சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

NATO, Russian air intercepts escalate war tensions

நேட்டோ, ரஷ்ய விமான இடைமறிப்புகள் போர் பதட்டங்களைத் தீவிரப்படுத்துகின்றன

By Bill Van Auken
15 April 2015

Use this version to printSend feedback

கடந்த வாரம் ரஷ்யாவின் எல்லையை நோக்கி பறந்து வந்த ஓர் அமெரிக்க உளவு விமானத்தை ரஷ்யாவின் போர் விமானம் இடைமறித்ததன் மீதான ஒரு பிரச்சினை, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க-நேட்டோ கட்டமைப்பால் தூண்டிவிடப்பட்டு அதிகரித்துவரும் போர் பதட்டங்களை அடிக்கோடிடுகிறது.

அது "பாதுகாப்பற்றதும் மற்றும் தொழில்முறைக்கு முரணானதுமாகும்" என்ற பெண்டகனின் கருத்துடன் சேர்ந்து, அந்த ஏப்ரல் 7ஆம் தேதி இடைமறிப்பை வாஷிங்டனும் கண்டித்துள்ளது. “ஒரேயொரு விமானியின் கவனக்குறைவான நடவடிக்கைகளே கூட நாடுகளுக்கு இடையே பதட்டங்களைத் தீவிரப்படுத்தும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளன,” என்று பெண்டகன் செய்தி தொடர்பாளர் மார்க் ரைட் எச்சரித்தார்.

அந்த சம்பவத்தின் மீது ஓர் உத்தியோகபூர்வமான குற்றச்சாட்டை பதிவு செய்ய இருப்பதாக சனியன்று அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளையகம் அறிவித்தது.

மாஸ்கோ அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தது. வானில் தோன்றிய அடையாளம் தெரியாத ஒரு பொருள் போலாந்திற்கு வடக்கே பால்டிக் கடல் மேலே நேராக ரஷ்ய எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், அதை வளைத்துப்பிடிக்க ஒரு ரஷ்ய SU-27 போர் விமானம் அனுப்பப்பட்டதாக தலைமை தளபதி ஐகோர் கொனாஷென்கொவ் தெரிவித்தார். வானில் தோன்றிய அப்பொருள், அதன் அடையாளத்தை வெளியிடாதவாறு அதன் டிரான்பாண்டர்கள் (அலைவரிசை பரிமாறும் கடத்திகள்) அணைக்கப்பட்ட நிலையில் பறந்து வந்த, ஒரு மிகப்பெரிய உளவுபார்ப்பு விமானமான அமெரிக்காவின் RC-135U என்பதை போர்விமான விமானி பின்னர் உறுதிப்படுத்தினார்.

“RC-135U அதன் டிரான்ஸ்பாண்டரை அணைத்த நிலையில் ரஷ்ய எல்லையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்ததை நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன்,” என்று ரஷ்ய தளபதி தெரிவித்தார். “எங்களது விமானிகளின் தொழில்சார் பண்புகளைப் பொறுத்த வரையில், இது ரஷ்ய இராணுவம் மதிப்பிட வேண்டிய ஒன்றாகும். அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க உளவுபார்ப்பு விமானங்கள் அமெரிக்க எல்லையோரங்களை ஒட்டி பறக்க வேண்டுமே ஒழிய, வேறுடங்களில் பறக்க வேண்டியதில்லை,” என்றார்.

ரஷ்ய எல்லையோரங்களுக்கு அருகில் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் அண்மித்தரீதியில் தொடர்ச்சியாக மோதல்தன்மை கொண்ட ஒத்திகைகளை நடத்துகின்ற நிலையில், இந்த வான்வழி மோதலானது அதிகரித்துவரும் எண்ணிக்கையில் வெறும் ஒன்று மட்டுமே ஆகும். போலாந்து மற்றும் லித்துவேனியாவிற்கு இடையே இடைப்பட்ட ரஷ்ய பிராந்தியம், கலினின்கிராடில் உள்ள பால்டிக் கடல் இராணுவ தளங்களை வெளிப்படையாக இலக்கில் வைத்துள்ள உளவு விமானங்களே, திட்டவட்டமாக பதட்டங்களைத் தூண்டி உள்ளன.

செவ்வாயன்று மற்றொரு சம்பவத்தில், “பிரிட்டிஷ் வான்பகுதிக்கு நெருக்கமாக பறந்து கொண்டிருந்த" இரண்டு ரஷ்ய TU-95 “Bear” மூலோபாய குண்டுவீசிகளை இடைமறித்து பிடிக்க டைபூன் (Typhoon) போர்விமானங்களை அனுப்பியதாக இலண்டனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்த இடைமறிப்பு நடந்த துல்லியமான இடத்தைக் குறித்து அவ்வறிக்கை ஏதும் குறிப்பிடவில்லை.

ரஷ்ய விமானம் "முற்றிலும் சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்திய வகையில் செயல்பட்டதாகவும், எதையும் மீறவில்லை என்றும்" ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் வலியுறுத்தினார்.

