி ஒரு உரையை வழங்கியதோடு, அதேவேளையில் "பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புனித யுத்தத்திற்கு" அழைப்புவிடுத்ததோடு, அதில் தெளிவாக குறுங்குழுவாத வாய்ஜாலங்களையும் கையாண்டார்.

பாக்தாத் அரசாங்கத்தின் தரப்பில் இருக்குமாறு எர்பிலில் குர்திஷ் தலைமைக்கான கெர்ரியின் முறையீட்டை நிராகரித்து குர்திஷ் ஜனாதிபதி மஸ்சௌத் பர்ஜானி கை விரித்து விட்டார், அதுவும் அந்த முறையீடு செய்யப்படுவதற்கு முன்னரே அவர் அதை நிராகரித்துவிட்டார். கெர்ரியைச் சந்திப்பதற்கு முன்னர் நேரடியாக ஒரு நேர்காணலில் பர்ஜானி, “நாம் ஈராக்கில் ஒரு புதிய எதார்த்தத்தை முகங்கொடுத்து வருகிறோம்,” என்று அறிவித்ததோடு, நாடு ஒன்றாக இருப்பதை கற்பனை செய்து பார்ப்பதும் "மிகவும் சிரமமாக" இருக்கிறதென்று அறிவித்தார். கிர்குக் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள எண்ணெய் வயல்களோடு குர்திஸ்தான் சுதந்திரத்தை நோக்கி செல்லும் என்று அவர் தெரிவிக்கிறார். அப்பகுதிகள் ISIS தாக்குதலால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு இடையே குர்திஷ் படைகளால் கைப்பற்றப்பட்டவை ஆகும்.  

ஈராக்கில் அமெரிக்க கொள்கையால் உருவாக்கப்பட்ட தோல்வியை கெர்ரியின் பயணம் இன்னும் ஆழப்படுத்த மட்டுமே செய்தது. அந்த பயணத்தின் போது, கெய்ரோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் மிகவும் ஆச்சரியமான ஒரு கருத்தை வெளியிட்ட அவர், “லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு அமெரிக்கா பொறுப்பல்ல, அல்லது இன்று ஈராக்கில் என்ன நடந்து வருகிறதோ அதற்கும் அது பொறுப்பாகாது,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஈராக்கியர்கள் அவர்களின் சொந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா பல ஆண்டுகளாக ஈராக்கியர்களுக்காக இரத்தம் சிந்தியது, கடுமையாக உழைத்தது,” என்று தெரிவித்தார்

என்னவொரு இறுமாப்பு, போலித்தனம்! ஈராக் மற்றும் லிபிய நெருக்கடிகளுக்கு (சிரியாவைக் குறிப்பிட வேண்டியதே இல்லை) அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமே பொறுப்பல்ல, இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் அது நடத்திய குற்றங்களே இப்போது ஈராக்கிய பேரழிவை உருவாக்க ஒட்டுமொத்தமாக திரண்டு வந்துள்ளன.  

ஈராக்கில், அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் மற்றும் ஒவ்வொரு அமைப்பையும் அழித்து, அமெரிக்க இராணுவம் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் சிதைக்க கட்டவிழ்த்துவிடப்பட்டு இருந்த அதேவேளையில் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களின் வாழ்க்கையை அது பறித்தது. ஒரு பிரித்தாளும் மூலோபாயத்தைப் பயன்படுத்தி, வாஷிங்டன் ஈராக்கிய தேசியவாதத்தைத் துடைத்தழிக்க குறுங்குழுவாத அரசியல் முறையை திட்டமிட்டு விதைத்ததால், அதன்மூலமாக கட்டவிழ்ந்த கடுமையான குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தம் இப்போது மீண்டும் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.    

