சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Italy’s new prime minister prepares attacks on working class

இத்தாலியின் புதிய பிரதம மந்திரி தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களுக்கு தயாரிப்புக்களைச் செய்கிறார்

By Marianne Arens 
26 February 2014

Use this version to printSend feedback

இத்தாலிய பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளும் புதிய பிரதம மந்திரி மரியோ ரென்சிக்கு செவ்வாயன்று தமது நம்பிக்கையை தெரிவித்து வாக்களித்தன. அவருடைய புதிய அரசாங்கம் ஏற்கனவே ஜனாதிபதி ஜார்ஜியோ நாபோலிடானோவால் கடந்த சனிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொடுக்கப்பட்டது.

அரசாங்க மாற்றம் குறிப்பிடத்தக்க வேகத்தில் நடைபெற்றது. உத்தியோகபூர்வமாக முன்னாள் பிரதமர் எரிக்கோ லெட்டா இராஜிநாமா செய்த 10 நாட்களுக்குள் புதிய அரசாங்கம் அதிகாரத்தை கையிலெடுக்க தயாராக உள்ளது. நான்கு ஆண்டுகளில் இது நான்காம் அரசாங்கமும், பாராளுமன்றத் தேர்தல்கள் இல்லாமல் அதிகாரத்திற்குத் தொடர்ந்து வந்துள்ள மூன்றாம் அரசாங்கமும் ஆகும்.

ரென்சியின் ஜனநாயகக் கட்சி (PD) செனட்டில் பெரும்பான்மை இல்லாததால் செனட்டில் வாக்களிப்பு பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த விவாதத்திற்குப்பின், 39 வயது புளோரன்ஸ் நகர மேயர் 320 வாக்குகளில் 169ஐப் பெற்றார். இது முன்பு இருந்த லெட்டா பெற்றிருந்த 173 இலும் குறைவானதாகும்.

முன்பு போலவே, புதிய அரசாங்கம் PD மற்றும் Nuovo Centrodestra (NCD) விற்கு இடையே கூட்டணியை அடித்தளமாக கொண்டுள்ளது. முதலாவது இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCI) பின்தோன்றல் அமைப்பு, NCD சில்வியோ பெர்லுஸ்கோனியின் PDL ல் இருந்து பிரிந்த கட்சியாகும். இதைத்தவிர, இரு சிறிய மையக்கட்சிகளான மரியோ மோன்டி நிறுவிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பு Scelta Civica, கிறிஸ்துவ ஜனநாயகவாதி பீர் பெர்டினான்டோ காசினியுடைய Union di Centro (UdC) ஆகியவை உள்ளன.

செனட்டில் இரண்டு மணி நேரம் பேசிய ரென்சி, தன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை விளக்கினார். நாட்டை ஒன்றுபடுத்தும் வார்த்தைஜாலங்களுடன், தீவிரமான முடிவுகளை எடுக்கத் தேவையான சிந்தனைப் போக்குப் போராட்டங்களின் முடிவுடன் சேர்த்து அவர் தொழிலாள வர்க்கத்தின் மீது போரையும் அறிவித்தார். சமூகநல உதவி மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மீது பாரிய தாக்குதல்களுடன் அவர் உற்பத்தி செலவு மற்றும் வணிகங்கள் மீது வரிகள் குறைப்பையும் அறிவித்தார். நாடு துருப்பிடித்துள்ளது, தேக்க நிலையில் உள்ளது, ஒரு மூச்சுதிணறவைக்கும் அதிகாரத்துவத்தால் கட்டுண்டு உள்ளது என்று ரென்சி கூறினார்.

தேர்தல் சட்டமும் அரச அமைப்புகளும் எதிர்வரவிருக்கும் நாட்களில் சீர்திருத்தப்பட உள்ளன. மார்ச் மாதம் ஒரு திட்டம் தொழிற்சந்தை சீர்திருத்தத்தை நடத்த உள்ளது; ஏப்ரல் மாதம் பொதுத்துறை மறுகட்டமைப்பு பெறும். மே மாதம் வரிவிதிப்புக்கள் குறைக்கப்படும். நீதித்துறை அடிப்படையில் மறுசீராக்கப்படும்.

அரசாங்க மாற்றத்தை பயன்படுத்தி, எதிர்ப்பு உருவாகு முன் இயன்றளவு சாதிக்க வேண்டும் என்று ரென்சி திட்டமிட்டுள்ளார் போலும்.

அவருடைய மந்திரிசபையின் கூட்டு இளம் ஆற்றலைக் கொண்டிருப்பதாக காட்டும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பதவிகள் சர்வதேச வங்கிகள் மற்றும் பெரு வணிகத்தின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மந்திரிகள் எண்ணிக்கையை 21ல் இருந்து 16 ஆக அவர் குறைத்துள்ளார். கிட்டத்தட்ட அனைத்து மந்திரிகளும் முன்னோர்களைவிட இளம் வயதினர், பாதிப்பேர் பெண்கள் ஆவர்.

