சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Mass drownings in the Mediterranean: A crime of imperialism

மத்தியதரைக்கடலில் நீரில் மூழ்கி இறந்த பாரிய சம்பவம்: ஏகாதிபத்தியத்தின் ஒரு குற்றம்

Patrick Martin
20 April 2015

Use this version to printSend feedback

மத்தியதரைக்கடல் வழியாக ஐரோப்பாவை எட்டுவதற்கு வடக்கு ஆபிரிக்காவிலிருந்து தப்பிவந்த அகதிகள், மற்றொரு படுபயங்கர துயரத்தில் விழுந்தனர். ஞாயிறன்று காலை இத்தாலிய தீவான லாம்பெடுசாவிற்கு சுமார் 120 மைல்கள் தெற்கே ஒரு சிறிய படகு கவிழ்ந்து, ஏறத்தாழ 700 மக்கள் உயிரிழந்தனர். மீட்புப்பணியாளர்கள் இன்னமும் சடலங்களை மீட்க முனைந்துள்ளனர். நிஜமான இறப்பு எண்ணிக்கை அனேகமாக ஒருபோதும் தெரியாமலேயே கூட போகலாம்.

மத்தியதரைக்கடல் பகுதியில் 550 அகதிகளை ஏற்றிவந்த ஒரு படகு மூழ்கிய ஒருசில நாட்களை அடுத்து, இந்த பேரழிவு நடந்துள்ளது. அந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் 400 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

ஐரோப்பாவிற்கு புலம்பெயரும் முயற்சியில் இறந்துவரும் மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,500க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாகும். சுமார் 20,000 அகதிகள் இத்தாலியை எட்டியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது சிறைச்சாலைக்கு ஒத்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி இறந்த இந்த சமீபத்திய பாரிய சம்பவம் வெறுமனே துன்பகரமானது மட்டுமல்ல, அதுவொரு குற்றமும் ஆகும். ஐரோப்பாவின் பிரதான ஏகாதிபத்திய சக்திகளும் மற்றும் அமெரிக்காவும் அவற்றின் கரங்களில் இரத்தத்தைக் கொண்டுள்ளன.

கடல்கடந்து ஐரோப்பாவிற்கு செல்ல ஏதேனும் வாகனம் கிடைக்குமான என்று நம்பிக்கையின்றி பாதையைப் பார்த்து கொண்டிருக்கும் அரை-மில்லியன் மக்கள் தற்போது லிபிய கடல்களை ஒட்டி முகாமிட்டிருக்கலாமென, அகதிகளுக்கான ஐநா உயர் கமிஷனரின் அலுவலகமும் மற்றும் ஏனைய உதவி அமைப்புகளும் மதிப்பிடுகின்றன. அவர்கள் அப்பிராந்திய அகதிகளில் ஒரு சிறு எண்ணிக்கையை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்: கடாபி ஆட்சியை அழித்த 2011 அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் அதற்கடுத்து நடந்த உள்நாட்டு போர் ஆகியவற்றால் லிபியாவிலிருந்து மட்டும் இரண்டு மில்லியன் மக்கள் இடம் பெயர்த்தப்பட்டனர். சிரியாவில் அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்ட மற்றொரு உள்நாட்டு போர், கூடுதலாக ஒரு மில்லியன் அகதிகளை உருவாக்கி உள்ளது. பஞ்சம், உள்நாட்டு போர் அல்லது அமெரிக்க டிரோன் ஏவுகணை தாக்குதல்களால் நாசமாக்கப்பட்ட எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க முனைபிரதேசங்களில் இருந்தும் பல ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதனுடன் சேர்ந்து, பொருளாதார நெருக்கடி, வறட்சி, நோய் மற்றும் பிரான்ஸ் வகித்த ஒரு முன்னணி பாத்திரத்துடன் ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடல்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பாதிப்புகளின் கீழ், மேற்கு ஆபிரிக்க நாடுகளின் உடைவிலிருந்து தப்பித்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மக்களும் உள்ளனர். இவற்றில் மொரிட்டானியா, மாலி, நைஜர், சாட், அப்பர் வோல்டா, ஐவரி கோஸ்ட், காமரூன் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உள்ளடங்கும்.

கடந்த கோடையில் நூறு ஆயிரக் கணக்கானவர்களின் வீடுகளை அழித்த, இஸ்ரேலின் காசா பகுதி மீதான தாக்குதல், மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த 1.5 மில்லியன் மக்களையும் நடைமுறையில் சிறையிடும் விதத்தில், காசா மீது இஸ்ரேல் மற்றும் எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்தால் கூட்டாக அமல்படுத்தப்பட்டு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார தடை ஆகியவற்றின் மூலமாக, வெள்ளமென அகதிகள் வருவதற்கு இஸ்ரேலும் அதன் பங்களிப்பை வழங்கி உள்ளது.

