சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK facing housing costs time bomb

ஐக்கிய இராச்சிய வீட்டு செலவினங்கள் பாரிய அதிகரிப்பை எதிர்நோக்குகின்றன

By Dennis Moore 
3 March 2014

Use this version to printSend feedback

பிரித்தானியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை வைத்திருக்க முடியுமா என்ற தீவிர கவலைகளைக் கொண்டுள்ளனர் என்று வீட்டு அறக்கட்டளை ஷெல்டர் (Shelter) கூறுகிறது.

YouGov மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட அறக்கட்டளையின் ஒரு மதிப்பீடு 4,000 இடத்தில் நடாத்தப்பட்டது. இது உளைச்சல் தரும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது. பலரும் தாங்கள் வீட்டுக் கட்டணங்களைக் கொடுக்க முடியாது என அஞ்சுவதைக் காட்டுகிறது. மதிப்பீடு செய்யப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் தங்கள் கடிதத்தை திறப்பதில்லை. காரணம் அது செலுத்தாத கடன் பற்றிய நினைவூட்டலாக இருக்கலாம் என்னும் கவலைதான்.

குடும்பங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது 70%க்கும் மேல் அடைமான கடனுள்ள அல்லது வாடகை கொடுப்பவர்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு திணறுகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 63% உடன் இது ஒப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த சிறிய இடைவெளி பரந்த மக்கள்திரளை பாதிக்கும் பொருளாதார பாதுகாப்பின்மைக்கு உதாரணம் ஆகும்.

ஷெல்டரில் தலைமை நிர்வாகி காம்ப்பெல் ரோப் பின்வருமாறு விளக்கினார்: பொருளாதார மீட்பு பற்றிய சமீபத்திய விவாதம் இருந்தாலும், அதிக வீட்டுச் செலவுகள், ஊதிய முடக்கங்கள், உயரும் உணவு, மின்விசைக் கட்டணங்கள பல குடும்பங்களுக்கு தீயகனா போன்ற காட்சிகளை தோற்றுவித்துள்ளன. அவை அவர்களை உடைவுநிலைக்கு செல்லுமளவிற்கு தள்ளுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.

அவர் மேலும் கூறியது: இக்காலத்தின் கவலைதரும் அடையாளம் பலரும் புத்தாண்டை எப்படி தங்கள் வாடகை அல்லது அடைமானத்தை 2014ல் கொடுக்கப்போகிறோம் என்ற கவலையுடன் ஆரம்பிக்கின்றனர். அவர்கள் உதவி பெறாவிடின், இப்பொழுது தவிக்கும் சில குடும்பங்கள், இந்த ஆண்டு தங்கள் வீடுகள் இழக்கப்படும் என்னும் உண்மையை எதிர்கொள்வர்.

ஷெல்டரின் முந்தைய ஆய்வுகளில் இருந்து 105 வீடுகளுக்கு 1 என்ற விகிதத்தில் பிரித்தானியாவில் மீள்எடுத்துக் கொள்ளப்படும் அபாயத்தில் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஐக்கிய இராச்சியம் முழுவதும் படர்ந்துள்ள அதிகமாக மீள்எடுத்துக் கொள்ளப்படும் இடங்களில் இருப்பதை விட மிகவும் அதிகம் ஆகும். இவற்றுள் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள சால்போர்ட் அடங்கும். அங்கு  60 இல்லங்களில் 1 அபாயத்தில் உள்ளது. லண்டனில் நியூஹாமில் 35 வீடுகளில் 1ஆபத்தில் உள்ளது.

அநேகமாக ஒருதலைப்பட்சமாக செயல்படுத்தப்படும் ஊதிய வெட்டுக்கள், முடக்கங்களினால் சரியும் ஊதியங்களுடன் வேலையின்மை, பாதுகாப்பற்ற வேலை இவற்றின் உயர்வுடன் இணைந்து பலரும் தங்கள் வாடகை அல்லது அடைமானப் பணத்தை கொடுக்கப் பெரும் கடனுக்குள் மூள்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன.

3,500க்கும் மேற்பட்ட மக்களின் சமீபத்திய மதிப்பீடு ஒன்று பெருகிய எண்ணிக்கையில் மக்கள் ஆபத்தான கடன்களை வாங்குவதாகவும், ஐந்தில் ஒருவர் வீட்டுச் செலவுகளை சந்திக்க கடன் வாங்குகின்றனர் என்பதைக் கண்டுள்ளது. மதிப்பீட்டிற்கு உட்பட்டவர்களில் 19% ஒரு கடனை, அனுமதியற்ற கூடுதல் பணத்தை எடுத்தல், கடன் அட்டைகள் பயன்படுத்தப்படல் இவற்றைப் பயன்படுத்தியுள்ளனர் அல்லது கடந்த 12 மாதங்களில் தங்கள் கடன்/அடைமானத்தைக் கொடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்கினர்.

இவர்களுள் 2%, வீட்டுக் கட்டணத்திற்கு கொடுக்க வேண்டிய மிக அதிக சம்பளநாள் கடனை நாடுகின்றனர். இவை வேறு கடன்வாங்க முடியாதவர்களால் வாங்கப்படும் குறுகிய கால கடன்கள் ஆகும். பெரும்பாலானவர்கள் வேலையில் உள்ளனர், ஆனால் சம்பள தினத்திற்கு முன் பணம் இல்லாமல் போய்விடும். எனவே இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

ஆண்டு வட்டிவிகிதங்கள் 1,500 முதல் 4,000 சதவிகிதம் என இருக்கையில், சிலநேரம் 5,000 என்று கூட இருக்கையில் இக்கடன்கள் மக்களை இன்னமும் கடனில் தள்ளுகிறது. ஒரு 300 பவுண்டுக்களுக்கு (30 நாட்களுக்கு எடுத்தது) உதாரணமாக ஆண்டு வட்டிவிகிதத்தில் 1,737 என்பது திருப்பிக் கொடுக்கையில் 375 பவுண்டுகள் ஆகிறது உரிய தேதியில் கடன் கொடுக்கப்படவில்லை என்றால், பல நேரமும் அடுத்த மாதத்திற்குத் தள்ளப்படுகிறது, மற்றொரு 30 நாள் வட்டியுடன் ஏற்கனவே கொடுக்க வேண்டிய வட்டியும் கூடும்.

சம்பள நாளில் பணத்தை வாங்கிக் கொள்ளும் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் கடைசிக்காலத்தில் பெருகிவிட்டன. இன்னும் அதிக மக்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு கொடுக்க முடியாத நிலையில் திணறுகையில், ஒவ்வொரு மாதமும் தங்கள் நிதியச் செலவுகளை சமாளிக்க முடியாதவர்கள், பல நேரமும் சம்பளப்பணம் வரும் மிகவும் அத்தியாவசிய தேவைகளுடன் மட்டும் வாழ்கின்றனர்.

வாடகை/அடைமானங்கள் 2012ல் 6,797ல் இருந்து 2013ல் 8,995 என மூன்றில் ஒரு பகுதி கடந்த ஆண்டில் இருந்து உயர்ந்த நிலையில் அதைக் கொடுக்க திணறும் மக்களுக்கு தன் சேவையை அளிப்பதாக ஷெல்டர் கூறியுள்ளது. இந்த அறக்கட்டளை எண்ணிக்கை உதவி கேட்காத பலரையும் மறைக்கிறது, அவர்கள் தங்கள் பணப்பிரச்சினைகளை குடும்பங்கள், நண்பர்களிடம் இருந்து மறைக்க முற்படுகின்றனர் என்று கூறுகிறது.

வட்டி விகிதங்கள் குறைவு என்றாலும் அடைமானத்தை திருப்பிச்செலுத்த இன்னும் பலரும் திணறுவது, பிரித்தானியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு முன் இருக்கும் ஒரு நிதிய நெருக்கடியின் வெடிக்கும் சாத்தியம் மறைக்கப்பட்டுள்ளது.

Resolution Foundation சிந்தனைக்குழு வரவு-செலவுத் திட்ட அலுவலகத்தில் இருந்து சமீபத்திய ஐந்து ஆண்டு கால வளர்ச்சியை பயன்படுத்தி ஆய்வை நடத்தியது. கடன் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படும் இல்லங்களின் எண்ணிக்கை எப்படி ஏற்றம் பெறும் என்றும், வட்டி விகிதங்கள், குடும்ப வருமானங்களை ஒட்டி எப்படி இருக்கும் என்றும். தற்பொழுது வட்டி விகிதங்கள் குறைவு என்பது பலரும் தங்கள் வீடுகளை இழப்பதை தடுக்கிறது.

தற்பொழுது செலவு செய்யக்கூடிய தங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் அடைமானத்திற்கு செலவழிக்கும் குடும்பங்கள் 2018 ஐ ஒட்டி வட்டி விகிதம் அதிகமானால் மும்மடங்கு ஆகும்.

மிக நம்பிக்கையான நிலைமையில்கூட, 2018 அளவில் வட்டிவிகிதம் மெதுவாக 3%தான் என உயரும், பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று கருதினால், 1.2 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் இன்னமும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தில் பாதிக்கும் மேல் அடைமானத்தை திருப்பிக் கொடுப்பதில்தான் செலவழிப்பர். இந்த எண்ணிக்கை அதிக கடன் தன்மைக்கு ஒரு அடையாளம் என ஏற்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் இங்கிலாந்து வட்டி விகிதங்களை இன்னும் விரைவாக உயர்த்தினால், 2018 அளவில் 5% என, வளர்ச்சி தொடர்ந்து தாமதமாக இருக்குமானால், கிட்டத்தட்ட 2 மில்லியன் வீடுகள் நிதிய சிக்கல்களை எதிர்கொள்ளும். இதில் பாதி குடும்பங்களில் குழந்தைகள் இருக்கும். 2018 ஐ ஒட்டி அடிப்படை விகிதம் (வட்டி) 5% உயரும் என சந்தைகள் நம்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2007ல் நிதிய நெருக்கடிக்கு முன் அனுபவிக்கப்பட்ட வீட்டுக்கடன் அளவுகளைவிட அதிக அளவில் ஆபத்தை வருங்காலத்தில் அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அப்பொழுது 870,000 குடும்பங்கள் தங்கள் வருமானங்களில் பாதிக்கும் மேல் கடனைத் திருப்பிக் கொடுப்பதில் செலவழித்தன. இது சரியும் வட்டி விகிதங்களுக்கு இணங்க 2011ல் 600,000 எனக் குறைந்துவிட்டது.

தற்பொழுது ஆறு வீடுகளில் ஒன்று அடைமானத்தில் உள்ளது. ஆண்டு வருமானத்தைவிட குறைந்தப்பட்சம் நான்கு மடங்காவது வீட்டு கடன்களை தீர்ப்பதற்குத் தேவை. பலரும் இதனால் வட்டிவிகித உயர்வினால் பாதிக்கப்படுவர்.

மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை மனிதத் தேவையான வீட்டிற்கு வங்கி வட்டியின் தயவை நம்பியுள்ளனர் என்பது சமூக அளவில் குற்றம் ஆகும். இந்தப் பெரிய நெருக்கடிக்குத் தீர்வு செல்வத்தை பெரும் மறுபங்கீடு செய்வதில் உள்ளது. அதாவது பணக்காரர்களிடம் இருந்து ஏழைகளுக்கு மாற்றுவது, பெரிய கட்டுமான நிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது ஆகும்.