சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US faces another debacle on Pacific economic treaty

பசிபிக் பொருளாதார உடன்படிக்கை மீது அமெரிக்கா மற்றொரு தோல்வியைச் சந்திக்கிறது

By Mike Head
4 April 2015

Use this version to printSend feedback

சீனத் தலைமையிலான புதிய ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) ஏனைய நாடுகள் இணைவதை தடுக்கும் அதன் முயற்சிகளில் தீர்க்கமான தோல்வியடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசாங்கம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்குரிய அதன் மிகவும் நீண்டகால நகர்வாக கருதப்பட்ட பசிபிக் நாடுகளுக்கு இடையிலான கூட்டு-பங்காண்மை (TPP) என்றழைக்கப்படுவதில் பெருகிவரும் சிக்கல்களை முகங்கொடுக்கிறது.

கடந்த மாதம் ஹவாயில் நடந்த, 12 அரசாங்கங்களுக்கு இடையே ஐந்தாண்டுகாலம் நீடித்த TPP பேச்சுவார்த்தைகளின் இறுதி சுற்று, மேற்கொண்டு எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முறிந்து போனது. தொடர்ந்து மூன்றாண்டுகால இழுபறிக்குப் பின்னர், முடிவான உடன்படிக்கையை எட்டுவதற்கான வெள்ளை மாளிகையின் இறுதிக்கெடு 2015இல் முறிந்து போகும் என்பதாக தெரிகிறது.

இந்த முறை குறிப்பிடத்தக்க பிரதான முட்டுக்கட்டையாக இருப்பது, செய்திகளின்படி, அமெரிக்காவிற்கும் ஜப்பானும் இடையே வாகனத்துறை மற்றும் வேளாண்துறை சந்தைகள் மீது இருந்துவரும் கருத்துவேறுபாடுகள் அல்ல, மாறாக அந்த உடன்படிக்கைக்கு காங்கிரஸின் ஒப்புதலைப் பெற முடியுமா என்ற ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தமைமை மீதிருக்கும் சந்தேகங்களே ஆகும்.

ஒரு "சுதந்திர வர்த்தக" உடன்படிக்கை என்று பொய்யாக சித்தரித்துக் காட்டப்படும் TPP, அதற்கு எதிர்மாறாக உள்ளது. அது அமெரிக்காவிற்குக் கட்டுப்பட்ட ஒரு பரந்த பொருளாதார அணியை உருவாக்குவதை நோக்கமாக கொள்கிறது. அமெரிக்க சந்தையை, இது இப்போதும் உலகின் மிகப்பெரிய ஒன்றாக விளங்குகின்ற நிலையில், அதை சாதகமாக அணுகுவதற்குப் பிரதிபலனாக, அமெரிக்க முதலீடு மற்றும் பெருநிறுவன நடவடிக்கைகளுக்கு அந்த உடன்படிக்கையின் (TPP) உறுப்பு நாடுகள் அவற்றின் எல்லா சட்டரீதியிலான, நெறிமுறைரீதியிலான மற்றும் அரசு சார்ந்த தடைகளை நீக்குமாறு கோருகிறது.

அந்த உடன்படிக்கையிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் சீனா உள்ளடக்கிய ஆசியாவின் மீது, சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கங்கொண்ட வாஷிங்டனின் ஆசியாவை நோக்கிய இராணுவ மற்றும் மூலோபாய "முன்னெடுப்பின்" ஓர் இன்றியமையா அம்சமாக TPP விளங்குகிறது. வோல் ஸ்ட்ரீட் நிதியியல் மூலதனம் மற்றும் மிகப்பெரிய அமெரிக்க பெருநிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மருந்து பொருட்கள் மற்றும் ஊடக பகாசுர நிறுவனங்களின் நலன்களுக்காக, அந்த "கூட்டு பங்காண்மை" (partnership) ஆசிய-பசிபிக் எங்கிலுமான பொருளாதார சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுஒழுங்கமைக்க கோருகிறது.

அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மையின் (TTIP) அணிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒருங்கிணைக்கவும் இதேபோன்றவொரு முனைவு நடந்து வருகிறது. TPP போலவே, ஐரோப்பிய உடன்படிக்கையும், கடுமையான இரகசியதன்மைக்கு இடையே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் பேரம்பேசப்பட்டு வருகிறது. அதில் உலகின் மிகப்பெரிய நூற்றுக் கணக்கான பெருநிறுவனங்கள் பங்கெடுத்து வருகின்றன.

காங்கிரஸில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி பிரிவுகளின் தலைவர்களிடமிருந்து TPP இன் உள்அம்சங்களுக்கு இருக்கும் எதிர்ப்பைக் கடந்து வரும் முயற்சியில், ஒபாமா ஆர்ப்பரிப்புடன் சீன-விரோத வாய்ஜம்பத்தை சார்ந்துள்ளார். ஒரு சமீபத்திய பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்: “அங்கே விதிமுறைகளை நாம் எழுதாவிட்டால், அந்த விதிமுறைகளை சீனா எழுதப்போகிறது, மேலும் வர்த்தகத்திற்கான விதிமுறைகளைச் சீனா எழுதுகிறதென்றால் ஏறத்தாழ தவிர்க்கவியலாத புவிசார் அரசியல் தாக்கங்கள் எதை அர்த்தப்படுத்துகிறதென்றால், நாம் துண்டிக்கப்படுவோம் அல்லது நாம் ஆழமாக பின்தங்கிவிடுவோம் என்பதையே ஆகும். நமது வியாபாரங்களுக்கு ஆதாயமில்லாமல் போகும், நமது தொழிலாளர்களுக்கு ஆதாயமில்லாமல் போகும்,” என்றார்.

21ஆம் நூற்றாண்டிற்கான உலக வர்த்தகத்திற்கு அமெரிக்கா "விதிமுறைகளை எழுதவில்லையானால்", ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஜப்பான் போன்ற ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் அமெரிக்காவை விலையாக கொடுத்து சீனாவுடன் அவற்றின் இடங்களைப் பலப்படுத்திக் கொள்ளுமென வாஷிங்டன் கவலை கொண்டுள்ளது.

உலகளாவிய நிதியியல் விமர்சகர்கள் என்ன பணயத்தில் இருக்கிறது என்பதன் மீது கவனத்தைக் கொண்டு வருகின்றனர். “ஆசிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் இரண்டாம் சுற்று போராட்டம்" என்ற தலைப்பின் கீழ், ஏப்ரல் 1 அன்று இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸில் டேவிட் பில்லிங் எழுதுகையில், “சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் புறக்கணிப்பதற்கு தலைமை கொடுத்த வாஷிங்டனின் முயற்சி, பிரிட்டன் அந்த அணிவரிசையை உடைத்ததும் பின்னர் ஜேர்மனியிலிருந்து தென் கொரியா வரையில் ஏனைய நாடுகள் அதில் இணைந்தவுடன், கேலிக்கூத்தாக போய் முடிந்தது. முதல் சுற்று அமெரிக்காவிற்கு தோல்வி என்றால், இரண்டாம் சுற்றோ அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டது.

சீன பொருளாதாரமானது அரசுடைமை மற்றும் மத்திய அரசு திட்டமிடலின் கீழ் உள்ளது என்ற அடித்தளத்தில், TPP இல் இருந்து சீனாவை விலக்கி வைப்பது வெளிப்படையான இட்டுக்கட்டாகும் என்பதை பில்லிங் சுட்டிக் காட்டினார். “இராஜாங்க நெளிவுசுளிவுகளின் ஒரு வினோதமான காட்சியாக, வியட்நாம்—இதன் பொருளாதாரம் மத்திய அரசு திட்டமிடலின் கீழ் அமைந்தது என்பதுடன் அவர்களால் முடிந்தவரைக்கும் சீர்குலைக்கப்பட்ட இது—ஏதோவிதத்தில் அந்த உடன்படிக்கையில் நுழைய தகுதியுடையதாக கருதப்படுகிறது,” என்று எழுதினார்.

