சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece makes €450 million payment to International Monetary Fund

கிரீஸ் சர்வதேச நாணய நிதியத்திற்கு 450 மில்லியன் யூரோ செலுத்துகிறது

By Christoph Dreier
10 April 2015

Use this version to printSend feedback

வியாழனன்று கிரீஸ் சர்வதேச நாணய நிதியத்திற்கு சுமார் 450 மில்லியன் யூரோ அனுப்பியது. அதனைக் கொண்டு, ஏதென்ஸ் புதிய உதவிகளை அணுக இயலாமலேயே, அதன் இரண்டாவது பிரதான கடனைத் திருப்பி செலுத்தி உள்ளது. அந்நாடு ஏற்கனவே மார்ச் இறுதியில் 1.5 பில்லியன் யூரோவை சர்வதேச நாணய நிதியத்திற்குச் செலுத்தி இருந்தது.

சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டீன் லகார்ட் உடன் முந்தைய வாரயிறுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் இரண்டாவது கடனைத் திரும்ப செலுத்த வாக்குறுதி அளித்திருந்தார். அவர், “கிரேக்க அரசாங்கம் எல்லா கடன் வழங்குனர்களுக்கும் அதன் கடமைப்பாடுகளை எப்போதும் பூர்த்தி செய்கிறது, அவ்வாறே தொடர்ந்து செய்வதற்கும் நோக்கம் கொண்டுள்ளது,” என்றார்.

கிரீஸில் கொடிய சமூக நிலைமைகளை முகங்கொடுத்திருக்கையில், அதுபோன்ற அறிக்கைகளானது, தவறுக்கிடமின்றி, மேற்கொண்டும் சமூக வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கல்களுக்கு வழங்கப்படும் பொறுப்புறுதிகளாகும். புருசெல்ஸிடமிருந்து வந்த ஐந்தாண்டுகால கட்டளைகள், 25 சதவீதத்திற்கும் மேலான வேலைவாய்ப்பின்மை விகிதத்தை உருவாக்கியுள்ளது. அங்கே மருத்துவ-பராமரிப்பு முறை பொறிந்து போயுள்ளது, ஊட்டச்சத்து குறைபாடே கூட மக்களிடையே ஒரு பரவலான பிரச்சனையாக மாறியுள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், தீவிர இடதின் கூட்டணி (சிரிசா) தலைமையிலான கிரேக்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதிய கடனைத் திரும்ப செலுத்துவதற்காக அந்த பணத்தை ஒட்டுமொத்தமாக சுரண்டி எடுத்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில், அரசு திவால்நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஓய்வூதிய நிதியிலிருந்து பெரும் தொகைகளை அரசாங்கம் கடன் வாங்கியதாக செய்திகள் தெரிவித்தன.

பின்னர், மார்ச் மாதயிறுதியில், மருத்துவ-பராமரிப்பு காப்பீட்டு அரசு நிறுவனத்திடமிருந்து 50 மில்லியன் யூரோவை அளிக்குமாறு கோரியது. ஏதென்ஸ் மாநகரமும் அரசு பணத்தை வழங்க இருந்தது. இன்று வரையில், மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குனர்கள் உட்பட நிறுவனங்களிடம் இருந்து 600 மில்லியன் யூரோவை கடனாக பெற்றுள்ளது. மருத்துவமனைகளுக்கு நிதி வழங்க ஒதுக்கப்பட்ட சுமார் 120 மில்லியன் யூரோ அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.

பொதுவாக, இத்தகைய கடன்கள் மிக குறுகிய கால வடிவத்தைக் கொண்டிருப்பதுடன், ஒரு வரவு-செலவு திட்டக்கணக்கு நெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கில் உள்ளன, அதேவேளையில் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் (EU) ஆகிய முக்கூட்டு என்றழைக்கப்படுவதுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது. பிணையெடுப்பு கடனின் இறுதி நிலுவைத்தொகையான 7.2 பில்லியன் யூரோவைப் பெற முடியுமென ஏதென்ஸ் நம்பி வருகிறது.

வியாழனன்று செலுத்தப்பட்ட இந்த சர்வதேச நாணய நிதிய கடன், 2010 இல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் யூரோ குழும உறுப்பு நாடுகளிடமிருந்து கிரீஸ் பெற்ற முதல் கடனின் பாகமாக இருந்தது. இந்த நிதிகளை வழங்குவதற்கு, அந்நேரத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளோடு அது பிணைக்கப்பட்டது, அது அந்த பொருளாதாரத்தை மந்தநிலைமைக்குள் தள்ளியதோடு, 2008இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 113 சதவீதமாக இருந்த அரசு கடன், 2013 இல் 175 சதவீதமாக வெடிப்பார்ந்த உயர்வைக் கண்டது.

பிரிட்டிஷ் அமைப்பான Jubilee Debt Campaign செய்தியின்படி, சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே கடன்களுக்கான வட்டியாக 2.5 பில்லியன் யூரோவை ரொக்கமாக பெற்றுள்ளது. ஆனால் அனைத்திற்கும் மேலாக அந்த பிணையெடுப்பு கடன்கள், கிரீஸ் நடைமுறைரீதியில் திவாலாகி கொண்டிருக்கின்ற நிலையில், அது யாரிடம் கடன் பெற்றுள்ளதோ அதே ஐரோப்பிய வங்கிகளுக்கே திரும்ப செலுத்துவதற்கும் மற்றும் பெரும் உயர் வட்டி விகிதங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், இப்போது சர்வதேச நாணய நிதியம் அதன் பணத்தைத் திரும்ப கோருகிறது. சிக்கன நடவடிக்கைகளின் காரணமாக வரவு-செலவு திட்ட நிலைமைகள் மோசமடைந்துள்ளதால், பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கு கிரீஸ் மீண்டுமொருமுறை கூடுதல் கடன்களைச் சார்ந்துள்ளது. ஆனால் முக்கூட்டோ அத்தகைய கடன்களைக் மேலதிக தனியார்மயமாக்கல்கள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் வரவு-செலவு வெட்டுக்களுடன் பிணைத்துள்ளது.

மிகத் தெளிவாக, இந்த கடுமையான சிக்கன நடவடிக்கைக்கான கட்டளைகள், கிரேக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதையோ அல்லது கடன் சுமையைக் குறைப்பதையோ விளைவாக கொண்டு வரப் போவதில்லை. ஐரோப்பிய அரசாங்கங்கள், கிரீஸை முன்மாதிரியாக வைத்து, அந்த நெருக்கடியின் சுமையை ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு பெரிதும் அக்கறை கொண்டுள்ளன.

இந்த கொள்கையை ஆதரிக்க, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை நிபந்தனையின்றி திரும்ப செலுத்துவோம் என்பதன் மூலமாக சிரிசா அரசாங்கம் மீண்டுமொருமுறை எதையும் செய்ய தயாராக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்த ஓய்வூதிய நிதிகள், மருத்துவ-பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைச் சூறையாடுவதன் மூலமாக, சிரிசா தன்னைத்தானே, முக்கூட்டின் பிணையெடுப்பு கடன்கள் மீது இன்னும் அதிகமாக சார்ந்திருக்குமாறு செய்து கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் முறியட்டும் என முக்கூட்டு முடிவெடுத்தால், இந்த குறுகிய கால கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் போகும்.

சந்தைகளில் இருந்தும் கூட புதிய மூலதனத்தைப் பெற கிரீஸ் இலாயகற்று உள்ளது. அது ஆறு மாதகால அரசு பத்திரங்களுக்காக இந்த வாரம் 2.97 சதவீத தொகையைச் செலுத்தியது. அதுபோன்ற குறுகிய கால நிதிகள் மீது கடன் வழங்குனர்களால் கொண்டு வரப்பட்ட 15 பில்லியன் யூரோ உச்சவரம்பு ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டது.

மே மாத இறுதிவாக்கில் திரும்ப செலுத்த வேண்டிய தொகையாக மொத்தத்தில் சுமார் 6 பில்லியன் யூரோ மேற்கொண்டும் கடன்களாக உள்ளன. இதை கடன்களின் உதவியோடு மட்டுமே கிரீஸ் திரும்ப செலுத்த இயலும். இல்லையென்றால், அரசு திவால்நிலைமையும், யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறும் மேலுயர்கின்றன.

