சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

US ready to do business with Hindu supremacist candidate for Indian PM

இந்து மேலாதிக்க இந்திய பிரதம மந்திரி வேட்பாளருடன் வியாபாரம் செய்ய அமெரிக்கா தயாராகிறது

By Keith Jones
15 February 2014

Use this version to printSend feedback

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் வியாழனன்று குஜராத் முதல்மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) பிரதம மந்திரி வேட்பாளருமான நரேந்திர மோடியை சந்தித்தார்.

அது தேர்தலுக்கு முந்தைய வழக்கமான "சந்திப்பின்" ஒரு பாகமாக நடந்ததாக அறிவித்து, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் அந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்ட முயன்றுள்ளனர். ஆனால் அது இந்தியாவில் பரவலாகவும், மிகச் சரியாகவும் அமெரிக்க கொள்கையில் வெளிப்பட்ட ஒரு மாற்றமாக, இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட உள்ள தேசிய தேர்தல்களுக்குப் பின்னால் ஒரு பரம வகுப்புவாதியும், ஒரு சர்வாதிகாரியாக ஆகக்கூடிய மோடி இந்தியாவின் பிரதம மந்திரியானால் அவருடன் இணைந்து வேலை செய்ய வாஷிங்டன் ஆயத்தமாகி இருப்பதற்கான சமிக்ஞையைக் குறிப்பதாக கூறப்பட்டது.

அமெரிக்க தூதர் நான்சி பாவெல் உடனான மோடியின் 75 நிமிட நேர சந்திப்பின் மீது பல இந்திய நாளிதழ்கள் அவற்றின் செய்திகளை "மோடி உடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கா தயாராகிறது" என்ற தலைப்பில் வெளியிட்டன. அந்த சந்திப்பு "ஒன்பது ஆண்டுகால பனிப்போரை" முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டது.

இந்தியாவின் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சி பிஜேபி, இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை உருவாக்க நிலைநிறுத்தப்பட்டு இருப்பதற்கான சான்றாக அந்த சந்திப்பை உடனடியாக விளம்பரப்படுத்தி கொண்டது. பிஜேபி தேசிய நிர்வாகக்குழுவின் ஓர் உறுப்பினர் சேஷாத்ரி சாரி கூறுகையில், "அடுத்த கட்ட சந்திப்புகளில், [பாவெல்] ஏனைய வேட்பாளர்களை சந்திக்கக்கூடும்.” “ஆனால் திரு. மோடியை அவருக்கு சமமானவர்களில் முதல் நபராக அவர் கருதி இருக்கிறார். பிரதம மந்திரி பதவிக்கு அங்கே 10 வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்றால், திரு. மோடி அதில் முதலாவதாக இருக்கிறார்,” என்றார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட மற்றும் பத்து ஆயிரக்கணக்கானவர்களை வீடற்றவர்களாக ஆக்கிய முஸ்லீம்களுக்கு எதிரான 2002 குஜராத் படுகொலையில் அவரது அரசாங்கத்தின் பாத்திரத்தை மேற்கோளிட்டு காட்டி, அமெரிக்காவிற்கு மோடி விஜயம் செய்வதற்கு விசா வழங்குவதை வாஷிங்டன் 2005இல் இருந்து மறுத்து வந்துள்ளது அல்லது அவருடனான உத்தியோகபூர்வ தொடர்பைத் தவிர்த்துக் கொண்டுள்ளது.