லிபியா மற்றும் சிரியாவில், ஆட்சி மாற்றத்திற்கான குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தங்களில் அதிரடி துருப்புகளாக, ISIS உட்பட ஏனைய இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு வாஷிங்டன் நிதியுதவியும், ஆயுத உதவியும் அளித்து வந்தது, அப்போதும் அங்கே மீண்டும் ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டது. பஷார் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவும் மற்றும் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் வளைகுடா முடியாட்சிகளில் உள்ள அதன் பிற்போக்குத்தனமான பங்காளிகளும் ஆதரித்து வந்த ISIS, இப்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நெருப்பூட்டப்பட்ட ஒரு யுத்தத்தை எல்லையைக் கடந்து ஈராக்கிற்குள் ஒரு பிராந்திய பாரியமோதலாக திருப்பி வருகிறது. சிரிய எல்லைக்குள், ISISக்கு எதிராக இராணுவ தாக்குதல்கள் நடத்துவதற்காக வாஷிங்டன் அங்கே இப்போதிருக்கும் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகிறது, அதேவேளையில் ஈராக் எல்லைக்குள் அது பெரும்பிரயத்தனத்தோடு அதே ISISஐ தோற்கடிக்க அரசு படைகளை ஒழுங்கமைக்க முயன்று வருகிறது.         

ஈராக்கியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்க "இரத்தம் சிந்துவதை" பொறுத்த வரையில், ஈராக்கிய யுத்தத்திற்கு மறுவாழ்வு கொடுக்க கெர்ரியின் முயற்சியானது, புதிய மற்றும் இன்னும் குருதி கொட்டும் தலையீடுகளுக்குத் தயாரிப்பு செய்வதற்காக அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்த்திற்குச் சட்டப்பூர்வதன்மையைப் பெற முயலும் ஒபாமா நிர்வாகத்தினது(உண்மையில் இது யுத்த எதிர்ப்பு உணர்வின் ஒரு அலையால் பதவிக்கு கொண்டு வரப்பட்டது)ஒரு ஒருமித்த பிரச்சாரத்தின் பாகமாகும். ஈராக்கில் ஜனநாயகத்தை விதைக்கவோ அல்லது அதைவிட பாரிய பேரழிவு ஆயுதங்களைக் கண்டறியவோ அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்கவில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி மூலோபாய ஆதாரவளங்கள் மீதும் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவின் பிராந்தியங்கள் மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தைக் கொண்டு வர அமெரிக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதே அதன் நோக்கமாகும்.    

1971இல், வியட்நாமில் நான்கு மாதங்கள் இருந்து திரும்பி இருந்த ஒரு இளைஞரான கெர்ரி, வெகுஜனங்களைக் கொல்லுதல், கிராமங்களை அழித்தல், கைதிகளைச் சித்திரவதை செய்தல், கண்மூடித்தனமாக குண்டுவீசுதல் என அமெரிக்க படைகளின் குற்றங்களை விவரித்து வெளியுறவுகளுக்கான செனட் குழுவிற்கு யுத்தத்திற்கு எதிரான முன்னாள் வியட்நாம் இராணுவத்தினரின் ஒரு உருக்கமான அறிக்கையை வழங்கினார். இதே குற்றங்கள் அனைத்தும் ஈராக்கில் கடந்த மூன்று தசாப்தங்களில் மீண்டும் நடத்தப்பட்டிருந்தன.  

குழுவிற்கு அவர் வழங்கிய உரையில், கெர்ரி, வியட்நாம், கம்போடியா அல்லது லாவோசில் ஒரு அமெரிக்கரின் இழப்பை நியாயப்படுத்தும் முயற்சியில், சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு அந்த இழப்பை இணைத்து... நாம் குற்றகரமான பாசாங்குத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறோம், அந்த வகையான பாசாங்குத்தனம் தான் இந்த நாட்டை சீரழித்திருப்பதாக நாம் உணர்கிறோம், என்று அறிவித்து, அப்போதைய அமெரிக்க அரசியல்வாதிகளின் மீது குற்றப்பத்திரிகை வாசித்தார்.

வியட்நாம், கம்போடியா அல்லது லாவோஸ்" ஆகியவற்றிற்கு பதிலாக "ஈராக்" என்ற சொல்லை பிரயோகித்தால் ஒருவரால் 43 வயதான, நூறு மில்லியன் டாலர் பணக்காரரான கெர்ரியின் மீது மிகவும் துல்லியமாக பொருந்தக்கூடிய ஒரு குற்றப்பத்திரிகையை வைக்க முடியும்.