முக்கூட்டு பிரதிநிதிகளோ இதுவரையில், கிரேக்க அரசாங்கத்திடமிருந்து வந்த அனைத்து சீர்திருத்த முன்மொழிவுகளையும் மற்றும் தனியார்மயமாக்கல்களையும், போதுமானளவிற்கு இல்லையென்று நிராகரித்துள்ளனர். அதன் மிக சமீபத்திய நகர்வு வியாழனன்று வந்தது. அப்போது சமூக பாதுகாப்பு, தொழிலாளர் சந்தை மற்றும் தனியார்மயமாக்கல்கள் ஆகிய பகுதிகளில் புதிய ஆலோசனைகளை உருவாக்குமாறு அந்த அரசாங்கத்திற்கு கடன் வழங்குனர்கள் ஆறு நாள் இறுதிகெடு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசாங்க ஒருங்கிணைப்பு மந்திரி Alekos Flambouraris கூறுகையில், ஏப்ரல் 24க்குள் முக்கூட்டுக்கும் ஏதென்ஸூக்கும் இடையே ஓர் உடன்பாடு எட்டப்படும் என்பதில் அவர் "100 சதவீதம் உறுதியாக" இருப்பதாக தெரிவித்தார். இந்த தேதியில் தான் ஐரோப்பிய நிதி மந்திரிமார்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்காக ரிகாவில் ஒன்று கூடுவார்கள். அங்கே இறுதி பிணையெடுப்பு நிலுவைத் தொகையை கொடுப்பதா வேண்டாமா என்பதன் மீது முடிவு எட்டப்படும்.

சிக்கன நடவடிக்கைகளுக்கான கட்டளைகளை சிரிசா ஏற்றுக் கொண்டு விட்டு, அது வெறுமனே விபரங்கள் மீது இப்போது முக்கூட்டுடன் பேரம்பேசி வருகிறது என்ற உண்மை, அலெக்சிஸ் சிப்ராஸின் ரஷ்யாவிற்கான விஜயத்தின் போது தெளிவானது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சாத்தியமான நிதியுதவி வழங்குவது குறித்து புட்டினுடன் சிப்ராஸ் பேசியிருந்த போதினும், அவரோ, யூரோ குழுமத்தின் மீது சார்ந்திருப்பதைக் குறைக்கக்கூடிய கடன்கள் குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் பிரச்சினை மீது, அவற்றிற்கு எதிராக கோட்பாட்டுரீதியில் கிரீஸால் ஒரு வீட்டோ தடுப்பதிகாரத்தைக் கொண்டு வர முடியும் என்றாலும், சிப்ராஸ் அதை தெளிவுபடுத்தாமல் இருந்துவிட்டார்.

திரு. புட்டின் மற்றும் திரு. சிப்ராஸிற்கு இடையே அனைத்து சுமூகமான உரையாடல்களுடன்: அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம் என்ற வரியை அவர் விட்டுவிடவில்லை,” என்று சமூக ஜனநாயக கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஸ்க்கூல்ஸ் ஜேர்மன் தொலைக்காட்சி ZDF இன் Heute Journal நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களானது, சிரிசா, தொழிலாள வர்க்கத்தின் மீது மேற்கொண்டும் தாக்குதல்களை அழுத்தமாக முன்னெடுப்பதற்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களைப் பாரியளவில் கட்டமைப்பதற்கு அழைப்புவிடுப்பதற்காக, சிரிசா பிரதிநிதிகள் விளிம்பில் நடந்த அராஜகவாத போராட்டக்காரர்களின் மோதல்களைச் சுரண்டி உள்ளனர். முந்தைய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பலியான, வெறுக்கப்பட்ட, வகுப்புவாத பொலிஸை உடனடியாக மறுஸ்தாபிதம் செய்யுமாறு இணை உள்துறை மந்திரி Giannis Panousis கோரினார்.

பொலிஸூடன் சேர்ந்து இராணுவத்திற்கும் வரவு-செலவு வெட்டுக்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. மார்ச் 15 அன்று, 500 மில்லியன் யூரோ அரசு செலவில் ஐந்து உளவுபார்ப்பு விமானத்தை நவீனமயமாக்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் சிப்ராஸ் கையெழுத்திட்டார். வலதுசாரி சுதந்திர கிரேக்கர் (ANEL) கட்சியின் பாதுகாப்பு மந்திரி பேனொஸ் கமெனொஸ் நேட்டோவின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக அந்த செலவுகளைக் கோரியிருந்தார்.