சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

In the name of peace, the European Union readies for war

“சமாதானம்” என்னும் பெயரில் ஐரோப்பிய ஒன்றியம் போருக்குத் தயாராகிறது

By Jean Shaoul 
28 February 2014

Use this version to printSend feedback

தொடர்ச்சியான ஐரோப்பிய ஒன்றிய விவாத ஆவணங்களும் கூட்டங்களும் ஐரோப்பிய சக்திகள் இன்னும் ஆக்கிரோஷ இராணுவக் கொள்கையை செயல்படுத்த விரும்புகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த ஆக்கிரோஷ ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையானது, இச்சக்திகள் உலக நிதிய நெருக்கடிக்குப் பின் ஆசியா, ஆபிரிக்காவில் முக்கிய எரிசக்தி வளங்கள் மற்றும் சந்தைகளை பெறுவதற்கான செல்வாக்கை இழக்கின்றன என்னும் கவலைகளுக்கு இடையே வெளிப்பட்டுள்ளது.

ஒரு சமீபத்திய ஐரோப்பிய வெளியுறவு கொள்கைக் குழு சுருக்கமாக, ஏன் ஐரோப்பாவிற்கு ஒரு புதிய உலக மூலோபாயம் தேவை (Why Europe needs a new global stragegy) என்ற தலைப்பில் ஐரோப்பிய சக்திகளின் இராணுவ நோக்கங்களைக் கூறுகிறது. அவற்றில் முன்னாள் காலனித்துவ பகுதிகள் மட்டுமில்லாமல், இன்னும் அப்பாலுள்ள பகுதிகளையும் அமைக்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் பூகோள அரசியல் போட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள யூரேசியன் பெரும் நிலப் பரப்பு இதற்குள் உள்ளடக்கப்படுகிறது. இது சீனா மற்றும் ஆசியாவுடன், உக்கிரைனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான போராட்டத்தினால் இது கோடிட்டுக்காட்டப்படுகிறது.

இந்தக் கொள்கைச் சுருக்கமானது, மத்திய கிழக்கில் ஐரோப்பிய செல்வாக்கு இல்லாதிருப்பது குறித்து புலம்புகிறது. ஐரோப்பிய ஒன்றியமானது சிரியா மீது பொருளாதாரத் தடைகள் என்னும் வாஷிங்டனின் அழைப்புக்களுக்கு பதிலிறுத்தது; ஆனால் ரஷ்யாவும் ஈரானும் அவற்றைக் கடக்க முடிந்தது, சௌதி, கட்டாரி மற்றும் துருக்கிய ஆதரவு கொண்ட இஸ்லாமியவாத சக்திகள் பிராந்தியத்தில் உள்ளவை நீண்ட கால நலன்களுக்குக் குறுக்கே வந்துள்ளன.

“உதவி” மூலம் செல்வாக்கை வாங்குவதில் ஐரோப்பாவின் வெற்றியானது வணிகம் மற்றும் “பாதுகாப்பு” இவற்றை பெறுவது, குறைந்த அளவில் உள்ளது, ஏனெனில் போட்டியாளர்கள் கூடுதலாகப் பெறுகிறார்கள் உதாரணமாக வளைகுடா பெட்ரோலிய அரசுகள் எகிப்துக்கு உதவுகின்றன. இதேபோல் கொங்கோ ஜனநாயகக் குடியரசிற்குப் (DRC) பணத்தை 10 ஆண்டுகளுக்கும் மேல் கொட்டியும்கூட, அது சீனாவிடம் இழந்து போயுள்ளது என்று கட்டுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்கைச் சுருக்கமானது, தேசிய பாதுகாப்புத் திட்டங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், அதையொட்டி வளங்கள் நன்கு ஒருங்கிணைக்கப்படலாம், ஐரோப்பிய வான்வழி நன்கு பாதுகாக்கப்படலாம், டிரோன்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஐரோப்பிய திறமைகள், ஐரோப்பாவின் சொந்த “கொல்லைப்புறத்தில்” வாஷிங்டனை எதிர்பாராமல் நெருக்கடிகளை சமாளிக்க முடியும் என வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய சக்திகள், பிராந்திய துணை ஒப்பந்தக்காரர் போல் ஐ.நா. பணிகளுக்கு நிதியளித்து ஐ.நா. மூலம் செயல்பட்டுள்ளன என்று இது குறிப்பிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா.வின் சமானதான வரவு-செலவுத் திட்டத்தில் 37% அளிக்கிறது; இது ஐ.நா.வின் சமாதானப் படைகள் நிலைகொள்ளவும், சர்வதேச இராணுவ நடவடிக்கைகளுக்கும் உதவுகிறது; தற்பொழுது 15 நடவடிக்கைப் பணிகள் நடைமுறையில் உள்ளன; அமெரிக்காவின் பங்களிப்பு 28% ஆகும். ஆனால் ஐ.நா. அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

