சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Germany and France stage joint military build-up

ஜேர்மனியும் பிரான்சும் கூட்டு இராணுவ கட்டமைப்பைச் செய்கின்றன

By Peter Schwarz
3 April 2015

Use this version to printSend feedback

செவ்வாயன்று பேர்லினில் நடந்த ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு மந்திரிமார்களின் ஒரு கூட்டு கூட்டம், ஜேர்மனியும் பிரான்சும் கூட்டாக இணைந்து ஒரு தாக்கும் டிரோனைக் கட்டமைப்பதிலும், செயற்கோள் உளவுபார்ப்பு மீது இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைந்து வேலை செய்வதிலும் உடன்பாடு ஒன்றை எட்டியது.

ஐரோப்பிய டிரோனை அபிவிருத்தி செய்யும் ஓர் உடன்படிக்கை வரவிருக்கும் மாதங்களில் கையெழுத்தாகும், அதில் இத்தாலியும் பங்கெடுக்கும். இந்த ஆண்டில் செய்யப்படும் ஓர் ஆரம்ப ஆய்வு, அந்த புதிய விமானத்திற்கான தேவைகளை உறுதிப்படுத்தும். பின்னர் அத்திட்டம் ஸ்பெயின் மற்றும் போலாந்து போன்ற ஏனைய ஆர்வங்கொண்ட தரப்பினருக்கும் திறந்துவிடப்படும். அந்த புதிய டிரோன், 2020இல் இருந்து 2025க்குள் செயல்முறைக்குக் கொண்டு வரப்படும்.

அது 3,000 அடியிலிருந்து 15,000 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்க தகைமை கொண்ட டிரோனாக இருக்கும் என்பதுடன், அது உளவுதகவல்களைச் சேகரிக்க கூடியதாகவும் அத்துடன் ஏவுகணைகளை செலுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுவரையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே அதுபோன்ற டிரோன்களைக் கொண்டுள்ளன.

ஏர்பஸ் (ஜேர்மனி, பிரான்ஸ்), டஸ்ஸோ (பிரான்ஸ்) மற்றும் ஃபின்மெக்கானிக்கா (இத்தாலி) ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதுபோன்றவொரு விமானத்திற்கான முன்மொழிவை வழங்கியிருந்தன. வல்லுனர்களின் கருத்துப்படி, பில்லியன் கணக்கான யூரோ இல்லையென்றாலும், நூற்றுக் கணக்கான மில்லியன்களை விழுங்கக்கூடிய புதிய டிரோனின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானத்திற்கு அனேகமாக அவையே பொறுப்பேற்கக்கூடும்.

இராணுவ உளவு செயற்கைகோள்கள் மீது பிரான்கோ-ஜேர்மன் கூட்டு-ஒத்துழைப்பை விரிவாக்கவும் அந்த கூட்டு மந்திரிசபை கூட்டம் முடிவெடுத்தது. அது தொடர்பான உடன்படிக்கை ஜூனில் கையெழுத்தாகும். ஏனைய விடயங்களோடு சேர்ந்து, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் எதிர்காலத்தில் பிரெஞ்சு உளவுபார்ப்பு முறையின் (CSO - Composante Spatiale Optique) செயற்கைகோள் படங்களை இன்னும் கூடுதலாக அணுகுவதற்காக, அதில் 210 மில்லியன் யூரோ முதலீடு செய்யும்.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் மூலோபாய வாதங்களை முன்வைத்து அந்த கூட்டு மீள்ஆயுதமயமாக்கலை நியாயப்படுத்தினர். அது ஏனைய அரசுகளது தொழில்துறைகளை மற்றும் தகவல்களைச் சார்ந்திருப்பதிலிருந்து கூடுதல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமென ஹோலாண்ட் தெரிவித்தார். இது தொழில்நுட்ப போட்டியின் ஓர் அறிகுறி என்பதுடன், அரசியல் அதிகார பிரச்சினையும் ஆகும். நிலைமையை அறிந்தவர்கள் நடவடிக்கை எடுக்கலாம்" என்று தெரிவித்த அவர், “தங்களின் சொந்த செயற்கைகோள் படங்களைக் கொண்டிருப்பவர்கள், சுதந்திரமாக முடிவெடுப்பவர்களாக உள்ளனர்,” என்றார்.

