சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The Grand Budapest Hotel from Wes Anderson

வெஸ் ஆண்டர்சனின் The Grand Budapest Hotel 

By Joanne Laurier 
25 March 2014

Use this version to printSend feedback

கதை ஆண்டர்சன் மற்றும் ஹியூகோ கின்னஸ், திரைக்கதை ஆண்டர்சன்; இயக்கம் வெஸ் ஆண்டர்சன்.

வெஸ் ஆண்டர்சனின் சமீபத்திய திரைப்படமான The Grand Budapest Hotel  ஒரு நவீனமான, கற்பனையான, சில இடங்களில் நகைச்சுவையும் மற்றும் இரு உலக யுத்த காலகட்டத்திற்கும் ஐரோப்பாவில் பாசிச படைகளின் தோற்றத்திற்கும் இடையிலான காலகட்டத்தை மறுபடியும் கற்பனை செய்திருக்கும் விதத்தில் சில இடங்களில் சோகமும் கொண்ட ஒரு திரைப்படம். இயக்குனர் ஆண்டர்சனின் எட்டாவது திரைப்படமான இது, அவர் பெரும் வரலாற்று கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியின் ஓர் ஆரம்பமாகும்.

இயக்குனரது நோக்கம் மதிப்பு வாய்ந்த ஒன்று. ஆயினும், ஆண்டர்சனின் இறுக்கமான இசை, இப்புதிய திரைப்படத்தின் காட்சிகளும் வித்தியாசமான கதாபாத்திரங்களும் கவர்ச்சிகரமான வகையில் ஈர்க்கும் வேளையில், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுடன் உண்மையான சித்தரிப்பிற்கு இணையான ஒரு படைப்பாகவே தெரிகிறது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ளவற்றுக்காக கருத்து தெரிவிக்கும் பணி போல் அல்லாமல், The Grand Budapest Hotel காட்சி ரீதியில் ஈர்க்கின்ற, சுவாரஸ்யமான ஒரு திரைப்படம்மொத்தத்தில், ஒரு காட்சியில் ஒரு காலத்தில் மனிதநேயமிக்கதாக அறியப்பட்டது இப்போது கோரமான பலிபீடம்போன்று இருப்பதாக ஒரு கதாப்பாத்திரம் வர்ணிப்பது, பாசிசத்தின் எழுச்சி உள்ளிட்ட அந்த காலகட்டத்தின் ஐரோப்பிய சூழ்நிலையை சித்தரிப்பதில் வெற்றிபெறவில்லை.


The Grand Budapest Hotel

ஆண்டர்சன் வாழ்க்கை மற்றும் கலையை நோக்கிய வழக்கத்திற்கு மாறான உணர்ச்சியும் அணுகலும் கொண்டிருக்கிறார். நகைச்சுவையாக, கற்பனையாக மற்றும் அபத்தமாக இருப்பினும் கருணையுள்ளதாக இருக்கிறது. சில நேரம் அதன் காரணமாகவே அவர்  தனிநபர் சுதந்திரத்தைக் கொண்டாடுவதுடன் வெளி நபர்கள், பொருந்தாத குணாதிசயம் கொண்டவர்கள் மற்றும் சுதந்திரமான மனநிலை கொண்டவர்கள்ஆகியோர் குறித்த ஈர்ப்புடையவராக இருக்கிறார். இவரது சிறந்த திரைப்படங்களான Rushmore (1988), The Royal Tenenbaums (2001) மற்றும் The Life Aquatic with Steve Zissou (2004) ஆகியவை பல்வேறு வடிவத்திலான சமுதாய மற்றும் தனிநபர் அந்நியப்படுதலை அழுந்தக்கூறும் கருத்துக்களை ஆராய்ந்தன.

துரதிர்ஷ்டவசமாக, இவரது கடைசி இரண்டு திரைப்படங்களான The Darjeeling Limited (2007) மற்றும் Moonrise Kingdom (2012) –ல் ஆண்டசனின் அடையாளமான துல்லியத்தன்மையும் சுவாரஸ்யமும் குறைந்து காணப்பட்டது. அதிக சுவாரஸ்யமின்றி இவ்விரு திரைப்படங்களும் தட்டையாக இருந்தது. சில தகுதிகளுடன் இன்றுவரை The Grand Budapest Hotel இவரது சிறந்த திரைப்படமாக இருக்கிறது.

