சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German army expands its submarine fleet

ஜேர்மன் இராணுவம் அதன் நீர்மூழ்கி கப்பற்படைப் பிரிவை விரிவாக்குகிறது

By Denis Krasnin
31 March 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் கடற்படை கடந்த வாரம் அதன் புதிய நீர்மூழ்கி கப்பல் U35ஐ சேவையில் கொண்டு வந்தது. 500 மில்லியன் யூரோ மதிப்பிலான அது ஜேர்மன் கடற்படைக்கு சொந்தமான மிக நவீன, அணுஆயுதமேந்தா நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்றாகும். அது ஜேர்மன் இராணுவத்தால் கேட்பாணை வழங்கப்பட்டிருக்கும் 212A ரக வரிசையின் ஆறு நீர்மூழ்கி கப்பல்களில் ஐந்தாவதாகும்.

ThyssenKrupp Marine Systems நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அந்த நீர்மூழ்கி கப்பல் நவம்பர் 2011 இல் கியேலில் (Kiel) அறிமுகப்படுத்தப்பட்டது. அது "நவீனப்படுத்தல் மற்றும் நடவடிக்கை திட்டமிடலில் ஒரு முன்னோக்கிய படியைக்" குறிப்பதாக அப்போது கடற்படையின் வலைத் தளம் குறிப்பிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், ஜேர்மன் இராணுவம் அதன் உள்நோக்கத்தில் முன்பினும் அதிகமாக மிக வெளிப்படையாகி உள்ளது.

திங்களன்று கியேலில் (Kiel) நடந்த இணைப்புவிழாவில், U35 சேவையில் கொண்டு வரப்பட்டதைச் சுற்றிய அவரது பேச்சில், கடற்படையின் அதிரடிப்படை பிரிவின் செயல்துறை தலைவர் முதன்மை கடற்படை தளபதி ஹன்ஸ்-கிறிஸ்டியான் லூதர் கூறுகையில், இஃப்ளோடில்லா 1 (flotilla 1) நடவடிக்கையின் இந்த புதிய "பாதுகாவலர்", ஜேர்மன் கடற்படையின் தகைமைகளை மேற்கொண்டு அதிகரிக்கின்ற "தகைமை கட்டமைப்பாளராவார்" (capacity builder) என்று வர்ணித்தார். பின்னர் அவர் நேரடியாக கடற்படையின் மீள்ஆயுதமயமாக்கலை ஜேர்மனியின் மீள்இராணுவமயமாக்கலின் உள்ளடக்கத்தில் நிலைநிறுத்தி, ஜேர்மன் இராணுவத்தின் மூன்று உட்கூறுகளில் இந்த சிறியவொன்றை பாராட்டினார்.

எதிர்காலத்திற்கான தகைமைகளுடன் தாக்கும் படையின் ஒரு நவீன அம்சமாக, கடற்படை 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு விடையிறுக்க தயாராக இருப்பதாக லூதர் தெரிவித்தார். “ஆயுத படைகளுக்கு பல்வேறு வகையான பன்முக செயல்பாட்டு அணுகுமுறைகள் அவசியப்படுகின்றன என்பதை, கடந்த ஆண்டின் அபிவிருத்திகள் துல்லியமாக மீண்டுமொரு முறை நமக்கு எடுத்துக்காட்டி உள்ளன. இந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நீர்மூழ்கி கப்பல்கள் துல்லியமானவை ஆகும்,” என்றார்.

அணுஆயுதமேந்தா நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதில் ஜேர்மனி முன்னணியில் இருந்துள்ளது என்று லூதர் தெரிவித்தார். 212A ரக நீர்மூழ்கி கப்பல்கள் "அணுஆயுதமேந்தா நீர்மூழ்கி கப்பல்களிலேயே உலகின் மிக நவீன தகைமைகளை" கொண்டதாகும். கூட்டு ஒத்திகைகள் மற்றும் நடவடிக்கைகளில், நமது பங்காளிகளும் கூட்டாளிகளும், அந்த கப்பல்கள் மீது எப்போதுமே அவர்களது அங்கீகரிப்பைக் காட்டவும் மற்றும் அவற்றின் தகைமைகளுக்கு மதிப்பளிக்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்,” என்றார்.

ஜேர்மன் கடற்படையின் புதிய ரக 212A நீர்மூழ்கி கப்பல்கள் நீரில் மூழ்கி புதிய சாதனைகளைப் படைத்திருப்பதாகவும், கூட்டு ஒத்திகைகளின் போது பல சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்க இயலாதபடிக்கு போர்க்கப்பல்களுக்கான அமெரிக்க பாதுகாப்பு அமைப்புமுறைகளையே ஏமாற்றி உள்ளதாகவும் சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மன் கடற்படை மீண்டும் மீண்டும் பெருமையடித்துக் கொண்டுள்ளது. “ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவின் சாதனைகள்" என்று தலைப்பிட்டு Die Welt இல் வெளியான ஒரு கட்டுரை, “முதலாம் உலக போரில் அவை ஒரு பேரழிவை உண்டாக்கின. இரண்டாம் உலக போரில் அவை பெரும் இழப்பை சந்தித்தன, இன்றோ ஜேர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் தீர்மானிக்கவியலா ஆயுதங்கள் எனும் அளவிற்கு அவை அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களே அச்சப்பட கற்றுத்தருகின்றன,” என்று குறிப்பிட்டது.

