சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government introduces new mass data retention regulations

ஜேர்மன் அரசாங்கம் பாரியளவில் தரவுகள் திரட்டுவதற்கான புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது

By Johannes Stern and Denis Krassnin
20 April 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் மத்திய அரசாங்கம் பாரியளவில் தரவுகள் திரட்டுவதற்கான ஒரு சர்ச்சைக்குரிய உள்நாட்டு அமைப்புமுறையை மறுஅறிமுகம் செய்வதை நோக்கி நகர்ந்து வருகிறது. இத்திட்டம், நீதித்துறை மந்திரி ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயக கட்சி, SPD) மற்றும் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியரால் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், CDU) கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

தரவு பாதுகாப்பு, தரவு கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகுவதற்கான உரிமைகள் ஆகியன போதியளவிற்கு தெளிவாக நெறிமுறைப்படுத்தப்படவில்லை என்ற அடித்தளத்தில், 2010 இல் உச்ச நீதிமன்றம் தரவுகளைத் திரட்டுவதற்கான சட்டபூர்வ அடித்தளத்தை இரத்து செய்தது. தரவுகளை திரட்டுவதன் மீது ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டி நெறிமுறை, தனிநபர் தரவுகளின் அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பு மீதான அடிப்படை உரிமையை மீறுவதாக தீர்ப்பு வழங்கி, ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த ஆண்டு அதை நிராகரித்தது.

பேர்லினில் நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், பாரியளவில் தரவுகளைத் திரட்டும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாஸ் முன்வைத்தார். தொலைத்தொடர்புகளில் செய்யப்பட்டும் தரவு பரிவர்த்தனைகளை" தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பத்து வாரங்கள் வரையில் தக்க வைத்திருக்க வேண்டும் என்பதுடன், சட்ட அமலாக்க" ஆணையங்களது கோரிக்கையின் மீது அவற்றை வழங்கலாம் என்றும் அந்த வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட தொலைபேசியின் அழைப்பு எண்ணிக்கை, அழைப்பின் நேரம் மற்றும் கால அளவு; செல்பேசியைப் பொறுத்த வரையில், இடத்தைக் குறித்த தகவல், அதனுடன் சேர்ந்து ஒதுக்கப்படும் IP முகவரியின் தேதி மற்றும் கால அளவு உட்பட, IP முகவரிகள் ஆகியவை தக்க வைக்கப்படும்.

அதுபோன்று தரவுகளைத் திரட்டி வைத்தல் என்பது மக்கள் மீதான "ஒட்டுமொத்த கண்காணிப்பை நோக்கிய ஒரு படி" என்று Zeit Online குறிப்பிட்டது. ஒருவர் யாருடன், எங்கே, எப்போது பேசினார் அல்லது மின்னஞ்சல் செய்தார் அல்லது குறுந்தகவல்கள் அனுப்பினர் என்ற விபரம் சேமிக்கப்படுவதே தரவுகளைத் திரட்டுதல் (Data retention) என்பதாகும். ஒருவர் சந்தேகத்திற்குரியவராக இருந்தாலும் சரி அல்லது இல்லையென்றாலும் சரி, அவர் யாரோடு எத்தனை முறை பேசினார் என்பதை பல மாதங்கள் கழித்தும் கண்டுபிடிக்க முடியும், என்று அப்பத்திரிகை எழுதியது.

இது நீண்டகால விளைவுகளைக் கொண்டதாகும். சேமித்து வைக்கப்படும் தரவுகளைப் பயன்படுத்தி, யார் யாரோடு, எங்கே, எப்போது, எவ்வளவு நேரத்திற்கு தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் மற்றும் ஒவ்வொரு நபரும் எந்தெந்த வலைத் தளங்களை பார்வையிட்டார் என்பதையும் பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளால் பின்னோக்கி சென்று ஸ்தாபித்துக் காட்ட முடியும். இவ்விதத்தில் எந்தவொரு பிரஜையின் நகர்வைக் குறித்த ஒரு முழு விபரங்களையும் உருவாக்கவும் மற்றும் அவர்களது சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் கூடிய நிலையில் அரசு விளங்கும்.  