2002 குஜராத் படுகொலையில் மோடி அரசியல்ரீதியான மற்றும் குற்றத்தனமான பொறுப்பு வகித்தார் என்பதற்கு அங்கே சர்ச்சைக்கு இடமற்ற ஆதாரம் உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான இந்து அடிப்படைவாத காரியஸ்தர்கள் கொல்லப்பட்ட ஒரு இரயில் விபத்திற்கு அவர் அம்மாநில முஸ்லீம்களைக் குற்றஞ்சாட்டியதோடு, ஒரு மாநிலந்தழுவிய "எதிர்ப்பு நாளை" அறிவித்தார், மற்றும் கலகங்கள் வெடித்த போது பொலிஸை ஒதுங்கி இருக்க உத்தரவிட்டார். முஸ்லீம் எதிர்ப்பு கும்பல்களை வழிநடத்தியதாக மற்றும் தாக்குதல் நடத்த முஸ்லீம் வீடுகளை மற்றும் முஸ்லீம் வியாபாரங்களை அடையாளம் காட்டியதாக பல சாட்சிகள் அடையாளம் காட்டிய பின்னர், மோடியின் மந்திரிகளில் ஒருவரும், அவரால் பாதுகாக்கப்பட்டவர்களில் ஒருவருமான மாயா கோத்னானி மீது கொலை குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இருந்த போதினும் குற்ற விசாரணையில் இருந்து மோடி தப்பித்துள்ளார். மேலும் நீதிமன்றங்கள், பொலிஸ், மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கோழைத்தனமும் மற்றும் அவை உடந்தையாய் இருந்ததாலும் அவர் தலைமையிலான மாநில அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருக்க முடிந்துள்ளது. மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரமில்லை என கூறி 2012இல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாக மோடி மீதான அமெரிக்காவின் இராஜாங்க "புறக்கணிப்பில்" ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்திருந்தது. ஆனால் 2012இன் இறுதியில் இந்திய வணிகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த பிரிவுகள் மோடியை அவற்றின் விருப்பமான தேசிய பிரதம மந்திரி வேட்பாளராக ஊக்குவிக்க தொடங்கியதும் அந்த நிலைமை மாறியது. அதே ஆண்டு அக்டோபரில், இந்தியாவிற்கான பிரிட்டனின் உயர் கமிஷனர் குஜராத் முதல் மந்திரியைச் சந்தித்தார் மற்றும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் 2013 ஜனவரில் மோடி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புறக்கணிப்பு சுமூகமான நிலைக்கு வந்தது, பின்னர் அது இந்தியாவிற்கான ஜேர்மனியின் தூதர் மிக்கெல் ஸ்டென்னெர் ஐரோப்பிய ஒன்றிய இராஜாங்க அதிகாரிகளோடு மோடியைச் சந்தித்த போது முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

இந்திய பெருநிறுவன மேற்தட்டுகள் மத்தியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு, இந்தியா உலக பொருளாதார நெருக்கடியால் நொறுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கூர்மையாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் இருக்கையில், 2011இல் இருந்து அது ஏறத்தாழ பாதியாக குறைந்துள்ளது. விலை உயர்வு இரட்டை இலக்கத்திற்கு நெருக்கமாக உயர்ந்துள்ளதோடு, ரூபாய் மதிப்பு கூர்மையாக சரிந்துள்ளதோடு சேர்ந்து, அந்நாடு தேக்கநிலையில் சிக்குண்டுள்ளது.

சமூகரீதியில் பிற்போக்கான சந்தைசார்" சீர்திருத்தங்களின் ஒரு தொகுப்பிற்கு அழுத்தமளிக்க மற்றும் சமூக செலவினங்களின் வெட்டுக்கள் மூலமாக ஒரு பாரிய வரவு-செலவு திட்ட பற்றாக்குறையைத் தவிர்க்க பெரு வணிகங்கள் மோடியை எதிர்நோக்கி உள்ளன. இந்தியாவின் தற்போதைய கூட்டணி அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்ற பங்காளியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, அத்தகைய அனைத்து சீர்திருத்தங்களையும் இல்லையென்றாலும், தனியார்மயமாக்கலைத் தீவிரப்படுத்துவது மற்றும் வேலைநீக்கங்கள், ஆலை மூடல்களின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளை வெட்டுவது உட்பட பெரும்பாலானவற்றை ஆதரிக்கிறது. ஆனால் பரந்த மக்கள் எதிர்ப்பின் முன்னால் அதனால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

2001இல் இருந்து குஜராத் முதல் மந்திரியாக இருந்து வரும் மோடி முதலீட்டாளர்களுக்கு வரி, நிலம் மற்றும் ஏனைய விட்டுக்கொடுப்புகளை வாரி வழங்கியும், வேலைநிறுத்தங்களை உடைத்தும், சுற்றுச்சூழல் மற்றும் ஏனைய பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த போதினும் பெருநிறுவன அபிவிருத்தி திட்டங்களுக்கு வேகமாக ஒப்புதல்கள் வழங்க நிர்பந்தித்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரு வணிகங்களுக்கான கையாளாக செயல்பட்டுள்ளார்.

