சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US and Japanese troops train for war against China

அமெரிக்க மற்றும் ஜப்பானிய துருப்புகள் சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்காக பயிற்சி மேற்கொள்கின்றன

Peter Symonds
28 February 2014

Use this version to printSend feedback

யுத்தத்திற்கான அல்லது இலக்கில் வைப்பதற்கான அமெரிக்க-ஜப்பானிய தயாரிப்புகள் ஐயத்திற்கிடமின்றி இருந்ததை கடந்த வாரயிறுதியில் வெளியான நியூ யோர்க் டைம்ஸில் ஒரு பிரதான கட்டுரை எடுத்துக்காட்டியது. அமெரிக்கா உடனான ஜப்பானின் ஒத்திகை, பெய்ஜிங்கிற்கு வழங்கப்பட்ட ஒரு சேதி" என்ற தலைப்பில் வெளியான அந்த கட்டுரை, "விரோத சக்திகளால் கைப்பற்றப்பட்ட ஒரு தீவை எவ்வாறு தாக்கி மீண்டும் கைப்பற்றுவது" என்பதில் அமெரிக்க கடற்படை ஜப்பானின் புதிதாக உருவாக்கப்பட்ட நிலத்திலும், கடலிலும் போர் புரியும் படைபிரிவுக்கு பயிற்சி வழங்கியதைக் குறிப்பிட்டிருந்தது.

இரும்புக்கரம் (Iron Fist) என்ற குறிச்சொல்லில் நடத்தப்பட்ட அந்த கூட்டு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வு தான் என்றபோதினும், இந்த ஆண்டு ஜப்பானிய துருப்புகள் "ஒரு புதிய நோக்கத்துடன்" வந்திருந்ததாக கடற்படை லெப்டினென்ட் கர்னல் ஜோன் ஓ'நீல் அறிவித்தார். அந்த 250 சிப்பார்கள் கொண்ட பலமான பிரிவு (2006இல் வெறும் 25 சிப்பாய்களாக இருந்ததில் இருந்து அதிகரிக்கப்பட்டது) அல்லது அந்த கடற்படை பரிபாஷை, "உள்நாட்டு குறிக்கோள்களை எட்டும் நோக்கத்தோடு நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்துவதற்கேற்ப" "தீவுகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான அவற்றின் சொந்த இராணுவ வாகனங்கள், துணைக்கருவிகள் மற்றும் பரிவாரங்களோடு" வந்திருந்தன. தெற்கு கலிபோர்னியாவின் கேம்ப் பெண்டெல்டனில் மாத கணக்கில் நீண்ட அந்த இராணுவ ஒத்திகை "இதுவரையில் நடந்த ஒத்திகைகளிலேயே மிகவும் நீண்ட மற்றும் மிகவும் ஈடுபாட்டோடு செய்யப்பட்ட" ஒன்றாக ஓ'நீல் விவரித்தார்.

அந்த கூட்டு இராணுவ ஒத்திகை அதன் சுபாவத்தில் தற்காப்புக்குரிய ஒன்றாக பூசி மெழுகப்பட்டதுஇந்த விடையிறுப்பை டைம்ஸ் இதழ், "சீனாவின் இராணுவ பலத்திற்கு" அமெரிக்க மற்றும் ஜப்பானிய இராணுவ வட்டாரங்களில் இருந்து வரும் ஒருங்கிணைந்த "எச்சரிக்கை ஒலி" என்று குறிப்பிட்டது. அமெரிக்க பசிபிக் கப்பல்படையைச் சேர்ந்த கடற்படை உளவுபிரிவு இயக்குனர் கேப்டன் ஜேம்ஸ் பனெல், இந்த மாத தொடக்கத்தில் பேசுகையில், சர்ச்சைக்குரிய சென்காயு/தியாயூ தீவுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து "கிழக்கு சீனக் கடலில் ஜப்பானிய படைகளை அழிக்க ஒரு சிறிய, கூர்மையான யுத்தத்திற்கான" தயாரிப்புகளைச் செய்து வருவதாக சீன இராணுவத்தைக் குற்றஞ்சாட்டினார்.