பிரித்தானியாவும் பிரான்சும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் இடங்களைக் கொண்டாலும், அவைகள் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்ட தமது தேசிய நலன்களை செயல்படுத்துகின்றன, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வேறுபட்டவை; இதையொட்டி உலக அரங்கில் ஐரோப்பிய செல்வாக்கிற்கு இழப்பு உள்ளது. உதாராணமாக பிரான்சும் ஜேர்மனியும் 2003ல் அமெரிக்க-ஐக்கிய இராச்சியத் தலைமையிலான படையெடுப்பை எதிர்த்தன. ஜேர்மனியானது அமெரிக்கா, பிரெஞ்சு, பிரித்தானியா லிபியா மீது படையெடுப்பதை எதிர்த்தது.

பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் எழுச்சி பெறும் பொருளாதாரங்கள் என வந்துள்ளது ஐரோப்பாவை மேலும் முடக்கியுள்ளது.

இத்தகைய “மரபார்ந்த பன்முகச் செயற்பாடு” தங்களுடைய வணிக, அரசியல் நலன்களை முன்னேற்றுவிக்க நம்பகமான கருவியாக இல்லை என்பதில், ஐரோப்பிய சக்திகள் மற்ற அமைப்புக்களை நோக்கித் திரும்பியுள்ளன. அவற்றுள் ஆபிரிக்க சமாதான மையம் (African Peace Facility), அதேனா (ATHENA) மற்றும் உறுதிப்பாட்டிற்குக் கருவி (IfS) என ஆபிரிக்க  ஒன்றியம் (AU) மற்றும்  மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திற்கு (ECOWAS) “அமைதி காக்க நிதி அளிக்கின்றன.

ஆபிரிக்க ஒன்றிய பணிகளில் புருண்டி, டார்பர், கோமோரோஸ் மற்றும் சோமாலியா நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. இதைத்தவிர மற்றய நடவடிக்கைகள் மாலியிலும் மத்திய ஆபிரிக்க குடியரசிலும் நடைபெறுகின்றன; ECOWAS ஆனது லைபீரியா, சீரா லியோன், கினி பிசௌ, ஐவரிகோஷ்ட் (Cote d’lvoire)  மற்றும் மாலிக்கு துருப்புக்களை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் பின்னர் ஐ.நாவிற்கு ஒப்படைக்கப்படுகின்றன. செப்டம்பர் 2011ல், பிரித்தானியா மற்றும் பிரான்சினால்  தலைமை தாங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தற்காலிகக் கூட்டை ஏற்படுத்தி, “லிபியாவின் நண்பர்கள்” என்ற பெயரில், எண்ணெய் செல்வம் படைத்த வட ஆபிரிக்க நாட்டை நிறுவ முற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு கற்பித்தல் மையத்தின் (EUISS- Institute for Security Studies) கொள்கைச் சுருக்கமான Setting the stage or the defence summit  ஆனது ஐரோப்பாவிற்கு “ஒரு வலுவான பாதுகாப்புக் கொள்கை, கூட்டு இராணுவத் திறன்கள் மூலம் கிடைப்பது  தேவை, அது அனைத்து ஐந்து சூழல்களில் (நிலம், ஆகாயம், கடல், விண்வெளி மற்றும் சைபர்) செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு வரவு-செலவுத் திட்ட சரிவை அது எதிர்கொள்ளும்” என வாதிட்டுள்ளது. 2001ல் 251 பில்லியன் யூரோக்கள் என்பதில் இருந்து 2013ல் 194 மில்லியன் யூரோக்கள எனத் தேசிய பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்கள் சரிந்துள்ளதை எதிர்கொள்ள ஒரு கூட்டு அணுகுமுறை தேவையாகும்; ஏனெனில் எந்த ஐரோப்பிய அரசாங்கமும் பெரிய, புதிய, முன்முயற்சிகளைத் துவக்க இயலாது.