இப்புதிய திரைப்படத்தின் கதை 1985 -ல் வயதான ஆசிரியர் ஒருவர் (டாம் வில்கின்சன்) அவரது கதையை சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது, 1968ல் ஆழ்ந்த மற்றும் உண்மையான தனிமையில் இருந்தவர் ஸீரோ முஸ்தபா (F. முர்ரே ஆப்ரஹாம்); ஸுப்ரோவ்கா குடியரசில் (புனைவு) ஒரு காலத்தில் சொகுசாக இருந்த அவர் தற்போது வெறுமையாகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒரு உணவகத்தின் சொந்தக்காரராவார். அவ்விடம் முன்பு ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசாக இருந்த தொலை தூரப்பகுதியில் இருக்கும் ஓரிடமாகும். கீழ்நிலையில் ஒரு தரகராக இருந்த தான் எப்படி ஒரு உணவகத்தின் முதலாளியாக உயர்ந்தார் என்ற நினைவுகளை முஸ்தபா நினைத்துப் பார்க்கிறார்.

அது 1932 ம் வருடம், ஐரோப்பாவில் செல்வந்தர்களுக்கான மிகவும் பிரபலமான மற்றும் கவர்ச்சியான இடங்களுள் Grand Budapest உணவகமும் ஒன்று. அதன் காவல்காரரான குஸ்டவ். H (ரால்ஃப் ஃபீனஸ்) கவர்ச்சிகரமானவரும், அக்கறைமிகுந்தவருமாவார்; உணவத்தின் அனைத்து முதலாளிகளின் தேவைக்காகவும் பணியாற்றுபவர். குஸ்டவ் தனது கோரிக்கை வைக்கும் (மற்றும் வயதான) காதலியை சமாளித்து வருவதுடன் சிறிதளவு உண்மையுடனும் கைதேர்ந்த ஏமாற்று கலைத் திறத்துடன் உணவக ஊழியர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். Madame D (கொஞ்சம் கூட அடையாளம் காணமுடியாத தோற்றத்தில் டில்டா ஸ்விண்டன்) என்றும் அறியப்படும் 84 வயதான dowager countess, Madame Cline Villeneuve Desgoffe und Taxis இவரின் மிகத் தீவிரமான வாடிக்கையாளராவார்.


The Grand Budapest Hotel

இத்திரைப்படத்தில் Madame D யின் திடீர் மரணம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. பின் கதை புலம்பெயர்ந்த தரகர் சிறுவனான குஸ்டவ் H மற்றும் அவரது பொறுப்பினையும் இளம் ஸெரொ முஸ்தபாவையும் (டோனி ரிவோலரி) தொடர்கிறது. குஸ்டவ் மீது Madame D யின் குடும்பத்தார் குற்றம் சுமத்தும் முயற்சிகள் மற்றும் அந்த வயதான பெண்மனி அவனுக்காக எழுதி வைத்துள்ள உயிலுக்காக அவனிடம் கொள்ளையடிப்பது ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் அதிகரித்துவரும் அடக்குமுறை மற்றும் போரின் அச்சுறுத்தல் ஆகியவற்றையும் சித்தரிக்கிறது.

இறுதியில் விருப்பமில்லாதிருந்தாலும் குஸ்டவையும் ஸீரோவையும் லுட்ஸ் இராணுவ காவல் துறையின் கேப்டனான ஆல்பர்ட் கெங்கில்ஸ் (எட்வர்ட் நோர்டான்) பின் தொடர்வதுடன் பாசிச குண்டரான ஜோப்லிங் (வில்லெம் டஃபாய்) ரூபத்தில் அவர்களை கெட்ட சக்திகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கின்றன. குஸ்டவ் ஒரு கொலைப்படையை எதிர்கொள்கிறான், அது குறித்து நமக்கு முன்னதாக காண்பிக்கப்படுவதில்லை. பின்பு, எல்லையில் ஆரம்பத்தில் ஸீரோவை முரட்டுத்தனமாக தள்ளும்போது, அவர் ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே, நீங்கள் அவரை கைது செய்ய முடியாது என்று குஸ்டவ் எதிர்க்கிறான்.

