சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One hundred years since Sarajevo

சாரயேவோவிற்குப் பின்னர் ஒரு நூறு ஆண்டுகள்

David North
28 June 2014

Use this version to printSend feedback

முதலாம் உலக போர் வெடிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த சம்பவத்தின் நூறாவது நினைவுதினத்தை இன்றைய நாள் குறிக்கிறது. ஜூன் 28, 1914, ஞாயிறன்று காலை, ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசர் பிரான்ஸ் ஜோசெப்பின் மருமகனும் அவரது அரசியல் வாரிசுமான ஆர்ச்டூக் பிரான்ஸ் பெர்டினான்ட், பொஸ்னியாவிற்கான அவரது அரசுமுறை விஜயத்தின் கடைசி நாளில், சாரயேவோ வழியாக அவரது காரில் பவனி வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். ஆர்ச்டூக்கின் மனைவி சோபியாவும் சுட்டு கொல்லப்பட்ட அந்த சம்பவத்தின் குணாம்சம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்த போதினும், ஹாப்ஸ்பேர்க் வம்சத்தின் வழிதோன்றல் கொல்லப்பட்டமை இந்தளவிற்கு குறிப்பிடத்தக்க முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமென அங்கே எதிர்பார்க்கப்படவில்லை.

எவ்வாறிருந்த போதினும் ஜூலை 1914 வாக்கில் அந்த படுகொலையை தொடர்ந்து ஏற்பட்டிருந்த நெருக்கடி படிப்படியாக தீவிரமடைந்தது. பிரதான ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகள் காட்டிய விடையிறுப்பானது, அதற்கு முந்தைய தசாப்தத்தில் அவற்றின் முரண்பாடான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் உருவாகியிருந்த பதட்டங்களால் நிபந்தனைக்குட்பட்டிருந்தது. பால்கன் நாடுகள் மீதான ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்தின் மேலாதிக்கத்திற்கு சேர்பிய தேசியவாத அபிலாஷைகள் சவாலாக இருந்ததால், பிற்போக்குத்தனமான ஹாப்ஸ்பேர்க் முடியாட்சி சேர்பிய ஆட்சி மீது தாக்குதலை நடத்துவதற்கு ஒரு சாக்காக அந்த படுகொலையை பற்றிக் கொண்டது.

முற்றிலும் ஏற்றுக் கொள்ளவியலாத, யுத்தத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய இறுதி எச்சரிக்கையோடு சேர்பியர்களைத் தாக்க பேர்லினில், பேரரசர் இரண்டாம் வில்ஹெல்ம் (Emperor Wilhelm II) ஆட்சி ஆஸ்திரிய-ஹங்கேரிய அரசாங்கத்திற்கு பச்சைக்கொடி காட்டியது. சேர்பியா மீதான ஆஸ்திரிய படையெடுப்பு, ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தை அதன் பால்கன் நாடுகள் மீதான நலன்களைப் பாதுகாக்க ஒரு தலையீடு செய்ய தூண்டுமென்பதை அறிந்தே ஜேர்மனி இந்த நடவடிக்கையை எடுத்தது. ஜேர்மன் ஆட்சியோ ரஷ்யா உடனான ஒரு மிகப்பெரிய யுத்தத்தின் சாத்தியக்கூறை, கிழக்கு ஐரோப்பாவில் அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கும், அவ்விதத்தில், அக்கண்டம் முழுவதிலும் அதிகார சமநிலையை மாற்றுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்த்தது.

ஆனால் இந்த சாத்தியக்கூறு, ஜேர்மன் அதிகார வளர்ச்சியைத் தடுக்க ரஷ்யாவோடு ஒரு கூட்டணிக்குள் நுழைந்திருந்த பிரான்சின் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியது. ஜேர்மன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு யுத்த சம்பவத்தில், பிரான்ஸ் ஒதுங்கி இருந்து ஒரு ஜேர்மன் வெற்றியை ஏற்றுக் கொள்ள பிரெஞ்சு முதலாளித்துவம் தயாராக இல்லை. அதேவேளையில், ஜேர்மன் ஆட்சியோ ரஷ்யா உடன் யுத்தம் வெடித்தால் பிரான்ஸ் மீது ஒரு தாக்குதல் நடத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை, நீண்ட காலத்திற்கு முன்னரே, தயார் செய்திருந்தது.

