சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Fascist leader Yarosh appointed advisor to Ukrainian army

பாசிச தலைவர் யாரோஷ் உக்ரேனிய இராணுவத்திற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

By Johannes Stern
7 April 2015

Use this version to printSend feedback

பாசிசவாத Right Sector அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான டிமிட்ரோ யாரோஷ், உக்ரேனிய இராணுவத்தின் தலைமை தளபதிக்கு உத்தியோகபூர்வ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் அந்த நியமனத்தை அறிவித்தது. அதனினும் கூடுதலாக, Right Sector இன் துணைஇராணுவப்படை போராளிகள் ஆயுதப்படைகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத் தளத்தில் ஞாயிறன்று வெளியான ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது: “பாதுகாப்புத்துறை தலைமை தளபதி (chief of staff) கேர்னல் ஜெனரல் விக்டொர் முஸ்சென்கோவும் டிமிட்ரி யாரோஷூம், Right Sector மற்றும் உக்ரேனிய ஆயுத படைகளுக்கு இடையிலான கூட்டு-ஒத்துழைப்பு வடிவத்தின் மீது உடன்பாடு தெரிவித்துள்ளனர்.” "உக்ரேனிய பாதுகாப்புக்கு தலைச்சிறந்த சேவைகளை வழங்கிய" அந்த சுயஆர்வ படைப்பிரிவுகளின் "பங்களிப்புகளுக்கு" உக்ரேனிய இராணுவம் அதன் மதிப்பார்ந்த "பாராட்டை" தெரிவித்தது.

முஸ்சென்கோ கூறியதாக மேற்கோளிடப்பட்டவை: “மாற்றங்களின் அவசியம் குறித்தும் மற்றும் அனைத்து இராணுவ மட்டங்களிலும் திறமையை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். இராணுவ வளத்தை உருவாக்குவதற்கான பல்வேறு முன்மாதிரிகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். நாங்கள் சீர்திருத்தங்களை அபிவிருத்தி செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவோம். நாங்கள் அனைத்து உக்ரேனிய தேசப்பற்றாளர்களையும் மற்றும் பாதுகாவலர்களையும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டுவோம். அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடியும் என்பதையும் எங்களது ஒற்றுமையையும் எதிரி புரிந்து வைத்துள்ளார். ஒருங்கிணைந்த உக்ரேன் என்பதே எமது ஒரே இலட்சியமாகும். இராணுவம் ஒவ்வொரு வாரமும் பலமடைந்து வருகிறது.”

அவரது பங்கிற்கு யாரோஷ் அறிவிக்கையில், "சண்டையில் மேற்கொண்டு வெற்றி பெறுவதற்கு ஒற்றுமையே முக்கிய முன்நிபந்தனையாகும்" என்றார். “வெளியிலிருக்கும் எதிரிகளுக்கு எதிராக அரசை பாதுகாப்பதற்காக", Right Sectorஇன் சுயஆர்வ படைப்பிரிவுகள் உத்தியோகபூர்வ உக்ரேனிய இராணுவத்திற்குள் தங்களைத்தாங்களே ஒருங்கிணைத்துக் கொள்ள தயாராக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி 22, 2014 இல் ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை பதவியிலிருந்து வெளியேற்றுவதில் ஒரு மைய பாத்திரம் வகித்த அந்த பாசிச போராளிகளின் குரல், செல்வந்தர் பெட்ரோ பொறோஷென்கோ தலைமையிலான மேற்கு-ஆதரவு ஆட்சியில் அதிகரித்து வருகிறது என்பதையே இத்தகைய அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளோடு தொடர்ந்து சண்டையிடுவதற்கும், மேற்கு உக்ரேனிய ஆட்சியின் மக்கள்விரோத போர் மற்றும் சிக்கன கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அவர்கள் அவசியப்படுகிறார்கள்.

ஒரு பாசிச அமைப்பான உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (Organization of Ukrainian Nationalists – OUN) ஒரு வழிதோன்றலாக தன்னைத்தானே கருதும் Right Sector இன் வேலைத்திட்டம், நன்கறியப்பட்டதாகும். இரண்டாம் உலகப் போரின் போது OUN யாருடன் ஒருங்கிணைந்திருந்ததோ அந்த நாஜிக்களது பாசிச சித்தாந்தத்தை பல அம்சங்களில் நினைவூட்டும் வகையில், அதுவொரு வலதுசாரியும் தேசியவாத அமைப்பும் ஆகும். நாஜிக்களைப் போலவே, யாரோஷூம் Right Sectorஉம் கம்யூனிஸ்டுகளை, தாராளவாதிகளை, ஓரினச்சேர்க்கையாளர்களை, யூதர்களை, ரஷ்யர்களை மற்றும் தொழிலாள வர்க்கத்தையே அவர்களது எதிரியாக கருதுகின்றனர்.

