சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

வெலிவேரிய நீர் மாசடைவு பற்றிய தொழிலாளர் விசாரணையின் அறிக்கைகளை வெளியிடும் கூட்டத்திற்கு வருக!

By Independent Workers Inquiry into Water Pollution in Weliweriya
21 June 2014

Use this version to printSend feedback

வெலிவேரிய நீர் மாசடைவு பற்றிய சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவின் அறிக்கைகள் மற்றும் முடிவுகளை வெளியிடும் பகிரங்க கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சூழல் மாசடைவதை எதிர்க்கும் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), இந்த தொழிலாளர் விசாரணைக் குழுவை ஸ்தாபித்துள்ளது.

வெலிவேரிய ரதுபஸ்வலவில் அமைந்துள்ள, டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வெனிக்ரோஸ் ஆலையில் இருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவு நீரினால் பிரதேசத்தில் நிலத்தடி நீர் மாசடைவதன் காரணமாக, தாம் மோசமான சுகாதராப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறி வெலிவேரிய பிரதேசத்தின் மக்கள் மேற்கொண்ட பலம்வாய்ந்த பிரச்சாரத்தின் மத்தியிலேய கடந்த நவம்பரில் இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 1, பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நசுக்கவதற்காக, அரசாங்கம் அனுப்பிய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு மாணவர்களும் ஒரு இளம் தொழிலாளியும் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். குழுவை ஸ்தாபித்து, சோசலிச சமத்துவக் கட்சி அதன் விசாரணையில் பெற்ற விடயங்களை பின்வருமாறு வெளியிட்டது:

வெனிக்ரோஸ் நிறுவனம் பிரதேசத்தின் நீர் வழங்கலை மாசுபடுத்துதல் மற்றும் பிரதேசவாசிகளதும் தொழிலாளர்களதும் தேக ஆரோக்கியத்து அதனல் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.

ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் மற்றும் வேலை நிலைமைகள்.

ஆகஸ்ட் 1 நடந்த படுகொலைகளுக்கு யார் பொறுப்பு?

பிரதேசவாசிகளதும் தொழிலாளர்களதும் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தொழிற்துறை மாசுபடுத்தலுக்கு தீர்வு என்ன?

ஆலையை பியகமவுக்கு கொண்டு செல்வதாக அறிவித்தாலும், அதில் பிரச்சினை தீராததுடன், இன்னொரு பிரதேசத்தில் நீர் மாசடைவதற்கான நிலைமைகள் உருவாகுவதோடு, தொழிலாளர்களின் வேலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர் விசாரணை குழுவும் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்து சென்ற பல மாதங்களிலும் ஏற்பட்ட சகல அபிவிருத்திகளிலும், சுயாதீன விசாரணை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் சுட்டிக் காட்டிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படுவதையே காட்டுகின்றன. வெனிக்ரோஸ் ஆலையின் உரிமையாளரான டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்தை பாதுகாக்க முன்வந்துள்ள அரசாங்கம், அதை நீரை மாசுபடுத்தியதற்கான பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளதோடு, அந்த நிறுவனம் குறித்த ஆலையிலும் அதைச் சார்ந்த நிறுவனங்களிலும் சேவையாற்றிய நூற்றுக்கணக்கான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிலை நாசமாக்கியுள்ளது.

இராணுவத் தாக்குதலின் பின்னர், அரசாங்கமும் நிறுவனமும் தமது தீர்வுகளாக ஆலையை பியகம சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் மாற்றுவதாக வாக்குறுதியளித்தன. பியகமவில் ஆலை ஒன்று நிறுவப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுச் சூழல் அமைப்பொன்று கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில், நிறுவனத்தின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி, ஆலையை பிரதேசத்தில் இருந்து அகற்றப் போவதில்லை என்றும், வேறு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார். ஆலை வேறு ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளதனால் வழக்கை விலக்கிக்கொள்ளுமாறு அதை தாக்கல் செய்துள்ள சுற்றுச்சூழல் அமைப்பிடம் அரச தரப்பு சட்டத்தரணி கேட்டுக்கொண்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிறுவனமும் அரசாங்கமும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் சூழல் மாசடைவில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளதையே, நிறுவனத்தினதும் அரச சட்டத்தரணியினதும் பரஸ்பர முரண்பாடான கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. ரதுபஸ்வல வெனிக்ரோஸ் ஆலை சம்பந்தமாக நிறுவனம் செய்யப்போவது என்ன என்பது தெளிவாக இல்லாவிட்டாலும், அது தனது இலாபத்தை குவித்துக்கொள்ளவதில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவு. பிரதேசத்தின் மக்களுக்கு இலவசமாக நீர் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்து இருந்தாலும் ஒரு பகுதியினருக்கு மட்டுமே நீர் வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணசபை தேர்தலை ஒட்டியே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