திருப்பம் மற்றும் சுவாரஸ்யத்திற்காக Madame D யின் எஸ்டேட், ஒரு பிரபல ஓவியம் மற்றும் அவளது வாரிசுகள் என கதைக்களத்தில் தொடர்புடைய வகையில் ஏகப்பட்ட துரத்தல் காட்சிகள் நிரம்பியுள்ளதுமகள்கள் மற்றும் பொறாமைக்காரர், ஏமாற்று பேர்வழி மகனான டிமிட்ரி (ஆட்ரியன் பிராடி), நச்சுப்பல் கொண்ட, பித்தளை விரல்-வளையங்கள் அணிந்த அவரது அடியாள் ஜோப்ளிங் போன்றவர்கள் பொருத்தமில்லாதவையாகவே தெரிகிறது. இந்த கூட்டத்தில் அதிகம் அர்த்தமுள்ள (மற்றும் பாதிப்புக்கு உள்ளாகிற) கதாபாத்திரமென்றால் அது Madame Dயின் வக்கீலான வில்மோஸ் கொவாக்ஸ் (ஜெஃப் கோல்ட்ப்ளம்) மற்றும் மில்லினியரின் நம்பிக்கைக்குரிய கசாப்பு கடைக்காரரான செர்ஜ் எக்ஸ் (பிரெஞ்சு நடிகரான மேதிவ் அமல்ரிக்), இவர்கள் இருவரும் சதிகாரர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

கடைசியாக, ஒரு இடைக்கால சகாப்த சிறையும் அகழி முழுவதும் முதலைகளால் காவல் காக்கப்படுவதுமான, சோதனை-இடம் 19 குற்றவாளிகளுக்கான முகாமிற்கு வந்து சேர்கிறான் குஸ்டவ். முட்களால் கம்பியிடப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அந்த இடமானது ஒரு வதை முகாம் போலக் காட்சியளிக்கிறது.

ஸீரோவின் இளமையான காதலியும் கவல்துறைக்கு எதிராக உடந்தையாக இருக்கும் அகதா (சோர்சி ரோனன்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, மயக்குகின்ற மாவுப்பண்ட சமையல்கலையில் பயிற்சி பெற்று வருபவள்.

ஆண்டர்சன் திரைப்படத்தில் தோன்றும் வழக்கமானவர்கள் பில் முர்ரே மற்றும் பாப் பாலபன் ஆகியோர் உலகின் சிறந்த உணவகங்களில் அறங்காவலர்களுக்கான ஓர் அமைப்பான The Society of the Crossed Keys -ன் உறுப்பினர்களாக வருகிறார்கள். மற்ற பிரபலங்கள் (ஓவன் வில்சன், ஜேசன் ஸ்வார்ட்ஸ்மேன்) கொஞ்ச நேரம் வந்து போகிறார்கள்.

 


The Grand Budapest Hotel

ஆண்டர்சனின் The Grand Budapest Hotel  வரலாற்றின் ஒரு சிக்கலான கால்கட்டத்தை  அல்லது பெரும் கேள்விகளான; போர், ஒடுக்குமுறை, அகதிகளை அணுகல், எல்லைகளின் பகுத்தறிவற்ற தன்மை போன்றவற்றை தொட்டுச் செல்லும் ஒரு திரைப்படம் எனலாம். எழுத்தாளரும் இயக்குனரும், தனது நாடக சேவையில் அவரது நவீன அம்சங்களை சிறப்பாக வரிசைப்படுத்தியுள்ளார் என்பதையும் பின்னர் அதன் மீதான அக்கறைகள் அவரைப் பொறுத்தவரையில் வழக்கமானதாக இருந்துள்ளன என்ற உண்மையையும் நியாயப்படுத்த இது உதவக்கூடும். அலங்காரம், வடிவமைப்பு மற்றும் இசை போன்ற பல்வேறு அம்சங்கள் அதிகம் ஒன்றியுள்ளது. (அலெக்ஸாண்டர் டெஸ்ப்ளேட்டின் பிரமாதமான, நாடோடிகள் சார்ந்த பின்னணி இசை மத்திய ஐரோப்பிய இசைக்கருவிகளையும் மெக்ஸிகோவிலிருந்து வந்திருக்கும் 50 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பாலலைகா இசையினையும் இணைக்கிறது)

ஃபீனஸ் ஒரு கச்சிதமான நடிப்பு வாகனம். துரதிர்ஷ்டவசமாக இருந்தபோதிலும், கட்டுப்படுத்த முடியாத வகையில் ஆற்றல் வாய்ந்த மற்றும் மனித நேயமிக்கவர், அவர் ஒரு இளம் அகதியின் கருணையுள்ள மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு தலைவர், அவரது குடும்பமும் கிராமமும் அழிக்கப்பட்டிருப்பதுடன் முகத்தில் ஒரு குறியுடன் இருக்கும் ஒரு தனியான பெண். அகதாவாக ரோனன், ஆழ்ந்த உணர்ச்சியினையும் தொடர்ந்து நிகழும் சம்பவங்களுக்கான உணர்வினையும் சேர்க்கிறார். அதில் மனிதநேயம் காணப்படுவதுடன் கஷ்டப்படுபவர்களுக்கான இரக்கமும் இருக்கிறது.

சுவாரஸ்யமாக, The Grand Budapest Hotel  -க்கான தூண்டுதலாக இருந்தது என்ற காரணத்தால் ஆஸ்திரேலிய நாவலாசிரியர், நாடக எழுத்தாளர், பத்திரிக்கையாளர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளரான ஸ்டீஃபன் ஸ்வீக்கின் (1881-1942) எழுத்துக்களுக்காக ஆண்டர்சன் நன்றி கூறுகிறார்.


Stefan Zweig

ஸ்வீக் பல வழியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரபலம். வியன்னாவின் சூழலில் நூற்றாண்டின் காலகட்டத்தில் வளர்ந்த இவர் அந்த நகரின் கற்பனை மயமான அடுக்குகள் மற்றும் குறிப்பாக யூத அறிவுஜீவிகளின் நகரமயமாக்கல் தன்மை பற்றி சுருக்கமாக எழுதினார். 1920 மற்றும் 1930களில் ஸ்வீக் உலகில் மிகப்பிரபலமான எழுத்தாளர்களுள் ஒருவர். பின்பு இவர் நாஜியிலிருந்து ஓர் அகதியாக, போரினால் ஏற்பட்ட அவநம்பிக்கை மற்றும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் வெளிப்படையான விதியின் காரணமாக பிரேசிலில் தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். ” இவ்வாறாக, இந்த உலகத்திலேயே மிக முக்கியமான சொத்தாக, கலாச்சாரப் பணிகளையே எப்பொழுதும் தனது தூய்மயான சந்தோஷமாகவும் தனிப்பட்ட சுதந்திரமாகவும் கொண்டிருந்த ஒரு மனிதனாக- நான் சரியான நேரத்தில், நேரடியாக எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தனது தற்கொலைக் குறிப்புகளில் எழுதியிருந்தார்.

ஸ்வீக்கின் இறப்பின் பத்தாமாண்டு நிறைவில் அவரது ஞாபகார்த்த கட்டுரையில், ஜெர்மன் எழுத்தாளரான தோமஸ் மான் பின்வருமாறு எழுதினார்: ஆழ்ந்த அடக்கம், நேர்த்தியான கூச்சம், மிகவும் நேர்மையான பணிவு... ஆகியவற்றுடன் உலகப் புகழ் அணிந்து கொண்டதில்லை. நன்மையின் விருத்தியே அவரது தீவிர அக்கறை மேலும் அவர் தனது பாதி வாழ்நாட்களை மொழிபெயர்த்தல், பரப்புதல், சேவை மற்றும் உதவி செய்வது ஆகியவற்றிலேயே அர்ப்பணித்திருக்கிறார்.”

ஆஸ்திரிய எழுத்தாளர்கள் குறித்த ஆண்டர்சனின் ஆர்வம் குறிப்பிடத்தகுந்த ஒன்று, ஆனால் திரைப்பட இயக்குனரோ ஸ்வீகின் ஒரு பக்கத்தை மட்டுமே அதாவது சொல்வதென்றால் குறைந்தபட்சம் உலகிலேயே இனிமையாக பேசப்படும் ஒரு எளிமையான மனிதராகவே பார்த்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஸ்வீக் அன்றைய காலகட்டத்தின் வரலாற்று மற்றும் சமூகப் பிரச்சனைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். The World of Yesterday (1942) எனும் அவரது சுயசரிதத்தில் 1928ல் சோவியத் யூனியனுக்கான மேற்கொண்ட ஒரு பயணம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரபலங்கள் குறித்த முக்கிய குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

அதன் ஒரு நெகிழ்ச்சியான பத்தியில், டிரக்கில் வந்து போகும் சமூக ஜனநாயகவதிகளின் சந்திப்பு குறித்த பிரிவுகளை – சிறந்த துல்லியத்துடன் ஸ்வீக் விவரித்துள்ளார். தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட கொடூரம் ”ஒரு தனிநபரின் திறமையல்ல, மாறாக இந்த செயல்பாடுகளுக்காக முன்னதாக  ஒவ்வொருவரும் அநேகமாக நூற்றுக்கணக்கான முறைகள் வீரர்கள் குடியிருப்பிலும் பயிற்சி மைதானங்களிலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்: என்பது வெளிப்படையாகவே தெரிகிறது – இக்குழுக்களுக்கு தாக்க, கட்டாயப்படுத்த மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட பயிற்சியளிக்கப்பட்டிருந்தது.”