வியாழனன்று கூட்டத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் இடையிலான இராணுவ-மூலோபாயம் மற்றும் பொருளாதார கூட்டுறவு உட்பட பலதரப்பட்ட பிரச்சினைகளை பாவெல்லும் மோடியும் விவாதித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1998இல் இருந்து 2004 வரையில் பிஜேபி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டுறவிற்கு "பலமான அஸ்திவாரங்கள்" அமைக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டு காட்டியதாக மற்றும் இந்தோ-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அவரது கட்சியின் நோக்கத்தை வலியுறுத்தியதாக மோடியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரே உலகளாவிய அளவுகோலை" பயன்படுத்த அவர் அழுத்தம் கொடுத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தியா வசமுள்ள காஷ்மீரில் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கு இஸ்லாமாபாத் அளித்துவரும் ஆதரவிற்கு பழிக்கு பழி வாங்க, எல்லை தாண்டிய வேட்டைகளை நடத்துவது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா இந்தியாவைத் தடுத்துள்ளதாக பிஜேபி நீண்டகாலத்திற்கு முன்னரே குறை கூறி உள்ளது.

அவருக்கு முன்பிருந்த ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் போலவே ஒபாமாவும் அமெரிக்காவின் உலக மூலோபாய நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு ஒரு "உலகளாவிய இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டணி" அத்தியாவசியமாகும் என்று கூறி உள்ளார், மேலும் அந்த திசையில், இந்தியா ஒரு "உலக சக்தியாக" மாறுவதற்கு அமெரிக்காவின் உதவிகளை அவர் வழங்கி உள்ளார். இருந்த போதினும் புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் கடந்த ஆண்டின் இறுதியில் முறுக்கிக் கொண்டன. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைத் தழுவிய அமெரிக்கா தலைமையிலான சீன-விரோத கூட்டணியில் இந்தியாவை நிரந்தரமாக மற்றும் வெளிப்படையாக கடிவாளமிட இந்தியாவின் மீதான வாஷிங்டனின் தொடர்ச்சியான அழுத்தத்தை புது டெல்லி ஆட்சேபிக்கிறது. சீனாவிற்கு சமபலமாக இந்தியாவை உயர்த்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு அது போதியளவிற்கு ஒத்துழைப்பு வழங்குகிறதென அமெரிக்கா, அதன் தரப்பில், நம்புவதாக இல்லை.

வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு தலையங்கம் மோடியிடம் ஒபாமா நிர்வாகம் நட்புடன் அணுகியதை வரவேற்றது. அவரை அது "கருத்து முரண்பாடு கொண்ட மற்றும் தொந்தரவளிக்கும் அரசியல்வாதி" என்று குறிப்பிட்டது. டைம்ஸ் குறிப்பிட்டதாவது, அவை இந்தோ-அமெரிக்க உறவுகளுக்குப் புத்துயிர் அளிக்க ஒரு "அவசியமான நடவடிக்கை" ஆகும் மற்றும் சீனாவைத் தனிமைப்படுத்த, கட்டுப்படுத்தி வைக்க மற்றும் அதற்கு எதிரான யுத்த தயாரிப்புக்கான அமெரிக்காவின் உந்துதலாக விளங்கும் அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" வெற்றியை உறுதிப்படுத்தும் என்று எழுதியது.

பிஜேபி'க்கான ஊக்குவிப்புகளுக்கு அப்பாற்பட்டு, குறைந்தபட்சமாக கூற வேண்டுமானால், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பெரு வியாபாரதிதற்கு நேசமான கொள்கைகள் மற்றும் கட்டுக்கடங்கா ஊழல்களின் மீது பரந்த வெறுப்பு இருந்தாலும் கூட, வரவிருக்கின்ற தேர்தல்களில் மோடியின் வெற்றி நிச்சயம் என்பதிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது. பெருந்திரளான தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் பிஜேபி'இன் முரட்டுத்தனமான வகுப்புவாதம் மற்றும் அதன் பெருநிறுவன சார்பு நிகழ்ச்சிநிரலை பலமாக எதிர்க்கின்றனர்.