ஆசியாவில் பதட்டங்களைக் கூர்மையாக அதிகரித்துவரும் ஒரு "ஆக்ரோஷமான" சீனா என்று குற்றஞ்சாட்டும் ஒபாமா நிர்வாகத்திடமிருந்து மற்றும் அமெரிக்க இராணுவத்திடமிருந்து வரும் சீரான கூச்சலில், பனெல்லின் கருத்துக்கள் மிகவும் ஆத்திரமூட்டுபவையாக உள்ளன. எதார்த்தத்தில், அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்காக என்ற போர்வையின் கீழ், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் நடத்திய ஒரு தசாப்த கால ஆக்ரோஷ யுத்தங்களுக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் அணு ஆயுதமேந்திய சீனாவிற்கு எதிராக ஒரு புதிய மற்றும் படுபயங்கரமான மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது.

ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, பெண்டகன் அதன் கடற்படை மற்றும் விமானப்படை உபகரணங்களில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பிரதேசத்திற்குள் அனுப்பி வருகிறது. அது அப்பிராந்தியம் முழுவதிலும் புதிய இராணுவ தளத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதோடு, ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் தற்போதைய படைகளையும் மறுசீரமைப்பு செய்து வருகிறது. சீனாவிற்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க ஜப்பான் போன்ற இராணுவ கூட்டாளிகளை ஊக்குவிப்பதன் மூலமாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலக அரசியலில் பெரிதும் பேசப்படாமல் இருந்த தென் சீன மற்றும் கிழக்கு சீன கடலின் உரிமை கோரும் பிரச்சினைகளை ஒபாமா யுத்தத்திற்கான அபாயகரமான வெடிப்பு புள்ளிகளாக மாற்றி உள்ளார்.

ஒபாமாவின் "முன்னெடுப்பு" ஜப்பானிய ஆளும் வட்டாரங்களில் உள்ள இராணுவவாத அடுக்குகளைப் பேணி வளர்த்திருப்பதோடு, இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர், மிகவும் வலதுசாரி அரசாங்கத்தின் அதிகாரம் உயர்வதில் நேரடியாக ஒத்துழைத்துள்ளது பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அதற்கு தலைமை ஏற்றிருந்தார். பதவிக்கு வந்து 14 மாதங்களில், அபே கடந்த ஒரு தசாப்தத்தில் முதன்முறையாக அந்நாட்டின் இராணுவ வரவுசெலவு ஒதுக்கீட்டை உயர்த்தி உள்ளார்; மேலும் ஜப்பானிய இராணுவத்தின் மீதிருந்த சட்டரீதியான மற்றும் அரசியலமைப்புரீதியிலான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர நகர்ந்துள்ளார்; மற்றும் சீன நிலப்பகுதிக்கு எதிர்தரப்பில் உள்ள அந்நாட்டின் தென்மேற்கு தீவுகளின் மீது ஒருமுனைப்படுத்தப்பட்ட ஒரு புதிய மூலோபாய நிலைநோக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச்சில், பதவிக்கு வந்த சில மாதங்களுக்குப் பின்னர், அபே 1982இல் அர்ஜென்டினாவிற்கு எதிராக பால்க்லாந்து யுத்தத்தைத் தொடுப்பதில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரின் விளக்கத்தை மேற்கோளாக காட்டி, சர்ச்சைக்குரிய சென்காயு தீவுகள் மீது சீனாவிற்கு எதிராக ஓர் ஆக்ரோஷமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டிற்கு சமிக்ஞை காட்டினார். “தீவின் பாதுகாப்பிற்காக" என்ற பெயரில், ஒரு கடற்படை, விமானப்படை மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு படைகளைக் கட்டியமைக்கும் ஜப்பானிய இராணுவத்தின் நிகழ்ச்சிநிரலில், அமெரிக்க கப்பற்படையோடு சம்பந்தப்பட்ட நிலத்திலும் நீரிலும் செயல்படும் ஒரு படையை உருவாக்குவதற்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கினார்.

அபேயின் மீள்-இராணுவமயமாக்கல் 1930கள் மற்றும் 1940களில் இருந்து ஜப்பானிய இராணுவவாதத்தின் பிற்போக்கான மரபுகளுக்கு புத்துயிரூட்டுவதோடு கைகோர்த்துள்ளது. இது குறிப்பாக முதல்தர யுத்த குற்றவாளிகள் உட்பட ஜப்பானின் யுத்தத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட இழிபெயர்பெற்ற யாசூகூனி நினைவிடத்திற்கு டிசம்பரில் அவர் விஜயம் செய்ததில் அடையாளப்படுத்தப்பட்டது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கட்டுரை இந்த வாரம் குறிப்பிட்டது, அபேயின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் (LDP) இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, “மிகவும் ஆர்ப்பரிக்கும் தேசியவாத சிறுபான்மையினர் உயர்ந்திருப்பது" சீனா மற்றும் தென்கொரியாவிற்கு எதிரான விரோதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அமெரிக்கா மற்றும் யாசூகூனி நினைவிடத்திற்கு அபேயின் விஜயத்திற்கு அது வெளிப்படுத்திய மென்மையாக கண்டனத்தை நோக்கியும் உள்ளது.