அக்கண்டத்திற்குள் புலம்பெயர்வோர் வருவதைத் தடுக்கும் அதன் முயற்சிகளில் ஒருமுகப்பட்டுள்ள ஐரோப்பிய ஆளும் வர்க்கம், அக்கண்டத்தை ஒரு "ஐரோப்பிய அரணாக" (fortress Europe) கட்டமைப்பதன் மூலமாக, இந்த மனிதாபிமான பேரழிவுக்கு விடையிறுப்பு காட்டுகிறது. அகதிகள் இவ்வாறு நீரில் மூழ்கி இறந்துபோவதை, ஐரோப்பிய ஒன்றியம், எதிர்காலத்தில் மேற்கொண்டும் மக்கள் கடந்து வருவதை அச்சமூட்டி தடுப்பதற்கு ஒரு வழியாக பார்க்கிறது.

எவ்வாறிருந்த போதினும், பிரதான பொறுப்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் மீது தங்கியுள்ளது, அவற்றின் முடிவில்லா இராணுவ தாக்குதல்கள், டிரோன் ஏவுகணை படுகொலைகள், பொருளாதார தடையாணைகள் மற்றும் சிஐஏ ஆட்சி-மாற்ற நடவடிக்கைகள் என இவை, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் சமாந்தரமில்லாத ஒரு மனிதாபிமான பேரழிவை உருவாக்கி உள்ளன.

குறிப்பாக வாஷிங்டனின் இரண்டு முடிவுகள் ஆய்வுக்கு தகுதி பெறுகின்றன: ஒன்று மார்ச் 2011 இல் லிபியாவிற்கு எதிராக அமெரிக்க-நேட்டோ போரைத் தொடங்கியது, அடுத்தது அதே மாதத்தின் தொடக்கத்திலிருந்து இந்நாள் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் சிரியாவில் தலையீடு. இந்த ஒவ்வொரு விடயத்திலும், ஒபாமா நிர்வாகம் மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக என்ற பேச்சுக்களுக்குப் பின்னால் அதன் சூறையாடும் நோக்கங்களை மூடிமறைக்க முனைந்தது. பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அமெரிக்க ஊடகங்களும் தேவையான பிரச்சாரத்தை வழங்கின, Nation இதழ் போன்ற தாராளவாத குரல்களும் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற போலி-இடது குழுக்களும் அவற்றை மெச்சின.

லிபியா விடயத்தில், ஒபாமா நிர்வாகம், அங்கே பெங்காசியில் ஒரு மனிதயின பேரிடர் எக்கணமும் நிகழவிருந்ததாக வாதிட்டது, ஆனால் அங்கே லிபிய அரசாங்க துருப்புகளோ ஓர் அமெரிக்க-ஆதரவு "கிளர்ச்சி படையை" நசுக்க தயார்நிலையில் இருந்தன. அந்த கிளர்ச்சி படை தான், பின்னர் கடாபி-எதிர்ப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டு, அல் கொய்தா உடன் தொடர்புபட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குமுகப்பாக எழுச்சி கண்டது மற்றும் அதற்கடுத்து சிரியாவின் உள்நாட்டு போரிலும் அது ஒன்றுதிரட்டப்பட்டது.

ஏகாதிபத்திய ஆலோசகர்களால் வழிநடத்தப்பட்ட பினாமி தரைப்படைகளுக்கு வழங்கிய உதவிகளுடன் சேர்ந்து, அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சின் ஆறு மாதங்கள், கடாபியை பதவியிலிருந்து தூக்கியெறியவும் மற்றும் சிர்ட்டே இன் வீதிகளில் "கிளர்ச்சி படை" போராளிகளால் அவர் படுகொலை செய்யப்படுவதற்கும் இட்டுச் சென்றது. அப்போது வெளியுறவுத்துறை செயலராக இருந்தவரும், இப்போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னனியில் உள்ளவருமான ஹிலாரி கிளிண்டன், அதனை அடுத்து கருத்து கூறுகையில், “நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்,” என்று கூறி, அவரது கூறிய ஏளன நகைச்சுவைக்கு அவரே சிரித்து கொண்டார்.

