சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Call for new international economic order at Asia-Africa summit

ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாட்டில் புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கிற்கு அழைப்புவிடுக்கப்படுகிறது

By Nick Beams
23 April 2015

Use this version to printSend feedback

அமெரிக்காவின் பொருளாதார செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கு மற்றொரு சான்று, நேற்று இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவின் ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் (ACC) எடுத்துக்காட்டப்பட்டது.

பாண்டுங் இல் அணி-சேரா நாடுகளின் குழு ஸ்தாபிக்கப்பட்டு 60ஆம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ACCஇன் தொடக்க அமர்வில் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ உரையாற்றுகையில், மூன்று பிரதான சர்வதேச கடன்வழங்கும் அமைப்புகளைச் சாராத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார ஒழுங்கிற்கு அழைப்புவிடுத்தார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மூலமாக உலகின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற கருத்து வழக்கற்று போய்விட்டது, அதை கைவிட வேண்டும், என்று அவர் 92 நாடுகளின் பிரதிநிதிகள் கூடியிருந்த அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் பெயரிட்டு குறிப்பிடவில்லை என்றபோதினும், விடோடொவின் கருத்துக்கள் சீன-ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இன் ஸ்தாபத்தைக் குறித்திருந்தன. அது இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமெரிக்காவினால் ஸ்தாபிக்கப்பட்ட முக்கிய அமைப்புகளை மற்றும் ஜப்பான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ADB ஐ பலவீனப்படுத்துவதாக கருதுவதால், அமெரிக்காவினால் அந்த அமைப்பு எதிர்க்கப்படுகிறது. AIIB இன் ஸ்தாபக உறுப்பினர்களாக கையெழுத்திட்டுள்ள 57 நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாகும்.

உலகளாவிய பொருளாதாரத்தின் தலைவிதி இந்த மூன்று நிதியியல் அமைப்புகளிடம் மட்டுமே விட்டுவிடக்கூடாது என்பது எனது கருத்தாகும். புதிய எழுச்சிபெற்றுவரும் பொருளாதார சக்திகளுக்கு திறந்திருக்கும் ஒரு புதிய பொருளாதார ஒழுங்கை நாம் கட்டமைக்க வேண்டும் என்பது தவிர்க்கவியலாத கட்டாயமாகிறது, என்று அவர் தொடர்ந்து கூறினார்.

தெளிவாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவற்றின் மேற்கத்திய கூட்டாளிகளைக் குறிப்பிடும் விதத்தில், சில குறிப்பிட்ட நாடுகளின் குழுக்களது மேலாதிக்கத்தைத் தவிர்க்க" உலகளாவிய பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டி உள்ளது என்றார்.

குறிப்பாக பாலஸ்தீன பிரச்சினையைக் குறிப்பிட்டும் மற்றும் ஒரு சுதந்திரமான பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தும், உலகளாவிய சமநிலையின்மைகள் மற்றும் அநீதிகளை கையாள ஐக்கிய நாடுகள் சபை திறனற்று உள்ள நிலையில், ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் அதன் சீர்திருத்தத்திற்கு அழுத்தமளிக்க வேண்டுமென கூறி, விடோடொ ஐக்கிய நாடுகள் சபையைக் குறி வைத்தார்.

அந்த மாநாடே ஏதோவிதத்தில் பொருத்தமற்றதாக, பனிப்போர் காலத்திய புவிசார் அரசியலுடன் தொங்கி கொண்டிருப்பதாக கருதப்பட்ட போதினும், அதில் பிரதிபலித்த பொருளாதார மாற்றங்கள் அவ்வாறு இருக்கவில்லை. 1955 இல், அணிசேரா நாடுகள் என்ற பதாகையின் கீழ் இந்தோனேஷியாவின் பாண்டுங்கில் ஒன்றுகூடிய 29 நாடுகள், உலகின் பொருளாதார உற்பத்தியில் சுமார் ஒரு கால் பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்தன. இன்றோ அவை உலக பொருளாதாரத்தில் சுமார் பாதியளவை உள்ளடக்கி உள்ளன. சீனா இப்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது மற்றும் இந்தியா பெரிதும் ஒரு பொருளாதார சக்தியாக மாறி வருகிறது.

தொடக்க நாள் அன்றைய ஏனைய பிரதான நிகழ்வுகளில் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே உரையாற்றினார். இராண்டாம் உலக போரில் ஜப்பானின் பாத்திரம் பற்றிய அவரது கருத்துக்கள், குறிப்பாக சீனா மற்றும் தென் கொரியாவினால், உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.

அபே அடுத்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்ற உள்ளார். ஆகஸ்டில் போர் நிறைவடைந்ததன் 70ஆம் நினைவாண்டைக் குறிக்கும் ஓர் உரைக்கு முன்நிகழ்வாக, அங்கேயும் இரண்டாம் உலக போர் மீதான அவரது கருத்துக்கள் கவனத்துடன் ஆராயப்படும்.

அந்த உச்சிமாநாட்டுக்கு அவரது உரையில், அபே, இரண்டாம் உலக போரில் ஜப்பானின் நடவடிக்கைகளுக்கு "ஆழ்ந்த பச்சாதாபத்தை" தெரிவித்தார் ஆனால் குறிப்படத்தக்கவகையில் முந்தைய தருணங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைத் திரும்ப கூறவில்லை.

இராஜதந்திர முறையில் ஜப்பானிய அரசியல் அனுதாபங்களின் அர்த்தம், தவறுகளை உத்தியோகபூர்வமாக பெரிதும் ஒப்புக்கொள்வதின் மூலமாக அளவிடப்படுவதில்லை மாறாக அதுபோன்ற கருத்துக்களின் விபரங்களில் இருந்து அளவிடப்படுகின்றன.