அந்த நெருக்கடி ஒரு பேரழவுகரமான உச்சக்கட்டத்திற்கு இட்டு சென்றது. ஆகஸ்ட் முதல் வார வாக்கில், ஐரோப்பாவின் பிரதான சக்திகள்ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஒருபுறமும், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் பிரிட்டன் மறுபுறமும் இருக்கயுத்த நிலையை எடுத்திருந்தன.

ஜூன் 28இல் சாரயேவோ படுகொலையிலிருந்து ஆகஸ்டின் முதல் வாரங்களின் வாக்கில் ஒரு முழு அளவிலான ஐரோப்பிய யுத்தத்திற்கு இட்டு சென்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வரையில் இவற்றை பகுத்தாராய்ந்து கணக்கற்ற தொகுப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய இலக்கியத்தில் பெரும்பாலானவை, அந்த யுத்தம் வெடித்ததற்கு முதன்மையான பொறுப்பை எந்த ஆட்சியின் மீது சுமத்துவதென்பதையே ஸ்தாபிக்க முனைகின்றன. இருப்பினும் ஏதாவதொரு அரசாங்கத்தின் யுத்த நோக்கங்களோடு தொடர்புடைய முக்கிய தகவல்களைக் கண்டறியசான்றாக, ஜேர்மன் ஆட்சியின் தொலைதூர அபிவிலாஷைகள் போன்றவற்றை அறியஇந்த ஆய்வுகள் இட்டு சென்றிருகின்றன என்றபோதினும், யுத்தத்திற்கான இன்றியமையா காரணங்கள் மீது ஓர் ஆழ்ந்த மட்டத்திலான பகுப்பாய்வு அவசியப்படுகிறது.

பெரிதும் பற்றியெறியக் கூடிய விதத்தில் இருந்த ஐரோப்பிய மற்றும் சர்வதேச புவிசார் அரசியலின் கட்டமைப்பை எரியூட்ட சாரயேவோ படுகொலை ஒரு தூண்டுபொறியாக இருந்தது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆஸ்திரிய பேரரசரின் மருமகன் படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் ஆகஸ்ட் 1914இல் அந்த யுத்தம் வெடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று வைத்து கொண்டாலும் கூட, உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ, வேறு ஏதேனும் ஒரு சம்பவம் ஒரு பொதுவான யுத்தத்திற்கு இட்டு சென்றிருக்கும்.

உண்மையில், முதலாம் உலக போர் வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளில், பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே காலனிகள் மற்றும் நிதியியல் நலன்களின் மீது நிலவிய முரண்பாடுகளில் இருந்து பல "யுத்த அச்சுறுத்தல்கள்" அங்கே ஏற்பட்டிருந்தன. ஐரோப்பாவின் அரசியல் சூழல் அதிகளவில் பதட்டமாக இருந்தது. ஆயுதங்களுக்கான அரசு செலவுகள், இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் போது பிரமாண்டமாக அதிகரிக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் அகிலத்தின் பதாகையின் கீழ் வளர்ந்து வந்த தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கம், முதலாளித்துவ இராணுவவாதத்தால் முன்னிறுத்தப்பட்ட அபாயங்களைக் குறித்து அதிகளவில் எச்சரிக்கையூட்டி வந்தது. “வல்லரசுகளுக்கு" இடையிலான யுத்த சாத்தியக்கூறு முதலாளித்துவ அமைப்புமுறையின் தன்மையிலிருந்து எழுந்ததாகும். 1902இன் தொடக்கத்தில், மார்க்சிச தத்துவவியலாளர் ரூடோல்ஃப் ஹில்பெர்டிங், "கூர்மை அடைந்துவரும் உலகச் சந்தைக்கான போராட்டம் முதலாளித்துவ தேசங்களினது வெளியுறவு கொள்கைகளில் விளைவுகளைக் காட்டாமல் இருக்க முடியாது,” என்று எச்சரித்தார். “ஆயுத தளவாடங்களை அதிகரிப்பது, கடற்படைகளின் வளர்ச்சி, உள்நாட்டு பிற்போக்குத்தனம், வன்முறை மற்றும் வெளியுறவுகளில் சமாதானத்தின் மீது எச்சரிக்கை விடுத்தல், இவையனைத்தும் முதலாளித்துவ வர்த்தக கொள்கையின் புதிய கட்டத்திற்கு அவசியமான விளைவுகளாகும்,” என்று குறிப்பிட்டார். [ரிச்சார்ட் பி. டே மற்றும் டானியல் கெய்டோவினால் திருத்தம் பார்க்கப்பட்ட, Discovering Imperialism: Social Democracy to World War I, (சிகாகோ, 2011), பக்கம். 348-49, நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது]