ஜேர்மன் ஆளும் மேற்தட்டு உலகெங்கிலுமான அவர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக இத்தகைய ஆயுதங்களைப் பிரயோகிக்க நோக்கம் கொண்டுள்ளது. ஓர் உத்தியோகபூர்வ கடற்படை அறிக்கையின்படி, பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயெனின் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், CDU) வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நாடாளுமன்ற வெளியுறவுத்துறை செயலர் மார்கஸ் க்ரூபெல் கூறுகையில், “துருப்புகளுக்குள் நவீன ஆயுதங்களும் உபகரண அமைப்புமுறைகளும் அறிமுகப்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானது,” என்றார்.

NDR அறிக்கையின்படி, U35 அதற்கு முந்தையவற்றை விட மிகவும் திறன் வாய்ந்ததாகும், மேலும் அது உலகந்தழுவிய நடவடிக்கைகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளது. அது "வெப்ப மண்டல பிரதேசங்களுக்கேற்ப செய்யப்பட்டதோடு", நீண்ட பயணத்திற்கேற்ப நிறைய எரிபொருள்களைச் சேமிக்க கூடியது, அத்துடன் கடலில் மூழ்கிசெல்லும் இராணுவத்தினருக்கும் மற்றும் சிறப்பு படைகளுக்கும் கூடுதல் தளவாடங்களையும் வழங்கக்கூடியதாகும். ஒரு புதிய ரக ரேடியோ சிஸ்டம் கடலுக்கடியில் இருந்து கொண்டே உலகில் எங்கேயும் தகவல் தொடர்புகொள்ள அந்த நீர்மூழ்கி கப்பலைச் சாத்தியமாக்குகிறது.

வான்வழியில் இருக்கும் இலக்குகளை மற்றும் அண்மித்த கடற்கரையோரங்களில் உள்ள இலக்குகளை அழிப்பதைச் சாத்தியமாக்கும் வகையில், ஓர் ஏவுகணை அமைப்புமுறையும் எதிர்காலத்தில் அதில் அமைக்க முடியும். அதற்கும் கூடுதலாக, கண்டுபிடிக்க சிக்கலுடைய நீர்மூழ்கிக்கப்பல் குண்டுகளை (torpedoes), அதன் ஆயுதங்களாக்கும் நோக்கமும் உள்ளது. U35 இன் சகோதர கப்பலான U36, வரவிருக்கும் மாதங்களில் ஆய்வாளர்களால் சேவைக்கு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட உள்ளது. இது நீர்மூழ்கி கப்பல் படையை, ஜேர்மன் இராணுவத்திற்கான ஒரு இரகசியமான மற்றும் மூலோபாயரீதியில் முக்கிய ஆயுதமாக, முழுமைப்படுத்தும்.

எவ்வாறிருந்தபோதினும், ஜேர்மன் இராணுவத்தை ஆயத்தப்படுத்துவதற்கான பொதுவான திட்டத்துடன் இணைந்து கடற்படை மேற்கொண்டும் விரிவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 8 பில்லியன் யூரோ அளவில் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை அதிகரிக்க சமீபத்திய வாரங்களில் ஜேர்மன் மந்திரிகள்சபை ஒப்புக் கொண்டது. ஓர் உத்தியோகபூர்வ மூலோபாய ஆய்வறிக்கையின்படி, “நேட்டோவில் விரிவார்ந்த ஈடுபாடு கொள்ளவும்" மற்றும் “உலகெங்கிலும் மேலதிகமாக முன்னேறவும்" நிறைய செலவிட வேண்டியுள்ளது. இவ்விரு பிரிவுகளிலுமே கடற்படை முக்கிய பாத்திரம் வகிக்கும் என்பதுடன், அவற்றின் முன்னணி இராணுவ பிரமுகர்களோ ஏற்கனவே அவர்களது புதிய பொறுப்புக்களையும் மற்றும் கடந்தகால பெருமிதத்தையும் குறித்து கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 “கியேலும் 1865-2015 கடற்படையும்: 150 ஆண்டுகளின் ஒருங்கிணைந்த வரலாறு" என்று தலைப்பில், ஜேர்மன் இராணுவத்தின் வரலாற்று மையமான கியேலின் அரங்கில் ஒரு மாநாடு நடந்தது. ஜேர்மன் இராணுவ வலைத் தள தகவலின்படி, அவரது பிரதான உரையில், கடற்படையின் உதவி ஆய்வாளரான துணை அட்மிரல் ராய்னர் பிரின்க்மான் உரையாற்றுகையில், “உலகம் எங்கிலும் அதிகரித்துவரும் கடற்படையின் தேவைகள் மற்றும், அதனுடன் பிணைந்து, கடற்படையை சார்ந்திருக்கும் ஜேர்மனியின் தன்மை,” ஆகியவற்றைக் குறித்து பேசினார். “ஒரு காலத்தில் மாபெரும் ஒன்றாக இருந்து, ஆனால் இப்போது சிறியதாக உள்ள கடற்படையானது அரசியல் சம்பவங்களின் மையத்தில் உள்ளது, அது இத்தகைய சம்பவங்களில் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது,” என்றார்.