ஆகவே தான் 1995 இல் பிரதம மந்திரி முரயாமாவினால் (Murayama) அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் பிரதம மந்திரி கொய்சுமியால் கலப்பிடமின்றி சொல்லுக்குசொல் மீண்டும் கூறப்பட்ட வாசகங்களை அபே வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வாசகங்கள் "ஜப்பானிய காலனித்துவ ஆட்சி மற்றும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளின் மக்களுக்கு" ஜப்பானின் "இதயபூர்வ அனுதாபங்களை" வழங்கின.

ஜப்பானுக்குள், அபே அரசாங்கத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ள வலதுசாரி தேசியவாத அரசியல் சக்திகள், கொரியாவில் ஜப்பானிய இராணுவம் "ஆற்றுப்படுத்தும் பெண்களைப்" பயன்படுத்திய வரலாற்று பதிவுகளை துடைத்தெறியவும் மற்றும் சீனாவில் 1937 இல் நடந்த நான்ஜிங் படுகொலையை மறுப்பதற்குமே கூட, முனைந்துள்ளன.

அபேயின் கருத்துக்களை உத்தியோகபூர்வ சீன செய்தி நிறுவனம் Xinhua ஓர் அறிக்கையில் பிரசுரித்தது, அது "அவரது மந்திரிசபையில் பெரும்பான்மையினர் மற்றும் சட்டம் வகுப்போரின் ஒரு கூட்டம்" ஆகியோருடன் சேர்த்து, அவரை ஒரு "கடுமையான தேசியவாதி என்றும், செயலூக்கத்துடன் உள்ள திரித்தல்வாதி என்றும்" வர்ணித்ததுடன், அவருக்கு முன் பதவியிலிருந்தவர்களால் காட்டப்பட்ட பாதையைப் பின்தொடர்வதில் அவருக்கு எந்த விருப்பமும் இல்லை என்று குறிப்பிட்டது. முரயாமாவின் கருத்தை முழுமையாக அவர் தாங்கிப் பிடித்துள்ளதால், அதன் முக்கிய வாசகங்களை அவர் மீண்டும் கூற வேண்டியதில்லையென அபே தெரிவித்தார்.

போருக்குப் பிந்தைய காலத்தில் கடும் தேசியவாத பிரதம மந்திரியாக அபே கருதப்படுகின்ற பெய்ஜிங்கில், அத்தகைய வலியுறுத்தல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த மதிப்பீடு அவரது உச்சிமாநாட்டு கருத்துக்களால் மேற்கொண்டும் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது, அவை, குறிப்பாக சீனாவை இலக்கில் கொள்ளவில்லை என்றபோதினும், தெளிவாக அந்த திசையில் தான் இருந்தன.

படைகளைப் பிரயோகித்து பலசாலிகள், பலவீனர்களை முறுக்குவதை கண்டும் காணாமல் போவதை நாம் அனுமதிக்க முடியாது, அபே தெரிவித்தார். இறையாண்மை நாடுகள், அவை பெரியதோ சிறியதோ, அவற்றின் கண்ணியம் சட்டத்தின் ஆட்சியைக் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பாண்டுங்கில் நம் முன்னோர்கள் கண்ட அறிவாக இருந்தது.

இந்த கருத்துக்கள், தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடலில் சீனாவின் தன்முனைப்பு மற்றும் ஆக்ரோஷம் என்றழைக்கப்படுவதற்கு எதிரான அமெரிக்க-ஜப்பான் பிரச்சாரத்தின் வரிசையில் இருந்தன. ஜப்பானில் சென்காயு என்றும் சீனாவில் தியாவு என்றும் அறியப்படும் பாறைக் குன்றுகள் மீதான நீண்டகால பிரச்சினையில், ஜப்பான் 2012 இல் அத்தீவுக்கூட்டங்களை அவற்றின் முந்தைய சொந்தக்காரர்களிடமிருந்து உத்தியோகபூர்வமாக வாங்கிய போது, அப்போது ஜப்பானால் தான் அங்கே பதட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. கடல்எல்லை உரிமைகோரல்கள் மீது சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையிலான பிரச்சினைகள், ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" கீழ் அமெரிக்காவின் அதிகரித்த தலையீட்டால் தூண்டிவிடப்பட்டுள்ளது.

AIIBக்கு கிடைத்துள்ள பரந்த ஆதரவால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பொருளாதார செல்வாக்கு மீது தொடுக்கப்பட்ட அடிகளைக் குறைந்தபட்சம் மௌனமாக ஒப்புக்கொள்வதைப் போல, அபே கூறுகையில் "தரமான வளர்ச்சியை" உறுதிப்படுத்தும் மற்றும் வறுமையைப் போக்கும் ஒரு முயற்சியில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் சுமார் 350,000 நபர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஜப்பானிய ஒத்துழைப்புக்கு உறுதியளித்தார்.

ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் வளர்ச்சியை தோன்றி மறையும் ஒரு சம்பவமாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாற்றுவதே ஜப்பானின் தீர்மானமாகும்" என்று கூறிய அவர், ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் "இளைஞர்கள் மற்றும் இலட்சிவாதிகளுடன்" வேலை செய்ய மற்றும் "அவர்களது நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தோளில் சுமக்கும்" ஒரு தலைமுறையைப் பேணி வளர்க்க சூளுரைத்தார்.

எவ்வாறிருந்த போதினும், இந்த முனைவின் இதயதானத்தில் இருப்பது அவ்விதமான பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி அல்ல, மாறாக ஆசியா மற்றும் ஆபிரிக்கா இரண்டிலும் அதிகரித்துவரும் சீன பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை எதிர்க்க ஜப்பானின் கடும்முயற்சியே ஆகும்.