எனினும் மோடியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக தழுவுவதற்கான பரந்த பெரு வணிக அடுக்குகள் தயாராக இருப்பது, முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் அவர்கள் பிற்போக்குத்தனமான மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு திரும்புகிறார்கள் என்பதை அடிக்கோடிடுகிறது. வகுப்புவாதம் மற்றும் பெரு வணிக நலன்களை அவர் ஊக்குவிப்பதற்கு அப்பாற்பட்டு, மோடி அவரது வார்த்தைகளில் இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு உபகரணங்களுக்கு காட்டும் ஆதரவிற்காகவும் இழிபெயர் பெறுகிறார். திட்டமிட்டு என்கவுண்டர் செய்வது, அதாவது கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு சுட்டுக் கொல்வதில் உடந்தையாய் இருக்கும் பாதுகாப்பு படைகளை அவர் பலமாக பாதுகாத்துள்ளார் என்பதோடு பாகிஸ்தான் மற்றும் சீனாவை காங்கிரஸ் அரசாங்கம் "சாந்தப்படுத்துவதற்காக" அவர் வழக்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்தியாவை ஒரு மலிவு-உழைப்பு தளமாக மற்றும் சீனாவிற்கு எதிராக மூலோபாயரீதியிலான கூட்டாளியாக அபிவிருத்தி செய்ய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக மோடி தலைமையிலான அரசாங்கத்தோடு வேலை செய்ய அவை தயாராக இருப்பதை சமிக்ஞை காட்டி வருகின்ற அதேவேளையில், மிகவும் உணர்ச்சிகரமான சர்வதேச முதலாளித்துவ விமர்சகர்களும், மூலோபாயவாதிகளும் மோடி தலைமையிலான பிஜேபி'க்கு இருக்கும் வாய்ப்பின் மீது எச்சரிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுபோன்றவொரு அரசாங்கம் அதனாலேயே கட்டுப்படுத்த முடியாத சமூக எதிர்ப்பைக் கட்டவிழ்த்துவிடும் என்றும், அது அதிகாரத்திற்கு வருவதை பாகிஸ்தான் மற்றும் சீனா ஒரு ஆத்திரமூட்டும் விடயமாக பார்க்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில், காங்கிரஸின் துணைத் தலைவரும் காந்தி-நேரு குடும்ப அரசியல் வம்சத்தின் வாரிசுமான ராகுல் காந்தி அல்லது மோடியை இந்தியர்கள் இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது ஒரு "பரிதாபகரமானதாகும்" என்று குறிப்பிட்டது. அது குஜராத் முதல் மந்திரியை "மோசமான காலக்கட்டத்தில்" “விரக்தியின்" பிம்பமாக வர்ணித்தது.

மோடி இந்தியாவைக் காப்பாற்றுவாரா அல்லது சிதைப்பாரா?: நரேந்திர மோடியைக் குறித்து இந்திய முஸ்லீம்கள் அஞ்சுவதற்கு காரணங்கள் உள்ளன" என்ற தலைப்பில் எகோனோமிஸ்ட் இதழின் சமீபத்திய பிரசுரம் ஒரு தலையங்கம் வெளியிட்டது. முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் விதத்தில் அதற்கடுத்த வாரம் வெளியான ஒரு தலையங்கம், “முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு படுகொலைக்காக அவர்களைச் சாந்தப்படுத்த மறுக்கும் ஒரு இந்து தேசியவாதிக்கான" வாய்ப்பு என்பது "பாகிஸ்தானில் உள்ள அவர்களின் அண்டை நாட்டு முஸ்லீம்களோடு ஓர் அணுஆயுத மோதலுக்கான விசையின் மீது அவரது விரலை வைத்திருப்பதைப்" போன்றது என்று குறிப்பிட்டது.