சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s criminal war against Yemen

ஏமனுக்கு எதிராக ஒபாமாவின் குற்றகரமான போர்

Bill Van Auken
10 April 2015

Use this version to printSend feedback

ஏமனுக்கு எதிரான குண்டுவீச்சு அதன் மூன்றாவது வாரத்தில் நீடிக்கின்ற வேளையில், ஒபாமா நிர்வாகம் ஒரு பாரிய மனிதயின பேரழிவை விரைவுபடுத்த அச்சுறுத்தும் ஒரு சட்டவிரோத போரை உருவாக்கும் வகையில் நேரடியான அமெரிக்க தலையீட்டை அதிகரித்துள்ளது.

அந்த போரின் இயல்பு, அந்த சண்டையில் ஈடுபடுபவர்களின் குணாம்சத்தால் சர்ச்சைக்கிடமின்றி வரையறுக்கப்படுகிறது. அது உலகின் மிக பலம் வாய்ந்த மற்றும் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட, சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகளின் முடியாட்சி சர்வாதிகாரங்களும் மற்றும் அதனுடன் சேர்ந்து எகிப்திய ஜெனரல் அல்-சிசி தலைமையிலான மூர்க்கமான ஒடுக்குமுறை ஆட்சியும் உள்ளடங்கிய, பிற்போக்குத்தனமான கொடுங்கோலர்கள் மற்றும் விசுவாசமான ஒட்டுண்ணிகளின் ஒரு கூட்டணியாகும்.

அவர்களது இலக்கு, மத்திய கிழக்கின் மிக வறிய நாடான ஏமன் ஆகும். மக்கள்கூட்டம் நிறைந்த நகர்புற குடியிருப்புகள் மீது டன் கணக்கான வெடிகுண்டுகளை வீச சவூதியும் மற்றும் ஏனைய வளைகுடா அரசுகளும் போர்விமானங்களை அனுப்புவதற்கு முன்னரே, சுமார் பாதியளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழும் மற்றும் பாதியளவிலான மக்கள் வறுமையில் வாழும் அந்நாட்டின் துறைமுகங்களுக்குள், உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில், போர்க்கப்பல்கள் ஒன்றுதிரட்டப்பட்டன.

இப்போது இந்த படுமோசமான நிலைமை அளவிடவியலாதவாறு மோசமாக வளர்ந்துள்ளது. குண்டுவீச்சில் அடிப்படை உள்கட்டமைப்புகள் இடிபாடுகளாக்கப்பட்டு வருகின்றன. உணவு வினியோகங்களின் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் நீரேற்றுவதற்கான மின்சக்தி உட்பட, மின்சாரம் வெட்டப்பட்டுள்ளது. நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நிவாரண உதவி அமைப்புகளின் முயற்சிகள், சவூதி தலைமையிலான குண்டுவீச்சால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ.நா மதிப்பீடுகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 600க்கு அதிகமாக மதிப்பிட்டுள்ள போதினும், அதில் மருத்துவமனைகளால் தெரியப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே உள்ளடங்குவர், நிஜமான இறந்தவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகமாக இருக்கும். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் ஊனமாக்கப்பட்டுள்ளனர். வீடுகளின் இடிபாடுகளில் இருந்து குடும்பம் குடும்பமாக உடல்கள் வெளியில் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பெரும்பான்மையினர் அப்பாவி பொதுமக்களாவர்.

கொல்லப்பட்டவர்களின் இந்த எண்ணிக்கை விரைவிலேயே இன்னும் அதிகரிக்கக்கூடும். குண்டுவீச்சு தொடர்ந்தால், மில்லியனில் ஒரு கால்பகுதிக்கும் மேலான குழந்தைகள் பட்டினியில் இறக்கும் அபாயம் இருப்பதாக யுனிசெப் எச்சரித்துள்ளது.

இத்தகைய போர் குற்றங்கள் சாத்தியமாகுமாறு செய்வதில் பெண்டகன் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்து வருவதாக இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இன்னும் நிறைய ஏமனியர்களைக் கொல்வதற்காக மற்றும் அமெரிக்க ஆயுத வியாபார இலாபங்களை அதிகரிப்பதற்காக சவூதி அரேபியாவிற்கு அது குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் வழங்குவதை அதிகரித்துள்ளது. 2010 மற்றும் 2014 இடையில் மட்டும், ஒபாமா நிர்வாகம் சவூதி முடியாட்சியை அதன் தலையாய அமெரிக்க வாடிக்கையாளராக ஆக்கி, அதனுடன் 90 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உடன்படிக்கைகளை எட்டியது.

