சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza discusses the need for state repression

அரசு ஒடுக்குமுறைக்கான தேவை குறித்து சிரிசா விவாதிக்கிறது

Chris Marsden
8 April 2015

Use this version to printSend feedback

போராட்டங்கள் மீது பொலிஸ் ஒடுக்குமுறை கோரிய கிரீஸின் பொது ஒழுங்கிற்கான மாற்று அமைச்சரின் முறையீடுகள், பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸிடமிருந்து, சிரிசா அரசாங்கம்சட்டம் ஒழுங்கு" பேணுவதற்கு என்ன அவசியமோ அதை செய்யுமென்ற ஒரு வாக்குறுதியைப் பெற்றுள்ளது.

கடந்த வெள்ளியன்று To Vima நாளிதழின் முதல் பக்க கட்டுரையில் யென்னிஸ் பனௌசிஸ் குறிப்பிடுகையில், பல்கலைக்கழகங்களில், சிரிசாவின் தலைமையகங்களில் மற்றும் நாடாளுமன்ற தளத்தில் அராஜகவாத குழுக்களது ஆக்கிரமிப்புகளை "முற்றிலும் இரத்தத்தில் மூழ்கிய இடதுசாரிகளின்" நடவடிக்கைகளின் மீது சாட்டினார்.

ஒரு "இடது அரசாங்கம் என்பது (தனிநபர், சமூக, தேசிய பாதுகாப்பு இல்லாத, ஓர் இராணுவம் இல்லாத, பொலிஸ் நடவடிக்கைகள் இல்லாத, அனேகமாக நீதிபதிகள் அல்லது சிறைச்சாலைகள் இல்லாத) ஒரு பாதுகாப்பற்ற நாடாக அல்லது நகரமாக இருக்குமென்று" நம்புகிறவர்களைக் கண்டித்து, பனௌசிஸ் எழுதுகையில், “கிரீஸில் இடதின் நேரம், முட்டுச்சந்து சித்தாந்தங்களின் மற்றும் வெறும் மேலோட்டமான முழக்கங்களின் நேரமல்ல, மாறாக ஸ்தாபகமய ஒருங்கிணைப்பு, அரசியல் சட்டபூர்வத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்குரிய நேரமாகும்,” என்று எழுதினார்.

அரசாங்க கொள்கை மீது இதுவரையில் இருந்த ஓர் உள்ளார்ந்த விவாதத்தின் பகிரங்க வெளிப்பாட்டைப் பனௌசிஸின் கருத்துக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

2012 இல் இருந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பாகமாக இருந்து சிக்கன நடவடிக்கைகளை திணிக்க உதவிய, சிரிசாவிலிருந்து ஒரு வலதுசாரி உடைவை எடுத்து உருவானதுமான ஜனநாயக இடதின் ஒரு குற்றகரமான முன்னாள் உறுப்பினரை பொது ஒழுங்கு மந்திரியாக நியமித்ததே, துல்லியமாக கிரீஸிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆளும் மேற்தட்டிற்கு, “சட்டம் ஒழுங்கை" பாதுகாப்பதில் சிரிசா தலைமையிலான அரசாங்கத்தின் தீர்மானகரமான நிலைப்பாட்டைக் குறித்து மறுஉத்தரவாதம் வழங்குவதற்காக செய்யப்பட்டதாகும்.

அந்த தீர்மானமே, வெளிநாட்டவர் விரோத சுதந்திர கிரேக்கர் கட்சியுடனான சிரிசாவின் கூட்டணியை மற்றும் அக்கட்சி தலைவர் பேனொஸ் கமெனொஸை ஆயுத படைகளின் பொறுப்பில் பாதுகாப்பு மந்திரியாக பெரும் உயர் பதவியில் நியமித்தை, மறுபிரதிபலிப்பு செய்வதாக இருந்தது.

ஜனவரி 25 தேர்தலுக்குப் பின்னர் இதே பேனொஸ் தான், கலகம் ஒடுக்கும் பொலிஸ் பிரிவு கலைக்கப்படும் என்ற சிரிசாவின் முந்தைய உறுதிமொழியைக் கைவிட்டு, “போராட்டங்களின் போது பொலிஸ் ஆயுதங்களைக் கொண்டிருக்கும்,” என்று அறிவித்தார்.

முந்தைய கிரேக்க அரசாங்கத்தால் அகற்றப்பட்ட நகரசபை பொலிஸை, சமூக மத்தியஸ்த முகமை (Community Mediation Agency) என்று மறுபெயரிடுமாறு அறிவுறுத்தி, அதை மீட்டமைக்குமாறு சமீபத்திய வாரங்களில் அவர் அழைப்புவிடுத்துள்ளார். பாசிச-சிந்தனை கொண்ட அவரது பார்வையாளர்களிடையே, “கிரேக்க பொலிஸின் புதிய அடையாளம் குறித்து நாங்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கப்படுத்த முயற்சித்து வருகிறோம். நாங்கள் குற்றங்களைக் கையாள்வதில் மட்டுமல்ல, மாறாக பொலிஸின் புதிய சமூக மற்றும் முன்னெச்சரிக்கை பாத்திரத்திற்கும் இசைவு காட்டுமாறு கேட்டு வருகிறோம்,” என்று கூறி, பெலொபொனிஸ் பிராந்திய பொலிஸ் இயக்குனரகத்தில் அவர் உரையாற்றினார்.