TPP, "அனேகமாக, அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளிகளுக்கு வெறுப்பு உண்டாக்காது என்பதை அவர்களுக்கு மறுஉத்தரவாதம் வழங்குவதாக இருக்கும்", ஏனெனில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைக் கலைத்தல், கட்டுப்பாடுகள், நிதியியல் நெறிமுறைகள், தரவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அறிவுசார் சொத்துடைமை சட்டங்களைத் தளர்த்துதல் ஆகியவை அதில் உள்ளடக்கிய எல்லைமீறிய முறையீடுகளை அது கொண்டுள்ளது என்பதை பைனான்சியல் டைம்ஸின் ஆசியப் பகுதிக்கான ஆசிரியர் சுட்டிக்காட்டும் வகையில் சேர்த்து கொண்டார்.

TPP மற்றும் TTIP பொருளாதார அணிகளை ஸ்தாபிப்பதற்கான வாஷிங்டனின் ஆக்ரோஷமான உந்துதல், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய திருப்பத்தின் ஒரு பாத்திரத்தைக் குறிக்கிறது. அப்போது அமெரிக்க தொழில்துறையின் ஏறுமுகமான போக்கு, அதன் ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய எதிர்விரோதிகளின் மறுகட்டுமானத்திற்கு அதை பாதுகாவலனாக இருக்க அனுமதித்தது, இருந்தபோதினும் அவை அதன் ஏற்றுமதி சந்தைகளின் விரிவாக்கம் உட்பட எப்போதும் அதன் சொந்த ஆதாயத்திற்காகவே இருந்தன.

இன்றோ, அமெரிக்க தொழில்துறையில் நிலவிவரும் வீழ்ச்சிக்கு இடையே, அதன் ஆளும் மேற்தட்டு பெருமளவில் வோல் ஸ்ட்ரீட் இன் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைகளை, சிலிக்கான் வலேக்கு (Silicon Valley) சொந்தமான காப்புரிமைகளின் அபகரிப்புகளை, ஹாலிவுட் மற்றும் மருந்து நிறுவனங்களை, மற்றும் இராணுவ தளவாடங்களின் வினியோகத்திற்கான ஒப்பந்தங்களைச் சார்ந்துள்ளது. இத்தகைய பேராசை கொண்ட நலன்கள், TPP இல் இருந்து மிக நேரடி ஆதாயமாக கிடைக்கும்.

பல விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றபோதினும், TPPக்கு ஆதரவாக ஆதரவு தேடும் முயற்சிகள் ஊகித்தவாறு பெரும் இலாப குவிப்பை உயர்த்திக் காட்டுகின்றன. புரூகிங்ஸ் பயிலக சிந்தனை குழாமின் மிரேயா சொலிஸ் குறிப்பிடுகையில், “நிதியியல் சேவைகளின் சர்வதேசமயமாக்கல், அறிவுசார் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் இணைய பொருளாதார அரசு நிர்வாகம்" போன்ற ஆதாயங்களை எடுத்துரைத்தார்.

நிறுவனங்கள் வாடிக்கையாளரின் தரவுகளை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் தக்க வைத்திருக்க வேண்டும் என்பதை நீக்குவதிலிருந்து அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதாயமடையும். சிங்கப்பூரில் உள்ள தரவு மையத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம், அங்கே இருந்து நாம் மலேசியாவில் உள்ள வாடிக்கையாளருக்கு சேவை அளிக்க இருக்கிறோமென்றால், அந்த தரவு அவ்விரு நாடுகளுக்கும் இடையே முன்னும் பின்னுமாக செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்,” மைக்ரோசாப்ட் பொதுக்குழுவின் பிராட் ஸ்மித் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவித்தார்.

முதலீட்டாளருக்கும்-அரசுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் தண்டிக்கும் வகையிலான நெறிமுறைகள் (ISDS) அந்த உடன்படிக்கைக்கு மையத்தில் உள்ளன, அவை உத்தியோகபூர்வ கொள்கை முடிவுகளால் உண்டாகும் இழப்புகள் என்று கருதப்படுவதை அரசாங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது. “சுற்றுச்சூழல், சுகாதாரம் அல்லது ஏனைய நெறிமுறை நோக்கங்களில்" செய்யப்படும் மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளைப் பெற, நிறுவனங்கள் ஒரு நாட்டின் நீதிமன்றங்களை அணுகாமலேயே செல்லலாம் என்பதை எடுத்துக்காட்டும் TPP இன் ஓர் அத்தியாயத்தை கடந்த மாதம் விக்கிலீக்ஸ் பிரசுரித்தது.

இரண்டு மிகப்பெரிய நீண்டகால பங்காளிகளான அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு அப்பாற்பட்டு, ஆஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகியவை ஏனைய TPP பங்குதாரர்களாக உள்ளன.

TPP இல் கையெழுத்திட்டு, பின் அதை காங்கிரஸில் "ஆம்" அல்லது "இல்லை" என்று ஒரே வாக்கெடுப்பில் நிறைவேற்றும் வகையில், ஒரு வர்த்தக ஊக்குவிப்பு ஆணையத்திற்கு (TPA) ஆதரவைப் பெற ஒபாமா தவறுவதால், அமெரிக்காவிற்கு தேவையான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கான ஏனைய பல நாடுகளின் விருப்பம் பலவீனமடைந்துள்ளது. TPA இல்லையென்றால், காங்கிரஸ் அந்த பேரம்பேசப்பட்ட உடன்படிக்கையில் திருத்தங்களை வலியுறுத்தக்கூடும், அது பின்னர் அந்த உடன்படிக்கையை முழுமையாக பயனற்றதாக்கிவிடும்.

ஒபாமா நிர்வாகத்திற்கு காங்கரஸ் TPAஐ வழங்காத வரை, தங்களின் இறுதி பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை அவை முன்வைக்கப் போவதில்லையென கனடா மற்றும் ஜப்பான் உட்பட, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பல பங்காளிகள் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ள நிலையில், மேற்கொண்டும் தாமதிப்பதானது 2017 வரையில் TPP தாமதிக்கப்படுவதற்கான ஒரு நிஜமான அபாயத்தை உருவாக்குகிறது,” என்று ஜப்பான் டைம்ஸ் குறிப்பிட்டது.

அமெரிக்க காங்கிரஸின் பெரும் எதிர்ப்பானது, தேசிய அடிப்படையில் அமைந்த தொழில்துறை மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களின் அடிப்படையில் பாதுகாப்புவாத ஆதரவாளர்களோடு பிணைந்துள்ளது. இதற்கு விடையிறுப்பாக, ஒபாமா நிர்வாகம் பெருநிறுவன அமெரிக்காவிற்கு எதிர்பார்த்த ஆதாயங்களை வெளிப்படையாகவே எடுத்துரைக்கும் ஒரு பிரச்சாரத்தை நோக்கி சாய்ந்து வருகிறது.

1973க்கு பிந்தைய ஒவ்வொரு நிர்வாகத்தையும், அது ஜனநாயக கட்சியானாலும் சரி குடியரசு கட்சியானாலும் சரி, அவற்றை பிரதிநிதித்துவம் செய்திருந்த 10 முன்னாள் வர்த்தகத்துறை செயலர்கள் உட்பட முன்னாள் மூத்த பொருளாதார அதிகாரிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்று, மார்ச் 30 அன்று, வெள்ளை மாளிகை அவற்றை பிரசுரித்தது. ஒபாமாவிற்கு TPA அதிகாரம் வழங்குமாறு அக்கடிதங்கள் காங்கிரஸ் தலைவர்களை வலியுறுத்தி இருந்தன.

இது நிறைவடைந்தததும், பசிபிக் நாடுகளுக்கு இடையிலான கூட்டு பங்காண்மையும் (TPP) மற்றும் அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு-பங்காண்மையும் (TTIP) உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவீதத்துடன் அமெரிக்காவிற்கு சுதந்திர வர்த்தக ஒழுங்கமைப்பை வழங்கும், அத்துடன் அது நமது வியாபாரங்கள் சாத்தியமான புதிய வாடிக்கையாளர்களின் பெரும் அடித்தளத்தை முன்னுரிமையுடன் அணுகுவதற்கு அனுமதிக்கும்,” என்று அந்த வர்த்தகத்துறை செயலர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "முன்னுரிமையுடன் அணுகுவதற்கான" இந்த முறையீடு, உலக பொருளாதாரத்தை இரண்டாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்பிருந்த ஒருவித விரோத அணிகளாக உடைக்க அச்சுறுத்துகிறது.