அந்த கடற்படையின் உத்தியோகபூர்வ வலைத் தளத்தைப் பார்த்தால், முந்தைய நூற்றாண்டைப் போலவே, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களின் பாதுகாவலனாக கடற்படை அதன் பாத்திரம் குறித்து மிகவும் நனவுபூர்வமாக உள்ளது வெளிப்படுகிறது. அந்த வலைத் தளம் மழுப்பலாக அறிவிக்கிறது: “ஜேர்மனியின் மிகவும் முக்கிய பொருளாதார அடிப்படைகளில் கடலும் ஒன்றாகும். உலகின் எல்லா வணிக நாடுகளைப் பொறுத்த வரையிலும், கடல் தான் பண்ட பரிவர்த்தனைக்கான மிகவும் முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது. மொத்த உலக வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கு கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளில் 95 சதவீதத்திற்கு நெருக்கமாக, ஜேர்மனியின் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளில் ஏறத்தாழ 70 சதவீதம் கடல் பாதைகளைப் பயன்படுத்துகின்றன. ஜேர்மன் பெரிதும் தொழில்மயப்பட்ட ஏற்றுமதி நாடாகும், ஆனால் அதனிடம் மூலப்பொருட்கள் இல்லை. பொருளாதாரரீதியிலும் அரசியல்ரீதியிலும் செயல்படுவதற்கு, குறிப்பாக பெடரல் குடியரசு அவசியமான இறக்குமதி வினியோகத்தைப் பாதுகாப்பதைச் சார்ந்துள்ளது.”

முன்னாள் கடற்படை ஆய்வாளர் வொல்ஃப்காங் நோல்டிங்கால் எழுதப்பட்ட, “கடற்படை குறிக்கோள்கள் 2025+ இன் கற்பனையில்" என்று தலைப்பிட்ட கடற்படையின் தற்போதைய மூலோபாய ஆய்வறிக்கையானது, "ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நலனின் அடிப்படையில்" இராணுவரீதியில் "சுதந்திரமான மற்றும் ஒளிவுமறைவற்ற உலக வர்த்தகத்தை" பாதுகாக்க கடற்படை தயாரிப்பு செய்து வருவதாக குறிப்பிடுகிறது.

ஏனென்றால் ஜேர்மனி "அச்சுறுத்தல்களும் அபாயங்களும் எழும் இடத்தில் அவற்றை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் [எதிர்கொள்ளும்]”, கடற்படை "பன்னாட்டு கட்டமைப்புகளுடன் மற்றும் எதிரி கடற்கரையோரங்களில் இருக்கும் அச்சுறுத்தல்களுடன், நீண்டகால மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு தகைமை" கொண்டிருக்க வேண்டியுள்ளது. அவை “ஆகவே போர் படைகளின் கூட்டு நடவடிக்கைகளில் கூடுதலாக ஒருமுகப்பட வேண்டியுள்ளது மற்றும் கடலில் இருந்து தரைப்படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அவற்றின் தகைமைகளை விரிவாக்க வேண்டியுள்ளது. ஒரு சாகச கடற்படையாக கடற்படையின் மேலதிக அபிவிருத்தியும் இதில் முதலிடத்தில் உள்ளது.”

சாகச கடற்படை" என்பது உலகளவில் செயல்படுவதற்கு தகைமை கொண்ட ஒரு போர் கடற்படை என்பதற்கு இணைச்சொல்லாகும். ஆபிரிக்காவின் ஹார்னில் மற்றும் லெபனிய கடற்கரையை ஒட்டி கடற்படையை நிலைநிறுத்தியதைப் போலவே, நீர்மூழ்கி கப்பல் பிரிவை மீள்ஆயுதமயப்படுத்துவதும் மற்றும் கருங்கடலில் ரஷ்யாவை குறிவைத்த நேட்டோ ஒத்திகைகளில் கடற்படையைப் பங்கெடுக்க செய்வதும் துல்லியமாக அதுபோன்றவொரு படையை ஸ்தாபிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.