சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

US, Israel condemn Russian missile deal with Iran

ஈரான் உடனான ரஷ்ய ஏவுகணை உடன்படிக்கையை அமெரிக்கா, இஸ்ரேல் கண்டிக்கின்றன

By Bill Van Auken
15 April 2015

Use this version to printSend feedback

ஈரானிய அரசாங்கத்திற்கு அதிநவீன S-300 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புமுறையை வழங்குவதன் மீதிருந்த ஒரு தடையை நீக்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினால் திங்களன்று கையெழுத்திடப்பட்ட சட்டஆணைக்கு வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் இரண்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒபாமா நிர்வாகமும் மற்றும் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகுவின் அரசாங்கமும் இரண்டும், ஈரானிய அணுசக்தி ஆலைகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுமென்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை, மாஸ்கோவின் நடவடிக்கை குறுக்காக வெட்டுவதாக பார்க்கின்றன.

இஸ்ரேலிய அரசாங்கம் ஈரானுக்கு எதிராக ஒருதலைபட்சமான இராணுவ நடவடிக்கையைக் கொண்டு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியது, அதேவேளையில் வாஷிங்டனோ, அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி உள்ளடங்கிய P5+1 குழுவின் குடையின் கீழ் தற்போது அது பேச்சுவார்த்தை நடத்திவரும் ஓர் அணுசக்தி உடன்படிக்கையை தெஹ்ரான் மீறுவதாக கருதும் போது, “மேஜையின் மீதிருக்கும்" ஒரு வாய்ப்பாக இராணுவ நடவடிக்கையைப் பேணி வருகிறது.

புதுப்பிக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணை உடன்படிக்கை மீதிருக்கும் சர்ச்சைகளுக்கு இடையே, ஜனாதிபதியின் வீட்டோ தடுப்பதிகாரம் இல்லாமலேயே ஈரானிய அணுசக்தி சட்டமசோதா ஜனநாயகக் கட்சியினரின் போதிய ஆதரவை வென்றுவிடுமென தெரிந்ததும், வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் கமிட்டியால் செவ்வாயன்று ஒருமனதாக ஒப்பு வழங்கப்பட்ட அந்த சட்டமசோதாவின் ஒரு வடிவத்தில், ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட தயாராகி விட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

எந்தவொரு ஈரான் அணுசக்தி உடன்படிக்கையையும் மீளாய்வு செய்யும் உரிமையை சட்டமன்றம் காங்கிரஸிற்கு வழங்கும் அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஏனைய பிரதான சக்திகளால் எட்டப்பட்ட ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ அதற்கு உரிமை இல்லை என்பதை அது வெளிப்படையாக ஆமோதிக்கிறது. முதலாவதாக சட்டமியற்றி வைக்கப்பட்டுள்ள ஒருதலைபட்சமான அமெரிக்க தடைகளை நீக்குவதற்கு வேண்டுமானால் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்கும் வழிமுறையை அது காங்கிரஸிற்கு வழங்குகிறது. ஆனால் ஈரானை இஸ்ரேல் அங்கீகரிப்பதை அல்லது அது "பயங்கரவாதத்திற்கான" ஆதரவு என்று கூறி அது கைப்பற்றுவதை, அணுசக்தி உடன்படிக்கையுடன் தொடர்புபடுத்தும் குடியரசு கட்சி திருத்தங்கள் என்று வரும்போது, அந்த சட்டமசோதா மீதான உடன்பாடு உடைந்து போகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரண்டிடம் இருந்தும் வந்த பலமான அழுத்தத்திற்கு விடையிறுத்து, 2010 இல், தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை தளவாடங்களை அனுப்புவதன் மீது மாஸ்கோ தானே முன்வந்து தடை விதித்தது.

2007 இல் கையெழுத்திடப்பட்ட அந்த ஏவுகணை உடன்படிக்கை, ரஷ்யாவின் அரசுத்துறை ஆயுத வினியோகஸ்தர் Rosoboronexport க்கு 800 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. இதற்கிடையே அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறியதன் மீது, ஈரான், ஜெனீவா பொதுமன்ற தீர்ப்பாயத்திடம் 4 பில்லியன் டாலர் இழப்பீடு கோரிய வழக்கை கொண்டு சென்றது.

