சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கையின் காகித தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டம் வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்டது

By V. Sivagnanan
11 April 2015

Use this version to printSend feedback

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனையில் உள்ள தேசிய காகித தொழிற்சாலையின் தொழிலாளர்கள் தமது ஐந்து மாத சம்பள நிலுவையைக் கோரியும் இன்னும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து 17 நாட்களாக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம், அரசாங்க வாக்குறுதிகளை நம்பி தொழிற்சங்கத்தால் ஏப்பிரல் 2 அன்று கைவிடப்பட்டது. பல்வேறு படிநிலைகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் வீதி மறியலில் ஈடுபட்ட பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்த ஆண்டு மூன்று மாத சம்பளமும் 2014 மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களுக்கு உரிய ஊதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. முதல்நாள் மாலை கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளர், ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கடந்த ஆண்டின் சம்பள நிலுவையை ஏப்பிரல் மாத முடிவில் வழங்குவதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டது. இதன் பின்னரே தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

தொழிற்சாலையின் நிரந்திர தொழிலாளர் 142 பேருக்கு 4 மாத சம்பள நிலுவையாக 18 மில்லியன் ரூபாவும், தற்காலிக தொழிலாளர் 62 பேருக்கு 7 மாத நிலுவையாக 5 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டம் பலனளிக்காத நிலையில் ஆத்திரமடைந்த சில தொழிலாளர்கள் ஆலையின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் டயர்களை எரித்த அதேவேளை, சிலர் நிர்வாகப் பிரிவின் கதவுகளை பூட்டி முகாமைத்துவ பணிகளை ஸ்தம்பிக்கச் செய்தனர். இவ்வாறு பதட்ட நிலைமைகள் அதிகரித்தமையினால் விழிப்படைந்த நிர்வாகம், தொழிற்சங்கத்துடன் உடனடியாக இத்தகைய உடன்பாட்டுக்குச் சென்றுள்ளன.

மார்ச் 20 அன்று காகித ஆலையின் தவிசாளர் சுனில் கந்தே கெதர நேரடியாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு  கொழும்பில் இருந்து வருகை தந்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.பல கடிதங்களும், பொய் வாக்குறுதிகளும் அரசாங்கத்தாலும், காகித ஆலையின் உயர் முகாமையினாலும் வழங்கப்பட்டு தொடர்ந்து ஏமாற்றமடைந்துள்ளோம், இனிமேலும் ஏமாறப்போவதில்லை. சம்பளம் எங்களது கைக்கு கிடைக்கும் வரை உண்ணா விரதம் தொடர்ந்து நடைபெறும், அதன் பின்னரே குறித்த இடத்தில் இருந்து கலைந்து செல்வோம் என தெரிவித்து தொழிலாளர்கள் அவர்களை வெளியேற்றினர்.

இதே போல் மார்ச் 30 அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தலைமையகத்தில் இருந்து வந்த அழைப்பை தொழிலாளர்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமது ஊதியத்தில் இருந்து கழிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியும் நிதியத்திற்குச் செலுத்தப்படவில்லை, அவை செலுத்தப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் அடுத்த கோரிக்கையாகும். மேலும் மின்சாரத்தை மீண்டும் இணைத்தல் மற்றும் 300 தொழிலாளர்களின் தொழிலுக்கு உத்தரவாதமும் அவர்கள் கோருகின்றனர். இந்த கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் இல்லை.

கிட்டத்தட்ட 4 கோடி ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால் கடந்த இரண்டு மாதங்களாக ஆலைக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலை உற்பத்திகள் நிறுத்தப்பட்டிருப்பதோடு குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை காகித ஆலை இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது நவீன காகித தொழிற்சாலையாகும். மட்டக்களப்பு, பொலநறுவை, அம்பாறை ஆகிய விவசாய பிராந்தியங்களில் கிடைக்கும் வைக்கோலை மட்டும் மூலப்பொருளாகவே கொண்டு இது ஆரம்பத்தில் இயங்கிவந்தது. 1956ல் இருந்து தொழிற்பட்டு வரும் இத்தொழிற்சாலை 1976ல் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டது.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்களுமாக சுமார் 3,000 தொழிலாளர்கள் வேலை செய்த இத்தொழிற்சாலை, நட்டத்தில் இயங்குவதாக கூறி 1997ல் மூடப்பட்டது. 11 ஆண்டுகளின் பின்னர் 2008ல் மீண்டும் திறக்கப்பட்டபோது 240 தொழிலாளர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

2008 இலிருந்து இந்த தொழிற்சாலையின் புனரமைப்பு, தொழிலாளர்களின் கடின உழைப்பினாலும், தியாகங்களினாலுமே சாத்தியமாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளற்ற வதிவிடங்களில் வாழ்ந்து, தொழிலாளர்களின் ஊதியமில்லாத உழைப்பினால் இந்த தொழிற்சாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது. உற்பத்திக்கு அவசியமான பழுதடைந்த நீராவி இயந்திரத்தினை திருத்துவதற்காக தனியார் நிறுவனங்களினால் 26 மில்லியன் ரூபாய்கள் கோரிக்கை விடப்பட்டது. தொழிற்சாலை தொழிலாளர்களின் அதிகரித்த பங்களிப்பின் மூலம், இந்த திருத்தம் 11.5 மில்லியன் செலவில் நிறைவேற்றப்பட்டது.

தொழிற்சாலையின் நிறைவேற்று அதிகாரி மங்கள சேனரத்ன, ஏப்பிரல் 2013ல் உற்பத்தி ஒரு மாதத்திற்கு 500 தொன்கள் வரை அடையக் கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்தார். அவர் உற்பத்தி விரைவில் 650 தொன்களை அடையும் என்றும் அதன் பின்னர் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை விட மேலதிக பணம், சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தவிர அவர் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்றும், அவர்கள் குறைந்த விலையில் பொருள்களை கொள்வனவு செய்ய வசதியாக, ஒரு நலன்புரி வர்த்தக நிலையம், தொழிற்சாலை வளாகத்தில் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த பலவருடங்களாக, மாதக்கணக்காக செலுத்தப்படாத தமது வேலைக்கான ஊதியத்தை பெறுவதற்காக தொழிலாளர்கள் கடந்த வருடங்களில் பல வாரக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். தற்போது நடைபெற்றது, அவர்கள் மேற்கொண்ட ஒரு தொடர் போராட்டங்களின் மிக அண்மையதாகும்.

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத அரசாங்க நிறுவனம், வாழைச்சேனை காகித ஆலை மட்டுமல்ல. அரசாங்கத்துக்குச் சொந்தமான அரச பெருந்தோட்ட யாக்கத்தின் (ஜனவசம) தேயிலைத் தோட்டங்களும் நட்டத்தில் இயங்குகின்றன. இங்குள்ள தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியும் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக இந்த தோட்டங்களை அரசாங்கம் தனியாருக்கு விற்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் ஊதியத்தை செலுத்த முடியாத நிலையில் காகித தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது. தொழிற்சாலை மூடப்படக்கூடிய அல்லது தனியாருக்கு விற்றுத்தள்ளக் கூடிய ஆபத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

கடந்த அரசாங்கம் போலவே ஜனாதிபதி சிறிசேனவின் புதிய அரசாங்கத்தாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது. அது சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை மேலும் உக்கிரமாக்குமே அன்றி, உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை காகித ஆலை ஊழியர்கள் உணர்ந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் கோரிய 4 பில்லியன் டாலர் கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்தமை, இந்த நிலைமையை மிகத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. உலக முதலாளித்துவத்தின் ஒட்டு மொத்த நெருக்கடியின் மத்தியில் தொழிற்சங்கங்களால் அற்ப சொற்ப கோரிக்கைகளை கூட வெல்ல முடியாது என்பதை அவை உலகம் முழுவதிலும் நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படுவதன் மூலம் நிரூபித்துள்ளன.

தமிழ் முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் பிரதிநிதிகள் போராட்டத்தைக் கைவிடக் கோரி அங்கு தலையிட்டார்களே அன்றி, இதுவரை காலமும் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் எதுவும் செய்யவில்லை.

தொழிலாளர்கள் இத்தகைய கட்சிகளில் இருந்தும் தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக தென் பகுதியிலும் உலகம் பூராவும் உள்ள சக தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தமது பிரச்சினைகளுக்கு ஒரு வேலைத்திட்டத்துடனான போராட்டத்தினை முன்னெடுக்க முடியும்.