உள்நாட்டில் அரசின் அதிகாரங்களை முறையான ரீதியில் அதிகரிக்க முனைந்தவரும் மற்றும் தரவு திரட்டுவதை மறுஅறிமுகம் செய்வதற்கு ஆக்ரோஷமாக நீண்டகால அழுத்தம் அளித்தவருமான டு மஸியர், அந்த வழிகாட்டி நெறிமுறைகளை "சிறப்பானவை மற்றும் அறிவார்ந்த விட்டுகொடுப்பென்று" சித்தரித்தார். சமீபத்தில் வரையில் தரவு திரட்டுவதற்கு ஒரு விமர்சகராக காட்டிக் கொண்ட மாஸ் கூறுகையில், அது "எதிர்காலத்தில் தீவிர குற்றங்களைக் கண்டுபிடித்து தீர்ப்பதற்காக" மட்டுமேயாகும் என்றார். மக்களின் நகர்வுகளைக் குறித்த விபரங்கள் வெளியிடப்படாது என்பதுடன், அவர்களது "குடிமுறை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்" பாதுகாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

இது முற்றிலும் அபத்தமாகும். மேலும் மாஸின் வழிகாட்டி நெறிமுறைகள் வெறுமனே திரட்டுதலை நெறிப்படுத்துகிறது, ஆனால் தரவுகளை அணுகுவதை அல்ல. அது அரசியலமைப்பு பாதுகாப்பு சட்டம் போன்ற ஏனைய சட்டங்களால் நெறிப்படுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டி நெறிமுறைகள், தெளிவாக, ஒவ்வொரு மத்திய அரசும் அவற்றின் சொந்த அணுகுவதற்கான விதிமுறைகளை வரையறுக்க அனுமதிக்கின்றன.

வல்லுனர்களின் கருத்துப்படி, திரட்டி வைத்திருக்கும் காலத்தைக் குறைத்திருப்பதை தவிர, சட்டவிரோதமாக தரவு திரட்டுவதன் மீதான கவலைகள் குறித்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சட்டம் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களுக்கு எதிராக போராடுவது குறித்ததல்ல, மாறாக மக்களை "ஒட்டுமொத்தமாக கண்காணிப்பதற்காக" உள்ளது.

ஒளிபரப்பு நிறுவனம் Deutschland Funk உடனான ஒரு நேர்காணலில், மத்திய தரவு பாதுகாப்புக்கான முன்னாள் கமிஷனர் பீட்டர் ஸ்ஹார் கூறுகையில், அந்த புதிய சட்டம் "பொதுவான சந்தேகத்தின்" பேரில் குற்றச்சாட்டை அதிகரிப்பதாக தெரிவித்தார். முன்னதைப் போலவே, அது "பரந்த மட்டத்தில்" அக்கறை கொள்கிறது, "சம்பவங்களால்-உந்தப்பட்டு திரட்டுவதற்காக இல்லை."

ஜேர்மனியில் பாரிய தரவு திரட்டுதலின் மறுஅறிமுகம் என்பது உள்நாட்டு அரசு அதிகாரங்களது ஒரு பாரியளவிலான அதிகரிப்பில் வெறும் ஒரு உட்கூறு மட்டுமே ஆகும். பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரங்களைப் பெரியளவில் விரிவாக்குகின்ற மற்றும் ஒரு மத்தியமயப்பட்ட பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்கான அடித்தளத்தை வழங்குகின்ற சட்டமசோதாவை அரசாங்கம் மார்ச் இறுதியில் நிறைவேற்றியது.

உள்துறை அமைச்சகத்தின் செய்தி வெளியீடு ஒன்று அந்த சட்டத்தின் "முக்கிய நோக்கங்களை" விளக்கியது. பல்வேறு உள்நாட்டு உளவுத்துறை அமைப்புகளுக்குள் "சிறந்த கூட்டு-ஒத்துழைப்பை" உறுதிப்படுத்த, (இரகசிய சேவை BfV என்று குறிப்பிடும்) அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான மத்திய அலுவலகத்தின் "மத்திய அலுவலக செயல்பாடு பலப்படுத்தப்படும். BfV, அரசு இரகசிய தேவை அமைப்புகளை" ஆதரிப்பதுடன், அவற்றின் கூட்டு-ஒத்துழைப்பை ஒழுங்கு செய்கிறது, மேலும் சில விடயங்களில், தேவையானால், அவற்றை கண்காணிப்பிலும் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.  