தொழிலாளர்களின் தொழில் மற்றும் சம்பளத்தை வெட்டுவதற்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தொழிலாளர் விசாரணை விடுத்த எச்சரிக்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பியகமவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலைக்கு வெலிவேரிய ஆலையில் சேவையாற்றிய தொழிலாளர்கள் 60 பேரில் 30 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்ட போதும் இப்போது அவர்களையும் வெளியேற்றுவதற்கு குறி வைத்திருப்பதாக நிரந்தர ஊழியர் ஒருவர் விசாரணைக் குழுவுக்குத் தெரியப்படுத்தினார். புதிய ஆலையில் வேலை தொடங்கும் வரைதொழிலாளர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுத்தனர், அது எங்களை அமைதியாக வைத்திருப்பதற்கே, நான் 18 வருடங்கள் வேலை செய்துள்ளேன், என அவர் எம்மிடம் கூறினார்.

இப்போது எங்களுக்கு மூன்று தேர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று புதிய ஊழியர்களாக 9,000 ரூபா ஊதியத்துக்கு வேலை செய்தல், இரண்டாவது இன்னொரு டிப்ட் புரடக்ட்ஸ் ஆலையில் வேலை செய்வது மற்றும் விருப்பத்துடன் சேவையில் இருந்து விலகிக்கொள்ளுதல்.

வெனிக்ரோஸ் தொழிற்சாலையில் வேலை செய்த 60 நிரந்தர தொழிலாளர்களுக்கும் மேலதிகமாக அந்த ஆலையிலும் அதைச் சார்ந்த ஏனைய ஆலைகளிலும் சுமார் 600 தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை செய்தனர். இந்த தற்காலிக தொழிலாளர்களில் அநேகமானவர்களுக்கு வேலை பறிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆலையில் நடக்கும் சுற்றுச் சூழல் மாசடைவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக ஆலை நிர்வாகம் சேகரித்துக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே பல தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலையின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக தொழிலாளர்களின் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்ததோடு வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி பிரதேசத்தின் மக்களை தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது.

இந்த வகையில், ஒரு பக்கம் ஆலை பிரதேச மக்களின் உரிமைகளை அபகரித்துக்கொள்கின்ற அதே வேளை, மறுபக்கம் தொழிலாளர்களின் உரிமைகளை அபகரிப்பதில் கொடூரமாக ஈடுபட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. அது முற்றிலும் அக்கறை காட்டுவது இலாபத்தை குவித்துக்கொள்வதற்கே. ஆலையை மறுசீரமைப்பதன் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் தொழில் வெட்டை முன்னெடுத்துள்ளது.

நிறுவனம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் படி, முந்திய ஆண்டின் விற்பனை 14.7 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் கடந்த ஆண்டு அது 13.4 பில்லியனாக குறைந்துள்ளது. வரி கட்டுவதற்கு முன்னதாக இலாபம் 29 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு கையுறை பகுதியின் இலாப வீழ்ச்சி 32 வீதமாகும். ரதுபஸ்வல உற்பத்தி இடை நிறுத்தப்பட்டமையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த இலாப வீழ்ச்சியை தொழிலாளர்கள் மீது சுமத்தி சுரண்டலை உக்கிரமாக்குவதே நிறுவனத்தின் திட்டமாகும்.

டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஹங்வெல்லையில் துன்னான பிரதேசத்தில் உள்ள இரப்பர் உற்பத்தி ஆலையின் (எச்ஆர்பீ) கழிவு நீர் மற்றும் விசப் புகையினால், அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கிய கேட்டை பற்றி ஒரு சுயாதீன தொழிலாளர் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் உச்சளவில் தோன்றியுள்ளது. தீர்வு கோரி துன்னான மக்கள் முன்னெடுத்த பிரச்சாரத்தை அரசாங்கத்தின் உதவுயுடன் ஏவப்பட்ட பொலிஸ் ஒடுக்குமுறையுடனேயே நிறுவனம் ஒடுக்கியது. அங்குள்ள மக்கள் மார்ச் 16 நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதலை நடத்திய அரசாங்கம், டஜன் கணக்காணவர்களை கைது செய்ததோடு இருவரை இன்னமும் தடுத்து வைத்துள்ளது. அந்த இருவர் மீது கொலை குற்ற சந்தேக நபர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளதுடன் நீதி மன்றத்தில் அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்த முற்படுகின்றது.

பிரதேசத்தில் மக்களின் பிரச்சாரம் விரிவடையும் போது முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பீ) அதனுடன் கூட்டணியில் தொங்கிக்கொண்டுள்ள நவ சமசமாஜ கட்சியும் (நசசக) ஐக்கிய சோசலிசக் கட்சியும் (யுஎஸ்பீ), ஆலையை பிரதேசத்தில் இருந்து அகற்றுவதே ஒரே தீர்வு என அறிவித்தன. மக்களின் எதிர்ப்பை யுஎன்பீக்கு அடிபணியச் செய்யவே நசசக மற்றும் யுஎஸ்பீயும் செயற்பட்டன. பிரதேசத்தில் இருந்து ஆலையை அகற்றும் கோரிக்கை மிகவும் குறுகிய நோக்கம் கொண்டதாகும். வெலிவேரிய பிரதேசத்தில் நடந்த சுற்றுச் சூழல் மாசடைவு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து ஆலைக்கு உரிய நிறுவனம் கை கழுவிக்கொள்வதற்கு அதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதும் இன்னொரு பிரதேசத்தில் அதே பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இடமளிப்பதுமே இதன் மூலம் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ) இதே போன்ற நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. இந்த அமைப்புகள் இன்று வெலிவேரிய பற்றி மௌனமாக இருக்கின்றன. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் இந்த கட்சிகள் ஆழமாக எடுத்துக்கொள்வதில்லை.

சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழு, கடந்த பல மாதங்களாக அரசாங்கமும் நிறுவனமும் செய்யும் மூடிமறைப்புகள் மற்றும் வெலிவேரிய மற்றும் துன்னான மக்களை அச்சுறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கின்ற சூழ்நிலையின் கீழ், நெருக்கடியான நிலைமைகளின் மத்தியில் தனது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. மக்களையும் தொழிலாளர்களையும் அலட்சியம் செய்து இந்த நிறுவனம் செயற்படுகின்ற விதம், மற்றும் சூழல் மாசடைவுக்கு அதன் பொறுப்புடைமை பற்றியும் மிகவும் முக்கியமான தகவல்களை அடையாளம் காண்பதில் விசாரணைக் குழு வெற்றி கண்டிருந்தது.

இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகின்ற முதலாளித்துவ நிறுவனங்கள், விசேடமாக பின்தங்கிய நாடுகளில் சூழல் மாசுபடும் வண்ணம் செயற்படுகின்றன. முதலாளித்துவ நெருக்கடி மேலும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், சகல நாடுகளிலும் முதலாளித்துவ கூட்டுத்தாபனங்கள் அவ்வாறு செயற்படுவது கேட்பாரற்று இடம்பெறுகின்றது. மனிதனின் தேவைகளுக்காக தக்க முறையில் உற்பத்தி செய்யப்படும் பொழுது, அதாவது சோசலிச முறையினுள், மட்டுமே இந்தப் பிரச்சினையை தீர்த்தக்கொள்ள முடியும்.

வெலிவேரிய நீர் மாசடைவு பற்றிய சுயாதீன தொழிலாளர் விசாரணை:

விசாரணை அறிக்கை மற்றும் முடிவுகளை அறிவித்தல்

ஜூன் 29, பி.. 2.00 மணி

வெலிவேரிய விலா கயா விருந்தளிப்பு மண்டபம்