சவூதி தலைநகரில் ஒரு "கூட்டு ஒருங்கிணைப்பு திட்டக்குழுவை" ஸ்தாபித்து, சவூதி தலைமையில் நடந்துவரும் கடுந்தாக்குதல்களுக்கு உளவுதகவல் பரிவர்த்தனைகள் மற்றும் தளவாட பரிவர்த்தனை உதவிகளையும் அமெரிக்கா அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை துணை செயலர் ஆண்டனி பிலின்கின் ரியாத்திற்கான அவரது பயணத்தில் தெரிவித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்க மத்திய கட்டளையகத்திலிருந்து இரண்டு நட்சத்திர தளபதியால் நடத்தப்பட்டு வருவதாக கூறிய பெயர் வெளியிட விரும்பாத பெண்டகன் அதிகாரிகளின் கருத்துக்களை McClatchy News மேற்கோளிட்டு காட்டியது.

தடையின்றி வான்வழி தாக்குதல்களை நடத்தும் வகையில், அமெரிக்க விமானப்படையின் KC-135 ஸ்ட்ராடோடேங்கர்ஸ் (Stratotankers), சவூதி போர் விமானங்களுக்கு அன்றாடம் வானிலிருந்தே எரிபொருள் நிரப்புவதை தொடங்கி உள்ளதாக பெண்டகன் புதனன்று அறிவித்தது.

இவ்விதத்தில் அமெரிக்க இராணுவம் ஏமன் மீது வீசுவதற்கு குண்டுகளை மட்டும் அனுப்பவில்லை, மாறாக தாக்கப்பட வேண்டிய இலக்குகளைக் குறித்து சவூதி விமானிகளுக்கு தகவல் வழங்குவதோடு, அவற்றை எட்டுவதற்கு எரிபொருள்களையும் வழங்கி வருகிறது. ஒபாமா நிர்வாகத்தின் கரங்கள் பலியான ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களின் இரத்தத்தில் நனைந்துள்ளது.

அந்நாட்டின் பெரும்பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை ஸ்தாபித்துள்ள ஹோதி கிளர்ச்சி இயக்கத்திற்கு ஈரான் உதவிகளை வழங்குவதாக கருதப்படுகிறது என்று ஏமன் நெருக்கடிக்கு ஈரானைக் குற்றஞ்சாட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி இந்த தலையீட்டிற்கு புதனன்று ஒரு போர்நாடும் நியாயப்பாட்டை வழங்கினார்.

அந்த பிராந்தியம் நிலைகுலைக்கப்படுகின்ற போதோ, அல்லது உங்களுக்கே தெரியும், சர்வதேச எல்லைகளை... கடந்து அம்மக்கள் பகிரங்கமான போர்முறையில் ஈடுபடும் போதோ, அமெரிக்கா வெறுமனே நின்று கொண்டிருக்காது என்பதை ஈரான் உணர்ந்துகொள்ள வேண்டும்,” என்றவர் PBS News பேட்டி ஒன்றில் தெரிவித்தார். வாஷிங்டன் "சர்வதேச சட்டத்திற்கு எதிராகவோ அல்லது பொருந்தாத விதத்திலோ அல்லது அப்பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டிற்கு முரணான எதிலும் குறுக்கீடு செய்ய நிலைநிற்கும்" என்று கெர்ரி சூளுரைத்தார்.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நியாப்படுத்துவதற்கு இந்த மட்டத்திலான பொய்களைக் காண வேண்டுமானால், நிஜமாகவே ஒருவர் 1930களுக்குப் பின்னால் செல்ல வேண்டியிருக்கும். “ஹிம்லெர் நடவடிக்கை" (Operation Himmler) தான் நினைவிற்கு வருகிறது, அப்போது ஜேர்மனியின் நாஜி ஆட்சி, வார்சோவிற்கு எதிரான அதன் கொடூர தாக்குதலை நியாயப்படுத்த "போலாந்து ஆக்கிரமிப்பு" பற்றிய பிரச்சாரத்தைப் பயன்படுத்தியது.

போர் நடத்துவதற்காக எந்தவொரு "சர்வதேச எல்லைகளையும்" ஹோதியர் கடந்து வரவில்லை, அல்லது ஈரானும் அவ்வாறு செய்யவில்லை. ஹோதியர் ஒரு பூர்வீக இயக்கமாகும், ரியாத் மற்றும் வாஷிங்டனால் நிறுவப்பட்ட கைப்பாவை அப்த் ரப்பாஹ் மன்சூர் ஹாதியின் பழைய ஆட்சி மற்றும் ஏமனில் மேற்கத்திய தலையீடு ஆகிய இரண்டினாலும் மக்களின் பரந்த அடுக்குகளிடையே நிலவிய வெறுப்பில் அதன் வெற்றிகள் வேரூன்றியுள்ளன. ஈரானைப் பொறுத்த வரையில், அதன் மீதான எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும், அந்த சண்டையில் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட சம்பந்தப்பட்டிருப்பதற்கு, அமெரிக்காவோ அல்லது வேறு எவருமோ ஒரு துணுக்கு ஆதாரத்தைக் கூட வழங்கி இருக்கவில்லை. வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்ட சவூதி மற்றும் வளைகுடா அரசு ஆட்சியாளர்கள் தான் ஏமனின் இறையாண்மையை மீறி வருகின்றனர்.

