சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Twelve years after Iraq invasion

Middle East engulfed by war

ஈராக்கிய படையெடுப்புக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்

மத்திய கிழக்கு போரால் சூழப்பட்டுள்ளத

Bill Van Auken
31 March 2015

Use this version to printSend feedback

ஏமனில் அமெரிக்க-ஆதரவிலான இராணுவ தலையீடு தொடங்கியுள்ள நிலையில், தோற்றப்பாட்டளவில் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் இராணுவ மோதலால் சூழப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டில் சண்டையிடப்பட்ட இரண்டு உலக போர்களைத் தவிர்த்து பார்த்தால், இத்தகைய வெளியுறவு விவகாரங்களுக்கு முன்னுதாரணமே இல்லை.

ஒரு மோதலில் இருந்து இன்னொன்றுக்கு இட்டுச் சென்றுள்ள வாஷிங்டன் பின்தொடர்ந்த கொள்கைகள், அதுவும் வெளிப்பார்வைக்கே ஒன்றோடொன்று வேறுபட்டுள்ள அவை, பிரதான அமெரிக்க சிந்தனை குழாம்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர் குழுக்களிடையேபெயரளவிற்கான ஐரோப்பிய கூட்டாளிகளைக் குறித்து கூற வேண்டியதே இல்லை என்றநிலையில்"மூலோபாய தொடர்பின்மை" மீது பெருகிவரும் கவலைகளைப் வெளிப்படுத்த தூண்டியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் குழப்பத்தில் உள்ள முரண்பாடுகளை பிரகாசமாக வர்ணிப்பது, அவர்கள் நியாயத்திற்காக செயல்படுகிறார்கள் என்றாகாது.

ஏமனில், சவூதி அரேபியா, ஏனைய எண்ணெய்வள சுன்னி முடியாட்சிகள் மற்றும் ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசியின் எகிப்திய ஆட்சி ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தலையீட்டிற்கு, ஒபாமா நிர்வாகம் தளவாட வினியோக உதவிகள், (கிளஸ்டர் குண்டுகள் உட்பட) ஆயுதங்கள் மற்றும் இலக்குகள் குறித்த உளவுத்தகவல்களை வழங்கி, அதன் முழு ஆதரவை அறிவித்துள்ளது.

சர்வாதிகாரங்கள் மற்றும் அரச கொடுங்கோலாட்சிகளின் இந்த கூட்டணி, அரபு உலகின் அந்த மிக வறிய நாட்டிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது. வாஷிங்டன் மற்றும் ரியாத்தால் நிறுவப்பட்ட ஒரு கைப்பாவை ஜனாதிபதி அப்த் ரப்புஹ் மன்சூர் ஹாதியைத் தூக்கியெறிந்த, ஜாய்தி ஷியைட் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஈரானின் செல்வாக்கை அடக்குவதே, அந்நகரங்களின் மீது குண்டுகள் வீசுவதன் மற்றும் பொதுமக்களைக் கொல்வதன் பின்னாலிருக்கும் அவர்களின் நோக்கமாகும்.

ஈராக்கில், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஈராக்கிய ஜனாதிபதியின் சொந்த ஊரான, தற்போது ISIS இன் (ஈராக் மற்றும் சிரிசாவின் இஸ்லாமிய அரசு) கட்டுப்பாட்டில் உள்ள திக்ரிட் மீது அமெரிக்க போர்விமானங்கள் குண்டுவீசி வருகின்றன. அந்நகரை முற்றுகையிட்டுள்ள பெரிதும் ஈரானிய ஆதரவுடன் மற்றும் ஆலோசகர்களுடன் செயல்பட்டுவரும் ஷியைட் போராளிகள் குழுக்கள் உள்ளடங்கிய ஒரு படைக்கு இந்நடவடிக்கை வான்வழி ஆதரவை வழங்கி வருகிறது.

இத்தைகய போராளிகள் குழுக்களைத் திரும்ப பெறுவதன் மீது வான்வழி தாக்குதல்களை பெண்டகன் நிபந்தனைக்குட்படுத்தி உள்ள போதினும், அவற்றில் சில குழுக்கள் ஈராக்கில் எட்டு ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்ற நிலையில், அது முற்றிலும் வெறும் காட்சிக்காக செய்யப்படுகிறதென பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஷியைட் படைகளே அந்த மண்ணில் பிரதான சண்டையிடும் படையாக உள்ளது.