அமெரிக்காவின் "முன்னெடுப்பு" ஜப்பானிலும் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத ஆசியாவின் ஏனைய இடங்களிலும் அரசியல் சக்திகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆழமடைந்துவரும் உலகளாவிய மந்தநிலைமையின் தாக்கத்தின் கீழ், உலக பொருளாதாரத்தில் தற்போது ஒரு மைய பாத்திரம் வகித்துவரும் ஆசியாவில் வாஷிங்டன் அதன் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைக்க அமெரிக்க இராணுவ பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாக இருந்தாலும் கூட, அபே அரசாங்கம் அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் உதவியுடனோ அல்லது இல்லாமலோ ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களைச் செயல்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. ஒரு ஆக்ரோஷமான LDP நாடாளுமன்ற உறுப்பினர், டகாயா மூட்டோ, வோல் ஸ்ட்ரீட் ஜெர்னலுக்குத் தெரிவித்தார், “அணு ஆயுதங்கள் மூலமாக" கூட "எங்களை நாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்," என்றார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து அதிகரித்துவரும் தயவுதாட்சண்யமற்ற அழுத்தம் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) தலைமையின் உள்ளார்ந்த பலவீனத்தை அம்பலப்படுத்தி வருகிறது. முதலாளித்துவ மீட்சிக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், செல்வந்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான ஓர் ஆழ்ந்த பிளவால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தின் உச்சியில் அது ஸ்திரமின்றி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச அளவிற்கு கூட இல்லை, சீன அளவில் கூட கட்டமைப்புரீதியாக தொழிலாளர் வர்க்கத்திற்கு எவ்விதமான வர்க்க முறையீட்டையும் வழங்க இலாயகற்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவைச் சாந்தப்படுத்த முயல்கிறது. இருந்தபோதினும் அதேவேளையில் அது சீன இராணுவத்தைக் கட்டியமைத்து வருவதோடு, அதன் சொந்த சமூக தளத்தைத் திசைதிருப்ப பிற்போக்குத்தனமான சீன தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு வருகிறது.

மறுபுறத்தில், ஒபாமா நிர்வாகம் "முன்னெடுப்பை" மேலதிகமாக தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த ஜப்பானுடனான உரிமைகோரும் பிரச்சினைகள் மீதான பெய்ஜிங்கின் நிலைப்பாட்டை மற்றும் இராணுவ விஸ்தரிப்பைச் சுரண்டுகிறது. இதில் சமீபத்திய அமெரிக்க-ஜப்பானிய இராணுவ ஒத்திகை என்பது வெறும் ஒரு சிறிய உட்கூறு தான். கடந்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்கா அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஓர் அபாயகரமான வெடிமருந்து பெட்டகமாக மாற்றி உள்ளது. அப்பிராந்தியத்தின் பல வெடிப்பு புள்ளிகளில் ஏதேனும் ஓரிடத்தில் ஏற்படக்கூடிய ஒரு தவறான புரிதலோ அல்லது ஒரு பிழையோ ஒரு தீவிரமான மோதலைத் தூண்டிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அந்த மோதல் ஒருவேளை ஒட்டுமொத்தமாக மனிதயினத்திற்கு ஒரு பேரிடராக மாறக்கூடும்.

யுத்தத்திற்கான இந்த பாரபட்சமற்ற உந்துதல் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான ஐக்கியத்தால் மட்டுமே நிறுத்தப்பட முடியும். இலாபகர அமைப்புமுறையும், உலகை பிளவுபடுத்தி வைத்திருக்கும் போட்டாபோட்டி நிறைந்த காலங்கடந்த தேசிய அரசுகளும் எதில் தங்கி உள்ளனவோ அந்த யுத்தத்திற்கான அடிப்படை காரணங்களை அழிக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டுமே உள்ளது. முதலாளித்துவத்தை அகற்றுவதில் மற்றும் பெரும் செல்வந்தர்களின் இலாபங்களுக்காக அல்லாமல் மனிதயினத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சோசலிச வழியில் சமூகத்தை மறுகட்டுமானம் செய்வதில் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் ஒரே பொதுவான வர்க்க நலனைக் கொண்டுள்ளனர்.