அமெரிக்காவை பொறுத்த வரையில், அது அந்த "பிராந்திய ஸ்திரப்பாட்டுக்காக" நிலைநிற்கிறதாம், கெர்ரி யாரை ஏமாற்றுகிறார்? சவூதி முடியாட்சியின் நேரடி ஒத்துழைப்புடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள், அந்த ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் குழப்பங்களில் மற்றும் இரத்தச்சேற்றில் மூழ்கடித்துள்ளன—ஈராக்கின் சீரழிவிலிருந்து, லிபியாவை போராளிகளால்-நாசமாக்கப்பட்ட "தோல்வியுற்ற அரசாக" மாற்றியது வரையில், சிரியாவில் அமெரிக்கா மற்றும் சவூதி ஒத்து ஊதிய இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் தலைமையிலான ஆட்சி மாற்ற போரில் அந்நாட்டின் மீது சுமத்தப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலை வரையில் செல்கிறது.

1,000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வைப் பறித்துள்ள ஒரு நீடித்த டிரோன் போர்முறை நடவடிக்கையின் மூலமாக ஏமனையே கூட, அமெரிக்கா நிலைகுலைத்தது.

ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை வளாகமும், கடந்த பல ஆண்டுகளாக, அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தாவை (AQAP) அமெரிக்க "உள்நாட்டிற்கு" பிரதான பயங்கரவாத அச்சுறுத்தலாகவும் மற்றும் அமெரிக்க டிரோன் நடவடிக்கையை "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஒரு முன்மாதிரி "வெற்றி" என்றும் சித்தரித்துள்ளன.

இப்போதோ, ஹோதி கிளர்ச்சியை முகங்கொடுக்கையில், AQAPக்கு எதிரான பிரச்சாரம் உயிரற்றதாகி விடுகிறது. அந்த இஸ்லாமிய குழுவின் உட்கூறுகள் கடந்த வாரத்தில் ஒட்டுமொத்த நகரங்களையும் கைப்பற்றி உள்ள போதினும், ஏமனில் தொடர்ந்து குண்டுவீசிவரும் சவூதி போர்விமானங்கள் அவர்களுக்கு எதிராகவும் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எவரொருவரும் அறிவுறுத்தவில்லை.

இது தற்செயலானது அல்ல. AQAP என்பது மிகவும் இராணுவரீதியில் அந்நாட்டில் இருக்கும் ஹோதி விரோத படையாகும். ஆகவே அது அமெரிக்க-சவூதி கூட்டணியில் ஒரு நடைமுறை கூட்டாளியாகி விடுகிறது. சவூதி ஆட்சியைப் போலவே அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தாவும், ஏமன் மக்களில் 40 சதவீதவீதத்தினரை உள்ளடக்கிய ஒரு ஷியைட்-சார்ந்த மதக்குழுவான, ஏமன் ஜாய்தி மக்களை அடித்தளத்தில் கொண்ட, ஹோதி இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்ட ஒரு வக்கிரமான வகுப்புவாத குழுவாகும்.

அதுபோன்ற தலைச்சுற்றும் மறுஅணிசேர்தலை நியாயப்படுத்துவதற்காக வாஷிங்டன் தோற்றப்பாட்டளவில் புதிய பொய்களை உருவாக்க முயல்வதைக் கூட கைப்பற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் நடத்திவரும் இந்த சமீபத்திய போர் குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லையென ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", “மனிதாபிமான உரிமைகள்", “ஜனநாயகம்", “பிராந்திய ஸ்திரப்பாடு" என இவையனைத்தும், மத்திய கிழக்கின் மீதும் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்கள் மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தை திண்மமாக்கும் நோக்கில், பட்டவர்த்தனமான ஆக்கிரமிப்பிக்கு சமஅளவில் மோசடி சாக்குபோக்குகளாகும்.

இந்த சூறையாடும் ஏகாதிபத்திய தாக்குதல், ரஷ்யா மற்றும் சீனா இரண்டினோடும் வாஷிங்டன் திட்டமிட்டு இராணுவ பதட்டங்களை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒரு பிராந்தியந்தழுவிய மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது. இத்தகைய தனித்தனியான மோதல்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் ஒரு மூன்றாம் உலக போராக மாறிவருகிறது.

போர் மற்றும் அதன் மூல ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் ஓர் அரசியல் போராட்டத்திற்கு வெளியே, அதுபோன்றவொரு பேரழிவு தவிர்க்கவியலாததாகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் மே 3 இல் ஒரு சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பங்கெடுக்குமாறும், இந்த போராட்டத்திற்கு உயிரூட்டும் சர்வதேச புரட்சிகர சோசலிச முன்னோக்கின் விவாதத்தில் பங்கெடுக்குமாறும் நாங்கள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வலியுறுத்துகிறோம். இன்றே Internationalmayday.org தளத்தில் பதிவு செய்யுங்கள்.