அதற்கும் கூடுதலாக, அது தகவல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதிலும்" மற்றும் "பகுப்பாய்வு திறன்களை அபிவிருத்தி செய்வதிலும்" அக்கறை கொள்கிறது. பொருத்தமான எல்லா தகவல்களும் உளவுத்துறை ஆணையங்களுக்கு இடையே பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும், அதற்காக "கூட்டு வலையமைப்பு முறையான NADIS (உளவுத்துறை தகவல் அமைப்புமுறை) பயன்படுத்தப்படும், என அந்த செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.

NADIS என்பது ஒரு அரசுத்துறை-சாராத தானியங்கி தரவு வலையமைப்பு முறையாகும், அதில் பல்வேறு இரகசிய சேவை அமைப்புகள் மத்திய அளவிலும் மாநில அளவிலும் தொடர்பு கொண்டுள்ளன. 2013 இல், விக்கிபீடியா தகவல்படி, அது சுமார் 1.6 மில்லியன் "இலக்குகள்" என்றழைக்கப்பட்டவர்களின் "தனிப்பட்ட விபரங்களைக்" கொண்டிருந்தது. உரிய தகவல்களை NADIS இல்" இணைப்பதன் மூலமாக, மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளும் மற்றும் கட்டமைப்புகளும் கூடுதலாக காணக்கிடைக்கும் [கிடைக்க வேண்டும்] என்பதுடன், தகவல்கள் ஒரேயிடத்தில் தேங்கி கிடப்பது" தவிர்க்கப்படும்.

அந்த சட்டமசோதா குறிப்பிட்டதைப் போல: ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த இரகசிய சேவை பணியின் மத்திய அமைப்பானது, தகவல் அடித்தளத்தின் மற்றும் அவற்றிற்கு ஒவ்வாத வேலையிட கருவிகளின் முறிவால் இணைக்கப்பட்டிருக்க கூடாது. வன்முறை-அல்லாத-நிலைநோக்கை கொண்ட கண்காணிப்பு பகுதியிலும்" கூட சம்பவங்கள் மற்றும் மக்களைக் குறித்த இப்போதிருக்கும் அறிவுத்தகவலின் ஒரு பரந்த கட்டமைப்புரீதியான சேமிப்பு, பகுப்பாய்வு செய்யும் வலையமைப்பு தகைமையில் தகவல்களை ஒருங்கிணைக்கும் அடித்தளத்தை உருவாக்குகிறது [உருவாக்க வேண்டும்]. மாநிலங்களுக்கு இடையிலான இணைப்புகளில் குருட்டு புள்ளிகள்" (Blind spots) வலையமைப்பு தீர்வுகளுடன்" கடந்து செல்லப்படும்.

பல்வேறு உளவுத்துறை அமைப்புகளும் சிறப்பாக இணைக்கப்படும். சான்றாக, BfV ஆல் சேமிக்கப்பட்ட கோப்புகளை தானியங்கி முறையில் மீட்டெடுப்பது" இராணுவ எதிர்உளவுத்துறை சேவைக்கு (MAD) சாத்தியமாக்கப்படும். அதேநேரத்தில் MAD இல் இருந்து "மத்திய ஆதார கோப்புகளின்" தரவுகளை தானியங்கி முறையில் பெறுவது" இரகசிய சேவைகளுக்கு சாத்தியமாக்கும்.

இந்த சட்டபூர்வ வார்த்தையாடல்கள், மக்களின் மீது பரந்தரீதியில் உளவுபார்ப்பதையும் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தரவு பரிவர்த்தனைகளை அனுமதிப்பதையும் நோக்கம் கொண்ட, ஒரு மத்தியமயப்பட்ட பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரம் உருவாக்கப்படுவதை மறைக்க பயன்படுத்தப்படுகின்றன.

70க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு சட்டமசோதாவின் முழு மூலவாசகமும், அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடுகள் மீதான ஒரு தாக்குதலாக உள்ளது. அரசியலமைப்பிலேயே பொதிந்துள்ள, பொலிஸ் மற்றும் இரகசிய சேவைகளைப் பிரித்துவைக்கும் கோட்பாடு, கடந்தகாலத்தில் அதிகளவில் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, அகற்றப்படும்.