அந்த தசாப்தத்தின் ஓட்டத்தில், ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான தாக்கங்கள் மேலும் மேலும் வெளிப்படையாக வெளிப்பட்டு வந்த நிலையில், யுத்த எதிர்ப்பு போராட்டம் இரண்டாம் அகிலத்தின் பணிகளின் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 1907இல் ஸ்ருட்கார்டில் இரண்டாம் அகிலம் அதன் மாநாட்டில் காலனித்துவத்தைப் பகிரங்கமாக கண்டித்தது, அது "அடிமைத்தனம், பலவந்த உழைப்பு, அல்லது காலனித்துவ பிராந்தியங்களின் சொந்த மக்களை நிர்மூலமாக்குதல் இவைகளுக்கே இட்டு செல்லும். நாகரீகப்படுத்தும் நோக்கத்திற்கு சேவை செய்வதற்காக என்று வாதிடும் முதலாளித்துவ சமூகத்தின் வாதங்கள், அபகரிப்பதற்கும் சுரண்டுவதற்குமான அதன் வேட்கைக்கு ஒரு போலிக்காரணமே அல்லாது வேறொன்றுமில்லை,” என்று அறிவித்தது. [மேலே குறிப்பிடப்பட்ட அதே ஆதாரத்திலிருந்து, பக்கம். 28]

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1912இல் பாசிலில் அதன் மாநாட்டில் இரண்டாம் அகிலம் பிரசுரித்த ஒரு அறிக்கையில் பின்வருமாறு அறிவித்தது:

ஒரு யுத்தம் வெடிப்பதற்கு அச்சுறுத்துகிறதென்றால், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கமும் மற்றும் அவற்றின் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் அவர்கள் மிக மிக பயனுள்ளதாக கருதும் வழிவகைகளைக் கொண்டு யுத்தம் வெடிப்பதை தடுக்க எல்லா முயற்சியையும் முன்னெடுப்பது அவர்களின் கடமையாகும்... எவ்வாறாயினும் யுத்தம் வெடித்தே ஆகுமென்றால் அதை விரைவாக முடிவுகட்டுவதற்கு சாதகமாக தலையீடு செய்வதும், அவர்களின் முழு சக்தியைப் பிரயோகித்து யுத்தத்தால் தோற்றுவிக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி மக்களை எழுச்சியுற செய்வதும் மற்றும் அதன் மூலமாக முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வீழ்ச்சிக்கு வித்திடுவதும் அவர்களின் கடமையாகும்.

ஆனால் அதற்குப் பின்னர் இரண்டுக்கும் குறைவான காலத்தில் யுத்தம் வெடித்த போது, இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் அவர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட பொறுப்பைத் கைத்துறந்தார்கள். ஆகஸ்ட் 4, 1914இல் அகிலத்தில் மிகவும் பெரியதும், செல்வாக்கு மிக்க பிரிவாக விளங்கிய ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) யுத்தம் நடத்த உதவியாக, அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க வாக்களித்தது. இந்த அரசியல் துரோக நடவடிக்கையானது ஒரு புரட்சிகர சக்தியாக இருந்த இரண்டாம் அகிலத்தின் முடிவைக் குறித்தது. ஒரு புரட்சிகர அகிலத்தை மறுகட்டுமானம் செய்யும் வேலையானது, தேசிய ஆளும் வர்க்கங்களிடமும் மற்றும் ஏகாதிபத்தியதிடமும் இரண்டாம் அகிலம் மண்டியிட்டதை எதிர்த்தவர்கள் மீது விழுந்தது. அந்த போராட்டத்தில் விளாடிமீர் லெனின் முக்கிய பாத்திரம் வகித்தார். அவரது யுத்த எதிர்ப்பும், சோசலிச சர்வதேசியவாதத்திற்கான பாதுகாப்பும் அக்டோபர் 1917இல் ரஷ்யாவில் சோசலிச புரட்சியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