இதற்கிடையே, சிரியாவில் எல்லைக்கடந்து, வாஷிங்டன் பின்பற்றி வரும் ஒரு கொள்கை அதனுடைய மற்றொரு கொள்கையுடனேயே தோற்றளவில் முரண்படுகிறது, அதாவது ஒருபுறம் ஈரானின் மிக நெருக்கமான கூட்டாளியான ஜனாதிபதி பஷால் அல்-அசாத்தின் அரசாங்கத்தைத் தூக்கியெறிய முனையும் போராளிகள் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க மற்றும் பயிற்சி அளிக்க சூளுரைக்கிறது, மறுபுறம், அசாத் ஆட்சியின் பிரதான ஆயுதமேந்திய ஒருங்கிணைந்த எதிர்ப்பாளர்களாக உள்ள ISIS மற்றும் அல் கொய்தா இணைப்பு கொண்ட அல்-நுஸ்ரா முன்னணிக்கு எதிராக விமான தாக்குதல்களை நடத்துகிறது.

அதேநேரத்தில் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் ஈரான் மீது திணிக்கப்பட்ட தண்டிக்கும் விதத்திலான பொருளாதார தடைகளை நீக்குவதற்கு (அல்லது பகுதியாக நீக்குவதற்கு) பிரதியீடாக அதன் அணுஆயுத திட்டத்தைக் கைவிடச் செய்யும் வகையில், ஈரானுடன் ஒரு உடன்படிக்கையை எட்டும் முயற்சியில், சுவிட்சர்லாந்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி தலைமையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதுபோன்றவொரு உடன்படிக்கையை எட்ட முடியாமல் போனால், நேரடியாக கூடுதல் அமெரிக்க இராணுவ ஆக்ரோஷம் ஈரானுக்கு எதிராக திரும்பக்கூடும். உடன்படிக்கை எட்டப்பட்டாலும் கூட, அதே விடயத்திற்காக அதுவொரு தந்திரோபாய தயாரிப்பாக இருக்குமென்பதை நிரூபிக்கும்.

ஈராக்கிற்கு எதிராக புஷ் நிர்வாகம் அதன் போரைத் தொடங்கியதிலிருந்து இப்போது 12 ஆண்டுகள் ஆகிறது. அதன் ஆக்கிரமிப்பு போர் "பாரிய பேரழிவு ஆயுதங்களை" அழிப்பதற்காகவும், சதாம் ஹூசைன் அரசாங்கத்திற்கும் அல் கொய்தாவிற்கும் இடையிலான உறவுகளால் முன்நிற்கும் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகவும் நடத்தப்படுவதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அங்கே பாக்தாத்தின் மதசார்பற்ற ஆட்சிக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே நிலவிய பரஸ்பர விரோதங்களுக்கு அப்பாற்பட்டு, அத்தகைய ஆயுதங்களும் இருக்கவில்லை அல்லது அதுமாதிரியான தொடர்புகளும் இருந்திருக்கவில்லை.

அதே நேரத்தில், ஈராக்கிற்கு "ஜனநாயகத்தையும்", அதற்கு அப்பாற்பட்டதையும் கொண்டு வரும் ஒரு சுதந்திரப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க தலையீட்டை புஷ் சித்தரித்தார். “மத்திய கிழக்கின் இதயதானத்தில் ஒரு சுதந்திர ஈராக்கை ஸ்தாபிப்பது உலகளாவிய ஜனநாயக புரட்சியில் ஒரு திருப்புமுனை சம்பவமாக இருக்குமென" அவர் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டங்களில் அறிவித்தார்.

அந்த அமெரிக்க படையெடுப்பு தான் ஒரு "திருப்புமுனை சம்பவமாக" இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு மில்லியனுக்கு கூடுதலான ஈராக்கியரின் வாழ்வைப் பறித்து, அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பை அழித்து, மற்றும் பிரித்தாளும் ஒரு திட்டமிட்ட கொள்கையின் பாகமாக ஷியைட் இனத்தவர், சுன்னியர் மற்றும் குர்தியருக்கு இடையே கடுமையான வகுப்புவாத போராட்டங்களைத் தூண்டிவிட்ட ஒட்டுமொத்த மனிதகுல படுகொலையின் ஒரு காலகட்டத்தை அது கொண்டு வந்தது.

ஈராக்கை பொறுத்த வரையில், அந்த போர் பேரழிவுகரமாக இருந்தது. அதுவே அமெரிக்காவை பொறுத்த வரையில், அதுவொரு படுதோல்வியென நிரூபணமானது. 4,500 அமெரிக்க சிப்பாய்களை பலி கொடுத்து, பத்து ஆயிரக் கணக்கானவர்களை காயப்படுத்தி, இராணுவ செலவுகளுக்காக ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு, அது அல் கொய்தாவின் ஒரு துணை அமைப்பான ISIS, அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான இடத்தைக் கைப்பற்றுவதற்கு, அங்கே சமூக மற்றும் அரசியல் நிலைமைகளை உருவாக்கி அளித்ததில் மட்டுந்தான் வெற்றி கண்டது2003 படையெடுப்புக்கு முன்னர் வரையில் அந்நாட்டில் எந்தவித தீவிர இஸ்லாமியவாத பிரசன்னமும் இருந்திருக்கவில்லை.