கட்டுப்பாட்டைப் பெற எதிர்விரோத போராளிகள் குழுக்களிடையே நடந்துவரும் சண்டை, பல்வேறு அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள் மற்றும் தலைநகரங்கள் உண்டாகி இருப்பது, மற்றும் அந்நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அவர்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தமை ஆகியவற்றுடன் அப்போதிருந்து லிபியா குழப்பத்திற்குள் விழுந்துள்ளது. உலக சந்தைகளுக்கு எண்ணெய் வழங்க அவசியமான துறைமுகங்களும், அந்நாட்டின் பரந்த எண்ணெய் வளங்களும், அத்துடன் ஏற்றுமதி-செயல்முறை ஆலைகளும் பிரதான பரிசுகளாக உள்ளன. அந்நாட்டை முன்னர் ஆட்சி செய்த இத்தாலி, அகதிகளின் படகுகளுக்கு எதிராக ஒரு கடற்படை வளையத்தையும் மற்றும் "ஒழுங்கை மீட்டமைக்க" தரைப்படை துருப்புகளையும் அனுப்ப பரிசீலித்து வருகின்ற நிலையில், அடுத்த அத்தியாயம் முற்றுமுதலாக காலனித்துவத்திற்கு திரும்புவதாக இருக்கும்.

பெரும் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட மற்றும் பொருளாதாரரீதியில் அபிவிருத்தி அடைந்த நாடான சிரியாவில், அமெரிக்க தலையீடு பெரிதும் மறைமுகமாக இருந்தபோதினும், அங்கேயும் பேரழிவுக்கு குறைவில்லை. ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டினதின் பிரதான அரபு கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை தூக்கியெறிய முனைந்திருந்த, வழிவழியாக வந்த கிளர்ச்சி குழுக்களுக்கு சிஐஏ மற்றும் அமெரிக்க கூட்டாளிகள் நிதியுதவி அளித்து, ஆயுதமேந்த செய்து மற்றும் பயிற்சி அளித்துள்ளன.

அந்நாட்டின் நகரங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, அதுவும் குறிப்பாக மிகப்பெரிய நகரமும் வர்த்தக மையமும் ஆன அலெப்போ நகரம். அசாத் ஆட்சி அந்நாட்டின் பாதி பகுதியின் மீது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 26 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் அவர்களது வீடுகளிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதுடன், பல மில்லியன் கணக்கானவர்கள் அண்டைநாடான லெபனான், துருக்கி மற்றும் ஜோர்டானுக்கு தப்பியோடி உள்ளனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஐரோப்பாவிற்கு நுழைய முனைந்துள்ளனர், இதில் மத்தியதரைக்கடலைக் கடந்து செல்லும் அகதிகளும் உள்ளடங்குகின்றனர்.

மில்லியன் கணக்கான அகதிகள், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசின் மேலெழுச்சி கொண்ட ஈராக்கிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர், அதுவே கூட அமெரிக்காவின் முந்தைய படையெடுப்பு மற்றும் ஈராக்கிய ஆக்கிரமிப்பு மற்றும் சிரியாவில் சிஐஏ நடவடிக்கைகள் என இவற்றின் தயாரிப்பாக உள்ளது. அமெரிக்க ஆயுந்தாங்கிய தரைப்படைகளைக் கொண்டு ஒரு படையெடுப்புக்கு சாத்தியமானரீதியில் தயாரிப்பு செய்து கொண்டே, அமெரிக்க போர் விமானங்கள், குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு சவூதி அரேபியாவும் மற்றும் ஏனைய அமெரிக்க வாடிக்கை அரசுகளும் குண்டுவீசி வருகின்ற ஏமனில்நேரடியான ஏகாதிபத்திய வன்முறையின் சமீபத்திய வெடிப்பால் மேலும் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர்.

1990-91 இன் முதல் பாரசீக வளைகுடா போருக்குப் பின்னரில் இருந்து ஒரு கால் நூற்றாண்டாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் எண்ணெய் வளம்மிக்க பிராந்தியங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான அதன் முயற்சியில் அண்மித்தளவிற்கு தொடர் போர்முறைகளில் ஈடுப்பட்டுள்ளது. இத்தகைய போர்கள் ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்துள்ளதுடன், அப்பிராந்தியம் முழுவதும் கூற முடியாதளவிற்கு மனிதயின அவலங்களை உருவாக்கி உள்ளன.

அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் மற்றும் காங்கிரஸ், நீதிமன்றங்கள் மற்றும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடங்கள் உட்பட உத்தியோகபூர்வ அமைப்புகள் அனைத்தும், இந்த வரலாற்று குற்றத்தில் உடந்தையாகும்.

அரசியல் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு பிரிவும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கின்றன. உலகெங்கிலும் அத்தகைய நலன்களைத் தூக்கிப்பிடிக்க, ஒவ்வொரு ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி அரசியல்வாதியும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் உதவியை நாடுகிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதையும் மற்றும் அதன் புரட்சிகர அணிதிரட்டலையும் கோருகிறது.

இந்த இயக்கத்தை முன்னெடுக்க, ஓர் அரசியல் தலைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த காரணத்திற்காக தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு 2015 சர்வதேச இணையவழி மே தின கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளது.