சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: BJP PM candidate Modi makes provocative anti-China speech

இந்தியா: பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளர் மோடி ஆத்திரமூட்டும் சீன விரோத உரை நிகழ்த்துகிறார்

By Deepal Jayasekera
27 February 2014

Use this version to printSend feedback

பாரதீய ஜனதா கட்சியின் குஜராத் முதல் மந்திரியும், அடுத்த இந்திய பிரதமருக்கான ஓட்டத்தில் முன்னணியில் புகழப்படுபவருமான நரேந்திர மோடி, வெளியுறவு கொள்கையை மையப்படுத்திய அவரது முதல் பிராச்சார உரையில் சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்.

கடந்த சனியன்று வடகிழக்கு மாநிலம் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட்டில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில், சீனா "அதன் விரிவாக்க கொள்கையை நிறுத்த வேண்டுமென" கூறினார்.

அவர் தொடர்ந்து கூறினார், “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஓர் பகுதியாகும். அது எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும். எந்த சக்தியாலும் அதை எங்களிடம் இருந்து பறிக்க முடியாது... நான் இந்த மண்ணின் மீது ஆணையிட்டு கூறுகிறேன், இந்த மாநிலம் இல்லாமல் போவதையோ,” “பிரிந்து போவதையோ,” அல்லது "அடிபணிவதையோ" நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்,” என்றார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அவற்றின் 4,000 கிலோமீட்டர் தூர எல்லையை வரையறுப்பதில் தசாப்த காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தெற்கு திபெத் என்று சீனா அழைக்கும் அருணாச்சல பிரதேசத்தின் இறையாண்மை, பிரச்சினையின் இரண்டு விவாதத்திற்குரிய விடயங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 90,000 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்திற்கு சீனா மற்றும் பர்மா எல்லைகளாக உள்ளன. அது இனம் மற்றும் மொழிரீதியாக வேறுபட்ட சுமார் 1.4 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் இருந்து நீண்டகாலத்திற்கு முன்னர் நீக்கப்பட்ட ஒரு பகுதியான லடாக்/அஸ்காய் சின் பகுதியில் வரும் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு கோட்டின் மீது 2013 ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவும் சீனாவும் மூன்று வாரகால இராணுவ மோதலைக் கொண்டிருந்தன. எவ்வாறிருந்த போதினும், அங்கே அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிஜமான சண்டையோ அல்லது எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு நடவடிக்கைகளோ ஏற்படவில்லை.

எனினும், மோடியின் உரை இராணுவ மேற்கோள்களோடு பிணைந்திருந்தது. அவர் 1962இல் ஒரு சிறிய இந்தோ-சீன எல்லை போரின் போது சீன துருப்புகளுக்கு அருணாச்சல பிரதேச மக்கள் அளித்த "பொருத்தமான பதிலடிக்காக" அவர்களின் தைரியத்தைப் பாராட்டினார். அந்த பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளர் கூறினார், “இங்கிருக்கும் மக்கள் நிஜமான நாட்டுப்பற்று மிக்கவர்கள். அவர்கள் 'ஜெய் ஹிந்த்' (இந்தியாவின் வெற்றி) என்ற முழக்கத்தோடு அவர்களின் எதிர்பலத்திற்கு வீரவணக்கம் வைக்கிறார்கள் மற்றும் அவர்கள் மாநில எல்லையைப் பாதுகாப்பதில் பெருமிதமடைகிறார்கள்,” என்றார்.

அவரது போர்நாடும் சீன விரோத உரையோடு, மோடி இந்திய பேரினவாத்த்தை தூண்டிவிடவும் மற்றும் ஒரு இந்து தேசியவாத "சக்திமானாக" அவரது பிம்பத்தை மெருகேற்றவும் முனைந்திருந்தார். இந்தியாவின் வரலாற்றுரீதியிலான விரோதியும், சீனாவின் ஒரு நெருங்கிய கூட்டாளியுமான பாகிஸ்தான் விடயத்தில் "சாந்தமாக" இருப்பதற்காக மற்றும் இராணுவ பலங்களுக்கு போதியளவிற்கு ஒத்துழைப்பு அளிக்காததற்காக பிஜேபி, இந்தியாவின் தேசிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியை வழக்கமாக தாக்கி வருகிறது. மே 1998இல், பிஜேபி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த சில வாரங்களிலேயே, இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியதோடு, அது தன்னைத்தானே ஓர் அணுஆயுத நாடாக உத்தியோகப்பூர்வமாக பிரகடனப்படுத்தி கொண்டது. சீனா உடன் மூலோபாயரீதியில் சமமான தளத்தைப் பகிர்ந்து கொள்வது இந்தியாவிற்கு அவசியம் என்ற அடிப்படையில் அந்த நடவடிக்கையை அது நியாயப்படுத்தியது.

எவ்வாறிருந்த போதினும் மோடியின் கருத்துக்கள் உள்நாட்டு பார்வையாளர்களுக்கும் அப்பாற்பட்ட நோக்கத்தை கொண்டுள்ளது. சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த மற்றும் அதன் உயர்வை இராணுவரீதியில் தடுக்க தயாரிப்பு செய்யும் அமெரிக்க மற்றும் ஜப்பானின் உந்துதலோடு பிஜேபி தலைமையிலான அரசாங்கம் மேலதிகமாக பகிரங்கமாகவும், முழுவதுமாகவும் இணைந்து நிற்கும் என்பதை அவற்றிற்கு ஒரு சமிக்ஞை காட்டுவதாக அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர் நான்சி பாவெல் உடனான அவரது சந்திப்பிற்கு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒருசில நாட்களில்மோடி இந்தியாவின் தொலைதூர மற்றும் சிறிய மாநிலங்களில் மேற்கொண்ட விஜயத்தின் போதுசீனாவிற்கு எதிராக கடுமையாக சாடினார். அமெரிக்க அரசாங்கத்தால் ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மோடி புறக்கணிக்கப்பட்டு இருந்ததை நான்சி பாவெல் உடனான சந்திப்பு முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. 2002இல் முஸ்லீம்களுக்கு எதிராக குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைத் தூண்டிவிடுவதில், ஒத்துழைப்பு வழங்கியதில் மற்றும் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் அவர் பாத்திரம் வகித்தார் என்பதற்காக அந்த புறக்கணிப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. (பார்க்கவும்: இந்து மேலாதிக்க இந்திய பிரதம மந்திரி வேட்பாளருடன் வியாபாரம் செய்ய அமெரிக்கா தயாராகிறது)

மோடியின் கருத்துக்களுக்கு பெய்ஜிங் மிக எச்சரிக்கையோடு பதிலிறுப்பு காட்டி உள்ளது. அதேவேளையில் சீன "விரிவாக்கவாதம்" (expansionism) என்ற அவரது குற்றச்சாட்டை அது நிராகரித்துள்ளது. திங்களன்று செய்தியாளர்களிடையே பேசுகையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யுங் கூறினார், “நாங்கள் அண்டை நாடுகளுடன் நேசமான உறவை மற்றும் நட்புறவை வளர்க்க விரும்புகிறோம். மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்துவேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் கருத்து பரிவர்த்தனைகள் மூலமாக தீர்க்க விரும்புகிறோம்,” என்றார். பல தசாப்தங்களாக இந்தியாவுடன் எவ்வித எல்லை மோதல்களும் கிடையாது என்பதை குறிப்பிட்டுக்காட்டி, அவர் தொடர்ந்து கூறினார், “அங்கே அமைதியை நிலைநிறுத்த எங்களிடையே போதுமான சாத்தியக்கூறு உள்ளதென்பதற்கு அங்கே பலமான ஆதாரங்கள் உள்ளன. இது இருதரப்பு உறவுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதாகும்,” என்றார்.

அதேவேளையில் இந்தியாவுடனான அதன் எல்லை பிரச்சினை மீதான அடித்தளத்தை விட்டுக்கொடுக்காமல் பெய்ஜிங் அதை பல ஆண்டுகளாக குறைத்துக்காட்ட முயன்று வருவதோடு, வேறுவிதத்தில் புது டெல்லியோடு நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பின்தொடர முயல்கிறது. 2011இல் மோடி முதலீட்டிற்காக தம்பட்டம் அடிக்க சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது அவரே கூட சீன அரசாங்கத்தால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். வாஷிங்டன் அதன் சீன விரோத புவிசார் அரசியல்-இராணுவ மூலோபாயத்திற்காக இந்தியாவைக் கடிவாளமிட தீர்க்கமாக உள்ளது என்பதை பெய்ஜிங் துல்லியமாக அறிந்துள்ளதோடு, அதை தடுக்கும் நம்பிக்கையில் புது டெல்லியோடு நட்புறவை பேண முனைந்துள்ளது.

மேலும் கடந்த சனியன்று, அசாம் மாநிலத்தின் சில்சாரில் மோடி ஒரு சமூகத்தைத் தூண்டிவிடும் வகையில் சொற்பொழிவாற்றினார். அதில் அவர் இந்தியா முதலும் முக்கியமாகவும் இந்துக்களின் நாடாகும் என்ற அவரது பிற்போக்குத்தனமான இந்து மேலாதிக்க கண்ணோட்டத்தை வெளியிட்டார்.

அவரது சில்சார் உரையில் பிஜேபி தலைவர், வறுமை மற்றும் அரசியல் இடர்பாடுகளால் பங்களதேஷை விட்டு வெளியேறி, 1947இல் துணை கண்டத்தின் வகுப்புவாத பிரிவினை மூலமாக ஸ்தாபிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான எல்லையைக் கடந்து வந்துள்ள மற்றும் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பங்களதேஷ்வாசிகள் விடயத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் அணுகுமுறையைக் கண்டித்தார்.

பங்களதேஷில் இருந்து (முஸ்லீம்) புலம்பெயர்ந்தோரின் உள்வரவை அனுமதிப்பதற்காக மற்றும் பங்களதேஷில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயரும் இந்துக்களை இந்திய பிரஜைகளாக வரவேற்க மறுப்பதற்காக இரண்டிற்காகவும் மோடி தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூறினார்.

மோடி வலியுறுத்தினார், "ஏனைய நாடுகளில் துன்புறுத்தப்படும் மற்றும் இடர்பாடுகளுக்கு ஆளாகும் இந்துக்களின் மீது" இந்தியாவிற்கு பொறுப்புணர்வு உள்ளது. குஜராத் மாநிலத்தின் முஸ்லீம் சிறுபான்மையினரை அவரது அரசாங்கம் தவறாக நடத்தியதைப் பாகிஸ்தான் விமர்சித்த போதெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக அந்த குஜராத் முதல் மந்திரி சீறி உள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை.

பங்களதேஷைச் சேர்ந்த புலம்பெயர்வோர் மீது பிஜேபியின் பிற்போக்குத்தனமான வகுப்புவாத பகுப்புமுறையை மேலதிகமாக இன்னும் வெளிப்படையாக எடுத்துக்காட்டும் விதத்தில் மோடி அறிவித்தார், “பங்களதேஷில் இருந்து இரண்டு வகையான மக்கள் வருகின்றனர் உள்நாட்டினரை எண்ணிக்கையில் விஞ்சிவிட வேண்டுமென்ற ஒரு சூழ்ச்சியோடு ஒருதரப்பினர் வருகின்றனர், மற்றொரு தரப்பினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தால் வருகின்றனர். இரண்டாவது தரப்பினர் வங்காள இந்துக்கள், அவர்களை காங்கிரஸ் D வாக்காளர்கள் (அதாவது dubious voters, நம்பவியலாத வாக்காளர்கள்) என்று குறித்து வைக்கிறது,” என்றார்.

மோடியின் கருத்துக்கள் இந்தியாவின் வடகிழக்கில் வாழும் முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு எதிராக அரசு இடர்பாடு மற்றும் முரட்டுத்தனமான வன்முறை இரண்டிற்கும் கதவைத் திறந்து விடுகிறது.

மோடியின் சீன-விரோத உரைக்கு காங்கிரஸ் கட்சி விடையிறுப்பு காட்டவில்லை. அவரது கருத்துக்கள் ஆத்திரமூட்டுபவை என்பதோடு தெளிவாக வாஷிங்டனுக்கான ஒரு சமிக்ஞையாக இருக்கின்ற போதினும், அவை தற்போதைய அரசாங்கத்தால் கூறப்பட்டவைகளில் இருந்து பண்புரீதியில் வேறுபட்டவை அல்ல. சீனாவின் ஆட்சேபனைகளுக்கு இடையே, பிரதம மந்திரி மன்மோகன் சிங் 2009இல் அருணாச்சல பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் மற்றும் தசாப்தங்களாக ஒரு காங்கிரஸ் அங்கத்தவராக இருக்கும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த நவம்பரில் அங்கே பயணம் மேற்கொண்டார். அவர் அதை "இந்தியாவின் ஒரு உள்ளார்ந்த பாகமென்று" அறிவித்த போது, அது சீனாவிடம் இருந்து ஒரு கோபமான பதிலிறுப்பை வரவழைத்தது.

இந்தியாவின் "மூலோபாய சுய அதிகாரத்தைத்" தூக்கிப்பிடிப்பதாக வலியுறுத்தி வருகின்ற அதே வேளையில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் "ஓர் உலகளாவிய மூலோபாய" இந்தோ-அமெரிக்க கூட்டுறவின் பாகமாக வாஷிங்டனுடன் இராணுவ கூட்டுறவை வேகமாக விஸ்தரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில், இந்தியா அதன் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய உறவுகளை வேகவேகமாக ஜப்பானுடனும் விஸ்தரித்துள்ளது. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஜனவரி 26 அன்று இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அபே தலைமையின் கீழ், ஜப்பான் இந்தியாவை தற்போதைய அமெரிக்க தலைமையிலான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் முத்தரப்பு கூட்டணிக்குள் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது மற்றும் இராணுவ-மூலோபாயரீதியில் வாஷிங்டனை ஜப்பான் சார்ந்திருப்பதைக் குறைக்க டோக்கியோவிற்கு உதவும் வகையில் ஒரு இந்தோ-ஜப்பானிய கூட்டணியை அபிவிருத்தி செய்யவும் முயன்று வருகிறது.