கிரீஸால் இனிமேல் புலம்பெயர்ந்தவர்களைச் சமாளிக்க முடியாது,” என்றவர் வலியுறுத்தினார்.

பனௌசிஸின் கண்ணோட்டங்களை "சுய-நிரூபண" உண்மைகளாக வர்ணித்த நீதித்துறை மந்திரி Nikos Paraskevopoulos மற்றும் கல்வி மந்திரி Aristides Baltas போன்ற முன்னனி பிரமுகர்களால் பனௌசிஸின் To Vima கட்டுரை ஆதரிக்கப்பட்டது. பனௌசிஸ் "அரசாங்கத்தின் கொள்கைகளையோ அல்லது மந்திரிசபை மந்திரிமார்களையோ, அல்லது [அரசாங்கத்தை] ஆதரித்த அரசியல் சக்திகளையோ" விமர்சிக்கவில்லை என்பதையும், சிரிசா "தேசிய சட்டங்கள், உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கைத் தொடர்ந்து பாதுகாக்கவே இருக்கிறது" என்பதையும் தெளிவுபடுத்துவதில் தான் சிப்ராஸின் அலுவலகம் ஆர்வம் காட்டியது.

சிரிசாவின் உயர்மட்ட அடுக்குகளுக்குள் பொலிஸ் ஒடுக்குமுறைக்கான இந்த பகிரங்க ஆதரவு, ஒரு மரணகதியிலான எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும்.

சிரிசாவின் ஜனவரி பொதுத்தேர்தல் வெற்றிக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டால் கட்டளையிடப்பட்ட சிக்கன நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான எதிர்ப்பின் போது, சமூக ஜனநாயகவாதிகளின் PASOK உடன் 2012 இல் உருவாக்கப்பட்ட கூட்டணி உட்பட, பழமைவாத புதிய ஜனநாயகத்தால் தலைமை கொடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக 30க்கும் மேற்பட்ட பொது வேலைநிறுத்தங்கள் நடந்தன.

பெரிதும் பாசிசவாத கோல்டன் டௌன் உடன் தொடர்பு கொண்ட ஒரு கலகம் ஒடுக்கும் பொலிஸ் படையால் மீண்டும் மீண்டும் அந்த போராட்டங்கள், மூர்க்கமான ஒடுக்குமுறையைச் சந்தித்தன. அதுபோன்ற தொடர்புகள் [பாசிசவாத தொடர்புகள்] குறித்து நடத்தப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ விசாரணை டிசம்பர் 2013 இல், 10 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 50 நபர்களைக் கைது செய்ய இட்டுச் சென்றது. ஆனால் அதுவுமே பொலிஸ் வன்முறையைத் தடுத்துவிடவில்லை. "தண்டனைகளிலிருந்து விலக்கீட்டுரிமை பெற்றுவிடும் ஒரு நீண்டகால கலாச்சாரம், பலமாக வேரோடிய இனவாதம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தீவிர படை பிரயோகம் உட்பட பரந்து பரவிய வன்முறை, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைக் கடுமையாக கையாளுதல்" ஆகியவற்றை குறிப்பிட்டு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஓர் அறிக்கை வெளியிட்டது.

ஏதென்ஸில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு, 2013 மற்றும் 2014 முழுவதிலும் மீண்டும் மீண்டும் தடைவிதிக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்களும் இதழாளர்களும் படுமோசமாக அடிக்கப்பட்டனர்.

சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் இருந்த போதுதான், கிரேக்க மூலதன ஆட்சியுடன் மோதுவதற்கு எதையும் செய்யாமலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரீஸின் அங்கத்துவத்தைப் பேணிக் கொண்டே சிக்கன நடவடிக்கைகளை சிரிசாவால் எதிர்க்க முடியுமென்ற கருத்துடன், அது ஓர் அரசியல் மாற்றீடாக கிரேக்க ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது.

அதுபோன்ற வாதங்களைப் பலப்படுத்துவதில் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, பிரிட்டனின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு உட்பட போலி-இடது குழுக்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. அவை அனைத்தும் சிரிசாவை அவற்றின் புதிய முன்மாதிரியாக மெச்சினஅதாவது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு, ஒரு சோசலிஸ்ட் ஐரோப்பாவிற்கான ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தினது ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தின் பாகமாக, கிரீஸின் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டம் அவசியமில்லை என்பதற்கு சிரிசாவே ஒரு நிரூபணமென்று அவை புகழ்ந்தன.