யுத்தம் வெடிப்பதற்கு காரணமான தங்களின் சொந்த அரசாங்கங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்து யாரெல்லாம் அவர்களின் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தினார்களோ அத்தகைய இரண்டாம் அகிலத்தவர்களுக்கு எதிரான எதிர்ப்பில், லெனின் அறிவிக்கையில், யுத்தம் ஏகாதிபத்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்திலிருந்து வளர்ந்து வந்ததாகும், அதற்கு எல்லா அரசாங்கங்களும் குற்றவாளிகளாகின்றன என்று அறிவித்தார். அதற்குப் பிந்தைய ஆய்வுகள் லெனினின் குற்றப்பத்திரிகையை நிரூபணம் செய்தன. ஒவ்வொரு அரசாங்கமும் அதன் சொந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்க தீர்க்கமாக இருந்தன. ஒரு வரலாற்றாளர் எழுதியதைப் போல, “நடைமுறையில் அவர்கள் அனைவரையும் பொறுத்த வரையில், யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தமை ஒரு படுமோசமான முடிவாக இருக்கவில்லை.” [டேவிட் ஜி. ஹேர்மான் எழுதிய ஐரோப்பாவின் ஆயுதமேந்தலும், முதலாம் உலக யுத்தத்திற்கு ஆயத்தமாதலும் எனும் நூலில் இருந்து, (பிரின்ஸ்டன், 1996), பக்கம். 226]

அந்த உலக யுத்தம் தவறான கொள்கையால் எதிர்பாராமல் விளைந்த ஒரு விபத்தல்ல. அது முதலாளித்துவ அமைப்புமுறையின் மற்றும் தேசிய அரசு அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்தும் தவிர்க்க முடியாமல் எழுந்ததாகும். அந்த யுத்தம் தொடங்கிய பின்னர் வெகு விரைவிலேயே, இரண்டாம் அகிலத்தின் காட்டிகொடுப்புக்கு எதிராக இருந்த மற்றொரு புரட்சிகர எதிர்ப்பாளர், லியோன் டிரொட்ஸ்கி, அந்த யுத்தத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை விவரித்தார்:

இந்த யுத்தம் தேசிய அரசுகளின் வீழ்ச்சியை பறைசாற்றுகிறது. இருப்பினும் அதேவேளையில் முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையின் வீழ்ச்சியையும் பறைசாற்றுகிறது.

1914 யுத்தமானது, அதன் சொந்த உள் முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் வரலாற்றில் மிகவும் பிரமாண்டமான உடைவாகும்.

ஆனால் பொருளாதார அமைப்புமுறையின் முரண்பாடுகள் யுத்தத்தில் மட்டுமே வெளிப்பாட்டைக் காண்பதில்லை. உலக முதலாளித்துவ நெருக்கடியின் மற்றொரு விளைவையும் ட்ரொட்ஸ்கி முன்கணித்தார்:

முதலாளித்துவம், ஒரு புதிய சோசலிச பொருளாதார அமைப்புமுறைக்கு சடரீதியிலான நிலைமைகளை உருவாக்கி உள்ளது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவ தேசங்களை வரலாற்று ரீதியிலான குழப்பங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. 1914இன் யுத்தம் பாட்டாளி வர்க்கத்தை பலவந்தமான முறையில் புரட்சிகரப் பாதைக்கு வர வலியுறுத்துவதன் மூலமாக, இந்த குழப்பங்களில் இருந்து வெளி வருவதற்கான வழியைக் காட்டுகிறது. [யுத்தமும் அகிலமும் (கொழும்பு, 1971), பக்கம். Vii-viii]

சாரயேவோ சம்பவத்திற்குப் பின்னர் ஒரு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நூற்றாண்டு காலபோக்கில், பத்து மில்லியன் கணக்கான உயிர்களை விலையாக கொடுத்து மனிதகுலம் இரண்டு பேரழிவுகரமான உலக யுத்தங்களைக் கடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததில் இருந்து ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட எண்ணிலடங்கா உள்நாட்டு யுத்தங்கள் இன்னும் கூடுதலாக பத்து மில்லியன் கணக்கானவர்களை விலையாக எடுத்திருக்கின்றன. இருந்தும், இப்போது மற்றொரு பூகோளம் தழுவிய மோதலுக்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மனிதகுலத்தால் மற்றொரு உலகப் போரை தாங்க முடியாது, அது தவிர்க்கவியலாமல் அணுஆயுதங்களோடு நடத்தப்படும். அதுபோன்றவொரு பேரழிவைத் தடுத்தாக வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, ஏகாதிபத்தியம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை எடுக்க உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக இந்த நினைவாண்டை அனுசரிக்கிறது.