Süddeutsche Zeitung உடனான ஒரு நேர்காணலில், பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து விலகியிருக்க வலியுறுத்தினார். “ஐரோப்பியர்களான நம்மால் அதை செய்ய முடியும், ஐரோப்பியர்களான நாம் நீண்ட காலத்திற்கு முன்னரே அதை செய்திருக்க வேண்டும்,” என்றார். “இறுதியில் அதை நாம் செய்யும் போது, பின் இந்த துறையில், தொழில்நுட்பரீதியிலும் இராணுவரீதியிலும் நாம் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரத்தை அதிகரிக்கிறோம்,” என்றார்.

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கரால் சமீபத்திய வாரங்களில் ஒலிக்கப்பட்ட, ஓர் ஐரோப்பிய இராணுவம் கொண்டு வரப்பட வேண்டுமென்ற திட்டங்களை லு திரியோன் வெளிப்படையாக ஆதரித்தார்.

நீண்டகாலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் இறுதியில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதன் மீது அவர் "மிகவும் மகிழ்ச்சி" அடைவதாக சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்தார். “நாங்கள் எந்தளவிற்கு நெருக்கமாக வேலை செய்கிறோம் என்பதை இத்திட்டம் எடுத்துக்காட்டுகிறது,” என்றவர் தெரிவித்தார்.

ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கான திட்டங்களும், ஜேர்மன் மற்றும் பிரான்சிற்கு இடையிலான நெருக்கமான இராணுவ கூட்டு-ஒத்துழைப்பு திட்டங்களும் 1990களிலேயே இருந்திருந்தது. அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக, அதன் சொந்த உலகளாவிய நலன்களை, ஐரோப்பா பின்தொடர்வதற்கு உதவுவதே அதன் நோக்கமாகும்.

இத்தகைய திட்டங்களில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சான்றாக, நடப்பிலிருந்த பிரான்கோ-ஜேர்மன் படைப்பிரிவு ஓர் ஐரோப்பிய படைப்பிரிவாக மாற்றப்பட்டது. யூரோ போர்விமானம், NH90 ஹெலிகாப்டர் மற்றும் A400M போக்குவரத்து விமானம் போன்ற பல ஐரோப்பிய ஆயுதமயப்படுத்தும் திட்டங்களில் உடன்பாடு எட்டப்பட்டன.

ஆனால், ஐரோப்பாவை ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களென பிரித்த 2003 ஈராக்கிய போரும், 2005 இல் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு திட்டத்தின் தோல்வியும் மற்றும் 2008 நிதியியல் நெருக்கடியும், அத்தகைய திட்டங்களைத் தரை மட்டத்திலேயே நிறுத்தின. ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கு இடையே நிதிய கொள்கை முரண்பாடுகள் அதிகரித்தன. வெளியுறவு கொள்கைகளில், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பிரான்ஸ் அதன் முன்னாள் காலனித்துவ பிராந்தியங்கள் மீது ஒருமுனைப்பட்டுள்ளது. அதேவேளையில் ஜேர்மனி கிழக்கு ஐரோப்பாவை நோக்கி திரும்பியது.

உக்ரேனில் ரஷ்யா உடனான மோதலும், மற்றும் மத்திய கிழக்கில் ஆழமடைந்துவரும் நெருக்கடியும், பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸை மீண்டும் நெருக்கமாக கொண்டு வந்தன. அவ்விரு விடயங்களிலுமே, கருத்துவேறுபாடுகள் களையப்பட்டமை அமெரிக்காவின் ஆக்ரோஷமான மற்றும் சிலநேரங்களில் தாறுமாறான நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக இருந்தது.

உக்ரேன் விவகாரத்தில், பாரீஸூம் பேர்லினும் குறிப்பாக கியேவில் ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்தன, அது மேற்கத்திய-சார்பு ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் பொருளாதார காரணங்களுக்காக, அவை வாஷிங்டனுக்கு முரண்பட்ட விதத்தில் ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை மேற்கொண்டு அதிகமாக தள்ளிச்செல்ல விரும்பவில்லை, மேலும் கியேவ் ஆட்சியை இராணுவரீதியில் கட்டமைப்பதை நிராகரித்தன. மத்திய கிழக்கில், அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் போருக்குள் மூழ்கடிப்பதற்கு பெரிதும் அமெரிக்காவே பொறுப்பாவதாக அவை கருதுகின்றன.

அதிகார மையமாக" ஆவதற்கான அதன் முயற்சியில், ஜேர்மனி ஐரோப்பிய மேலாதிக்க சக்தியாக மற்றும் ஓர் உலக சக்தியாக ஆவதற்கு போராடி வருகிறது, அத்துடன் பிரான்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு விடாதவாறு அதனுடன் நெருக்கமான கூட்டு-ஒத்துழைப்பிற்கும் முயற்சி செய்து வருகிறது. இதனால் தான் பேர்லின், மிகவும் அடையாளபூர்வமாக இருந்தபோதினும், வெளிப்படையாக எடுத்துக்காட்டும் வகையில் ஆபிரிக்காவில் பிரான்சின் இராணுவ தலையீட்டை ஆதரித்தது. அத்துடன் மின்ஸ்க் உடன்படிக்கை மற்றும் ஈரானுடனான லோசான் பேச்சுவார்த்தைகள் போன்ற வெளிநாட்டு கொள்கை முனைவுகளில், ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் எப்போதும் அவரது பிரெஞ்சு சமதரப்பான லோரன்ட் ஃபாபியுஸ் உடன் ஐக்கியத்தை வலியுறுத்துகிறார்.

இந்த ஆதரவால் பிரான்ஸ் மகிழ்ந்துள்ளது. பேர்லினில் நடந்த கூட்டு மந்திரிசபை கூட்டத்திற்குப் பின்னர், மேர்க்கெலும் ஹோலாண்டும் எரிச்சலூட்டும் விதத்தில், தெற்கு பிரான்சில் நடந்த ஜேர்மன்விங்க்ஸ் விமான விபத்து மற்றும் நையாண்டி பத்திரிகை சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலை, அவர்களது இராணுவ மற்றும் வெளியுறவு கொள்கையின் கூட்டு-ஒத்துழைப்பை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தினர்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, ஜேர்மனும் பிரான்சும் பல "கடுமையான சோதனைகளின்" விளைவாக "நெருக்கமாக ஒருங்கிணைந்து வந்திருப்பதாக" மேர்க்கெல் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஹோலாண்ட் இவற்றையும் சேர்த்துக் கொண்டார்: பிரான்கோ-ஜேர்மன் நட்புறவு "கடந்த சில வாரங்களில் ஒரு பிரான்கோ-ஜேர்மன் சகோதரத்துவத்திற்கும் கூடுதலாக" மாறியிருந்தது; கடந்த நெருக்கடிகளில், “நமது இரண்டு நாடுகளுமே ஒரே நாடாக [இருந்தன]”; ஜேர்மனியும் பிரான்சும் "உலக அரங்கில் பாத்திரம் வகிக்கும் இரண்டு பெரிய அரசுகளாகும்", அவை "ஐரோப்பாவிலும் உலகத் தலைவிதியிலும் செல்வாக்கு செலுத்த" விரும்புகின்றன.