ஆனால் ரென்சி நிதி, பொருளாதார முக்கிய பதவியை 64 வயதான பொருளாதார வல்லுனர பீர் கார்லோ பாடோன் இடம் ஒப்படைத்துள்ளார். இந்த முன்னாள் பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (OECD) தலைமைப் பொருளாதாரவாதி மாசிமோ டி அலிமா மற்றும் கியூலியனோ அமடோ ஆகியோரின் அரசாங்கங்ஙளிற்கு பொருளாதார ஆலோசகராக இருந்துள்ளார். 2001 முதல் 2005 வரை தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொறுப்பாளராக இருந்தார்.

அவருடன் கூட பொருளாதார வளர்ச்சிக்கு மந்திரியாக பெரடரிகா கைடி உள்ளார். இவர் அரசியல் கட்சி எதிலும் உறுப்பினர் அல்ல. வணிக இளம் கழகத் தலைவரான இவர் Ducati Energia என்னும் இலத்திரனியல் வணிகக் குடும்பத்தின் வாரிசு ஆவார். இவர் முதலாளித்துவ நலன்களுக்கு உறுதியான ஆதரவாளரும் பெர்லுஸ்கோனிக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுபவர்.

முன்னாள் இத்தாலி கம்யூனிஸ் கட்சியின் கூட்டுறவு வணிகங்களின் சங்கத்தின் தலைவர் கியூலியனோ போலெட்டி தொழிலாளர் துறை, சமூகத்துறை மந்திரியாவார். ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற அவரின் முத்திரை ரென்சியின் தீவிர தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களைச் சுமத்துவதற்காக தேவையாக உள்ளது. தொழிற்சங்கங்கள், வணிகக் கூட்டமைப்புக்களுடன் சேர்ந்து, ரென்சி தன் வேலைகள் சட்டம் மரபார்ந்த தொழிலாளர்கள் உரிமையைச் சிதைக்க வேண்டும் என்றும் இத்தாலிய தொழிலாளர் சந்தையை டோனி பிளேயரின் புதிய தொழிற்கட்சி, ஹெகார்ர்ட் ஷ்ரோடரின் 2010 செயற்பட்டியலை மாதிரிகளாகக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார்.

ஏஞ்சலினோ அல்ஃபனோவின் NCD தன் மூன்று மந்திரிகளையும் தக்க வைத்துக் கொள்ளும். அல்பனோ உள்துறை மந்திரியாக தொடர்வார், மௌரீசியோ லூப்பி போக்குவரத்து மந்திரியாகும், பெயாட்ரிஸ் லொரன்ஸின் சுகாதார மந்திரியாகவும் இருப்பர். நீண்ட காலம் பெர்லுஸ்கோனியின் நம்பிக்கைக்கு உகந்தவரான அல்ஃபனோ கடந்த அக்டோபரில் அவருடைய அரசாங்கத்தில் இருந்து பிரிந்தார்.

ரென்சி 77 வயது பில்லியனருடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தாலும் பெர்லுஸ்கோனியின் Forza Italia எதிர்க்கட்சியாக உள்ளது. ரென்சி அவருடன் பல நேரம் பேச்சுக்களை நடத்தி, PD யின் ரோம் தலைமையகத்திற்கும் வரவேற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி அவருடன் பேச்சுக்கள் நடத்தினார். எதிர்த்தரப்பில் பிரிவினைவாத லீகா நோர்த் (Lega Nord), பெப்பி கிரில்லோவின் Movimento Cinque Stelle (M5S) ஆகியவையும் உள்ளன.

பெர்லுஸ்கோனி ஆறு மாதங்களுக்கு முன்பு வரி ஏமாற்றிற்கு தண்டனை பெற்று பின்னர் செனட்டில் இருந்து அகற்றப்பட்டாலும், அவர் ரென்சி சிக்கலில் அகப்பட்டால் மீண்டும் வரலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருக்கின்றார். ரென்சி அதிகாரம் எடுத்துக் கொண்டது பற்றி அவர் கூறியது: நான்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கடைசி தலைவர் ஆகும்.

இத்தாலியின் பொருளாதாரப் பிரச்சினைகள் கணிசமானவை. அரசாங்கத்தின் கடன் சமீபத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 134% என உயர்ந்து, 2 டிரில்லியன் யூரோக்களைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு இத்தாலி வேலையின்மையில் ஏற்பட்ட அதிகரிப்பைவிட யூரோப்பகுதியில் கிரேக்கமும் மற்றும் சைப்ரசும்தான் அதிகமாக கொண்டிருந்தன.

இன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட ஒரு மில்லியன் பேர் குறைவாக வேலையில் உள்ளனர். 2012, 2013க்கு இடையே உழைக்கும் மக்கள் பிரிவு தீவிரமாக 4000,000 ஆக சரிந்தது. அதே நேரத்தில் இளைஞர் வேலையின்மை, 15ல் இருந்து 24 வயதிற்குள் இருப்போருக்கு இருமடங்காக 2008ல் இருந்ததைவிட 42% ஆக அதிகரித்துவிட்டது. இத்தாலியில் வேலையின்மை மட்டும் இல்லை, வறுமையும் வளர்கிறது என்று பிரஸ்ஸல்ஸில் ஒரு தொழிலாளர்துறை மந்திரி கூறினார். கிரேக்கத்திலும் ருமேனியாவிலுமே இதைவிட மோசமாக உள்ளது.

தொழிலாள வர்க்கம் இந்நெருக்கடியின் பாதிப்பை தாங்கிக்கொள்ளவேண்டும் என்பதில் ரென்சி தெளிவாக உள்ளார். இப்பொழுது அவர் தற்காலிக ஒப்பந்தங்களை வழங்கும் வெளி வேலை நிறுவனங்களில் அதிகரிப்பைத் தரும் தொழில்துறை சட்டங்கள் புதியவற்றிற்கு திட்டமிட்டுள்ளார். இவை முந்தைய ஊதியத்தரங்களை மிகவும் குறைத்துவிடும். பூஜ்ய மணிநேரம், குறுகியகால வேலைகளுக்கு நிதியளிக்கும் Cassa Integrzione அகற்றப்படுவது, 440,000 தொழிலாளர்களை பாதிக்கும். அதே நேரத்தில் வணிகங்கள் இன்னும் 10% வரிக் குறைப்பை எதிர்பார்க்கலாம்.

ரென்சியின் மிக முக்கிய அரசியல் ஆதரவு தொழிற்சங்கங்களிடம் இருந்து வருகிறது. முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான Cgil, Csil, Uil ஆகியவை ஜனவரி 10ல் முதலாளிகளின் அமைப்பான ConfIndustria உடன் வேலைநிறுத்த நடவடிக்கையை தவிர்க்க உடன்பாட்டை கண்டன. Cgil தலைவர் சுசான காமுசோ உடன்பாட்டில் கையெழுத்திட்டது மட்டும் இல்லாமல், FIOM தலைவரா ன மௌரீசியோ லன்டீனியும் கையெழுத்திட்டுள்ளார்.

பிரதம மந்திரியாவதற்கு முன் ரென்சி பரந்த பாராட்டை நிதியச் செய்தி ஊடகத்தில் இருந்து பெற்றார். பிரித்தானிய ஏடு The Economist ரென்சியை பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பொருளாதாரத்தில் தேக்கம் கொண்டுள்ள நாட்டில் தேவையான அரசியல் உறுதிப்பாட்டை நிறுவுவார் என்று கூறியுள்ளது.

பைனான்சியல் டைம்ஸில் வொல்வ்காங் முஞ்சவ் இத்தாலியின் சிறந்த நம்பிக்கை ரென்சிதான் என எழுதினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெர்லுஸ்கோனியின் எழுச்சிக்குப்பின் இத்தாலிய அரசியலில் மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவர் என்று அவரை விவரித்து, அவருக்கு திறமை, தெளிவு, உறுதிப்பாடு எல்லாவற்றிற்கும் மேலாக நிறைய அதிருஷ்டம் தேவைப்படும் என்றார்.

ரென்சியின் உள்கட்சி கவிழ்ப்பிற்குப்பின், மிலானில் பங்குச் சந்தை 1.5%க்கு மேல் உயர்ந்து 20,400 என ஆயிற்று. இது ஜூலை 2011க்குப் பின் மிக அதிக உயர்வாகும். தொழில்துறைத் தலைவர் ஜோர்ஜியோ க்வின்சி பொருளாதாரத்திற்கு ஊக்கம் தரும் வகையில் அரசாங்க பல பில்லியன்கள் வரிக்குறைப்புக்கள் செய்யும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொழில்துறை ஆணையர் லாஸ்லோ ஆண்டரும் ரென்சியைச் சொற்களால் பாராட்டினார்: புதிய திட்டம் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு பரிந்துரைத்த திசையில் செல்வது போல் தோன்றுகிறது. என்றார்.

முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் ஒரு பிரிவு இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் தங்கள் நம்பிக்கையை ரென்சியிடம் வைத்திருக்கையில், மற்றொரு பிரிவு இச்சமீபத்திய பிரதம மந்திரி இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதன் நீண்ட மந்தநிலையில் இருந்து இத்தாலியை வெளியே கொண்டுவருவாரா என்பதில் அவநம்பிக்கையுடன் உள்ளது.

Neue Züricher Zeitung  பத்திரிகை ரென்சியின் கோஷங்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளன, ஆனால் தாக்கம் இல்லாதுள்ளது, அரசாங்க அதிகாரத்துவத்திற்கு எதிரானது போன்றவை இதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டு, ஒரு சில முக்கிய நபர்கள்தான் உள்ளனர், அனுபவம் குறைவு என அரசாங்கத்தைக் குறைகூறியுள்ளது.

தோல்வி உத்தரவாதம் என்னும் தலைப்பில் ஸ்பெயினின் நாளேடு El Pais எழுதியது: ரென்சி நீண்டகாலம் பதவியில் இருக்க முடியாது. அவர் உறுதியற்ற தன்மை, நகராத்தன்மை என்னும் சங்கிலியில் நிச்சயமாக மற்றொரு பிணைப்பு, அவரது வீழ்ச்சியும் அவரது ஏற்றம் போல் விரைவாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளது.