சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza dispatches police to clear protesters from Athens university

ஏதென்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற சிரிசா பொலிஸை அனுப்புகிறது

By Christoph Dreier
18 April 2015

Use this version to printSend feedback

ஏதென்ஸ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் நிர்வாக கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களை வெளியேற்ற, வெள்ளியன்று காலை, கிரேக்க உள்துறை அமைச்சகம் பொலிஸ் படைகளை அனுப்பியது. இந்த நடவடிக்கையைக் கொண்டு, சிரிசா தலைமையிலான அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறையை பிரயோகிக்க அது தயாராக இருப்பதை சமிக்ஞை காட்டியது.

காலை சுமார் 6 மணி அளவில், அந்த கட்டிடத்தின் பிரதான வாயிலை பொலிஸ் உடைக்க முயன்றது. அது முடியாமல் போனதும், ஓர் ஏணியில் ஏறி, இரண்டாம் தளத்தின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த அவர்கள், 14 போராட்டக்காரர்களைக் கைது செய்தனர், அவர்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை. ஏனையவர்கள் பொலிஸ் நடவடிக்கையை எதிர்க்க கட்டிடத்தின் முன்னால் ஒன்று கூடினர்.

ஓர் அராஜகவாத குழுவின் (anarchist group) உறுப்பினர்களான இந்த போராட்டக்காரர்கள், அவர்களது கைது செய்யப்பட்டுள்ள தோழர்களால் நடத்தப்பட்டு வருகிற உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாகவும், மற்றும் அரசாங்கம் காவல்துறையின் அதிகபட்ச சிறைக்கூடங்களை அகற்றுமாறு மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்களை நீக்குமாறு கோரியும், 19 நாட்களாக அந்த கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

கடந்த பல நாட்கள், பொலிஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அந்த ஆக்கிரமிப்பின் விளிம்போரங்களில் மோதல்கள் நடந்துள்ளன, இருப்பினும் ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால் நடத்தப்பட்டு வந்த அந்த நடவடிக்கை, வெறுமனே ஒரு அடையாளத்துக்குரியதாக இருந்தது. 2008க்கு பின்னர், அந்நாடு எங்கிலும் பல்கலைகழகங்களில் மிகப் பெரிய மற்றும் பெரிதும் நீடித்த ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன, அவற்றில் எதுவுமே ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கவோ அல்லது கலைக்கவோ பொலிஸை ஒன்றுதிரட்டும் அளவிற்கு போய் முடியவில்லை.

சிரிசாவின் ஒடுக்குமுறை பெரும் அரசியல் முக்கியத்துவம் கொண்டுள்ளது. கிரேக்க பல்கலைகழகங்களில் பொலிஸ் நடவடிக்கைகள் ஒரு தீர்க்கமான வரலாறைக் கொண்டவையாகும். 1973 இல், தளபதிகளது இராணுவ ஆட்சியின் இறுதி ஆண்டில், அந்த இராணுவ தலைவர்கள் ஏதென்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் இரத்தந்தோய்ந்த படுகொலையை நடத்தினார்கள்.

அந்நாடு எங்கிலுமான மாணவர்களும் தொழிலாளர்களும் அந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட ஒன்றுதிரண்டனர். அந்த ஆட்சிக்குழுவிற்கு விசுவாசமான சிப்பாய்கள் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தை நவம்பர் 17 அன்று முற்றுகை இட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை கண்மூடித்தனமாக தாக்கினர், அதில் இரண்டு டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

1974 இல் இராணுவ சர்வாதிகாரம் வீழ்ந்ததற்குப் பின்னர், பொலிஸ் மற்றும் சிப்பாய்கள் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் நுழைவதற்குச் சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டது. 2011 இல், சமூக ஜனநாயக PASOK தலைமையிலான அரசாங்கம் அச்சட்டத்தை நீக்கும் வரையில் அது நீடித்திருந்தது. அந்நாடு எங்கிலும் உடைத்துக் கொண்ட அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு விடையிறுப்பாகவே அச்சட்டம் நீக்கப்பட்டது.

அந்த நேரத்தில், சிரிசா உரக்க அச்சட்டம் நீக்கப்படுவதற்கு எதிராக போராடியது. ஆனால் அது பதவிக்கு வந்து மூன்று மாதங்களுக்கும் குறைந்த காலத்திற்குப் பின்னர், வாழ்க்கை தரங்களைத் தொடர்ச்சியாக அழிப்பதற்கு எதிரான சமூக எதிர்ப்பை ஒடுக்க, அது பொலிஸ் வன்முறையைப் பிரயோகிக்க தயங்க போவதில்லை என்ற சேதியை மேற்கத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களுக்கும் மற்றும் கிரேக்க மக்களுக்கும் வழங்குவதற்காக, விரல்விட்டு எண்ணக்கூடிய இந்த அராஜகவாதிகளின் ஒரு போராட்டத்தைப் பயன்படுத்துகிறது.

பொலிஸை அனுப்பும் முடிவு உயர்மட்ட அளவில் எடுக்கப்பட்டதாகும். குடிமக்கள் பாதுகாப்புக்கான இணை மந்திரி யென்னிஸ் பனௌசிஸ் வியாழனன்று கூறுகையில், சிரிசாவின் தலைவரும் பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸ் போராட்டக்காரர்களை வெளியேற்ற பொலிஸை அனுப்புவதற்கு அவருக்கு ஓர் அனுமதி சமிக்ஞை வழங்கிவிட்டதாக தெரிவித்தார்.

பனௌசிஸ் கடந்த வாரம், போராட்டக்காரர்கள் மீது ஓர் ஒடுக்குமுறையைக் கோரியிருந்தார். அவரது அரசாங்கம் "சட்டம் ஒழுங்கை" உறுதிப்படுத்துமென அறிவித்து சிப்ராஸூம் அதை ஆதரித்தார்.

ஏற்கனவே பெப்ரவரி 20 அன்று, சிரிசா தலைமையிலான அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்ததுடன், மேற்கொண்டும் சமூக செலவின வெட்டுக்கள், தொழிலாள வர்க்க விரோத தொழிற் சந்தை "சீர்திருத்தங்கள்", மற்றும் தனியார்மயமாக்கல்களை விரிவுபடுத்துவதற்கான முறையீடுகளை உள்ளடக்கி உள்ள, கடன்களைத் தொடர்ந்து திரும்ப செலுத்தும் முக்கூட்டால்" (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால்) கட்டளையிடப்பட்ட ஒரு திட்டத்தை அது ஏற்றுக் கொண்டது.

கடுமையான கூடுதல் வெட்டுக்களுக்கு உடனடியாக ஒப்புக்கொள்ள செய்ய ஏதென்ஸ் மீது, முக்கூட்டு அமைப்புகள் வியாழனன்று அழுத்தத்தை அதிகரித்தன. சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டீன் லகார்ட் மற்றும் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் இடையிலான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து வாஷிங்டனில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், லகார்ட் கூறுகையில், சர்வதேச நாணய நிதிய கடன்கள் மீது வட்டிகளைச் செலுத்துவதற்கு கிரீஸிற்கு ஒரு நீடிப்புகாலம் வழங்கப்படாது என்பதை தெளிவுபடுத்தினார்.

ஒரு முன்னேறிய பொருளாதாரம் பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கு எங்களிடம் ஒருபோதும் கால அவகாசம் கோரியதில்லை, என்று தெரிவித்த அவர், கிரீஸ் சர்வதேச நாணய நிதியத்திற்கு மே மற்றும் ஜூனுக்குள் 2 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டும் அல்லது திவால்நிலைமையை முகங்கொடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே செய்யப்பட்ட முன்னேற்றத்தில் இந்த முறை நாங்கள் திருப்தி ஆகவில்லை. அந்த வேலை தீவிரப்படுத்தப்பட வேண்டும், என்று ஐரோப்பிய கமிஷனுக்கான ஒரு செய்தி தொடர்பாளர் கிரேக்க அரசாங்கத்தை எச்சரித்தார்.

ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் செய்பிள இன்னும் அதிகமாக வெளிப்படையாக இருந்தார். முறையான பரிசீலனை இல்லாமல் எந்தவொரு நிதி உதவியும் வழங்குவதற்கு ஐரோப்பாவில், எங்களிடம் எந்த காரணமும் இல்லை, என்று வாஷிங்டனில் புரூகிங்ஸ் பயிலகத்தின் ஒரு கூட்டத்தில் அவர் தெரிவித்தார். அங்கே தொடர்ந்து நடந்த விவாதத்தில், அவர் வலியுறுத்துகையில், யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறினாலும் கூட உலகளாவிய பொருளாதாரத்திற்கு எந்த அபாயமும் இல்லை. ஆகவே முடிவு கிரீஸின் மீதே தங்கியுள்ளது, என்றார்.

இவ்வாரயிறுதியில் ரிகாவில் நடைபெற உள்ள யூரோ குழும நிதி மந்திரிகளின் ஒரு கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட உள்ள வெட்டுக்களின் ஒரு பட்டியலை, ஏதென்ஸ் திங்களன்று சமர்பிக்க உள்ளது.

கிரேக்க அரசாங்கம் சமரசத்திற்கும் மற்றும் வெட்டுக்களைத் திணிப்பதற்கும் அதன் விருப்பத்தை மீள வலியுறுத்துவதன் மூலமாக அச்சுறுத்தல்களுக்கு விடையிறுத்து வருகிறது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சிப்ராஸ் அளித்த ஓர் அறிக்கையில், ரிகா கூட்டத்திற்கு முன்னரே முக்கூட்டு அமைப்புகளுடன் ஓர் உடன்பாடு எட்டப்படுமென்பதில் அவர் நம்பிக்கையோடு இருப்பதாக தெரிவித்தார்.

கிரேக்க அரசாங்கத்திற்கு ஆதரவை வேண்டி நிற்க மற்றும் நிதி மூலதனத்திற்கு அதன் சேவையை மீளவலியுறுத்த வாரௌஃபாகிஸ் அவரது வாஷிங்டன் பயணத்தைப் பயன்படுத்தினார். புரூகிங்ஸ் பயிலக நிகழ்விலும் அவர் உரையாற்றினார், ஆனால் சொய்பிள இன் அச்சுறுத்தல்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

அதற்கு பதிலாக, மேற்கொண்டு வெட்டுக்களைத் திணிக்கும் அவரது அரசாங்கத்தின் உள்நோக்கத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எங்களது பங்காளிகள் விரும்புவதற்கும் மற்றும் கிரேக்க அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாக நான் கருதவில்லை, என்றவர் தெரிவித்தார்.

குறிப்பாக, அரசு தொழிலகங்களின் தொடர்ச்சியான தனியார்மயமாக்கல்களுக்கு அவர் உடன்பட்டார். சமீபத்திய ஆண்டுகளின் தனியார்மயமாக்கல்கள் ஒரு பேரழிவாக இருந்துள்ளன, என்று அறிவித்த வாரௌஃபாகிஸ், சிரிசா அதை மாற்றுமென வாக்குறுதி அளித்தார்.

நாங்கள் தனியார்மயமாக்கல்களுக்கு எதிரானவர்கள் கிடையாது, நாங்கள் விற்று-தள்ளலுக்கு எதிரானவர்களும் கிடையாது, என்று அவர் தெரிவித்ததுடன், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குறிப்பிட்ட தரமுறைகளுக்கு அழைப்புவிடுத்தார்.

கடன்வழங்குனர்களுடன் ஒரு விரைவான உடன்பாடு எட்டுவதில் கிரீஸ் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது என்று தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், நாங்கள் சமரசத்திற்கு முற்றிலும் தயாராக உள்ளோம், என்றார்.

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

அரசு ஒடுக்குமுறைக்கான தேவை குறித்து சிரிசா விவாதிக்கிறது