சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா :

Earthquake kills thousands in Nepal

நேபாள பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர்

By W.A. Sunil
27 April 2015

Use this version to printSend feedback

சனிக்கிழமை அன்று நேபாளின் உள்ளூர் நேரப்படி நண்பகலுக்கு சற்று முன்னதாக ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டதில் 3,200க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்; 6,500க்கு மேற்பட்டவர்கள் காயமுற்றனர். இடிபாடுகளில் இருந்து இன்னும் நிறைய உடல்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் அனேகமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரக்கூடும், அத்துடன் மீட்பு குழுவினர் தொலைதூர கிராமங்களை எட்டுவது தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. வீடற்ற ஆயிரக் கணக்கானவர்களும் மற்றும் பெரும்பாலான மக்களும் மேற்கொண்டும் அதிர்வுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே தங்கியுள்ளனர். அந்நாட்டின் 75 மாவட்டங்களில் முப்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரிக்டார் அளவுகளில் 7.8 ஆக பதிவுசெய்யப்பட்ட அந்த பூகம்பத்தின் அதிர்வுமையம் தலைநகர் காத்மாண்டுவிற்கு சுமார் 80 கிலோமீட்டர் மேற்கே அமைந்திருந்தது. சனிக்கிழமை அன்று மட்டும் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிந்தைய பன்னிரெண்டு அதிர்வுகளுடன் சேர்ந்து, நேற்று 6.7 ரிக்டார் அளவிலான மற்றொரு பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது.    

இந்திய தலைநகர் புது டெல்லி வரையில் உணரப்பட்ட அந்த பூகம்பம், வட இந்தியாவின் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களை மோசமாக தாக்கியது, அதில் 58 பேர் உயிரிழந்தனர். பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் மற்றும் வட-மேற்கு மாவட்டமான பாப்னாவில் (Pabna) இரண்டு பேர் உயிரிழந்தனர். அதிர்வலைகள் பாகிஸ்தானிலும் மற்றும் சீனாவின் அண்டை பிரதேசங்களிலும் கூட உணரப்பட்டன.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் காத்மாண்டு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளே மிக மோசமாக பாதிக்கப்பட்டன. கட்டிடங்களுக்கான முறையான தரமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்டிருந்த மிக மோசமான கட்டிடங்கள், அந்நகரின் பெரும்பகுதி அபாயத்தில் இருந்ததை அர்த்தப்படுத்தியது. பல பழைய கட்டிடங்கள் இடிபாடுகளாக மாறியுள்ளன. 1832 இல் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பின்னர் மீண்டும் கட்டப்பட்ட ஒன்பது அடுக்கு தாராஹாரா வரலாற்று கோபுரம் பொறிந்து போனது; அதில் 250 பேர் சிக்கி இறந்து போயிருக்கலாமென மதிப்பிடப்படுகிறது.

தலைநகரின் பெரும்பகுதிகள் போக்குவரத்து, மின்சாரம் அல்லது மின்சக்தியின்றி உள்ளன. ஐநா அறிக்கையின்படி, காத்மாண்டு பள்ளத்தாக்கில், மருத்துவமனைகள் நெரிசல் மிகுந்து, சவங்களை வைக்கும் அறைகளின் பற்றாக்குறையோடு, அவசரகால பண்டங்கள் இல்லாமலும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. காத்மாண்டுவில் உள்ள ஒரு பிரதான மருத்துவமனையான BIR மருத்துவமனை மக்களை வீதிகளில் கையாண்டு வருகிறது மக்களில் பெரும்பான்மையினர் பூகம்பத்திற்குப் பிந்தைய அதிர்வுகளைக் குறித்த அச்சத்தில் மற்றும் கட்டிடங்களில் உள்ள கட்டுமான சேதங்களைக் குறித்த அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே தங்கி உள்ளனர்.

Save the Children அமைப்பின் அதிகாரி கேரி ஷாயெ நியூ யோர்க் டைம்ஸிற்கு விவரிக்கையில், காத்மாண்டு "மிகவும் நெரிசலாக, மிக மிக நெரிசலாக அடைபட்டுள்ளது, என்றார். ஜூனில் பருவமழை தொடங்க உள்ளதுடன் சேர்ந்து, நிவாரணப்பணி பணியாளர்கள் "காலநேரம் பார்க்காமல் ஓடிக் கொண்டிருப்பதாக" எச்சரித்தார். நம்மிடம் பிளாஸ்டிக் தார்பாய்கள் மற்றும் தற்காலிக கூடாரங்கள் எல்லாம் இருந்தாலுமே கூட, அது போதுமானதாக இருக்குமா? என்றவர் வினவினார்.

தலைநகருக்கு வெளியேயுள்ள பல கிராமங்களை நடந்தோ அல்லது ஹெலிகாப்டர்கள் மூலமாகவோ மட்டுமே அணுக முடியும். World Vision அமைப்பின் நிவாரண பணியாளர் மட் டார்வாஸ் நியூ யோர்க் டைம்ஸிற்கு கூறுகையில், இதுபோன்ற கிராமங்கள் நிலச்சரிவால் வழக்கமாக பாதிக்கப்படுபவை தான், ஆனால் மொத்தமாக 200, 300, 1,000 கிராமங்கள் வரையில் முற்றிலுமாக பாறை சரிவுகளுக்குள் புதைவது வழக்கமானதல்ல, என்றார்.

பூகம்பத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு பனிச்சரிவின் போது, இமயமலை முகாம்களில் இருந்த குறைந்தபட்சம் 18 பேர் உயிரிழந்தனர், 61 பேர் காயமடைந்தனர்.

குறிப்பாக நேபாளம் உள்ளடங்கிய இமாலய பிரதேசம் பூகம்பங்களுக்குள் இழுக்கப்படுகின்றன. 2008 இல் தென்மேற்கு சீனாவின் சியாசென் பகுதியே கடைசியாக மிகப்பெரிய பூகம்பத்தால் தாக்கப்பட்டது, அதில் சுமார் 90,000 பேர் உயிரிழந்தனர். நேபாளம் 1934 இல் ஒரு பாரிய நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டது, அதில் 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மற்றுமொரு 7,000 பேர் உயிரிழந்தனர்.

ஒரு பூகம்பம் என்பது பெரும் இயற்கை சக்திகளின் விளைவு தான் என்றாலும், உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் எந்தளவிற்கு இருக்கின்றன என்பது தீர்க்கமான சமூக வேர்களைக் கொண்டுள்ளதுஅது, போதிய தயாரிப்பு மற்றும் திட்டமிடல் இல்லாமை, பூகம்பத்திற்கு தாங்கக்கூடிய அளவிற்கு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவற்றின் விளைபொருளாகும். மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன.

எப்போது, எங்கே மற்றும் எந்தளவிற்கு ஒரு பூகம்பம் தாக்கும் என்பதை துல்லியமாக கணிப்பது சிரமம் என்றாலும், மிக பொதுவான முன்கணிப்புகளைச் செய்ய முடியும். 2013 இல், Hindu நாளிதழிலில் பூகம்பவியல் நிபுணர் வினோத் குமார் கௌர் குறிப்பிடுகையில், இப்போது 8 ரிக்டார் அளவிலான பூகம்பத்தை உருவாக்க அங்கே போதிய திரண்ட ஆற்றல் உள்ளது என்பதை கணக்கீடுகள் காட்டுகின்றன, ஆனால் எப்போது என்று என்னால் கூற முடியாது, என்று எச்சரித்திருந்தார்.         

ஆனால் நேபாள அரசாங்கமோ வெகு வெகு குறைவாகவே தயாரிப்பு செய்திருந்தது. முடியாட்சி கலைக்கப்பட்டு நேபாள மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் ஒரு தசாப்த காலமாக அந்நாடு நீடித்த அரசியல் நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஆளும் மேற்தட்டின் போட்டி பிரிவுகளுக்கு இடையிலான கசப்பான இழுபறிகள் ஒரு புதிய அரசியலமைப்பை வரையும் முயற்சிகளை தடுத்துள்ளதுடன், பிரதான கட்சிகளில் ஒவ்வொன்றும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் கதியைக் குறித்து வெகு வெகு குறைவாகவே அக்கறை கொண்டுள்ளன.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி மினென்திர ரிஜால் இந்திய தொலைக்காட்சிக்கு தெரிவிக்கையில், அரசாங்கம் "ஒரு பாரிய மீட்பு மற்றும் மறுவாழ்வு செயல் திட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், நிறைய செய்ய வேண்டி உள்ளதாகவும்" தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும், அவசியமான கனரக உபகரணங்கள் மற்றும் விமானங்கள் இல்லாததால், மீட்பு நடவடிக்கைகள் மெதுவாக நடந்து வருவதுடன், இன்னும் நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தைத் தோற்றுவிக்கிறது.

நேபாளம் உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாகும். ஆக்ஸ்ஃபோம் நிர்வாக இயக்குனர் Winnie Biyanyima விவரிக்கையில், நேபாளின் 28 மில்லியன் மக்களில் பாதிப் பேர் மேம்பட்ட கழிவறை வசதியின்றி, வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் படுமோசமான வறுமையில் உள்ளனர், என்றார். இந்த மக்களின் அவலநிலைக்கு வெறுமனே நேபாள அரசாங்கம் மட்டுமே பொறுப்பல்ல, மாறாக ஒரு சொற்பமான உதவியை வழங்கியுள்ள பிரதான சக்திகளும் பொறுப்பாகின்றன, இதில் ஒரு பெரும் பூகம்பத்திற்கு தயார் செய்து வைத்திருக்க வேண்டியதும் உள்ளடங்கும்.

பிரிட்டனை மையமாக கொண்ட Economist குறிப்பிடுகையில், செயல்பாட்டில் வரக்கூடிய 92 அபாயப் பகுதிகளை உள்ளடக்கி இருந்ததாக கூறப்பட்ட நேபாளத்தில், பூகம்பம் மீது திட்டமிடுவதற்கு, பல சர்வதேச நிறுவனங்களுக்கும் மற்றும் ஏனைய உதவி வழங்குனர்களுக்கும் சாரத்தில் அங்கே தாராளமான நேரம் இருந்தது. வெளிநாட்டு வல்லுனர்களை நேபாளத்தில் குவித்து, துல்லியமாக இந்த வகையான பிரச்சினையில் ஒருமுகப்பட நியமித்திருக்கலாம், என்று சுட்டிக்காட்டியது. ஆனால் சில பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களைப் பலப்படுத்தியதற்கு அப்பாற்பட்டு, அங்கே மிக குறைவாகவே செய்யப்பட்டிருந்தது.

வல்லரசுகள் அனுதாப காட்சிகளைக் காட்டும் அதேவேளையில் இன்று வரையில் அவை நிவாரண உதவிக்கு வெகு சிறியளவே வழங்கி உள்ளன. இந்தியா 13 இராணுவ போக்குவரத்து விமானங்களை அனுப்பி உள்ளதுடன், 40 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பேரிடர் விடையிறுப்பு குழுவை அனுப்பியது, அதேவேளையில் சீனாவின் தேடல் மற்றும் மீட்பு குழுவும் ஏற்கனவே காத்மாண்டுவில் இறங்கி உள்ளது. பிரிட்டஷ் அரசாங்கம் நேபாளத்தில் செயல்பட்டுவரும் அறக்கட்டளைகளுக்கு 7.5 மில்லியன் டாலர் கிடைக்குமாறு செய்துள்ளது, மற்றும் நோர்வே 4 மில்லியன் டாலர் உறுதியளித்துள்ளது.

மறுகட்டுமானத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் நிதியியல் உதவிகள் ஒருபுறம் இருக்கட்டும், இத்தகைய வாக்குறுதிகள் அனைத்தும் உடனடியாக தேவைப்படும் உதவிகளை விடவும் மிக மிக குறைவாகும். இன்று வரையில் அமெரிக்கா, அதன் காத்மாண்டு தூதரகம் மூலமாக, வெகு சொற்பமாக 1 மில்லியன் டாலர் வழங்கி உள்ளதுடன் 62 நபர்கள் கொண்ட பேரிடர் விடையிறுப்பு குழுவை அனுப்பி உள்ளது.

பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதே இந்த உதவிவழங்கல்களின் பிரதான நோக்கமாகும். சீனா மற்றும் இந்தியா இரண்டையும் எல்லைகளாக கொண்டுள்ள நேபாளம், கடந்த தசாப்தத்தில், தீவிரமடைந்துவந்த புவிசார் அரசியல் மோதலின் குவிமையமாக இருந்துள்ளது. அது அமெரிக்க தலையீட்டால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக அது, நேபாளம் உட்பட தொடர்ச்சியான ஓர் இராணுவ கூட்டுபங்காண்மை மற்றும் உறவுகள் மூலமாக சீனாவைச் சுற்றி வளைக்க முனைந்து வருகிறது.

அந்த பூகம்பம் தாக்கிய போது ஏற்கனவே அமெரிக்க சிறப்பு படைகளின் இரண்டு குழுக்கள் அந்நாட்டில் ஒரு பயிற்சி ஒத்திகையில் இருந்தன என்பது தற்செயலானதல்ல. வரவிருக்கின்ற நாட்களில் ஐயத்திற்கிடமின்றி வாஷிங்டன் அதன் அனுதாப உதவிவழங்கல்களை அதிகரிக்கும், அவை அனைத்தும் கவனமாக நேபாளத்தை இன்னும் உறுதியாக அமெரிக்க செல்வாக்கெல்லைக்குள் கொண்டு வர கணக்கிடப்பட்டிருக்கும்.