இத்திரைப்படத்தின் தயாரிப்பு குறிப்புகளில் ”The Cosmopolitan Apocalypse of Stefan Zweig என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை உள்ளடங்கியிருந்தது. ஜோர்ஜ் ப்ரோக்நிக் எழுதிய அக்கட்டுரை திரைப்படத்தைவிட- ஆண்டர்சனை ஏன் ஸ்வீக் கவர்ந்தார்? என்பதை புரிந்து கொள்ள உதவக்கூடும். இன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு கோணமும் அரசின் கண்காணிப்புகளும் அலுவல் ரீதியான ஆவணப்படுத்தல்களும் மீண்டும் அதிக தீவிரமாகப் பெருகி வரும் வேளையில், தங்களது முழுமையான தனித்துவம் அச்சுறுத்தப்பட இருக்கிறது என்பதை மக்கள் பலர் உணர்கிறார்கள், தனிநபர் சுதந்திரத்தினை ஸ்டீஃபன் ஸ்வீக் உணர்ச்சிகரமாகபின் தொடர்வது முன்னெப்போதைவிடவும் இப்போது அதிக பொருத்தமானதாகத் தெரிகிறது. தேசத்திலிருந்து வெளியேறிய அவரது வேதனைமிகுந்த வாழ்க்கை, நாகரீகத்தின் மதிப்பு குறித்து நாம் எல்லோருக்கும் நாம் நமது காலத்தினைப் பாதுகாத்துக் கொள்ள போராட வேண்டும் என்ற பாடத்தினைக் கொண்டிருக்கிறது.

”நான் இதனை (இரண்டாம் உலகப்போர்) எடுத்துக்கொள்ள விரும்பிய காரணம் என்னவென்றால், ஐரோப்பாவில் சிலவகையில் நமது தினசரி வாழ்க்கையில் இந்த தொடர் நிகழ்வுகள் சரியானதாக இருக்கின்றன” என்று தேசிய வானொலிக்கான நேர்முகம் ஒன்றில் ஆண்டர்சன் அங்கீகரித்தார்.

ஆனால் முடிவில், ஸ்வீக்கின் மிகச் சிறிதளவிலான வரலாறு மற்றும் நிகழ்வுகள் குறித்த துல்லியத்தன்மை மற்றும் அவசரம் The Grand Budapest Hotel –யில் நுழைந்துவிட்டது. இது ஒரு தனி நபரின் தவறல்ல, ஆனால் போதிய வரலாற்று அறிவின்மை மற்றும் இது போன்ற விஷயங்களில் பணியாற்றுவதிலுள்ள பயிற்சி மற்றும் நிபுணத்துவமின்மை ஆகியவற்றால் விளைகின்ற தொலைவு மற்றும் இடைவெளி ஒரு காரணம். (ஸ்வீக் பற்றிய கருதத்தக்க வகையிலான சிறந்த சினிமாத்தனமான புத்திஜீவித்தனமான பாராட்டு, ஆஸ்திரேலிய எழுதாளரது 1922-ம் வருட நாவலைத்தழுவி 1948 –ல் ஜேர்மனியில் பிறந்த சிறந்த இயக்குனரான மார்க் ஓபல் இயக்கிய Letter From an Unknown Woman திரைப்படத்தில் காணலாம்)

ஒரு வகையில் அதிக அளவிலான அசட்டுத்தனத்துடனும், அழகியலுக்காக அதிகம் அழுத்தம்கொடுக்கபட்டதாகவும் இருந்தாலும் வேகமாக நகருகின்ற (சில காட்சிகள் தவிர்த்து) மற்றும் ஒரு பொழுதுபோக்கான இத்திரைப்படம் சில நிகழ்வுகளின் தழுவலாகவும் அஞ்சலட்டை கோணத்தில் பார்ப்பது போன்றும் உள்ளது. இத்திரைப்படத்தில் இனிமையான விஷயங்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது மிகவும் குறைவு.