ஈராக்கிய போர் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஆழமாக நிலைகுலைத்தது, இந்த நிகழ்ச்சிப்போக்கு வாஷிங்டனால் லிபியா மற்றும் சிரியா இரண்டிலும் பினாமி போர்களைத் தொடங்கியதன் மூலமாக தீவிரப்படுத்தப்பட்டது, அவற்றில் அது கடாபி மற்றும் அசாத்தின் மதசார்பற்ற ஆட்சிகளைக் கவிழ்த்து, அமெரிக்க கைப்பாவைகளைக் கொண்டு அவற்றை பிரதியீடு செய்யும் ஒரு முயற்சியில் அல் கொய்தாவுடன் இணைந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரித்தது. அதேபோல இந்த முயற்சிகளும் நூறு ஆயிரக் கணக்கானவர்களைப் பலியாக கொடுத்து மற்றும் இரண்டு சமூகங்களையும் சூறையாடி, இரத்தகளரியான தோல்விகளாக மாறின.

புஷ் நிர்வாகத்தால் 12 ஆண்டுகளுக்கு முந்தைய போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட சாக்குபோக்குகளில் எதுவும் கைவிடப்படவில்லை. மத்திய கிழக்கில் அதன் ஆக்ரோஷ நடவடிக்கைகள்அவை இஸ்லாமிஸ்டுகள் மற்றும் ஏனைய வகுப்புவாத போராளிகள் குழுக்களுடனும், சர்வாதிகாரிகள் மற்றும் இராணுவ சர்வாதிகாரிகளுடனும் பிணைந்துள்ள நிலையில் ஓர் உலகளாவிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" பாகமாக அல்லது ஜனநாயகத்திற்கான ஒரு சிலுவைப்போரின் பாகமாக உள்ளன என்று ஒபாமா நிர்வாகத்தால் நம்பகமானரீதியில் வாதிட முடியாது.

அமெரிக்க மக்களின் ஆதரவை வெகு வெகு குறைவாகவே வென்றுள்ள இத்தகைய நடவடிக்கைகளை, வெள்ளை மாளிகை அவர்களுக்கு தெரிவிக்க முயல்வதே இல்லை அல்லது வெகு சிறிதளவே தெரிவிக்கிறது. ஏமன் போருக்கு வாஷிங்டன் ஆதரவளிக்கும் விடயத்தில், அதன் மொத்த விளக்கமும் ஒபாமாவிற்கும் மற்றும் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல்-சவூத்திற்கும் இடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலின் "வாசிப்பிற்குள்" உள்ளடங்கி விடுகிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி அந்த கொடுங்கோல் முடியாட்சியுடன் அவரது "பலமான நட்புறவை", அதன் தலையீட்டிற்கு அவரது "ஆதரவை", மற்றும் அவரது "சவூதி அரேபியாவின் பாதுகாப்பிற்கான கடமைப்பாட்டை" உறுதிப்படுத்தி இருந்தார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பின்பற்றப்பட்ட பொறுப்பற்ற, குறுகிய நோக்கங்கொண்ட மற்றும் தோற்றப்பாட்டளவில் தொடர்பற்ற கொள்கைகளுக்குப் பின்னால், அங்கே நிலையான ஓர் அம்சமும் தங்கியுள்ளது: அது, மத்திய கிழக்கின் மீதும் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதார வளங்கள் மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஆக்ரோஷமான தேடல் என்பதாகும்.

1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது தொடங்கி விரிவாக்கப்பட்டு வந்த மூலோபாயம், அதாவது வாஷிங்டன் அதன் உலகளாவிய நலன்களைப் பின்தொடர அதன் போட்டியற்ற இராணுவ பலத்தைச் சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்ற மூலோபாயம், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒப்பீட்டுரீதியிலான பொருளாதார பலம் மற்றும் செல்வாக்கு வீழ்ச்சியடைய தொடங்கி உள்ள நிலையில், வெறுமனே அது இன்னும் கூடுதல் பலத்துடன் பாய்கிறது.

நடைமுறையில் மத்திய கிழக்கின் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு வித போரில் அது ஈடுபடுவதிலிருந்து இந்த கொள்கையின் விளைவைக் காணலாம், அத்துடன் இத்தகைய மோதல்கள் ஒரு பிராந்தியம்-தழுவிய மோதலுக்குள், அதன் விளைவாக மூன்றாம் உலக போரை தூண்டிவிடக்கூடிய ஒன்றாக மாறக்கூடிய, எளிதில் உணரத்தக்க அச்சுறுத்தலிலும் வெளிப்படுகிறது.