அந்த ஒப்பந்தத்தின் மீது ரஷ்யா எடுத்த முடிவை திங்களன்று பென்டகன் கண்டித்தது. “இந்த விற்பனையை நீண்டகாலமாக மற்றும் பகிரங்கமாக நாங்கள் எதிர்த்துள்ளோம். இப்போது அது பயனற்று போய்விட்டதாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அமெரிக்க இராணுவ செய்தி தொடர்பாளர் கேர்னல் ஸ்டீவ் வாரென் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகளை புட்டினின் சட்டஆணை மீறியுள்ளதா என்ற கேள்விக்கு பென்டகன் செய்தி தொடர்பாளர் விடையிறுக்கையில், “உண்மையில் இதை எங்களது வழக்கறிஞர் கவனிப்பார். அதிநவீன தொழில்நுட்பங்களின் எந்தவொரு விற்பனையும் எங்களை கவலைப்படுத்தும் காரணமாக உள்ளது,” என்றார்.

திங்களன்று ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடனான ஓர் தொலைபேசி உரையாடலில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, அந்த வான்பாதுகாப்பு ஏவுகணை விற்பனை குறித்து அமெரிக்காவின் கவலைகளை தெரியப்படுத்தியதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.

இந்த நேரத்தில் அதை கொண்டு முன்னோக்கி நகர்வது ரஷ்யாவிற்கு ஆக்கபூர்வமாக இருக்காதென நாங்கள் நம்புகிறோம், இருப்பினும் P5+1 பேச்சுவார்த்தைகள் மீது ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக வேலை செய்துள்ளோம்,” என்று தெரிவித்த செய்தி தொடர்பாளர் மரி ஹார்ஃப், “இது பேச்சுவார்த்தை அறைக்குள் உள்ள ஒற்றுமையின் மீது தாக்கத்தைக் கொண்டிருக்குமென நாங்கள் கருதவில்லை,” என்றார்.

ஈரானுக்கு எதிரான ஐநா தடைகளை அந்த ஏவுகணை உடன்படிக்கை மீறினால் என்று கேட்கபட்ட போது, அவர் திட்டவட்டமாக அது மீறாது என்றார்.

P5+1 பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் பேரம்பேசும் குழுவின் தலைவராக உள்ள வெளியுறவுத்துறை துணை செயலர் வெண்டி ஸெர்மன் திங்களன்று இஸ்ரேலிய ஊடகங்களுக்குக் கூறுகையில், ஈரானைக் கையாள்வதற்கு அமெரிக்கா அதன் இராணுவ "மாற்றீடுகளைப்" பேணிவருகிறது என்ற போதினும், அணுசக்தி ஆலைகள் மீது குண்டுவீசுவது ஒரு குறுகிய-கால தீர்வாக மட்டுமே இருக்கும் என்றார்.

இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் ஓர் இராணுவ தாக்குதல் அந்த அணுசக்தி திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு வேண்டுமானால் தள்ளிப்போடும்,” என்று தெரிவித்த அவர், “அணுசக்தியைக் குறித்து அவர்கள் தெரிந்து வைத்திருப்பதை உங்களால் குண்டுவீசி அழிக்க முடியாது, மேலும் அவர்கள் ஒவ்வொன்றையும் மீண்டும் கட்டமைப்பார்கள். ஆனால் அங்கே மாற்றீடுகள் உள்ளன, ஒரு இராஜாங்கரீதியான பேரம்பேசும் தீர்வே சிறந்த வாய்ப்பாகும்,” என்றவர் தெரிவித்தார்.

செவ்வாயன்று புட்டினுடன் தொலைபேசியில் பேசியிருந்த இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகு, தடையை நீக்குவது மற்றும் ஈரானிய அணுசக்தி திட்டத்தின் மீதான ஓர் உடன்படிக்கையை நோக்கி நகர்வது என இவை இரண்டிற்கும் எதிராக சீறினார்.

ஈரானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்பதென்பது, ஈரான் மற்றும் [P5+1] சக்திகளுக்கு இடையே வளர்ந்து வரும் அபாயகரமான உடன்படிக்கையின் விளைவாகும்,” என்று தெரிவித்த நெத்தெனியாகு, “ஈரான் உடனான உடன்படிக்கை மத்திய கிழக்கின் பாதுகாப்பை அதிகரிக்குமென, இந்த ஆயுத உடன்படிக்கைக்குப் பின்னர், அங்கே யாரேனும் ஆழமாக வாதிட முடியுமா?” என்றார்.

அந்த விமானத் தகர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை "அதன் இயல்பில் முற்றிலுமாக தற்பாதுகாப்புக்கு உரியது, தாக்குதல் நோக்கத்திற்கு பொருந்தியதல்ல, நிச்சயமாக இஸ்ரேல் உட்பட அப்பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டின் பாதுகாப்புக்கும் இடையூறாக இராது,” என்று வலியுறுத்தி, ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ் ஏவுகணை வழங்குவதை முன்னெடுக்கும் தீர்மானத்தை நியாயப்படுத்தினார்.

அதை வழங்குவதன் மீது முன்னதாக தானே முன்வந்து தடை விதித்ததை லாவ்ரோவ் சுட்டிக்காட்டினார். “பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே" அது கொண்டு வரப்பட்டது, ஈரானுடன் அணுசக்தி திட்டத்தின் மீது ஒரு கட்டமைப்பு உடன்படிக்கை எட்டப்படுவதால், அது இனியும் அவசியமில்லையென அவர் குறிப்பிட்டார்.

அந்த ஒப்பந்தம் இடையில் நிறுத்தப்பட்டதன் விளைவாக, “ரஷ்யாவிற்குக் கிடைக்க வேண்டிய பெரும் தொகைகளை எங்களால் பெற முடியாமல் போனது. இனியும் இதற்கான அவசியமிருப்பதாக நாங்கள் காணவில்லை,” என்பதையும் ரஷ்ய வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.

S-300 உபகரணங்களை வழங்குவதன் மீதான தடையை நீக்குவதுடன் சேர்ந்து, பண்டங்களுக்கு-எண்ணெய் என்ற பண்டமாற்று உடன்படிக்கையைத் தொடங்குவதையும் தோற்றப்பாட்டளவில் ஒரேநேரத்தில் ரஷ்ய அதிகாரிகள் அறிவித்தனர். அதன் கீழ் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு மாற்றாக ஈரானுக்கு தானியங்கள், உபகரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை அனுப்பும். அந்த உடன்படிக்கை சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புடையதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் நடவடிக்கைகள், வாஷிங்டனிலும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் இடையேயும் தெளிவாக கவலைகளைத் தூண்டியுள்ளன. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் செவ்வாயன்று அறிவிக்கையில், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீது அதற்கு எதிராக தடைகளை விதித்துள்ள நாடுகள் "சாத்தியமான அளவிற்கு அத்தகைய தடைகளையும் சேர்த்து நீக்க வேண்டுமென" அறிவித்தார். ஈரானிய சந்தைக்குள் மறுபிரவேசம் செய்வதன் மூலமாக, பெரும் இலாபங்களை அறுவடை செய்யும் அவர்களது திட்டங்கள் மீது ரஷ்யா முன்னெடுத்து செல்கிறதென கவலை கொண்டுள்ள ஜேர்மன் முதலாளித்துவ நலன்களுக்காக அப்பெண்மணி பேசி வருகிறார்.

மாஸ்கோவில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஐயத்திற்கிடமின்றி, ஈரானுடன் அணுசக்தி உடன்படிக்கையை பின்தொடர்வதில் வாஷிங்டனின் சொந்த மூலோபாய கணக்கீடுகளை எதிர்கொள்வதையும் கணக்கில் எடுத்துள்ளன. ஈரானுடன் ஒரு பயனுள்ள சமரசத்தை அதனால் எட்ட முடியும் போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தில் இருந்து அதன் இராணுவ பலத்தின் ஒரு பெரும் பங்கை ரஷ்யா மற்றும் சீனா இரண்டுக்கும் எதிராக திருப்பிவிட முடியும்.