ஒரு முக்கியமான கவலை ஆசியாவுடனான பொருளாதார உறவுகளாகும். ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாகும், இந்தியா, ஆசியான் (ASEAN) உடைய இரண்டாவது மிகப் பெரிய பங்காளி, ஜப்பானின் மூன்றாவது, இந்தோனேசியாவின் நான்காவது மிகப் பெரிய பங்காளி. ஐரோப்பிய ஒன்றியம் பல ஆசிய நாடுகளுடன் தடையற்ற வணிகப் பகுதிகள் நிறுவப்பட விவாதிங்களைக் கொண்டாலும், அது 73 இருதரப்பு FTA க்கள் (சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்) அப்பிராந்தியத்தில் 2000 ஆண்டு முதல் கையெழுத்திட்ட நிலையில் பின் தங்கியுள்ளது.

ஒரு புதிய ஐரோப்பிய வெளியுறவுக் குழுவின் கொள்கைச் சுருக்கமானது பிரிக்கப்பட்ட ஆசியா: ஐரோப்பாவிற்கான விளைவுகள் (Divided Asia: the implications for Europe) அமெரிக்காவைப் போல் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் பிராந்திய வாரியாக அணுகுமுறையை எடுக்காமல் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது என்று எச்சரிக்கிறது. இது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அரங்கு (APEC) அல்லது பிராந்திய பொருளாதார விரிவாக்கப் பங்காளித்துவம் (RCEP), சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்  (FTA) போன்ற பேச்சுக்களைக் குறிக்கிறது; அவைகள் உலக மக்களின் 45% ஐக் கொண்டுள்ளன, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு FTA  க்களில் உள்ளது. வாஷிங்டன் அதனது பசிபிக் கடந்த பங்காளத்துவத்தை (TPP)   துவக்கி, அட்லாட்டிக் கடந்த வணிக முதலீட்டு பங்காளித்துவமானது (TTIP) பிராந்திய வணிக முதலீட்டுத் துவக்க முயற்சிகளை முன்வைத்தது.  இந்த அனைத்துத் துவக்க முயற்சிகளிலும் ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கப்பட்டது.

ஆசியாவில் அமெரிக்க “முன்னிலை” இருக்கையில், சீனாவை இராணுவ வகையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தி அதைச் சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டது இருக்கையில், சிந்தனைக் குழுவானது “ஐரோப்பா, அமெரிக்காவிடம் ஆசியப் பாதுகாப்பை விட்டுவிட முடியாது”, அமெரிக்காவை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்த விட்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது. அது மேலும் கூறுவதாவது: “ஐரோப்பிய வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கை ஆசியாவில் அமெரிக்கக் கொள்கையுடன் பிணைப்புத் தளம் கொண்டிருப்பது தவறானது. அமெரிக்க இராஜதந்திர முறை பிராந்தியத்தில் அமெரிக்க வணிக இலக்குகளுடன் நெருக்கமாகப்  பிணைந்துள்ளது.”

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்கள் பல நேரமும் ஒன்றாக இருக்கையில், அவை “வான்வழி, போக்குவரத்துக் கருவிகள், அரசிற்கான பொதுச் சேவைகள் மற்றும் பொருட்களைப் பெறுதல், செய்தி ஊடகம், கேளிக்கை, தொலைத் தொடர்புகள் போன்ற பல பிரிவுகளில் போட்டியில் உள்ளன” என்று அது கூறுகிறது.

தேவைப்பட்டால் தனியே முயல ஐரோப்பா தயாராக இருந்து தன்னுடைய நலன்களைத் தொடர வேண்டும்; இதில் யூரேசிய பங்காளித்தன வணிகமானது (Tran-Eurasian Partnership), முதலீடு என்பதிலும் உள்ளது, குறிப்பாக சேவைகளில் என்று கொள்கைச் சுருக்கம் கூறுகிறது. இது மின்சாரம் பற்றிய தடைகளை நிறுத்த வேண்டும், மத்திய கிழக்கு, ஆபிரிக்காவில் புறக்கணிப்புக்களையும் நிறுத்த வேண்டும்; இவைகளை ஐரோப்பா, ஆசியா ஆகியவை நம்பியுள்ளன; இக்கொள்கையை மற்றொரு ECFR ஆவணம் Shooting in the dark? EU sanctions policie  என்பது எதிர்க்கிறது.