பெரிதும் மத்தியமயப்பட்ட மற்றும் முழு-சக்திவாய்ந்த அரசு ஒடுக்குமுறை எந்திரம் மீண்டும் அபிவிருத்தி ஆவதிலிருந்து தடுப்பதற்காக, நாஜி சர்வாதிகாரத்தின் அனுபவங்களுக்கு பின்னர், பொலிஸ் மற்றும் இரகசிய சேவைகளைப் பிரித்துவைப்பதென்று அரசியலமைப்பிற்குள் எழுதப்பட்டது. நாஜிக்களின் இரகசிய அரசு பொலிஸ் (கெஸ்டாபோ), மக்களை பீதியூட்டுவதற்காக, பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் அனைத்து அதிகாரங்களையும் படிப்படியாக ஒருங்கிணைத்தது.

அத்தகைய பாரம்பரியங்கள் ஜேர்மனியின் இன்றைய பாதுகாப்பு நிர்வாகங்களிலும் வாழ்கின்றன. சமீபத்திய மாதங்களில், "தேசிய சோசலிஸ்ட் அண்டர்கிரவுண்ட்" (NSU) எனும் வலதுசாரி தீவிரவாத குழுவில் உளவுத்துறை அமைப்புகள் மற்றும் பொலிஸின் நெருக்கமான சகவாசத்தை எடுத்துக்காட்டும் வகையில் மேலும் மேலும் கூடுதலான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. NSU இன் மிக நெருக்கமான வட்டாரத்தில் குறைந்தபட்ச 25 மறைமுக இரகசிய சேவை உளவாளிகள் செயல்பட்டு வந்ததாக இப்போது தெரியவந்துள்ளது, மேலும் துரின்கியா உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் Ku Klux Klan இன் Baden Württemberg கிளை போன்ற வலதுசாரி அமைப்புகள் இரகசிய சேவையால் நிதியுதவி வழங்கப்பட்டு கட்டமைக்கப்பட்டன.

சட்டமசோதாவின்படி, அத்தகைய சர்ச்சைக்குரிய மறைமுக உளவாளிகள் எதிர்காலத்தில் உத்தியோகபூர்வமாக இப்போது குற்றங்களைச் செய்து கொள்ளலாம். டு மஸியர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கையில், அவரது பார்வையில், நிழலுலக உளவாளிகளின் "கடுமையான துஷ்பிரயோகங்கள்", ஒரு "தாக்குதலை" தடுக்கின்றன என்றால், அவை நியாயமானவையே" ஆகும். மிக கடுமையான துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு, பரிசீலிக்கத்தக்க மிகவும் பலமான தகவல் தேவைப்படுகிறது, என்பதே அவரது கோட்பாடாக இருந்தது. இது, அரசு-அனுமதியோடு குற்றங்களை நடத்துவதற்கான ஓர் அழைப்பு என்பதை விட வேறொன்றுமில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னர், ஜேர்மன் மேற்தட்டுக்கள் உள்நாட்டு அரசியலில் இருந்த போருக்கு பிந்தைய காலத்தின் அனைத்து தடைகளையும் நீக்க வருகின்றன. அவை அவற்றின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கான மக்கள்விரோத கொள்கைகளுக்கும் அதிகரித்து வரும் எதிர்ப்பை, தேவையானால் படைகளைக் கொண்டும், ஒடுக்க தயாரிப்பு செய்து வருகின்றன.

மத்திய பொலிஸின் ஒரு கனரக ஆயுதமேந்திய துணைஇராணுவ "பயங்கரவாத-எதிர்ப்பு பிரிவை" ஸ்தாபிப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் திட்டம் இந்த உள்ளடக்கத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில், உள்துறை அமைச்சகத்தின் வரவு செலவு திட்டக்கணக்கு சாத்தியமான அளவிற்கு அடுத்த ஆண்டுக்கு முன்னரே 6.6 பில்லியன் யூரோவுக்கு, 6.7 சதவீத அளவிற்கு உயரும். நூறு மில்லியன் கணக்கான கூடுதல் யூரோக்கள், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளின் உளவுபார்ப்பு மற்றும் ஒடுக்குமுறை எந்திரத்தின் மேம்பாட்டிற்குள், நேரடியாக பாய்ச்சப்படும்.