ஆனால் சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை இவ்வாறு நினைவுகூர்வதில், ஆழ்ந்து-சென்று கொண்டிருக்கும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளையும் உள்ளடங்கி உள்ளன, அவை எப்போது வேண்டுமானால் மீண்டும் உடைத்துக் கொள்ளக் கூடும். பொருளாதாரரீதியில், நீண்டகாலமாக மந்தமாக உள்ள பிரான்ஸ், ஜேர்மன் ஏற்றுமதி தாக்குதலால் நசுக்கப்படுவதாக உணர்கிறது. மேலும் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையே கூட்டுறவை நிராகரிக்கும் தேசிய முன்னனி போன்ற தேசியவாத கட்சிகள் இரண்டு நாடுகளிலும் மேலுயர்ந்து வருகின்றன.

இராணுவம் மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு கூடுதலாக, டிரோன் திட்டமானது பொருளாதார உள்நோக்கங்களையும் பின்தொடர்கிறது. பல பில்லியன் யூரோ பாதுகாப்பு திட்டங்களில் எப்போதுமே பிரமாண்டமான இலாபங்களும் தொழில்நுட்ப ஆதாயங்களும் பிணைந்துள்ளன.

அமெரிக்க உற்பத்தியாளர்கள் அவர்களது டிரோன்களை ஐரோப்பாவிற்கு விற்றுள்ள போதினும், தொழில்நுட்ப விபரங்களை வழங்க மறுத்துள்ளனர். வெளியுறவு தொழில்நுட்பம் "பெரும்பாலும் கருப்புப்பெட்டி (black box) என்றழைக்கப்படுவதைப் போல தான்" இருந்துள்ளது என்று Die Zeit அறிவிக்கிறது. “அதை செயல்படுத்தும் ஐரோப்பியர்கள், அவற்றை பராமரித்து பழுது பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றை திறக்கவும் மாட்டார்கள் என்பதோடு முக்கிய உபகரணங்களை ஆய்வு செய்யவும் கூட மாட்டார்கள். அட்லாண்டிக் கடலுக்கு அப்பாற்பட்ட பங்காண்மை இருக்கிறது என்றாலும்—அது, குறிப்பாக ஜேர்மனியர்களைப் பொறுத்த வரையில், வெகுதூரத்தில் இருக்கிறது,” என்று குறிப்பிட்டது.

ஜேர்மன் முன்னோக்கிலிருந்து பார்த்தால், அந்த டிரோன் திட்டம் இராணுவ திறனை அதிகரிப்பதில் ஒரு திட்டமிட்ட மற்றொரு படியாகும், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் "இராணுவ தடைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக" அரசாங்க பிரதிநிதிகளால் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் அது முன்பினும் வேகமாக முன்னோக்கி உந்தப்பட்டு வருகிறது. வெறும் பத்து நாட்களுக்கு முன்னர் தான், பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை 8 பில்லியன் யூரோவிற்கு உயர்த்த மந்திரிசபை ஒப்புக் கொண்டது.

ஐரோப்பிய ஆயுதமயப்படுத்தும் திட்டங்கள் நீண்டகாலம் எடுக்குமென்பதை முந்தைய அனுபவம் எடுத்துக்காட்டி உள்ளதால், திட்டப்படி யூரோ டிரோன் தயாராகும் வரையில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் காத்திருக்க விரும்பவில்லை. இந்த ஆண்டின் இறுதியில், அது அமெரிக்க அல்லது இஸ்ரேலிய தாக்கும் டிரோன்களை வாங்க அல்லது ஒத்திக்கு எடுக்க முடிவெடுக்கும். இஸ்ரேலின்Heron TP” டிரோன்களும் மற்றும் அவப்பெயரெடுத்த அமெரிக்காவின் "Predator” ரக டிரோன்களும் அதில் உள்ளடங்குகின்றன.

மேலதிக வாசிப்புக்கு :

ஜேர்மன் படையில் டிரோன்கள் சேர்க்கப்பட உள்ளன