அந்த சம்பவம் ஞாயிறன்று ஒரு பெண்டகன் செய்தி தொடர்பாளரின் அறிக்கை ஒன்றை பின்தொடர்ந்து வந்திருந்தது, அவர், “ரஷ்ய வான்வழி நடவடிக்கையின் இயல்பு ஐரோப்பாவிற்குள் மேற்கை நோக்கி விரிவடைந்து வருவதாகவும், மிகவும் ஆக்ரோஷமாக மாறி வருவதாகவும்" குற்றஞ்சாட்டி இருந்தார்.

வான்வெளி மோதல்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்-குற்றச்சாட்டுகள் ஆகியவை, அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நிலவிய சில மிகப் பதட்டமான பனிப்போர் காலகட்டங்களை நினைவூட்டுகின்றன. எவ்வாறிருந்த போதினும், ரஷ்யாவைத் தாக்கக்கூடிய தொலைவிற்குள் அமெரிக்க இராணுவ படைகள் ஆக்ரோஷமாக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், எண்ணத்தகுந்த வகையில் தற்போதைய மோதல், ஏதேனும் ஏற்பட்டால், மிகவும் அபாயகரமானதாகும்.

உக்ரேனின் பில்லினிய செல்வந்த தட்டுக்களால் நிதியுதவி வழங்கப்பட்ட மற்றும், பாசிசவாத மற்றும் நவ-நாஜி சுய-ஆர்வலர்களைக் கொண்ட துணைஇராணுவப்படை பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு படையான உக்ரேனிய தேசிய பாதுகாப்பு படையையும் மற்றும் அமெரிக்காவின் 173வது விமானப்படைப்பிரிவின் துணைஇராணுவப்படை துருப்புகளையும் உள்ளடக்கிய, ஆறு மாதகால பயிற்சி மற்றும் இராணுவ ஒத்திகைகளுக்கு தயாரிப்பு செய்வதற்காக, கடந்த வெள்ளியன்று அமெரிக்க தரைப்படை துருப்புகள் உக்ரேனை வந்தடைந்துள்ள நிலையில் தான், வான்வழி மோதல்கள் மீதான இந்த பிரச்சினைகள் வந்தன.

உக்ரேனிய இராணுவ படைப்பிரிவுகளுக்கு உயிர்பறிக்கும் ஆயுத தளவாடங்கள் என்றழைக்கப்படுவதன் முதல் நேரடி வழங்கலை அளிக்கும் வகையில், இந்த ஒத்திகைகளின் முடிவில் அமெரிக்க படைகள் தேசிய பாதுகாப்பு படைக்கு இராணுவ தளவாடங்களை ஒப்படைக்குமென உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே எஸ்தோனியாவில் அமெரிக்க F-16 போர் விமானங்களின் ஒரு திரளணி, ரஷ்ய எல்லையோரத்தின் பார்வைக்கு எட்டிய தூரத்தில் குண்டுவீசும் பயிற்சியை நடத்தி வருகிறது.

எஸ்தோனியாவின் பயிற்சி சரகத்தின் மீது கீழ்நோக்கி திடீர்தாக்குதல் நடத்துகின்ற அந்த F-16 போர் விமான விமானிகள், அவர்களது பார்வைதூரத்திலிருந்தே ரஷ்யாவைப் பார்க்கக்கூடிய அளவிற்கு அது மிக நெருக்கத்தில் உள்ளதாக" அசோசியேடெட் பிரஸ் தெரிவித்தது. “செயற்கை குண்டுகளோ பாதிப்பை ஏற்படுத்தும் புகையைத் தான் வெளியிடும், ஆனால் காதை செவிடாக்கும் அதிர்வுடன் மற்றும் தரையின் இலக்குகளைத் தகர்த்தெறிவதுடன் சேர்ந்து விமான பேரிரைச்சலுடன், M-61 விமான குண்டுவீசிகள் நிஜமான குண்டுகளை வீசுகின்றன,” என்று அது குறிப்பிட்டது.

இந்த நிலைமைகளில் ஒரு தளபதியோ அல்லது ஒரு விமானியோ, ஒரு தவறிழைத்தாலோ அல்லது ஒரு பிழையான முடிவெடுத்தாலோ, நாம் உயிரிழப்புகளையும் மற்றும் பெரும் பணயங்களைக் கொண்ட, நிறுத்துவதற்கு சிரமமான சுழற்சியான தீவிரப்பாட்டைப் பெறுவோம்,” என்று எச்சரித்த, இலண்டனை மையமாக கொண்ட ஒரு சிந்தனை குழாம், ஐரோப்பிய தலைமை வலையமைப்பின் இயக்குனர் ஐயன் கீர்ன்ஸின் எச்சரிக்கைகளை அசோசியேடெட் பிரஸ் மேற்கோளிட்டது.

அசோசியேடெட் பிரஸ் அதுவே குறிப்பிடுவதைப் போல, இந்த "போர்முரசொலிப்பு அணுஆயுத தளவாடங்களைக் கொண்ட இரண்டு சக்திகளுக்கு இடையே ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய விதத்தில், இரண்டு தரப்பும் ஒன்றின் நகர்வை மற்றொன்று பிழையாக புரிந்து கொள்ளக்கூடிய பயங்கரத்தை மேலெழுப்புகிறது.”