பெப்ரவரி 2014 மைதான் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சில வாரங்களுக்குப் பின்னர், Spiegel Onlineக்கு யாரோஷ் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், “நானொரு உக்ரேனிய தேசியவாதி ஆவேன். ஒரு சக்திவாய்ந்த அரசே எனது இலட்சியம்,” என்றார். தாராளவாதத்தை "சர்வாதிபத்தியத்தின் ஒரு மாற்று வடிவாக" சித்தரித்த அவர், “ஓரின திருமணத்தை எதிர்ப்பதாக" கூறியதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் "கிறிஸ்துவ-விரோத" குணாம்சத்தையும் விமர்சித்தார். தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீது பாரிய தாக்குதல்களை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடனான உக்ரேனின் கூட்டு உடன்படிக்கையை அவர் வெளிப்படையாக ஆதரித்தார்.

தேசம் மற்றும் புரட்சி (Nation and Revolution) என்ற அவரது துண்டறிக்கையில், யாரோஷ் முன்பினும் கூடுதல் தெளிவுடன் அவரது வேலைத்திட்டத்தை முறைப்படுத்துகிறார். அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்ப்பதுடன், இனரீதியிலான தேசியவாதத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். “நமது நாட்டின் ஒட்டுமொத்த பிராந்தியம் எங்கிலும் தேசியவாத சித்தாந்தத்தை" பரப்பவும், கிழக்கு உக்ரேன் மீதான மொத்த ரஷ்ய செல்வாக்கை அகற்றவும், மற்றும் "அரசின் மையத்தில் தேசியம் முன்னணி பாத்திரம்" வகிக்குமாறு நடைமுறைப்படுத்தவும் அவர் கோருகிறார்.

அணுஆயுதமேந்திய உக்ரேனாக மீள்ஆயுதமயப்படுத்துவது, Party of Regions மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிப்பது ஆகியவையும் Right Sector இன் மேலதிக வேலைத்திட்ட புள்ளிகளில் உள்ளடங்கும்.

பொறோஷென்கோ ஆட்சிக்குள் Right Sector ஒருங்கிணைப்பது என்பது உக்ரேனில் ஒரு "ஜனநாயக புரட்சி" குறித்த உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை நொருக்கிறது. கிழக்கு உக்ரேனில் ஒரு புதிய இராணுவ தாக்குதலுக்கான தயாரிப்புகளையும் மற்றும் சமூக தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருவதற்கு இடையே, கடந்த ஆண்டில் ஒடெஸ்சா படுகொலையைப் போன்ற படுபயங்கரமான குற்றங்களுக்குப் பொறுப்பான பாசிசவாத Right Sector இன் வேலைத்திட்டத்திற்கு, முற்றிலுமாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்சிக்குள் Right Sector உத்தியோகபூர்வமாக ஒருங்கிணைப்பதென்பது உக்ரேனிய நாடாளுமன்றம் (ராடா) "கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை" சட்டபூர்வமாக விலக்கி வைக்க திட்டமிடுகிறது என்ற அறிவிப்புடன் கை கோர்த்து செல்கிறது. உக்ரேனிய நீதித்துறை மந்திரி பாவெல் பெட்ரென்கோ தொலைக்காட்சியில் அறிவிக்கையில், “அண்மித்த எதிர்காலத்தில், பெயரிட்டு கூறுவதானால் மே 9 இல், நாடாளுமன்றம் கம்யூனிசத்தைத் தடுக்கும் சட்டத்தொகுப்பை நிறைவேற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதை நாம் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்,” என்றார்.

“20 ஆண்டுகளாக உக்ரேன் எங்கிலும் அதுவே போர்த்திக் கொண்ட கம்யூனிஸ்ட் போர்வையை விலக்க" நடப்பு நாடாளுமன்றத்திற்கு அரசியல் விருப்பமும் உள்ளது, அவசியமான பெரும்பான்மையும் கொண்டுள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அந்த ஆட்சி ராடாவில் உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சி மீது ஒரு தடை விதிக்கவும் மற்றும் கம்யூனிஸ்ட் கன்னையைக் கலைக்கவும் கடந்த ஜூலையிலேயே விண்ணப்பித்தது. யானுகோவிச் ஆட்சியுடன் மிக நெருக்கமாக வேலை செய்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி, கிழக்கு உக்ரேன் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை "அதன் சொந்த மக்களுக்கு எதிரான ஒரு போராக" விமர்சித்தது.

கம்யூனிசத்திற்கு" எதிரான போராட்டம் என்ற அடித்தளத்தில், மேற்கால் நிறுவப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்ட அந்த ஆட்சி, இன்னும் கூடுதலாக நேரடியாக அதிதீவிர வலது சர்வாதிகாரத்திற்குள் திரும்பி வருகிறது. உக்ரேனில் உள்ள ஆளும் மேற்தட்டு மற்றும், வாஷிங்டன் மற்றும் பேர்லினில் உள்ள அதன் ஆதரவாளர்களின் முன்னோக்கிலிருந்து, அதுபோன்றவொரு ஆட்சி உருவாவது அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் போர் மற்றும் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தைத் திணிக்க அவசியமாகிறது.

இந்த வாரயிறுதியில் Süddeutsche Zeitung உடனான ஒரு பேட்டியில் உக்ரேனிய பிரதம மந்திரி அர்செனி யாட்சென்யுக் அந்நாட்டின் ஒரு துயரஞ்செறிந்த சித்திரத்தை வரைந்து காட்டினார். “எங்களது நேரம் ஏற்கனவே முடிந்துவிட்டது,” என்றார். அவர் கூறினார், “ஒரே நேரத்தில் நாங்கள் ஏன் இந்தளவிலான வலிநிறைந்த சீர்திருத்தங்களினூடாக கடந்து செல்கிறோம் என்பதை மக்களுக்கு விவரிப்பது சிலவேளைகளில் மிகவும் சிரமமாக உள்ளது.”

இருந்தபோதினும் சீர்திருத்தங்கள் "தவிர்க்க முடியாதவை" என்பதோடு, “நமது பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அது மட்டுமே வழியாகும்" என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆம், பலர் ஏமாற்றமடைந்துள்ளனர், சோர்ந்து போயுள்ளனர், போரால் சோர்ந்து போயுள்ளனர்,” என்றார்.

உக்ரேனிய சமூக சீரழிவை Die Zeit சமீபத்தில் பின்வருமாறு வர்ணித்தது: “உண்மையில் இரும்பு எஃகு, நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற முக்கிய மூலப்பொருட்களைப் பெருமளவில் கொண்டுள்ளதும், ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியத்தின் பொறியியல் மையமாகவும் தானியக்களஞ்சியமாகவும் விளங்கிய உக்ரேனால், ஆபிரிக்காவின் மிக வறிய நாடுகளான கானா மற்றும் சாம்பியாவின் குறைந்தபட்ச கூலி மட்டத்திற்கு சற்று கூடுதலாக கூட அதன் மக்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை.”

அந்த கட்டுரை தொடர்ந்து குறிப்பிட்டது, “சமூகத்தின் முன்பினும் பரந்த அடுக்குகளுக்கு வறுமை பரவிவருவதாக முன்னர் கருதியவர்கள், மின்சாரம் மற்றும் உணவுக்கு பணம் செலுத்த முடியாமல் வறிய முதியவர்கள் தற்கொலை செய்து கொண்ட கிரீஸ் அல்லது போர்ச்சுக்கல்லை நினைவுகூர்ந்தனர். இப்போதோ உக்ரேனும் அந்த பட்டியலுக்குள் நகர்ந்துள்ளது. இது போர் நடக்கும் பகுதிகளுக்கு மட்டும் பொருந்தாது. அந்நாட்டின் மேற்கிலும் கூட பணமின்மை மற்றும் வாய்ப்புகளின்மை மேலும் அதிக குடும்பங்களைத் தொற்றி உள்ளது. சமீபத்திய ஓர் ஆய்வில், 40 சதவீதத்தினர் அவர்கள் வறுமையை உணர்வதாக தெரிவித்தனர்.”

கடந்த வார தொடக்கத்தில், உக்ரேனிய உள்துறை மந்திரி அர்சென் அவாகொவ் கூறுகையில், ஏப்ரல் 20இல் தொடங்கி, அமெரிக்க சிப்பாய்கள் மேற்கு உக்ரேனில் போலாந்து எல்லையோரத்தில் உள்ள உக்ரேனிய தேசிய பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்குவார்கள் என்பதை அறிவித்தார். அமெரிக்கா அந்த பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு ஆயுதங்களையும் வழங்க உள்ளது.

உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதிரடி துருப்புகளாகவும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் தயாரிப்புகளில் ஓர் உட்கூறாகவும் சேவை செய்வதற்காக, அமெரிக்க இராணுவத்தால் ஆயுதமேந்த செய்யப்பட்ட Right Sector இன் பாசிச படைகள் இப்போது அதனுடன் நேரடியாக வேலை செய்ய உள்ளன.