இக்கொள்கைச் சுருக்க ஆவணமானது ஆசியாவிற்கு ஆயுத விற்பனைப் பெருக்கத்திற்கு அறைகூவுகிறது; இதில் “அநேகமாக பயிற்சியும் விற்பனைக்குப் பின் சேவை, தொடர்ந்து உயர்மட்டத்தை அளித்தல் ஆகியவை இருக்கும்.”

“மிருதுவான அதிகார அணுகுமுறையில் மட்டும் ஐரோப்பா தொடர்ந்து குவிப்புக் காட்ட முடியாது” என அது வலியுறுத்துகிறது. ஐரோப்பா சில ஆசிய நாடுகளுக்கு ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்வது போல் விற்பது, சீனாவிற்கு ஆயுதங்களை மாற்றுவது என்பவை  மிகவும் குறைந்த தன்மை உடையவை; காரணம் ஒருங்கிணைந்த கொள்கை ஆயுதத் தடைக்கு சீனா 1989ல் தியனன்மென் சதுக்கத்தில் மிருகத்தன அடக்குமுறைக்குப்பின் வந்ததை அகற்றுவதில் வேறுபட்ட கொள்கைகள் இருப்பதுதான்.

ஐரோப்பிய வெளியுறவு விவகார பிரிவுத் தலைவர் கத்ரின் ஆஷ்டன் இந்த உணர்வுகளை கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய உச்சிமாநாடு ஒன்றில் எதிரொலித்தார். அவர் கூறியதாவது: “ஐரோப்பா 21ம் நூற்றாண்டில் உலக அரங்கில் முக்கிய பங்கை கொண்டிருக்க வேண்டும் என்றால், ஐரோப்பியர்கள் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும். வலுவான ஐரோப்பிய பாதுகாப்பிற்கு நியாயம் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: அரசியல், ஐரோப்பிய ஒன்றியம் அதன் உலக விழைவுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முடியும் என்பது; செயற்பாட்டு முறை, ஐரோப்பாவிற்கு தளத்தில் செயல்படும் திறமையைக் கொடுப்பது; மற்றும் பொருளாதாரம், வேலைகளைப் பாதுகாத்து சிக்கன காலத்தில் புதியவற்றிற்கு உந்துதல் கொடுத்தல்.”

ஆஷ்டன் கருத்திற்கு நேட்டோ தலைமைச் செயலர் ஆண்டெர்ஸ் போக் ரஸ்முசென் ஆதரவு கொடுத்தார்; அவர் உச்சிமாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார் – முதல் தடவையாக. அவர் ஐரோப்பா அதனுடைய இராணுவத் திறன்களை உயர்த்த வேண்டும் அல்லது அதன் எல்லைகளில் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும், சர்வதேச அமைப்புக்களால் ஒதுக்கப்படுவதையும் என்றார்; “நம் ஐரோப்பிய நட்பு நாடுகள் முக்கியத் திறனைக் கொண்டிருக்கவில்லை.”

லிபியா, மாலியில் செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைந்த இராணுவ சக்தியை அம்பலப்படுத்தின; ஐரோப்பாவிலிருந்து அதிக தொலைவு இல்லாத சிறிய அளவு நடவடிக்கைகளில்கூட. 2011 நேட்டோத் தலைமையிலான கடாபி ஆட்சியை அகற்றும் செயற்பாடு, ஐரோப்பிய சக்திகளால் நடத்தப்பட்டதில் ஐரோப்பிய திறமைகள் காணப்படாதது, அமெரிக்க விமானப் படை குறைந்தபட்சம் ஐரோப்பிய போர் ஜெட்டுகளுக்கு 80% எரிபொருளைக் கொடுக்க வேண்டியிருந்தது எனப் போயிற்று.

ஆனால், ஐரோப்பிய சக்திகள் மீண்டும் எந்த உருப்படியான உடன்பாட்டிற்கும் வர முடியவில்லை. பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு—பிரான்ஸுடன் கூட்டாக ஜேர்மனிக்கு—பாதுகாப்புக் கொள்கையை நிர்ணயிக்கும் பெரிய பங்கைத் தடுக்க உறுதியாக உள்ளது என்பதுடன் நேட்டோ அதன் உறுப்பு நாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.