சிரிசாவின் "குறுங்குழுவாத" விமர்சகர்களின் முடிவில்லா கண்டனங்கள் முதலும் முக்கியமுமாக, சிரிசாவின் முதலாளித்துவ வர்க்க குணாம்சம் மற்றும் வலதுசாரி அரசியலை பகுத்தாராய்ந்து அம்பலப்படுத்திய, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்கு எதிராக திரும்பி இருந்தன. அவர்கள் அனைவரும் "யதார்த்தஅரசியலுக்கு" (realpolitik) அவசியமான பயன்பாடாக அறிவித்து, சிரிசாவின் சுதந்திர கிரேக்கர்கள் கட்சி உடனான கூட்டணிக்கு வக்காலத்து வாங்கினர்.

அது முக்கூட்டின் சிக்கன நடவடிக்கைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தவும், எல்லா கடன்களைத் திரும்ப செலுத்தவும், ஓய்வூதிய நிதிகள் மீது தாக்குதல் நடத்தவும், மற்றும் தனியார்மயமாக்கும் திட்டத்தை மீளமர்த்தவும் சூளுரைத்த போதினும் கூட, சிரிசாவினால் இன்றைய தேதி வரையில் கிரேக்க தொழிலாளர்களின் நல்லெண்ணத்தைச் சுரண்ட முடிந்துள்ளது என்பதுடன், ஏதோவிதமான ஓர் எதிர்ப்பு நிலைப்பாட்டை கலைத்துவிட்டு கிரீஸின் கடன்வழங்குனர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. ஆனால் இந்த காலகட்டம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

கிரீஸின் கடன் வழங்குனர்களைத் திருப்திப்படுத்தும் வெட்டுக்களின் ஒரு பட்டியலைச் சமர்பிக்க சிரிசாவிற்கு வெறும் இரண்டு வாரகால இறுதிகெடுவே உள்ளது. அது வெற்றியடைந்து கிரீஸ் யூரோ மண்டலத்தில் இருந்தாலும் சரி, அல்லது அதில் தோல்வியடைந்து கிரீஸ் அதிலிருந்து வெளியேறினால் சரி, ஏற்கனவே பிழைப்பதற்கே கடுமையாக போராடிவரும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மீது அங்கே மேற்கொண்டும் கடுமையான தாக்குதல்கள் கொண்டு வரப்படும்.

அதற்கு வக்காலத்து வாங்குபவர்களால் வழங்கப்பட்ட மூடுதிரைக்குப் பின்னாலிருந்து கொண்டு, அதன் சிக்கன நடவடிக்கையைத் திணிப்பதற்கு வார்த்தைஜாலங்கள் இனியும் ஒரு மூடுமறைப்பாக இருக்கவியலாது என்றாகும் என்பதால், அத்தகைய காலக்கட்டத்திற்குத்தான் சிரிசா அதன் தயாரிப்புகளைச் செய்து வருகிறது.

"அந்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தைப்" பாதுகாப்பதற்கு அது தயாராக இருப்பதைத் தெளிவுபடுத்த, ஜூன் 2012 இல் சிப்ராஸ், கிரேக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் மற்றும் இராணுவ உயர் கட்டளையகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். கிரீஸின் புவிசார் மூலோபாய இலட்சியங்களை விவாதிக்க அவர் அக்டோபர் 2014இல், பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்துரையாடியதுடன், இராணுவத்தினரின் "சுயநலமில்லா நிலைப்பாட்டையும்" பாராட்டினார். ஜனவரி தேர்தலுக்குப் பின்னர் அதிகாரம் ஏற்பதற்கு முன்னதாக, அவர் கிரேக்க இராணுவத்தின் தலைமை தளபதி மற்றும் கிரேக்க பொலிஸ் தலைவர் ஆகியோருக்கு அங்கே "அதிகார வெற்றிடம்" இருக்காது என்று மறுஉத்தரவாதம் அளித்தார்.

சிரிசா ஏற்கனவே இரட்டைவேஷம் மற்றும் நம்பிக்கைத் துரோகத்தின் மறுபெயராக மாறியுள்ளதுஅது எப்போதும் கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் விசுவாசமான பாதுகாவலராக மற்றும் ஒரு தனிச்சலுகை கொண்ட குட்டி-முதலாளித்துவ அடுக்கின் ஓர் அரசியல் வாகனமாக செயல்பட்டு வருகிறது என்பது, பனௌசிஸ், Paraskevopoulos மற்றும் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் போன்ற முன்னாள் கல்வித்துறையாளர்களால் மிகச் சிறந்த உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை நசுக்க அது அரசு வன்முறையைப் பிரயோகிக்க கூடுதலாகவே தயாராக இருப்பதை தற்போது தெளிவுபடுத்தி உள்ளது.

இவ்வாறு நடந்தால், சிரிசாவின் போலி-இடது பாதுகாப்பாளர்கள் அவர்களது கரங்களில் இரத்தத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களில் பலர் சிரிசாவிற்குள் அவர்களது சொந்த கன்னைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்க ஒரு நேரடியான பாத்திரம் வகித்துள்ளனர், அத்துடன் எதிர்புரட்சிக்கான ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை ஆளும் வர்க்கம் தயார் செய்வதற்கும் அவர்கள் அனுமதித்துள்ளனர்.